Tamil script — official source version
the_chennai_city_police_(extension_to_the_cities_of_avadi_and_tambaram)_act_2022.pdf.txt
தமிழ்நாடு சட்டம் பு தமிழ்நாடு சட்டம் 11}/1981~sir நீட்டிப்பு. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 2022 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 21ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:- சட்ட எண். 7/2022 1808 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் சட்டத்தின் வகைமுறைகள் ஆவ முற்றும் தாம்பரம் மாநகரங்களுக்கு நீட்டிப்புதற்கானதொரு சட்டம். இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. (௫ இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களுக்கு நீட்டிப்பு செய்தல்) சட்டம் என வழங்கப்பெறும். @ இது, 2022 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும். 2. இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி- O “ஆவடி மாநகராட்சி” என்பது 1 ஆம் இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காவல் நிலையங்களின் வரம்புகளை உள்ளடக்கிய உள்ளாட்சி பரப்ரிடம் என்று பொருள்படும் ; @ “தாம்பரம் மாநகராட்சி” என்பது 11 ஆம் இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காவல் நிலையங்களின் வரம்புகளை உள்ளடக்கிய உள்ளாட்சி பரப்பிடம் என்று பொருள்படும்; (௫ மாநகரக் காவல் சட்டம் என்பது 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் சட்டம் என்று பொருள்படும்; @) “இந்தச் சட்டத்தின் வெளியிடப்பட்ட தேதி” என்பது தமிழ்நாடு அரசிதழில் 2022 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களுக்கு நீட்டிப்புச் செய்தல்) சட்டம் வெளியிடப்பட்ட தேதி என்று பொருள்படும்; (௫ “அரசு” என்பது மாநில அரசு என்று பொருள்படும்; (6) நடைமுறையிலுள்ள சட்டம்” என்பது தமிழ்நாடு மாநிலம் முழுவதிலுமோ அல்லது அதன் பகுதி எதிலுமோ நடைமுறையில் உள்ள இழயற்றுச் சட்டம், சட்டம், ஒழுங்குழுறை விதி, ஆணை, துணை விதி, விதி, திட்டம் அல்லது அறிவிக்கை எதனையும், அல்லது தமிழ்நாடு மாநிலம் முழுவதிலுமோ அல்லது அதன்பகுதி எதிலுமோ சட்டத்தின் செயல்திறனைப் பெற்றிருக்கின்ற முறையாவணம் எதனையும் உள்ளடக்கும்; @ “இணைப்புப் பட்டியல்” என்பது இந்தச் சட்டத்துடன் இணைக்கப்பட் இணைப்புப் பட்டியல் என்று பொருள்படும்; (6) “மாநிலம்” என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும். 3.0 இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட தேதியன்றும் அது முதற்கொண்டும், இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட தேதிக்கு முன்பு நடைமுறையில் இருந்தவாறான மாநகரக் காவல். சட்டமானது ஆவடி மாநகரத்திலும், தாம்பரம் மாநகரத்திலும் நீட்டிக்கப்படுதல் வேண்டும், மற்றும் நடைமுறையில் இருந்து வருதல் வேண்டும். ) ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களுக்கு நீட்டிக்கப்பட்டவாறான மாநகரக் காவல் சட்டத்தில்,- (@) சென்னை மாநகரத்தைக் குறிப்பிடும் (3 ஆம் பிரிவில் உள்ள சுட்டுகை அல்லாத பிற) சுட்டுகை எதுவும், இந்தச் சட்டத்தின் காரணமாக ஆவடி மாநகரத்தைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகவோ அல்லது தாம்பரம் மாநகரத்தைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகவோ பொருள் கொள்ளப்படுதல் வேண்டும். குறுந்தலைப்பு மற்றும். தொடக்கம். பொருள். வரையறைகள். 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட குற்றவியல் நடுவர்கள் மற்றும் நிருவாகத் துறை நடுவர்களின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கு ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களிலுள்ள காவல் துறை ஆணையருக்கும் மற்றும் குறித்த சில பிற காவல் அலுவலர்களுக்கும் அதிகார மளிப்பதற்கான அரசின். அதிகாரம். (9) சென்னை காவல் துறை ஆணையரைக் குறிப்பிடும் சுட்டுகை எதுவும் இந்தச் சட்டத்தின் காரணமாக, ஆவடி காவல்துறை ஆணையைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகவோ அல்லது, நேர்விற்கேற்ப தாம்பரம் மாநகரக் காவல்துறை ஆணையரைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகவோ பொருள் கொள்ளப்படுதல் வேண்டும். 4. (1) மாநகரக் காவல் சட்டத்தின் 7 ஆம் பிரிவில் அடங்கியுள்ள வகைமுறைகளுக்கு ஊறின்றி, அரசானது, அறிவிக்கை வாயிலாக மற்றும் அதில் குறித்துரைக்கப்படக்கூடிய நிபந்தனைகளுக்கும், வரம்புகளுக்கும் உட்பட்டு,- @ (இதன்பின்பு, இந்தப் பிரிவில் கூறப்பட்ட தொகுப்புச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டத்தின் அல்லது மாநில சட்டமன்றம் மாநிலத்திற்காக சட்டமியற்றும் அதிகாரம் பெற்றுள்ள பொருட்பாடுகள் தொடர்பாக நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதனின். அறிவிக்கையில் குறித்துரைக்கப்பட்டவாறான அத்தகைய வகைமுறைகளின்படி நிருவாகத் துறை நடுவர் ஒருவரின் மற்றும் மாவட்ட குற்றவியல் நடுவர் ஒருவரின். அதிகாரங்களையும், கடமைகளையும் ஆவடி மாநகரம் அல்லது தாம்பரம் மாநகரம் தொடர்பாக செலுத்தவும், புரியவும் நேர்விற்கேற்ப ஆவடி காவல் துறை ஆணையருக்கோ. அல்லது தாம்பரம் காவல்துறை ஆணையருக்கோ அதிகாரமளிக்கலாம். O கூறப்பட்ட தொகுப்புச் சட்டத்தின் அல்லது மாநிலச் சட்டமன்றமானது. மாநிலத்திற்காக சட்டமியற்று அதிகாரம் பெற்றிருக்கின்ற பொருட்பாடுகள் தொடர்பாக நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதனின் அறிவிக்கையில் குறித்துரைக்கப்பட்டவாறான. அத்தகைய வகைமுறைகளின்படி நிருவாகத்துறை நடுவர் ஒருவரின் அதிகாரங்களையும், கடமைகளையும் ஆவடி மாநகரம் அல்லது தாம்பரம் மாநகரம் தொடர்பாக செலுத்தவும் புரியவும் (காவல்துறை உதவி ஆணையரின் படிநிலைக்குக் குறையாத ஒர் அலுவலரான) நேர்விற்கேற்ப ஆவடி மாநகரத்தில் அல்லது தாம்பரம் மாநகரத்தில் உள்ள காவல்துறை ஆணையருக்கு கீழ் உள்ள அலுவலர் எவருக்கும் அதிகாரம் அளிக்கலாம். @ O ஆர் உப்பிரிவின்படி அவர் அதிகாரங்களைச் செலுத்தவோ அல்லது கடமைகளைப் புரியவோ அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எவற்றையும் செலுத்தி வருகையில் மற்றும் கடமைகளில் எதனையும் புரிந்து வருகையில் கூறப்பட்ட தொகுப்புச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள நிருவாகத்துறை நடுவரொருவர், அந்தப் பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட குற்றவியல் நடுவரின் பொதுவான. கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவராக இருப்பதைப்போன்று அதே அளவிற்கு, நேர்விற்கேற்ப, ஆவடி மாநகரத்தில் அல்லது தாம்பரம் மாநகரத்தில் உள்ள காவல்துறை ஆணையருக்குக் கீழுள்ள அலுவலர் ஒவ்வொருவரும் முறையே அந்தந்தக் காவல்துறை ஆணையரின் பொதுவான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருத்தல் வேண்டும். @ ஆவடி மாநகரத்தின் காவல்துறை ஆணையர் அல்லது தாம்பரம் மாநகரத்தின் காவல்துறை ஆணையர் அல்லது அத்தகைய ஆணையருக்குக் கீழுள்ள அலுவலர் எவரும், () ஆம் உட்பிரிவின்படி அவர் செலுத்துவதற்கு அல்லது புரிவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் கடமைகள் எவற்றையும் செலுத்துகையிலும், புரிகையிலும் கூறப்பட்ட தொகுப்புச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்ட மாவட்ட குற்றவியல் நடுவரின் பொதுவான கட்டுப்பாட்டிற்கு உள்ளாகுதல் கூடாது. மையச் சட்டம் 21974. 5. () ஆவடி மாநகரத்திலும், தாம்பரம் மாநகரத்திலும், (இதன் பின்பு இந்தப்பிரிவில் இருந்துவந்த காவற்படை, எனக் குறிப்பிடப்படுவதான) இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளுக்கு முன்பு செயல்பட்டு வந்த காவற்படையானது நீட்டிக்கப்பட்டதான மாநகரக் காவல் சட்டத்தின்படி இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளில், நேர்விற்கேற்ப ஆவடி மாநகரத்திற்காக அல்லது தாம்பரம் மாநகரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள. காவற்படையாகக் கொள்ளப்படும். இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளுக்கு முன்பு பதவியில் இருந்து வந்த காவற்படையின் உறுப்பினர் ஒவ்வொருவரும், நேர்விற்கேற்ப ஆவடி மாநகரம் அல்லது தாம்பரம் மாநகரத்திற்கான காவற்படையின் உறுப்பினராக அவ்வாறு வெளியிடப்பட்ட தேதியில் நியமிக்கப்படுவதாகக் கொள்ளப்படுதல் வேண்டும். @ இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளுக்கு முன்பு இருந்து வந்த காவற்படையின் காவல் அலுவலர் எவரின் முன்பாக முடிவுறாதிருந்த புலனாய்வுகள். வாயிலான நடவடிக்கைகள் உள்ளடங்கலான) நடவடிக்கைகள் அனைத்தும் இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளுக்கு முன்பு () ஆம் உப்பிரிவின்படி அவர் நியமனம் செய்யப்படுவதாகக் கொள்ளப்படுகின்ற அந்த பதவியை வகிப்பவர் என்ற தகுதியில், அவர் முன்பு நடப்பிலுள்ள நடவடிக்கைகளாகக் கொள்ளப்பட்டு அவ்வாறே அவை மேற்கொண்டு நடத்தப்படுதலும் வேண்டும். (௫ இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளுக்கு முன்பு மாவட்ட குற்றவியல் நடுவர் ஒருவரால் அல்லது நிருவாகத்துறை நடுவர் ஒருவரால் சட்டம் எதன்படியும் செலுத்தப்படக்கூடியதான, ஆற்றப்படக்கூடியதான அதிகாரம் அல்லது பணி எதுவும் ஆவடி காவல் துறை ஆணையர் அல்லது தாம்பரம் காவல் துறை ஆணையர் அல்லது நீட்டிக்கப்பட்ட மாநகரக் காவல் சட்டத்தினால் அல்லது அதன்படியான அமர்த்தப்பட்ட காவல்துறையின் பிற அலுவலர் எவருக்கும் அளிக்கப்பட்டிருக்குமிடத்து அவ்வாறு அளிக்கப்படுவதற்கு முன்பு, நேர்விற்கேற்ப மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது, நிருவாகத் துறை நடுவரின் முன்னர் நிலுவையிலிருந்த அத்தகைய அதிகாரத்தை செலுத்துவது அல்லது அத்தகைய பணியை ஆற்றுவது தொடர்பான அல்லது அதிலிருந்து எழுகின்ற நடவடிக்கைகள் அனைத்தும், ஆவடி காவல்துறை ஆணையரின் அல்லது தாம்பரம் காவல் துறை ஆணையரின் அல்லது பிற அலுவலருக்கு அத்தகைய அதிகாரம் அல்லது பணியானது அளிக்கப்பட்டதன் பேரில், நேர்விற்கேற்ப ஆவடி காவல்துறை ஆணையர். அல்லது தாம்பரம் காவல் துறை ஆணையர் அல்லது காவல்துறையின் பிற அலுவலருக்கு மாற்றப்பட்டதாபிருக்கும்; மற்றும் அவ்வாறு நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ள அந்த அலுவலர் அவற்றைப் புதிதாகவோ அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ள அத்தகைய நிலையிலிருந்தோ மேற்கொள்ளுதல் வேண்டும். 6. () ஆவடி காவல்துறை ஆணையரும், தாம்பரம் காவல்துறை ஆணையரும் அந்நகரங்களுக்கு செயற்பாடு நீட்டிக்கப்பட்டவாறான மாநகரக் காவல் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், அத்தகைய நீட்டிக்கப்பட்டவாறான மாநகரக் காவல் சட்டத்தின் கீழ் தங்கள் பணிகளை செய்து வருகையில், (2) ஆம் உட்பிரிவின்படி செய்யப்படக்கூடிய விதிகள் எவற்றுக்கும் உட்பட்டு தமிழ்நாடு மாநிலத்திற்கான. காவல்துறை தலைமை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழும் செயலாட்சியின் கீழும் இருந்து வருவார்கள். (2) ஆவடி காவல்துறை ஆணையர் மற்றும் தாம்பரம் காவல்துறை ஆணையர் ஆகியோர் தொடர்பாக () ஆம் உட்பிரிவினால் காவல்துறை தலைமை இயக்குநருக்கு அளிக்கப்பட்ட கட்டுப்பாட்டு மற்றும் செயலாட்சி அதிகாரங்களை செலுத்தி வருவதை வரையறுப்பதற்கும் முறைப்படுத்துவதற்குமான விதிகளை செய்வதற்கு அரசானது தகுதி. வாய்ந்ததாக இருத்தல் வேண்டும். @ மாவட்ட குற்றவியல் நடுவர் ஒருவர் அல்லது நிருவாகத் துறை நடுவரொருவர் சட்டம் எதன்படியும் நேர்விற்கேற்ப, ஆவடி காவல்துறை ஆணையரால் அல்லது தாம்பரம் காவல்துறை ஆணையரால் செலுத்தப்படக்கூடிய அதிகாரங்கள் அல்லது ஆற்றப்படக்கூடிய பணிகள் தொடர்பாக இந்தப் பிரிவில் உள்ள எதுவும் பொருந்துதலாகாது. ஆவடி, மற்றும் தாம்பரம் ஆகிய மாநகரங்களில் இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர். செயல்பட்டு வந்த காவற் படையானது நீட்டிக்கப்பட்ட மாநகரக் காவல் சட்டத்தின்படி அமைக்கப் பட்டுள்ள காவற் படையாகவே கொள்ளப்படும். ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய மாநகர ஆணையர்களின். மீது காவல் துறை இயக்குநரின் கட்டுப்பாடு. ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய மாநகரங்களில். நடைமுறையில் இல்லாத சட்டங்களைக். குறிப்பிடும் சுட்டுகைகளுக்கு பொருள் கொள்ளுதல்... நேரிணையான. சட்டத்தை. நீக்கறவு செய்தல். காப்புரைகள். 7. () இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளன்று, ஆவடி அல்லது தாம்பரம் மாநகரங்களில் நடைமுறையில் இல்லாத சட்டம் ஒன்று குறித்து, இந்தச் சட்டத்தினால் அந்நகரங்கள் தொடர்பாக நீட்டிக்கப்பட்டவாறான மாநகரக் காவல் சட்டத்திலுள்ள. சுட்டுகை எதுவும் மேற்சொன்ன மாநகரங்களின் நடைமுறையிலுள்ள நேரிணையான வேறு சட்டம் ஏதேனும் இருப்பின் அதனை சுட்டுவதாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும். (9) ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களில் நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும், 1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்தை குறிப்பிடும் சுட்டுகை எதுவும் அந்த மாநகரங்கள் தொடர்பாக இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளன்று அல்லது அதன்பின்பு மாநகரக் காவல் சட்டத்தை குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும். 8. இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளுக்கு முன்பு (இதன் பின்பு இந்தப் பிரிவில் மையச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம், மையச்சட்டத்திற்கான இணைப்புப்பட்டியலில்குறித்துரைக்கப்பட்டமற்றும்மையச்சட்டத்தின். 58 - A ஆம் பிரிவின்படியான அறிவிக்கையின் மூலமாக நீட்டிக்கப்பட்டதுமான மாநகரக் காவல் சட்டத்தின் வகைமுறைகள் உள்ளடங்கலாக மாநகரக் காவல் சட்டத்திற்கு நேரிணையான சட்டம் எதுவும் ஆவடி அல்லது தாம்பரம் மாநகரங்களில் இருக்குமானால், மாநிலத்திற்கான சட்டங்களைச் செய்வதற்கான அதிகாரத்தை மாநிலச் சட்டமன்றம் பெற்றுள்ள, அந்த விஷயங்கள் தொடர்பாக அந்த நேரிணையான சட்டம் இருக்கின்ற அளவுக்கு, நேர்விற்கேற்ப, ஆவடி அல்லது தாம்பரம் மாநகரங்கள் தொடர்பாக அத்தகைய நேரிணையான சட்டமானது இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளில் நீக்கப்படும். 9. (1) நேரிணையான சட்டம் எதையும் 8 ஆம் பிரிவினால் நீக்கம் செய்வதானது; - (9) அத்தகைய சட்டம் ஏதொன்றின் முந்திய செயற்பாட்டையோ அல்லது அதன்படிச் செய்யப்பட்ட அல்லது உரியவாறு உட்படுத்தப்பட்ட செயல் எதனையும்; அல்லது (9) அத்தகைய சட்டம் எதன்படியும் ஈட்டப்பட்டுள்ள, சேர்ந்துள்ள அல்லது அதற்கு உள்ளான உரிமை, சிறப்புரிமை கடமைப் பொறுப்பு அல்லது கடப்பாடு எதையும்; அல்லது © அத்தகைய சட்டம் எதற்கும் எதிராக புரியப்பட்ட குற்றம் ஏதொன்றையும் பொறுத்து அடைந்த தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை எதையும்; அல்லது (@ மேற்சொல்லப்பட்டபடியான அத்தகைய உரிமை, சிறப்புரிமை, கடமைப் பொறுப்பு, கடப்பாடு, தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை ஏதொன்றினையும் பொறுத்த புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி எதையும் பாதித்தல் ஆகாது; மற்றுர் மாநகரக் காவல் சட்டத்தின் செயற்பாடு நீட்டிக்கப்பப்ராதது போன்றே அத்தகைய புலனாய்வு சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி தொடரப்படலாம், தொடுக்கப்படலாம், செயற்படுத்தப்படலாம் என்பதோடு அத்தகைய தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை விதிக்கப்படலாம். @ () ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, ஆவடி அல்லது தாம்பரம் மாநகரங்கள் தொடர்பாக அத்தகைய நேரிணையான சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட நியமனம் அல்லது ஒப்படைவு, பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை, ஆணை, அறிவுறுத்தம் அல்லது பணிப்பாணை, உருவாக்கப்பட்ட விதி, ஒழுங்குமுறை விதி, படிவம், துணை: விதி அல்லது செயல் திட்டம் அல்லது வழங்கப்பட்ட சான்றிதழ், அனுமதி அல்லது உரியர் அல்லது செய்துகொள்ளப்பட்ட பதிவு எதுவும் உள்ளடங்கலாக செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், மாநகரக் காவல் சட்டத்தின் நேரிணையான. வகைமுறைகளின் கீழ் செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகவோ: கொள்ளப்படுதல் வேண்டும்; நீட்டிக்கப்பட்டதான மேற்சொன்ன மாநகரக் காவல் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட எதனாலும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும் மாற்றமைத்தாலன்றி மற்றும் அதுவரையிலும் அதன்படியே தொடர்ந்து நடைமுறையில் இருந்துவருதலும் வேண்டும். மையச் சட்டம் XXIV/1859. மையச் சட்டம் XXIV/1859. 10. நேர்விற்கேற்ப ஆவடி, அல்லது தாம்பரம் மாநகரங்களில் அதிகாரங்கள் எவற்றையும் செலுத்தி வருவதற்கு அல்லது பணிகள் எவற்றையும் ஆற்றிவருவதற்கு, இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட நாளுக்கு முந்திய தேதியன்று தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு என்று நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும் வடிவம் அல்லது சொற்கள் மூலமாகவுமோ குறிப்பிடப்படும் சுட்டுகை எதுவும், நீட்டிக்கப்பட்டவாறான. மாநகரக் காவல் சட்டத்தின்படியாகவோ அல்லது இந்தச் சட்டத்தின்படி மேற்சொன்ன. மாநகரங்களுக்கு நேரிணையான புதிய அதிகார அமைப்பொன்று அமைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றவிடத்து, அது அந்தப் புதிய அதிகார அமைப்பைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாக இருந்தாற்போன்று செயற்பாட்டில் இருத்தல் வேண்டும். 11. ஆவடி மாநகரத்தில், தாம்பரம் மாநகரத்தில் நீட்டிக்கப்பட்டவாறான மாநகரக் காவல் சட்டத்தை பொருந்தச் செய்வதற்கு உதவுகின்ற நோக்கங்களுக்காக, நீதிமன்றம் அல்லது பிற அதிகாரஅமைப்பு எதுவும் அந்த நீதிமன்றத்தின் அல்லது அதிகார அமைப்பின் முன்பு உள்ள பொருட்பாடு எதற்கும் ஏற்றபடி அதன் சாராம்சத்தை பாதிக்காமல் மேற்சொன்ன சட்டத்தை பொருந்தச் செய்வதற்கு முறையானதாகவோ இருக்கக்கூடிய மாறுதல்களுடன் தேவையானதாகவோ அதற்குப் பொருள் கொள்ளலாம். 12. இந்தச் சட்டத்தினால் ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களுக்கு நீடிக்கப்பட்டவாறான மாநகரக் காவல் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசு சமயத்திற்கேற்றார் போல் ஆணையின் மூலம் அந்த இடர்ப்பாட்டை நீக்கும் நோக்கத்திற்காக தேவையென அதற்குத் தோன்றக் கூடிய எதனையும் செய்யலாம். வரம்புரையாக, இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து இரண்டாண்டுக்கால அளவு முடிவடைந்த பின்னர் அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது. 13. அரசானது, அறிவிக்கை வாயிலாக காவல் நிலையம் எதனையும் சேர்ப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ இணைப்புப் பட்டியல்களை திருத்தம் செய்யலாம். 14. () அரசு இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம். @ இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதிகள் அல்லது பிறப்பிக்கப்படும் அறிவிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும் குறிப்பிட்டதொரு நாளன்று அவை நடைமுறைக்கு வருதல் வேண்டும் என: வெளிப்படையாக சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு நடைமுறைக்கு வருதல் வேண்டும். @) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டுப்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனை அடுத்து வரும் கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்பு சட்டமன்றப் பேரவை அந்த விதி, ஆணை அல்லது அறிவிக்கையில் மாறுதல் எதையும் செய்வதற்கு உடன்படுமானால், அல்லது அந்த விதி அல்லது ஆணை பிறப்பிக்கப்படுதலோ அந்த அறிவிக்கை வெளியிடப்படுதலோ ஆகாது என்று உடன்படுமானால், அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும்; அல்லது, நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும், அவ்வாறு மாறுதல் செய்வது அல்லது நடைமுறைக்கு வராமற்போனது எதுவும், அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையின் கீழ் முன்னமே செய்யப்பட்டுள்ள செயல் ஏதொன்றின் 'செல்லுந்தன்மைக்கும் பாதகமின்றி இருத்தல் வேண்டும். புதிய அதிகார அமைப்புகள். அமைத்து உருவாக்கப்பட்டி ருக்கின்றவிடத்து. அதிகார அமைப்புகளை குறிப்பிடும் சுட்டுகைக்குப் பொருள். கொள்ளுதல். மாநகரக் காவல். சட்டத்தைப் பொருந்தச் செய்வதற்கு உதவுகின்ற நோக்கங்களுக்காக நீதி மன்றங்கள். மற்றும் பிற அதிகார அமைப்புகளின். அதிகாரங்கள். இடர்ப்பாடுகளை: நீக்குவதற்கான அதிகாரம். இணைப்புப் பட்டியல்களை: திருத்தம். செய்வதற்கான அதிகாம். விதிகளைச் செய்வதற்கான. அதிகாரம். நீக்கறவு மற்றும் காப்புரை. வ. எண். காவல் 15. (1) 2021 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (ஆவடி மற்றும் தாம்பரம் தமிழ்நாடு அவசரச் மாநகரங்களுக்கு நீட்டிப்பு செய்தல்) அவசரச் சட்டமானது இதன்மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது. @) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், கூறப்பட்ட அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் அல்லது பிறப்பிக்கப்பட்ட பணிப்புரை எதுவும் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டதாக, அல்லது எடுக்கப்பட்டதாக அல்லது பிறப்பிக்கப்பட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும். இணைப்புப் பட்டியல் - | ஆவடி மாநகரம் [2 ௫ ஆம் பிரிவைக் காண்க] அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆவடி எண்ணூர் காட்டூர் @iyt @i மணலி மணலி புதுநகர் மாங்காடு மீஞ்சூர் மாதாவரம் பால்பண்ணை முத்தாபுதுப்பேட்டை நசரத்பேட்டை பட்டாபிராம் பூந்தமல்லி செங்குன்றம் சாத்தாங்காடு செவ்வாப்பேட்டை சோழவரம் எஸ்.ஆர்.எம்.சி டேங்க் பேக்டரி திருமுல்லைவாயில் திருநின்றவூர் திருவேற்காடு வெள்ளவேடு சட்டம் 12022. 19. 20. இணைப்புப் பட்டியல் - ॥| தாம்பரம் மாநகரம் [2 (இ ஆம் பிரிவைக் காண்க] நிலையங்கள். குரோம்பேட்டை சிட்லபாக்கம் கூடுவாஞ்சேரி கண்ணகி நகர் கானாத்தூர் கேளம்பாக்கம் குன்றத்தூர் மறைமலைநகர் மணிமங்கலம் ஓட்டேரி பல்லாவரம் பள்ளிக்கரணை: பீர்க்கன்கரணை பெரும்பாக்கம் சேலையூர் செம்மஞ்சேரி. சங்கர் நகர் சோமங்கலம் தாம்பரம் தாழம்பூர் (ஆளுநரின் ஆணைப்படி ச. கோபி ரவிகுமார், அரசு செயலாளர் (சட்டமியுற்றவி), சட்டத் துறை. (குமிழாக்கம்) வெ. அரசகுமார், உதவி இயக்குநர், சட்ட குமிழ்ப்பிரிவுத் துறை,Open official source version ↗
About this act
- Jurisdiction
- Tamil Nadu
- Enactment date
- 2022-01-21
- Sections available
- 15
Read the sections
1Short title and commencement.→2Definitions.→3Extension of Tamil Nadu Act III of 1888.→4Power of Government to authorize Commissioner of Police and certain other police officers in cities of Avadi and Tambaram to exercise powers of District Magistrates and Executive Magistrates under Code of Criminal Procedure, 1973.→5Police force functioning in cities of Avadi and Tambaram immediately before date of publication of this Act to be deemed to be police force constituted under City Police Act as extended.→6Control of Director General of Police over Commissioner of Police for Avadi and Tambaram.→7Construction of reference to laws not in force in cities of Avadi and Tambaram.→8Repeal of corresponding law.→9Savings.→10Construction of reference to authorities where new authorities have been constituted.→11Powers of courts and other authorities for purposes of facilitating application of City Police Act.→12Power to remove difficulties.→13Power to amend Schedules.→14Power to make rules.→15Repeal and saving.→
India Code, Government of India. Text fetched 10 Oct 2026. Source metadata reports last modification: 2025-05-29. Check the linked official text and subsequent notifications when applying a provision.