Tamil Nadu · Act 1 of 2017

Jallikattu-Tamil Nadu Amendment Act 2017

Read in your languageअपनी भाषा में पढ़ें · Official source versions
Tamil
Find in this text

Tamil — official source version

prevention_of_cruelty_to_animals_(tamil_nadu_amendment)_act_2017.pdf.txt

சட்ட எண்‌ 1/2017. 

2017-ஆம்‌ ஆண்டு விலங்குகள்‌ வதைத்‌ தடுப்பு 

(தமிழ்நாடு திருத்தம்‌) சட்டம்‌. 

தமிழ்நாடு மாநிலத்தின்‌ பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும்‌, சொந்த 

மண்ணின்‌ காளைகள்‌ உயிர்‌ வாழ்வதையும்‌, அவை தொடர்ந்து நன்றாக இருப்பதை 

உறுதி செய்வதையும்‌ நிச்சயிக்கும்‌ பொருட்டு, 1960 ஆம்‌ ஆண்டு விலங்குகள்‌ 

வதைத்‌ தடுப்புச்‌ சட்டத்தைத்‌ திருத்தம்‌ செய்வதற்கானதொரு சட்டம்‌. 

இந்தியக்‌ குடியரசின்‌ அறுபத்தி ஏழாம்‌ ஆண்டில்‌, தமிழ்நாடு சட்டமன்றப்‌ 

பேரவையில்‌, பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 

1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்த சட்டம்‌ 2047-ஆம்‌ ஆண்டு 

விலங்குகள்‌ வதைத்‌ தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்‌) சட்டம்‌ என்று அழைக்கப்பெறும்‌. 

(2) இது 2017ஆம்‌ ஆண்டு, சனவரி 21ஆம்‌ நாளன்று நடைமுறைக்கு வந்து 

விட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 

2. 2- ஆம்‌ பிரிவிற்கான திருத்தம்‌.- (இதன்‌ பின்பு முதன்மைச்‌ சட்டம்‌ என்று 

சுட்டப்படுவதான) 1960-ஆம்‌ ஆண்டு விலங்குகள்‌ வதைத்‌ தடுப்புச்‌ சட்டத்தின்‌ 

(மையச்‌ சட்டம்‌ 571960) 2-ஆம்‌ பிரிவில்‌ (0) எனும்‌ கூறுக்குப்‌ பின்பு பின்வரும்‌ 

கூறானது புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது- 

"(dd) "ஜல்லிக்கட்டு: என்பது இது தொடர்பாக மாநில அரசால்‌ அறிவிப்பு 

செய்யப்படலாகிறவாறான அத்தகைய இடங்களில்‌, சனவரி முதல்‌ மே மாதங்களில்‌ 

அத்தகைய நாட்களன்று பாரம்பரியம்‌ மற்றும்‌ பண்பாட்டினை பின்பற்றும்‌ 

நோக்கத்துடன்‌ காளைகளை ஈடுபடுத்தி நடத்தப்படும்‌ ஒரு நிகழ்வாகும்‌ என்று 

பொருள்படும்‌; மற்றும்‌ இதில்‌ "மஞ்சுவிரட்டு", "வடமாடு" "எருது விடும்‌ விழா' 

ஆகியவை உள்ளடங்குவதாக இருக்கும்‌" 

3. 3- ஆம்‌ பிரிவிற்கானத்‌ திருத்தம்‌.- முதன்மைச்‌ சட்டத்தின்‌ 3-ஆம்‌ பிரிவு, 

அந்தப்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவாக மறு எண்ணிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ 

அவ்வாறு மறு எண்ணிடப்பட்டவாறான (1)-ஆம்‌ உட்பிரிவுக்குப்‌ பின்பு, பின்வரும்‌ 

உட்பிரிவு சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌. அதாவது:-



(2) (1-ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியிருப்பது எது எவ்வாறாயிருப்பினும்‌, 

மாநில அரசால்‌ இயற்றப்படலாகிறவாறான அத்தகைய விதிகள்‌ மற்றும்‌ 

ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும்‌. "ஜல்லிக்கட்டு" 

அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌" 

4. M- ஆம்‌ பிரிவிற்கானத்‌ திருத்தம்‌.- முதன்மைச்‌ சட்டத்தின்‌ 11-ஆம்‌ 

பிரிவின்‌, (3)-ஆம்‌ உட்பிரிவில்‌ (6) எனும்‌ கூறுக்குப்‌ பின்பு, பிண்வரும்‌ கூறானது 

சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- 

"(f) பாரம்பரியம்‌ மற்றும்‌ பண்பாட்டைப்‌ பின்பற்றி மற்றும்‌ முன்னேற்றும்‌ 

நோக்கத்துடன்‌ மற்றும்‌ சொந்த மண்ணின்‌ காளைகள்‌ உயிர்‌ வாழ்வதையும்‌, அவை 

தொடர்ந்து நன்றாக இருப்பதையும்‌ உறுதி செய்யும்‌ நோக்கத்துடன்‌ ஐல்லிக்கட்டு 

நடத்தப்படுதல்‌ வேண்டும்‌". 

5. 22-ஆம்‌ பிரிவிற்கான திருத்தம்‌.- பின்வரும்‌ வரம்புரை முதன்மைச்‌ 

சட்டத்தின்‌ 22-ஆம்‌ பிரிவுடன்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது. 

வரம்புரை: ஆனால்‌ இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியிருப்பது ஜல்லிக்கட்டு” 

நடத்துவதற்குப்‌ பொருந்தாது. 

6. 27- ஆம்‌ பிரிவிற்கான திருத்தம்‌.- முதன்மைச்‌ சட்டத்தின்‌ 27-ஆம்‌ 

பிரிவில்‌ (௦) எனும்‌ கூறுக்குப்‌ பின்பு, பிண்வரும்‌ கூறானது சேர்க்கப்படுதல்‌ 

வேண்டும்‌, அதாவது- 

"(c) சொந்த மண்ணின்‌ காளைகள்‌ உயிர்‌ வாழ்வு மற்றும்‌ தொடர்ந்து வாழ்ந்து 

கொண்டிருப்பதை உறுதி செய்யும்‌ பொருட்டு மற்றும்‌ பாரம்பரியம்‌ மற்றும்‌ 

பண்பாட்டை பின்பற்றி மற்றும்‌ முன்னேற்றும்‌ நோக்கத்துடன்‌ "ஜல்லிக்கட்டு 

நடத்தப்படுதல்‌". 

7. 28-& எனும்‌ புதிய பிரிவு புகுத்தப்படுதல்‌-- முதன்மைச்‌ சட்டத்தின்‌ 28— 

ஆம்‌ பிரிவுக்குப்‌ பின்பு, பின்வரும்‌ பிரிவு புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌. அதாவது:- 

28-A ஜல்லிக்கட்டு" தொடர்பான காப்பு - இந்தச்‌ சட்டத்தில்‌ 

அடங்கியிருப்பது எதுவும்‌ பாரம்பரியம்‌ மற்றும்‌ பண்பாட்டைப்‌ பின்பற்றி மற்றும்‌ 

அதனை முன்னேற்றுவதற்காக நடத்தப்படும்‌ "ஜல்லிக்கட்டுக்கு" பொருந்தாது;



மற்றும்‌ அவ்வாறு நடத்தப்படும்‌ "ஐல்லிக்கட்டு" இந்தச்‌ சட்டத்தின்படி ஒரு குற்றமாக 

கருதப்படமாட்டாது. 

8. நீக்கறவு மற்றும்‌ காப்பு.- (1) 2017ஆம்‌ ஆண்டு விலங்குகள்‌ வதைத்‌ தடுப்பு 

(தமிழ்நாடு திருத்தம்‌) அவசரச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு அவசரச்‌ சட்டம்‌ 172017) இதன்‌ 

மூலம்‌ நீக்கறவு செய்யப்படு கிறது. 

(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறு இருப்பினும்‌, மேற்சொன்ன அவசர 

சட்டத்தில்‌ திருத்தம்‌ செய்யப்பட்டவாறான முதன்மைச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட 

செயல்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்‌ இந்தச்‌ சட்டத்தினால்‌ திருத்தம்‌ 

செய்யப்பட்டவாறாக முதன்மைச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது 

எடுக்கப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌.


Open official source version ↗

About this act

Jurisdiction
Tamil Nadu
Enactment date
2017-01-31
Sections available
Document reader
Source and version

India Code, Government of India. Text fetched 11 Oct 2026. Source metadata reports last modification: 2025-06-30. Check the linked official text and subsequent notifications when applying a provision.

Share this act

Jallikattu-Tamil Nadu Amendment Act 2017 — Tamil | NYAYA SIGNAL

Share the card with this clickable reading link. पढ़ें और अगली धारा देखें।

NYAYA SIGNAL · Free access · Official source references

· Saves and reading positions stay on this device.