Tamil Nadu · Act 5 of 1898

The Malabar Wills Act, 1898

An Act to declare the testamentary power of persons governed by the Marumakkatayam or the Aliyasantana law of inheritance, and to provide rules for the execution, attestation, revocation and revival of the wills of such persons

Read in your languageअपनी भाषा में पढ़ें · Official source versions

Only available official source versions are shown. Language labels come from source metadata or filenames.

Tamil script
Find in this text

Tamil script — official source version

the_malabar_wills_act,_1898.pdf.txt

1898 ஆம்‌ ஆண்டு மலபார்‌ உயில்கள்‌ சட்டம்‌ 

சட்ட எண்‌ு/71898 

மருமக்கள்தாயம்‌ அல்லது அலியசந்தணா வாரிசுரிமைச்‌ சட்டத்தால்‌ 

நிர்வகிக்கப்படும்‌ நபர்களின்‌ உயில்வழி அதிகாரத்தை விளம்புகை செய்யவும்‌, 

அத்தகைய நபர்களின்‌ உயில்களை நிறைவேற்றுதல்‌, உறுதிச்சான்றளித்தல்‌, 

இரத்து செய்தல்‌ மற்றும்‌ புத்துயிரளித்தலுக்கான விதிகளுக்கு 

வகைசெய்வதற்குமானதொரு சட்டம்‌. 

முகப்புரை 

மருமக்கள்தாயம்‌ அல்லது அலியசந்தணா வாரிசுரிமைச்‌ சட்டத்தால்‌ 

நிர்வகிக்கப்படும்‌ நபர்களின்‌ உயில்வழி அதிகாரம்‌ பொருத்து சந்தேகங்கள்‌. 

எழுந்துள்ளதாலும்‌, அத்தகைய சந்தேகங்களை நீக்குவது உகந்தது என்பதாலும்‌. 

மேலும்‌ அத்தகைய நபர்களின்‌ உயில்களை நிறைவேற்றுதல்‌, உறுதிச்‌ 

சான்றளித்தல்‌, இரத்து செய்தல்‌ மற்றும்‌ புத்துயிரளித்தலுக்கான விதிகளுக்கு 

வகைசெய்வது உகந்ததாக இருக்கும்‌ என்பதனாலும்‌, ஈங்கிதனால்‌ பின்வருமாறு 

சட்டம்‌ இயற்றப்படுவதாகுக:- 

பகுதி-॥ 

முன்னுரை 

1. குறுந்தலைப்பு.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1898 ஆம்‌ ஆண்டு மலபார்‌ உயில்கள்‌ சட்டம்‌ 

என வழங்கப்பெறும்‌. 

(2) வட்டார அளாவுகை.- இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ அளாவி 

நிற்கும்‌; மற்றும்‌ 

(3) தொடக்கம்‌.- இதன்‌ சார்பாக மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக்‌ 

குறித்திடும்‌ அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 

2. பொருள்‌ விளக்கக்கூறு-. இந்தச்‌ சட்டத்தில்‌, பொருளுக்கு அல்லது 

தறுவாய்க்கு முரணாக எதுவும்‌ இருந்தாலன்றி.- 

(1) "இளவர்‌".- "இளவர்‌" என்பது, பதினெட்டு வயது நிறைவெய்திடாத நபர்‌ 

எவரும்‌ என்று பொருள்படும்‌; 

(2) "உயில்‌". "உயில்‌" என்பது, உயில்‌ எழுதுபவர்‌, தனது இறப்பிற்குப்‌ 

பின்னர்‌ நடைமுறைக்கு வர விரும்பும்‌, அவரது சொத்துத்‌ தொடர்பான அவரது 

எண்ணங்களின்‌ சட்டப்படியான அறிவிப்பு எதுவும்‌ என்று பொருள்படும்‌;



(3) "உயிலிணைப்பு".- "உயிலிணைப்பு" என்பது, உயில்‌ ஒன்றுடன்‌ 

தொடர்புடைய மற்றும்‌ அதனுடைய உரிமைமாற்றத்தை விளக்குகின்ற, 

மாற்றுகின்ற அல்லது சேர்த்துக்கொள்கின்ற ஒரு முறையாவணம்‌ என்று 

பொருள்படும்‌. இது, உயிலின்‌ கூடுதல்‌ பகுதி ஒன்றை அமைப்பதாகக்‌ கருதப்படும்‌. 

பகுதி-॥ 

உயில்கள்‌ பற்றி. 

3. இந்தப்‌ பகுதி எந்த நபர்களுக்குப்‌ பொருந்தும்‌.- இந்தப்‌ பகுதியானது, தமிழ்நாடு 

மாநிலத்தில்‌ குடியேறிய, மருமக்கள்தாயம்‌ அல்லது அலியசந்தனா வாரிசுரிமைச்‌ 

சட்டத்தால்‌ நிருவகிக்கப்படும்‌ நபர்களுக்குப்‌ பொருந்தும்‌. 

4. உயில்களை உருவாக்குவதற்குத்‌ தகுதியுடைய நபர்கள்‌.-- ஓர்‌ இளவராக 

இல்லாத மற்றும்‌ நல்ல மனநிலையைக்‌ கொண்டுள்ள ஒவ்வொரு நபரும்‌, 

வாழ்வோரிடையே கொடையாக சட்டப்படியாக உரிமைமாற்றம்‌ செய்யக்கூடிய 

சொத்தை, உயிலின்‌ மூலம்‌ மாற்றி அளிக்கலாம்‌. மேலும்‌ அத்தகைய சொத்தை 

அளிப்பதற்கு எப்போதும்‌ அவர்‌ தகுதி உடையவராகக்‌ கருதப்படுவார்‌. 

விளக்கம்‌ ।-காது கேளாத அல்லது வாய்ப்பே இயலாத அல்லது 

பார்வையற்றவராக இருக்கும்‌ நபர்கள்‌ எவரும்‌, அவர்கள்‌ என்ன செய்கிறார்கள்‌. 

என்பதை அதன்மூலம்‌ அறிய முடிந்தால்‌, உயில்‌ ஒன்றை உருவாக்குதற்கு 

தகுதியற்றவர்கள்‌ ஆவதில்லை. 

விளக்கம்‌ ॥-வழக்கமாக பித்துப்பிடித்தவராக உள்ள நபர்‌ எவரும்‌, 

இடைவெளியில்‌ நல்ல மனநிலையில்‌ அவர்‌ இருக்கும்போது உயில்‌ ஒன்றை 

உருவாக்கலாம்‌. 

விளக்கம்‌ ॥ நபரொருவர்‌, தான்‌ எண்ன செய்கிறோம்‌ என்பதை அறியாமல்‌, 

குடிபோதை நிலையிலிருந்து அல்லது நோயிலிருந்து அல்லது பிற காரணம்‌ 

எதனிலிருந்தும்‌ தோன்றுகின்ற அத்தகைய தெளிவற்ற மனநிலையின்போது, 

உயில்‌ ஒன்றை உருவாக்க இயலாது. 

5. மோசடி, வலுக்கட்டாயம்‌ அல்லது விடாத்‌ தொந்தரவு மூலம்‌ அடையப்‌ பெற்ற 

உயில்‌.- ஓர்‌ உயிலோ அல்லது ஓர்‌ உயிலின்‌ பகுதி எதுவுமோ, மோசடி அல்லது 

வலுக்கட்டாயம்‌ அல்லது உயில்‌ எழுதி வைப்பவருக்கு மன வேதனையை 

உண்டாக்கும்‌ அத்தகைய விடாத்‌ தொந்தரவு மூலம்‌ உருவாக்கப்பட்டதாக 

இருப்பின்‌ அது இல்லாநிலையது ஆகும்‌. 

6. உயில்‌ இரத்து செய்யப்படலாம்‌ அல்லது மாற்றியமைக்கப்படலாம்‌.- உயிலை 

எழுதிக்‌ கொடுப்பவர்‌, உயில்‌ மூலம்‌ தனது சொத்தை மாற்றி அளிப்பதற்கு தகுதி



உடையவராக இருக்கும்போது, எந்நேரத்திலும்‌, அந்த உயிலானது, அவரால்‌ 

இரத்து செய்யப்படுவதற்கோ அல்லது மாற்றியமைக்கப்படுவதற்கோ உட்படுதல்‌ 

வேண்டும்‌. 

7. காப்புக்‌ கூறு.- 4 ஆம்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌,- 

(ஐ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு முன்னர்‌ நிறுவப்பெற்ற எந்தவொரு 

உரிமையும்‌, தகுதிவாய்ந்த அதிகாரவரம்பு கொண்ட நீதிமன்றத்தின்‌ ஓர்‌ இறுதித்‌ 
தீர்ப்பாணையினால்‌ பாதித்தல்‌ ஆகாது; 

(௦) நபர்கள்‌ எவருக்கும்‌, பராமரிப்பிற்கான உரிமை எதனையும்‌ இழக்கச்‌ 

செய்வதற்கு, உயில்‌ எழுதுபவருக்கு அதிகாரமளித்தல்‌ ஆகாது. ஆனால்‌ 4 ஆம்‌ 

பிரிவிற்காக, உயில்‌ எழுதுபவர்‌ உயிலின்‌ மூலம்‌ அவர்களை, அவ்வுரிமையை 

இழக்கச்‌ செய்ய இயலாது. 

(6௦) உயிலற்ற வாரிசுரிமைச்‌ சட்டத்தைப்‌ பாதிக்கவோ அல்லது இந்தச்‌ 

சட்டத்திற்கு முன்பே அவர்‌ உருவாக்கிட இயலாத எந்தவொரு உரிமை 

நலனையும்‌, சொத்தில்‌ உருவாக்கவோ, உயிலை எழுதும்‌ எந்தவொரு நபருக்கும்‌ 

அதிகாரமளித்தல்‌ கூடாது. 

பகுதி-1॥ 

உயிலை நிறைவேற்றுதல்‌, உறுதிச்சான்றளித்தல்‌, இரத்து செய்தல்‌, 

மாற்றியமைத்தல்‌ மற்றும்‌ புத்துயிரளித்தல்‌ பற்றி. 

8. இந்தப்‌ பகுதி எந்த நபர்களுக்குப்‌ பொருந்தும்‌.- இந்தப்‌ பகுதியானது, தமிழ்நாடு 

மாநிலத்தில்‌ குடியேறியிருந்தாலும்‌ இல்லாவிட்டாலும்‌, மருமக்கள்தாயம்‌ அல்லது 

அலியசந்தனா வாரிசுரிமைச்‌ சட்டத்தால்‌ நிருவகிக்கப்படும்‌ நபர்களுக்குப்‌ 

பொருந்தும்‌. 

9. உயில்‌ மற்றும்‌ உயிலிணைப்புகளை நிறைவேற்றுதல்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ 

தொடக்கத்‌ தேதியன்று அல்லது அதற்குப்‌ பிண்னர்‌ தமிழ்நாடு மாநிலத்திற்குள்‌ 

செய்யப்பட்ட அனைத்து உயில்கள்‌ மற்றும்‌ உயிலிணைப்புகளும்‌, மற்றும்‌ 

கூறப்பட்ட மாநிலத்திற்குள்‌ அமைந்துள்ள அசையா சொத்துகளுடன்‌ 

தொடர்புடைய, கூறப்பட்ட மாநிலத்திற்கு வெளியே எழுதிக்‌ கொடுக்கப்பட்ட 

அனைத்து உயில்கள்‌ மற்றும்‌ உயிலிணைப்புகளும்‌ பின்வரும்‌ விதிகளுக்கு 

இணங்க நிறைவேற்றப்படுதல்‌ வேண்டும்‌:- 

முதலாவதாக.- உயிலில்‌, உயிலை எழுதி வைப்பவர்‌ கையொப்பமிடுதல்‌ 

வேண்டும்‌ அல்லது அவரது குறியீட்டை இடுதல்‌ வேண்டும்‌ அல்லது அவரது



வழிகாட்டுதலின்‌ மூலமும்‌, அவர்‌ முன்னிலையிலும்‌ பிற நபர்‌ எவரும்‌ 

கையொப்பமிடுதல்‌ வேண்டும்‌. 

இரண்டாவதாக.- உயில்‌ எழுதி வைப்பவரின்‌ கையொப்பம்‌ அல்லது 

குறியீடு அவருக்காக கையொப்பமிடும்‌ நபரறின்‌ கையொப்பமானது, ஓர்‌ உயிலாக 

எழுதப்பட்டதை நடைமுறைப்படுத்துவதற்காக, அதன்‌ மூலம்‌ கருதப்பட்டதைப்‌ 

போல தோன்றும்‌ வகையில்‌ இடப்படுதல்‌ வேண்டும்‌. 

மூன்றாவதாக.-- உயிலானது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட 

சாட்சிகளால்‌ சான்றொப்பமிடப்படுதல்‌ வேண்டும்‌; அவர்கள்‌ ஒவ்வொருவரும்‌ 

உயில்‌ எழுதி வைப்பவரை, உயிலில்‌ அவர்‌ கையொப்பமிடுவதையோ அல்லது 

அவரது குறியீட்டை இடுவதையோ பார்த்திருக்க வேண்டும்‌ அல்லது உயில்‌ எழுதி 

வைப்பவரின்‌ வழிகாட்டுதலின்‌ மூலமும்‌, அவரது முன்னிலையிலும்‌ உயிலில்‌ பிற 

நபர்‌ கையொப்பமிடுவதைப்‌ பார்த்திருக்க வேண்டும்‌ அல்லது உயில்‌ எழுதி 

வைப்பவரின்‌ கையொப்பம்‌ அல்லது குறியீடு அல்லது அத்தகைய பிற நபரின்‌. 

கையொப்பத்திற்காக ஒப்புதலை உயிலில்‌ நேரடியான முறையில்‌ பெற்றிருத்தல்‌ 

வேண்டும்‌; மற்றும்‌ ஒவ்வொரு சாட்சியும்‌, உயில்‌ எழுதி வைப்பவரின்‌ 

முன்னிலையில்‌ உயிலில்‌ கையொப்பமிடுதல்‌ வேண்டும்‌, ஆனால்‌ ஒரே நேரத்தில்‌ 

ஒன்றிற்கு மேற்பட்ட சாட்சிகளின்‌ வருகை தேவையில்லை. மேலும்‌ உறுதிச்‌ 

சான்றளிப்பதற்கு குறித்த வடிவிலான படிவம்‌ எதுவும்‌ தேவையில்லை. 

10. குறிப்பு மூலம்‌ ஆவணங்களை இணைத்தல்‌. ஓர்‌ உயிலை எழுதி வைப்பவர்‌, 

ஓர்‌ உயிலில்‌ அல்லது முறையாக சான்றொப்பமிடப்பட்ட உயிலிணைப்பில்‌, 

உண்மையில்‌ எழுதப்பட்ட பிற ஆவணம்‌ எதுவும்‌ அவரது உள்நோக்கங்களின்‌ 

எந்தவொரு பகுதியையும்‌ வெளிப்படுத்துவதாகக்‌ குறிப்பிட்டால்‌, அத்தகைய 

ஆவணங்கள்‌, அது குறிப்பிடப்பட்டுள்ள உயிலின்‌ அல்லது உயிலிணைப்பின்‌ ஒரு 

பகுதியாகக்‌ கருதப்படும்‌. 

11. சாட்சியானவர்‌, அக்கறையுள்ளவராக இருப்பதனால்‌ அல்லது 

நிறைவேற்றாளராக இருப்பதனால்‌ தகுதியற்றவராகமாட்டார்‌.- எந்தவொரு நபரும்‌, 

ஓர்‌ உயிலில்‌ அக்கறையுள்ளவராக அல்லது ஓர்‌ உயிலின்‌ நிறைவேற்றாளராக 

இருக்கும்‌ காரணத்தினால்‌, உயிலின்‌ நிறைவேற்றுதலை மெய்ப்பிக்கவோ 

அல்லது அதன்‌ செல்லுந்தன்மையை அல்லது செல்லா நிலையை 

மெய்ப்பிக்கவோ சாட்சியாக இருக்க தகுதியற்றவராகமாட்டார்‌. 

12. உயில்‌ அல்லது உயிலிணைப்பினை இரத்து செய்தல்‌.-- உயில்‌ அல்லது 

உயிலிணைப்பு அல்லது அதன்‌ பகுதி எதுவும்‌, மற்றொரு உயில்‌ அல்லது 

உயிலிணைப்பின்‌ மூலம்‌ பிறவாறாக, அதனை இரத்து செய்யும்‌ நோக்கத்தை 

அறிவிக்கும்‌ சில எழுத்துவழி மூலம்‌ மற்றும்‌ இதனில்‌ இதன்முன்பு



நிறைவேற்றப்பட வேண்டிய விதத்தில்‌ உயில்‌ ஒன்றை நிறைவேற்றுவதன்‌ மூலம்‌ 

அல்லது உயில்‌ எழுதி வைப்பரால்‌ அல்லது அவரது முன்னிலையிலும்‌ அவரது 

வழிகாட்டுதல்பேரிலும்‌ பிற நபரால்‌ அதை இரத்து செய்யும்‌ நோக்கத்துடன்‌ அதை 

எரித்தல்‌, கிழித்தல்‌ அல்லது பிறவாறாக அழித்தல்‌ மூலமோ அதை இரத்து செய்தல்‌ 

ஆகாது. 

13. உயிலில்‌ முழு உறுப்பு நீக்கம்‌, வரியிடைச்‌ சேர்ப்பு அல்லது மாற்றத்தின்‌. 

விளைவு.-- உயிலை நிறைவேற்றுவதற்கு இதனில்‌ இதன்முன்பு, தேவைப்படும்‌ 

அதே முறையில்‌ அத்தகைய மாற்றம்‌ செய்யப்படாவிட்டால்‌, உயிலின்‌ சொற்கள்‌ 

அல்லது பொருள்‌ அதன்மூலம்‌ தெளிவற்றதாகவோ அல்லது புரியாததாகவோ 

இருந்தாலன்றி, எந்தவொரு உயிலிலும்‌ செய்யப்பட்ட எந்தவொரு உயிலிலும்‌ 

செய்யப்பட்ட எந்தவொரு முழு உறுப்பு நீக்கம்‌, வரியிடைச்‌ சேர்ப்பு அல்லது 

மாற்றம்‌, எந்த விளைவையும்‌ கொண்டிருக்காது; அவ்வாறு மாற்றப்பட்டவாறு, 

உயில்‌ எழுதுபவரின்‌ கையொப்பமும்‌ சாட்சிகளின்‌ கையொப்பமும்‌, உயிலின்‌ 

விளிம்பில்‌ அல்லது பிற பகுதிக்கு எதிராகவோ அல்லது அத்தகைய மாற்றத்திற்கு 

அருகிலோ அல்லது மாற்றத்தைக்‌ குறிக்கும்‌ குறிப்பாணையின்‌ அடிப்பகுதியிலோ 

அல்லது முடிவிலோ அல்லது எதிரிலோ செய்யப்பட்டால்‌, மற்றும்‌ உயிலின்‌. 

முடிவிலோ அல்லது வேறு ஏதேனும்‌ பகுதியிலோ எழுதப்பட்டிருந்தால்‌ அந்த 

உயில்‌ முறையாக நிறைவேற்றப்பட்டதாகக்‌ கருதப்படும்‌. 

14. உயில்‌ அல்லது உயிலிணைப்பைப்‌ புதுப்பித்தல்‌.- எந்தவொரு முறையிலும்‌ 

இரத்து செய்யப்படும்‌ உயில்‌ அல்லது உயிலிணைப்பு எதுவும்‌ அல்லது அதன்‌ 

பகுதி எதுவும்‌, அதனை மீண்டும்‌ நிறைவேற்றுவதன்‌ மூலம்‌ அல்லது இதனில்‌ 

இதன்முன்பு கோரப்பட்ட முறையில்‌ நிறைவேற்றப்பட்ட ஓர்‌ உயிலிணைப்பின்‌. 

மூலம்‌ மற்றும்‌ அதனைப்‌ புதுப்பிக்கும்‌ நோக்கத்தை வெளிப்படுத்துவதன்‌ மூலம்‌ 

ஆகியவற்றினாலன்றி, பிறவாறாக புதுப்பிக்கப்படுதல்‌ கூடாது. மேலும்‌ உயில்‌ 

அல்லது உயிலிணைப்பு எதுவும்‌ பகுதியளவில்‌ இரத்து செய்யப்பட்டு, பின்னர்‌ 

முழுவதும்‌ இரத்து செய்யப்பட்டுப்‌ புதுப்பிக்கப்படும்போது, அத்தகைய 

புதுப்பித்தலானது, அந்த உயில்‌ அல்லது உயிலிணைப்பிற்கு முரணான ஒரு 

நோக்கம்‌ இருந்தாலன்றி, அதன்‌ முழுமையும்‌ இரத்து செய்யப்படுவதற்கு முன்னர்‌, 

அது இரத்து செய்யப்பட்ட அளவிற்கு நீட்டிக்கப்படுதல்‌ கூடாது. 

15. படைவிரர்கள்‌ அல்லது கடற்படை மாலுமிகளால்‌, உயில்‌ அல்லது 

உயிலிணைப்பு நிறைவேற்றப்படுதல்‌ மற்றும்‌ இரத்து செய்யப்படுதல்‌.-ஒரு 

படையெடுப்பில்‌ பணியமர்த்தப்பட்டுள்ள அல்லது உண்மையான போர்‌ 

நடவடிக்கையில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒரு படைவிரரால்‌ அல்லது கடலில்‌ ஒரு 

கடற்படை மாலுமியால்‌ உருவாக்கப்படும்‌ உயில்‌ அல்லது உயிலிணைப்பு எதுவும்‌ 

மற்றும்‌ அத்தகைய நபர்‌ தனது உயிலையோ அல்லது உயிலிணைப்பையோ



இரத்து செய்வது எதுவும்‌, அத்தகைய உயில்‌, உயிலிணைப்பு அல்லது இரத்து 

செய்தலானது, இந்தப்‌ பகுதியின்‌ வகைமுறைகளுக்கு இணங்க 

செய்யப்படவில்லை என்ற காரணத்தினால்‌ மட்டுமே செல்லுந்தன்மையற்றதாகக்‌ 

கருதப்படுதல்‌ கூடாது.


Open official source version ↗

About this act

Jurisdiction
Tamil Nadu
Enactment date
1898-08-03
Sections available
Document reader
Source and version

India Code, Government of India. Text fetched 17 Oct 2026. Source metadata reports last modification: 2025-07-29. Check the linked official text and subsequent notifications when applying a provision.

Share this act

The Malabar Wills Act, 1898 — Tamil script | NYAYA SIGNAL

Share the card with this clickable reading link. पढ़ें और अगली धारा देखें।

NYAYA SIGNAL · Free access · Official source references

· Saves and reading positions stay on this device.