Tamil script — official source version
the_madras_city_police_(extension_to_the_city_of_madurai_and_coimbatore)_act,_1987.pdf.txt
1987 ஆம் ஆண்டு சென்னை மாநகர் காவல் (மதுரை மாநகருக்கும் கோயம்புத்தூர் மாநகருக்கும் நீட்டிப்பு) சட்டம். (தமிழ்நாடு சட்ட எண் 32/1987) 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர் காவல் சட்டத்தின் வகைமுறைகளை மதுரை மாநகருக்கும், கோயம்புத்தூர் மாநகருக்கும் நீட்டிக்கச் செய்வதற்கானதொரு சட்டம். இந்தியக் குடியரசின் முப்பத்தெட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பும் தொடக்கமும். (1) இந்தச் சட்டம், 1987 ஆம் ஆண்டு சென்னை மாநகர் காவல் (மதுரை மாநகருக்கும் கோயம்புத்தூர் மாநகருக்கும் நீட்டிப்பு) சட்டம் என வழங்கப்பெறும். (2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறித்துரைக்கலாகும் தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும். 2. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி.- (1) "குறிக்கப்பட்ட நாள்" என்றால், 1 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதாகக் குறிக்கப்படும் தேதி என்று பொருள்படும்; (2) "கோயம்புத்தூர் மாநகர்" என்றால், 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகர் நகராட்சிக் கழகம் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 251981) 2 ஆம் பிரிவின். (9) ஆம் கூறில் பொருள்வரையறை செய்யப்பட்டவாறான கோயம்புத்தூர் மாநகர் என்று பொருள்படும்; (3) "மதுரை மாநகர்" என்றால், 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகர் நகராட்சிக் கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 15/1971) 2 ஆம் பிரிவின் (9) ஆம் கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான மதுரை மாநகர் என்று பொருள்படும்; (4) மாநகர் காவல் சட்டம்" என்றால், 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகர் காவல் சட்டம் (குமிழ்நாடு சட்டம் 11/1888) என்று பொருள்படும்; (5) "அரசு" என்றால், மாநில அரசு என்று பொருள்படும்; (6) "நடைமுறையில் உள்ள சட்டம் என்றால், தமிழ்நாடு மாநிலம் முழுவதிலுமோ அல்லது அதன் பகுதி எதிலுமோ நடைமுறையில் உள்ள சட்டம், அவசரச்சட்டம், ஒழுங்குமுறை விதி, ஆணை, துணைவிதி, விதி, திட்டம் அல்லது அறிவிக்கை எதனையும், அல்லது தமிழ்நாடு மாநிலம் முழுவதிலுமோ அல்லது அதன் பகுதி எதிலுமோ சட்டத்தின் செயல்திறனைப் பெற்றிருக்கின்ற முறையாவணம் எதனையும் உள்ளடக்கும். 3. தமிழ்நாடு சட்டம் 1I/1888 இன் நீட்டிப்பு-- (1) குறிக்கப்பட்ட நாளான்றும் அது முதற்கொண்டும், குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முன்பு நடைமுறையில் இருந்தவாறான மாநகர் காவல் சட்டம் மதுரை மாநகரிலும் கோயம்புத்தூர் மாநகரிலும் நீட்டிக்கப்பட்டதால் வேண்டும் மற்றும் நடைமுறையில் இருந்து வருதலும் வேண்டும். (2) மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகர்களுக்கு நீட்டிக்கப்பட்டவாறான மாநகர் காவல் சட்டத்தில், (ஐ) சென்னை மாநகரைக் குறிப்பிடும் (3 ஆம் பிரிவில் உள்ள சுட்டுகை அல்லாத பிற) சுட்டுகை (reference) எதுவும், இந்தச் சட்டத்தின் காரணமாக, நேர்வுக்கேற்ப மதுரை மாநகரைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகவோ அல்லது கோயம்புத்தூர் மாநகரைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகவோ பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்; (௦) பெருநகர் குற்றவியல் நடுவரைக் குறிப்பிடும் சுட்டுகை எதுவும், இந்தச் சட்டத்தின் காரணமாக, நீதித்துறை குற்றவியல் நடுவரைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்; (6) சென்னை காவல்துறை ஆணையரைக் குறிப்பிடும் சுட்டுகை எதுவும், இந்தச் சட்டத்தின் காரணமாக, மதுரை காவல்துறை ஆணையரைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகவோ அல்லது, நேர்விற்கேற்ப, கோயம்புத்தூர் மாநகர் காவல்துறை ஆணையரைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகவோ பொருள் கொள்ளப்படுதல் வேண்டும். 4. 1973 ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணை முறைத்தொகுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட குற்றவியல் நடுவர்கள் மற்றும் நிருவாகத் துறை குற்றவியல் நடுவர்களின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கு மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகரிலுள்ள காவல்துறை ஆணையருக்கும் மற்றும் ஒரு சில பிற காவல் அலுவலர்களுக்கும் அதிகாரமளிப்பதற்கு அரசுக்கு உள்ள அதிகாரம். (1) மாநகர் காவல் சட்டத்தின் 7 ஆம் பிரிவில் அடங்கியுள்ள வகைமுறைகளுக்கு, ஊறின்றி, அரசானது, அறிவிக்கை மூலமாகவும், மற்றும் அதில் குறித்துரைக்கப்படக்கூடிய நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு- (@) 1973 ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணை முறைத்தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் 271974) (இதன் பின்பு இந்தப் பிரிவில் மேற்சொன்ன தொகுப்புச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவது) அல்லது மாநிலத்திற்காக, மாநிலச் சட்டமன்றம் சட்டமியற்ற அதிகாரம் பெற்றிருக்கின்ற பொருட்கள் தொடர்பாக நடைமுறையில் உள்ள வேறெதேனும் சட்டத்தின் வகைமுறைகளில் அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படக்கூடிய அனைத்து முறைகளின் கீழ் நிருவாகத்துறை குற்றவியல் நடுவரொருவரின். அதிகாரங்களையும், கடமைகளையும் மதுரை தொடர்பாக, செலுத்தி வரவும், புரிந்து வரவும் மதுரை காவல் துறை ஆணையருக்கோ அல்லது கோயம்புத்தூர் காவல்துறை ஆணையருக்கோ, (௦) மேற்சொன்ன தொகுப்புச் சட்டத்தின் அல்லது மாநிலத்திற்காக மாநிலச் சட்டமன்றம் சட்டமியற்ற அதிகாரம் பெற்றிருக்கின்ற பொருட்கள் தொடர்பாக நடைமுறையில் உள்ள வேறேதெனும் சட்டத்தின் வகை முறைகளில் அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படக்கூடியவாறு மதுரை மாநகர் அல்லது, நேர்விற்கேற்ப, கோயம்பத்தூர் மாநகர் தொடர்பாகச் செலுத்தி வரவும் புரிந்து வரவும் (காவல்துறை உதவி ஆணையரின் படிநிலைக்குக் கீழுள்ள ஓர் அலுவலராயில்லாத) மதுரை மாநகரில் அல்லது நேர்விற்கேற்ப, கோயம்புத்தூர் மாநகரில் காவல்துறை ஆணையருக்குக் கீழமைந்த அலுவலர் எவருக்குமோ அதிகாரமளிக்கலாம். (2) மதுரை மாநகரிலோ அல்லது, நேர்விற்கேற்ப, கோயம்புத்தூர் மாதகரிலோ உள்ள காவல்துறை ஆணையருக்குக் கழமைந்த அலுவலர் ஒவ்வொருவரும், (1) ஆம் உட்பிரிவின் கீழ் அவர் செலுத்தி வரவோ அல்லது புரிந்து வரவோ அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் கடமைகளில் எதையேனும் செலுத்தி வருகையில் மற்றும் புறிந்து வருகையில், மேற்சொன்ன தொகுப்புச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்ட நிருவாகத் துறை குற்றவியல் நடுவரொருவர் எந்த முறையிலும் எந்த அளவுக்கும் அந்தப் பிரிவின்படி நியமிக்கப்பட்ட மாவட்ட குற்றவியல் நடுவரின் பொதுவான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருப்பாரோ அதே முறையிலும் அதே அளவுக்கும் முறையே அந்தந்தக் காவல்துறை ஆணையரின் பொதுக்கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருத்தல் வேண்டும். (3) மதுரை மாநகரிலோ அல்லது, நேர்விற்கேற்ப, கோயம்புத்தூர் மாநதகரறிலோ உள்ள காவல்துறை ஆணையர் அல்லது அத்தகைய ஆணையருக்குக் கீழமைந்த அலுவலர் எவரும், (1) ஆம் பிரிவின்படி செலுத்தி வருவதற்கும் புரிந்து வருவதற்கும் அவருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்ற கடமைகளில் எதையேனும் செலுத்தி வருகையிலும் புரிந்து வருகையிலும், மேற்சொன்ன தொகுப்புச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்ட மாவட்ட குற்றவியல் நடுவரின் பொதுவான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர் ஆகார். (4) மேற்சொன்ன தொகுப்புச் சட்டத்தில் எண்ன அடங்கியிருந்தபோதிலும், இந்தப் பிரிவின் வகைமுறைகள் செயல் விளைவு கொண்டிருத்தல் வேண்டும். 5. மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகர்களில் குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முந்தி செயற்பட்டு வந்த காவற்படை நீட்டிக்கப்பட்ட மாநகர் காவல் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட காவற்படையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.- (1) மதுரை மாநகரிலும் கோயம்புத்தூர் மாநகரிலும் குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முந்தி செயற்பட்டு வந்த காவற் படையானது (இதன் பின்பு இந்தப் பிரிவில் அப்போதிருந்த காவற் படை (existing police force) எனக் குறிப்பிடுவது), குறிக்கப்பட்ட நாளன்று, நீட்டிக்கப்பட்ட மாநகர் காவல் படையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும், குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முன்பு இணைப்புப்பட்டியலின் (1) ஆம் பத்தியில் சொல்லப்பட்டுள்ள பதவியை வகித்த, அப்போதிருந்த காவற்படையின் உறுப்பினர் ஒவ்வொருவரும், அத்தகைய குறிக்கப்பட்ட நாளன்று, அந்த இணைப்புப்பட்டியலின் (2) ஆம் பத்தியில் உள்ள நேரிணையான பதிவில் சொல்லப்பட்டுள்ள பதவிக்கு நியமிக்கப்படுவதாகக் கொள்ளப்படுதல் வேண்டும். (2) குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முன்பு, அப்போதிருந்த காவற் படையின் காவல் அலுவலர் எவரின் முன்பேனும் நடப்பிலிருந்த புலனாய்வுகள் வாயிலான நடவடிக்கைகள் உள்ளடங்கலாக) நடவடிக்கைகள் அனைத்தும், குறிக்கப்பட்ட நாளன்று, (1) ஆம் உட்பிரிவின்படி எந்தப் பதவிக்கு அவர் நியமனம் செய்யப்படுவதாகக் கொள்ளப்படுகின்றாரோ அந்தப் பதவியை வகிப்பவர் என்கின்ற தகுதியில் அவர் முன்பு நடப்பில் உள்ள நடவடிக்கைகளாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் அவ்வாறே அவை நடத்தப்படுதலும் வேண்டும். (3) குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முன்பு மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது நிருவாகத்துறை குற்றவியல் நடுவரொருவரால் எந்தச் சட்டத்தின் படியேனும் செலுத்தப்படக்கூடிய அதிகாரம் அல்லது ஆற்றப்படக்கூடிய பணி ஏதேனும் நீட்டிக்கப்பட்டவாறான மாநகர் காவல் சட்டத்தால் அல்லது அதன்படி, காவல்துறை ஆணையருக்கு அல்லது வேறேதேனும் காவல்துறை அலுவலருக்கு வழங்கப்பட்டிருக்குமிடத்து அத்தகைய வழங்குகைக்கு அடுத்து முன்பு மாவட்ட குற்றவியல் நடுவர் அல்லது நேர்விற்கேற்ப, நிருவாகத்துறை குற்றவியல் நடுவரின் முன்னர் நடப்பிலிருந்த அத்தகைய அதிகாரத்தைச் செலுத்துவது அல்லது அத்தகைய பணியை ஆற்றுவது தொடர்பான அல்லது அதிலிருந்து எழுகின்ற நடவடிக்கைகள் அனைத்தும், காவல் துறை ஆணையருக்கு அல்லது பிற காவல் துறை அலுவலருக்கு அத்தகைய அதிகாரம் அல்லது பணியானது வழங்கப்பட்டதன் பேரில், அக்காவல் துறை அலுவருக்கு மாற்றப்படாததால் வேண்டும்; மற்றும் எந்த அலுவலுருக்கு அவ்வாறு அத்தகைய நடவடிக்கைகள்: அவ்வாறு மாற்றப்பட்டவையாகின்றனவோ அந்த அலுவலர் புதிதாகவோ அல்லது அத்தகைய மாற்றல் நிலையிலிருந்தோ தொடருதல் வேண்டும். 6. மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகரின் ஆணையர்களின் மீது காவல் துறை தலைமை இயக்குநரின் கட்டுப்பாடு.-- (1) நீட்டிக்கப்பட்டவாறான மாநகர் காவல் சட்டத்தில் எண்ன அடங்கியிருந்தபோதிலும், மதுரை காவல்துறை ஆணையரும் கோயம்புத்தூர் காவல்துறை ஆணையரும், நீட்டிக்கப்பட்ட மாநகர் காவல் சட்டத்தின் கீழ் தங்கள் பணிகளைச் செலுத்துகையில், (2) ஆம் உட்பிரிவின் கீழ் செய்யப்படக்கூடிய விதிகள் எவற்றிற்கும் உட்பட்டு, தமிழ்நாடு மாநிலத்திற்கான காவல்துறை தலைமை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழும் பணிப்புரையின் கீழும் இருந்துவருதல் வேண்டும். (2) மதுரை மற்றும் கோயம்புத்தூர் காவல்துறை ஆணையர்களைப் பொறுத்து (1) ஆம் உட்பிரிவினால், காவல்துறை தலைமை இயக்குநருக்கு அளிக்கப்பட்ட கட்டுப்பாட்டு மற்றும் பணிப்புரை அதிகாரங்களைச் செலுத்துவதை வரையறுக்கவும் முறைப்படுத்தவும் விதிகளைச் செய்வதற்கு, அரசு தகுதி வாய்ந்ததாகும். (3) மாவட்டக் குற்றவியல் நடுவரொருவராகவோ அல்லது நிருவாகத் துறை குற்றவியல் நடுவரொருவராகவோ சட்டம் எதன்படியேனும், மதுரை காவல்துறை ஆணையரால் அல்லது நேர்விற்கேற்ப, கோயம்புத்தூர் காவல்துறை ஆணையரால் செலுத்தப்படலாகும் அதிகாரங்கள் அல்லது ஆற்றப்படலாகும் பணிகள் தொடர்பாக, இந்தப் பிரிவிலுள்ள எதுவும் பொருந்தாது. 7. மதுரை மாநகரிலும் கோயம்புத்தூர் மாநகரிலும் நடைமுறையில் இராத சட்டங்களைக் குறிப்பிடும் சுட் கைகளுக்குப் பொருள் கொள்ளுதல்.- (1) குறிக்கப்பட்ட நாளன்று மதுரை மாநகரிலோ அல்லது, நேர்விற்கேற்ப, கோயம்புத்தர் மாநகரிலோ நடைமுறையில் இல்லாத சட்டம் ஒன்று குறித்து இந்தச் சட்டத்தினால் நீட்டிக்கப்பட்டவாறான மாநகர காவல் சட்டத்தில் உள்ள சுட்டுகை (reference) எதுவும், மேற்சொன்ன மாநகர்கள் தொடர்பாக, மேற்சொன்ன மாநகர்களில் நடைமுறையில் உள்ள நேரிணையான சட்டம், ஏதேனுமிருப்பின், அதைக் குறிக்கும் ஒரு சுட்டுகையாகப் (reference) பொருள் கொள்ளப்படுதல் வேண்டும். (2) மதுரை மாநகரிலும் கோயம்புத்தூர் மாநகரிலும் நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும் 1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்தைக் (மையச் சட்டம் )5071859) குறிப்பிடும் சுட்டுகை எதுவும் அந்த மாநகர்கள் தொடர்பாக, குறிக்கப்பட்ட நாளிலும் அதற்குப் பின்னரும், மாநகர காவல் சட்டத்தைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும். 8. நேரிணையான சட்டத்தை (corresponding law) நீக்கறவு செய்தல்.- குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த முன்னர், 1859 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் (மையச் சட்டம் XXIV/1859) (இதன் பின்பு இந்தப் பிரிவில் மையச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவது) மற்றும் மையச் சட்டத்திற்கான இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ளதும், மையச் சட்டத்தின் 54-& பிரிவின்படியான அறிவிக்கையின் மூலமாக நீட்டிக்கப்பட்டுள்ளதுமான மாநகர் காவல் சட்டத்தின் வகைமுறைகள் உள்ளடங்கலாக மாநகர காவல் சட்டத்திற்கு நேரிணையான சட்டம் (corresponding law) எதுவேனும் மதுரை மாநகரிலோ கோயம்புத்தூர் மாநகரிலோ நடைமுறையில் இருக்குமாயின், அத்தகைய நேரிணையான சட்டமானது, எந்தப் பொருள்களைப் பொறுத்து இம்மாநிலத்திற்கான சட்டங்களைச் செய்வதற்கான அதிகாரத்தை மாநிலச் சட்டமன்றம் பெற்றுள்ளதோ அந்தப் பொருள்களுக்கு எந்த அளவுக்கு அந்த நேரிணையான சட்டம் தொடர்புடையதாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு, மதுரை மாநகர் அல்லது, நேர்விற்கேற்ப, கோயம்புத்தூர் மாநகரைப் பொறுத்தவரையில் குறிக்கப்பட்ட நாளில் நீக்கறவு செய்யப்பட்டதாதல் வேண்டும். 9. காப்புகள்.- (1) நேரிணையான சட்டம் எதையும் 8 ஆம் பிரிவினால் நீக்கறவு செய்வதானது,- (ஐ அத்தகைய சட்டம் எதனின் முந்திய செயற்பாட்டையோ அல்லது அதன்கீழ்ச் செய்யப்பட்ட செயல் எதனையுமோ அல்லது உரியவாறு அதற்கு உள்ளான எதனையுமோ, அல்லது (b) அத்தகைய சட்டம் எதனின் கீழும், ஈட்டப்பட்ட, சேர்ந்துள்ள அல்லது உள்ளான உரிமை, சிறப்புரிமை, கடமைப்பொறுப்பு அல்லது கடப்பாடு எதையும், அல்லது (6) அத்தகைய சட்டம் எதற்கும் எதிராக புரியப்பட்ட குற்றம் ஏதொன்றையும் பொறுத்து உள்ளான தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை எதையும், அல்லது (0) மேற்சொல்லப்பட்டவாறான உரிமை, சிறப்புரிமை, கடமைப்பொறுப்பு, கடப்பாடு, தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை ஏதொன்றினையும் பொறுத்த புலனாய்வு சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி எதையும், பாதிக்கலாகாது மற்றும் அத்தகைய புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி, மாநகர் காவல் சட்டம் நீட்டிக்கப்பட்டிராததுபோன்றே தொடுக்கப்படலாம், தொடரப்படலாம் அல்லது செயற்படுத்தப்படலாம்; மேலும் அத்தகைய தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை விதிக்கப்படலாம். (2) ௫ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, மதுரை மாநகர் அல்லது நேர்விற்கேற்ப கோயம்புத்தூர் மாதகரைப் பொறுத்தவரையில், அத்தகைய நேரிணையான சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட நியமனம் அல்லது ஒப்படைவு எதுவும், பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை, ஆணை, அறிவுறுத்தம் அல்லது பணிப்புரை எதுவும், உருவாக்கப்பட்ட விதி, ஒழுங்குமுறை விதி, படிவம், துணைவிதி அல்லது திட்டம் எதுவும் அல்லது வழங்கப்பட்ட சான்றிதழ், அனுமதி அல்லது உரிமம் எதுவும், அல்லது செய்து கொள்ளப்பட்ட பதிவு எதுவும் உள்ளடங்கலாக செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், மாநகர் காவல் சட்டத்தின் நேரிணையான வகைமுறைகளின் கீழ் செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும். மேலும், நீட்டிக்கப்பட்டவாறான மேற்சொன்ன மாநகர் காவல் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட செயல் எதனாலுமோ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலுமோ அழித்தறவு செய்யப்பட்டாலன்றியும் மற்றும் செய்யப்படும் வரையிலும், அதன்படியே தொடர்ந்து நடைமுறையில் இருந்துவருதலும் வேண்டும். 10. புதிய அதிகார அமைப்புகள் அமைத்துருவாக்கபட்டிருக்கின்ற விடத்து அமைப்புகளைக் குறிப்பிடும் சுட்டுகைக்கு கொள்ளுதல்.-- மதுரை மாநகறிலோ அல்லது நேர்விற்கேற்ப கோயம்புத்தூர் மாநகரிலோ அதிகாரங்கள் எவற்றையேனும் செலுத்துகின்ற அல்லது பணிகள் எவற்றையும் ஆற்றுவதற்கு, குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முந்திய தேதியன்று, தகுதியுடையதாயிருந்த அதிகார அமைப்பு என்று நடைமுறையிலுள்ள சட்டம் எதிலேனும், எவ்வகைச் சொற்களின் மூலமாகவேனும் குறிப்பிடப்படும் சுட்டுகை எதுவும், நீட்டிக்கப்பட்டவாறான மாநகர் காவல் சட்டத்தின்படியாகவோ அல்லது அதனைடஐயொட்டியோ அல்லது இந்தச் சட்டத்தின்படியாகவோ மேற்சொன்ன மாநகர்களுக்கு நேரிணையான புதிய அதிகார அமைப்பொன்று அமைத்து வாக்கப்பட்டிருக்கின்ற விடத்து, அது அந்த புதிய அதிகார அமைப்பைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாக இருந்தாற்போன்றே செல்லுந்தன்மையுடையதாகும். 11. மாநகர் காவல் சட்டத்தைப் பொருந்தச் செய்வதற்கு உதவுகின்ற நோக்கங்களுக்காக நீதிமன்றங்கள், பிற அதிகார அமைப்புகள் ஆகியவற்றின். அதிகாரங்கள்.- நீட்டிக்கப்பட்டவாறான மாநகர் காவல் சட்டத்தை மதுரை மாநகரிலும், கோயம்புத்தூர் மாநகரிலும் பொருந்தச் செய்வதற்கு உதவுகின்ற நோக்கங்களுக்காக, நீதிமன்றம் எதுவும் அல்லது பிற அதிகார அமைப்பு எதுவும், அந்த நீதிமன்றத்தின் அல்லது அந்த அதிகார அமைப்பின் முன்பு உள்ள பொருள் எதற்கும் ஏற்றபடி மேற்சொன்ன சட்டத்தைப் பொருந்தச் செய்வதற்கு தேவையாயிருக்கக்கூடியவாறு, கருப்பொருளை பாதிக்காத மாறுதல்களுடன், அதற்கு (மேற்சொன்ன சட்டத்திற்குப்) பொருள் கொள்ளலாம். 12. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1) அரசு, இந்தச் சட்டத்தின். நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம். (2) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்; மேலும் குறிப்பிட்டதொரு நாளன்று அவை நடைமுறைக்கு வருதல் வேண்டும் என வெளிப்படையாக சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும். (3) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், குறிப்பிட்டதொரு நாளன்று அவை நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்படும் நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும். (4) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை, அல்லது வெளியிடப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும், அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பிண்ணர், கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும், மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடரோ அல்லது அடுத்த கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர், சட்டமன்றப் பேரவை அந்த விதி, ஆணை அல்லது அறிவிக்கையில் மாறுதல் எதையும் செய்வதற்கு உடன்படுமாயின் அல்லது அந்த விதியோ, ஆணையோ, அறிவிக்கையோ செய்யப்படுதலாகாது என்று உடன்படுமாயின், அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது, நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராதுபோதல் வேண்டும்; எனினும், அவ்வாறு மாறுதல் செய்வது அல்லது அழித்தறவு செய்வது எதுவும், அந்த விதி அல்லது, ஆணை அல்லது அறிவிக்கையின் கீழ் முன்னதாகச் செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன் மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும். 13. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.- மதுரை மாநகருக்கும், கோயம்புத்தூர் மாநகருக்கும் நீட்டிக்கப்பட்டவாறான மாநகர் காவல் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமாயின், அரசு, சூழ்நிலைக்குத் தேவைப்படுகின்றவாறு, ஆணையின் மூலம் அந்த இடர்ப்பாட்டை ந்க்குகின்ற நோக்கத்திற்காகத் தேவை என அதற்குத் தோன்றக்கூடிய எதனையும் செய்யலாம்: ஆனால், குறிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டாண்டுகள் முடிவடைந்த பின்னர், இந்தப் பிரிவின்படி ஆணை எதுவும் பிறப்பிக்கப்படலாகாது. இணைபப்புப்பட்டியல் (5 ஆம் பிரிவைக் காணவும்) குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முன்பு உள்ளவறான அலுவலரின். பதவிப் பெயர் (1) 1. காவல்துறை கண்காணிப்பாளர் 2.காவல்துறை கண்காணிப்பாளர். துணைக் அலுவலர் நியமிக்கப்பட்டதாக கொள்ளப்படும் பதவி. (2) காவல்துறை ஆணையர்; ஆனால் குறிக்கப்பட்ட நாளுக்குப் பின்பு, காவல்துறை துணைத்தலைவரின் (Deputy Inspector General of Police) படிநிலையில் உள்ள அலுவலரொருவரை, காவல்துறை ஆணையராக அரசு நியமிக்கலாம். மேலும், காவல்துறைத் துணைத் தலைவரின் படிநிலையில் காவல்துறை ஆணையர் ஒருவர் நியமிக்கப்படுமிடத்து, காவல்துறை துணை ஆணையஸரொருவரை அரசு நியமிக்கலாம். காவல்துறை உதவி ஆணையர்Open official source version ↗
About this act
- Jurisdiction
- Tamil Nadu
- Enactment date
- 1987-07-21
- Sections available
- Document reader
India Code, Government of India. Text fetched 16 Oct 2026. Source metadata reports last modification: 2025-06-10. Check the linked official text and subsequent notifications when applying a provision.