Tamil Nadu · Act 31 of 1990

THE MANONMANIAM SUNDARANAR UNIVERSITY ACT, 1990

THE MANONMANIAM SUNDARANAR UNIVERSITY ACT, 1990

Read in your languageअपनी भाषा में पढ़ें · Official source versions

Only available official source versions are shown. Language labels come from source metadata or filenames.

Tamil script
Find in this text

Tamil script — official source version

manonmaniam_sundranar_university_act,_1990.pdf.txt

1990 ஆம்‌ ஆண்டு மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌. 

சட்ட எண்‌.31,/1990 

கூறுகளின்‌ வரிசையமைப்பு 

அத்தியாயம்‌ 1. 

முன்னுரை. 

கூறுகள்‌: 

1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும்‌ தொடக்கம்‌. 

2. பொருள்‌ வரையறைகள்‌. 

அத்தியாயம்‌ ॥. 

பல்கலைக்கழகம்‌. 

3. பல்கலைக்கழகம்‌. 

4. பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களும்‌, அதிகாரங்களும்‌. 

5. கல்லூரிகள்‌, பிற பல்கலைக்கழகம்‌ எதனுடனும்‌ இணைக்கப்படுதலாகாது 

என்பதும்‌ கல்வி நிலையங்களுக்குப்‌ பல்கலைக்கழகத்தால்‌ 

ஏற்பிசைவளிக்கப்படுதலும்‌. 

6. உறுப்பினர்‌ பதவிக்கான தகுதிக்கேடு. 

7. மேற்பார்வை அதிகாரம்‌. 

8. பல்கலைக்கழக அலுவலர்கள்‌. 

9. வேந்தர்‌. 

10. இணை வேந்தர்‌. 

11. துணை வேந்தர்‌. 

12. துணை வேந்தருக்குள்ள அதிகாரங்களும்‌ கடமைகளும்‌. 

13. பதிவாளர்‌. 

14. நிதி அலுவலர்‌. 

15. தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌. 

16. பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகள்‌.



17. திட்டமிடும்‌ குழு. 

18. துணை வேந்தர்‌ மற்றும்‌ பிற அலுவலர்கள்‌ முதலானோர்‌ பொது 

ஊழியர்களாக இருப்பர்‌ என்பது. 

அத்தியாயம்‌ ॥. 

ஆட்சிப்‌ பேரவையும்‌, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவும்‌ அதிகாரங்களும்‌, 

கடமைகளும்‌. 

19. ஆட்சிப்‌ பேரவை. 

20. பல்கலைக்கழகத்தின்‌ விரிவான கொள்கைகளையும்‌ செயல்‌ 

திட்டங்களையும்‌ ஆட்சிப்‌ பேரவை மேலாய்வு செய்தல்‌. 

21. ஆட்சிப்‌ பேரவையின்‌ கூட்டங்கள்‌. 

22. கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு. 

அத்தியாயம்‌ 1V. 

ஆட்சிக்‌ குழு. 

23. ஆட்சிக்குழு. 

24. ஆட்சிக்குழுவின்‌ அதிகாரங்கள்‌. 

25. ஆட்சிக்குழுவின்‌ கூட்டங்கள்‌. 

26. ஆண்டறிக்கை. 

27. ஆண்டு கணக்குகள்‌. 

அத்தியாயம்‌ V. 

புலங்கள்‌ (faculties), பாடக்‌ குழுமங்கள்‌-நிதிக்‌ குழு மற்றும்‌ பிற 

அதிகாரஅமைப்புகள்‌. 

28. புலங்களின்‌ அமைப்பும்‌ அலுவல்களும்‌. 

29. பாடக்‌ குழுமங்கள்‌. 

30. பிற அதிகாரஅமைப்புகளை அமைத்துருவாக்குதல்‌. 

31. நிதிக்‌ குழு.



அத்தியாயம்‌ VI. 

நிலை முறை விதிகள்‌ (Statutes), துணை முறை விதிகள்‌ (Ordinances), 

ஒழுங்குமுறை விதிகள்‌ (regulations) ஆகியவை. 

32. நிலை முறை விதிகள்‌. 

33. நிலை முறை விதிகள்‌ எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது. 

34. துணை முறை விதிகள்‌. 

35. துணை முறை விதிகள்‌ எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது. 

36. ஒழுங்குமுறை விதிகள்‌ எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது. 

அத்தியாயம்‌ VI 

மாணவர்களைச்‌ சேர்த்துக்‌ கொள்ளுதலும்‌, அவர்களின்‌ தங்குமிடமும்‌. 

37. பல்கலைக்கழகக்‌ குறித்தகால படிப்புப்‌ பிரிவுகளுக்குச்‌ சேர்த்துக்‌ 

கொள்ளுதல்‌. 

38. பல்கலைக்கழகத்‌ தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுதல்‌. 

39. பல்கலைக்கழகத்‌ தேர்வுகளுக்குத்‌ தகுதியுடையதாக ஆக்கப்படுகின்ற 

வருகைப்பதிவு. 

40. தங்குமிடங்களும்‌ மாணவர்‌ விடுதிகளும்‌. 

அத்தியாயம்‌ VIl 

பல்கலைக்கழக நிதியங்கள்‌. 

41. பொது நிதியம்‌. 

அத்தியாயம்‌ 1X. 

பணி நிபந்தனைகள்‌. 

42. ஓய்வூதியம்‌, பணிக்கொடை முதலானவை. 

43. பணி நிபந்தனைகள்‌. 

44. தெரிவுக்‌ குழுக்கள்‌. 

45. துறைத்‌ தலைவர்களின்‌ பணி வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌. 

46. புலங்களின்‌ முதன்மையர்கள்‌.



அத்தியாயம்‌ X. 

பல்வகைப்பட்டவை. 

47. தற்செயல்‌ காலியிடங்களை நிரப்புதல்‌. 

48. பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளின்‌ மற்றும்‌ பிற அமைப்புகளின்‌: 

நடவடிக்கைள்‌ காலியிடங்கள்‌ இருப்பதன்‌ காரணமாகச்‌ 

செல்லாதவையாக ஆக்கப்படுதல்‌ ஆகாது. 

49. பல்கலைக்கழகத்தின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்து நீக்குதல்‌. 

50. பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளையும்‌ பிற அமைப்புகளையும்‌ 

அமைத்துருவாக்குதல்‌ பற்றிய தகராறுகள்‌. 

51. குழுக்களை அமைத்துருவாக்குதல்‌. 

52. தகவல்‌ பெறுவதற்கான அதிகாரம்‌. 

53. பட்டதாரிகளைப்‌ பதிவு செய்தல்‌. 

54. முதல்‌ துணை வேந்தரை நியமித்தல்‌. 

55. முதல்‌ பதிவாளரை நியமித்தல்‌. 

56. முதல்‌ துணை வேந்தருக்குள்ள இடைபடுகால அதிகாரங்கள்‌. 

57. மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகப்‌ பணியாளர்களில்‌ ஒரு சிலரின்‌. 

பணியை, இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல்‌. 

58. வருங்கால வைப்பு நிதியம்‌ மற்றும்‌ பிற அதுபோன்ற நிதியங்களில்‌ 

சேர்ந்துள்ள தொகைகளை மாற்றுதல்‌. 

59. மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகத்தினால்‌ சில குறிப்பிட்ட தொகை 

வழங்கப்படுதல்‌. 

60. தமிழ்நாடு சட்டம்‌ 331965 எனும்‌ எண்‌ கொண்ட பொருந்தாது என்பது. 

61. நூலகர்‌. 

62. சிறப்பு நியமன முறை. 

63. இணைக்கப்பட்ட கல்லூரிகளைப்‌ பற்றிய அறிக்கை. 

64. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.



1990 ஆம்‌ ஆண்டு மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌. 

சட்ட எண்‌.31,/1990 

திருநெல்வேலியில்‌ பல்கலைக்கழகமொன்றை நிறுவியமைப்பதற்கு வகை: 

செய்வதற்கானதொரு சட்டம்‌. 

இந்தியக்‌ குடியரசின்‌ நாற்பத்தொன்றாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ 

சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 

அத்தியாயம்‌ | 

முன்னுரை. 

1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 

1990 ஆம்‌ ஆண்டு மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ என 

வழங்கப்பெறும்‌. 

(2) இது, தமிழ்நாடு மாநிலத்தில்‌ உள்ள திருநெல்வேலி கட்டபொம்மன்‌ 

சிதம்பரனார்‌, கண்ணியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியிருக்கின்ற 

பரப்பிடத்தை அளாவி நிற்கும்‌. 

(3) இது, இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ அமைந்துள்ளவையும்‌, 

இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு அல்லது அதன்கீழ்ச்‌ செய்யப்பட்ட 

நிலைமுறை விதிகள்‌, துணை முறை விதிகள்‌, ஒழுங்குமுறை விதிகள்‌: 

ஆகியவற்றிற்கு இணங்க இப்பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்ட அல்லது 

அதனால்‌ ஒப்புதலளிக்கப்பட்டவையுமான அனைத்து கல்லூரிகளுக்கும்‌, கல்வி 

நிலையங்களுக்கும்‌ பொருந்துவதோடு, இந்தச்‌ சட்டத்தின்படி, 

இப்பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்டிருப்பனவாக அல்லது அதனால்‌ 

ஒப்புதலளிக்கப்பட்டிருப்பனவாகக்‌ கருதப்படும்‌ அனைத்து கல்லூரிகளுக்கும்‌. 

கல்வி நிலையங்களுக்கும்‌ கூடப்‌ பொருந்தும்‌. 

(4) இந்தப்‌ பிரிவும்‌ 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 45, 54, 55, 56, 

64 ஆகிய பிரிவுகளும்‌ உடனடியாக நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ 

இந்தச்‌ சட்டத்தின்‌ எஞ்சிய பிரிவுகள்‌, அரசு அறிவிக்கையின்‌ மூலம்‌ 

குறிப்பிடக்கூடிய தேதியன்று நடைமுறைக்கு வரும்‌. 

2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌, குறிப்பிட்ட சூழ்நிலையில்‌, வேறு 

விதமாகப்‌ பொருள்‌ கொள்ளவேண்டியிருந்தாலன்றி, 

(a) "இணைக்கப்பட்ட கல்லூரி என்றால்‌, இப்பல்கலைக்கழகப்‌ 

பரப்பிடத்திற்குள்‌ அமைந்துள்ளதும்‌, இப்பல்கலைக்கழகத்துடன்‌



இணைக்கப்பட்டதும்‌, மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்களுக்கான 

தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படு வதற்கான குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவுகளுக்கு 

வகைசெய்கின்றதுமான கல்லூரி எதுவும்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ இந்தச்‌ 

சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்டிருப்பதாகக்‌ 

கருதப்படும்‌ கல்லூரியொன்றையும்‌ உள்ளடக்கும்‌; 

(b) ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரி என்றால்‌, இப்பல்கலைக்கழகப்‌ 

பரப்பிடத்திற்குள்‌ அமைந்துள்ளதும்‌, இப்பல்கலைக்கழகத்தால்‌ 

ஒப்புதலளிக்கப்பட்டதும்‌, மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ விருதுகள்‌ மற்றும்‌ 

பட்டயங்களுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான குறித்தகாலப்‌ 

படிப்புப்‌ பிரிவுகளுக்கு வகைசெய்கின்றதுமான கல்லூரி எதுவும்‌ என்று 

பொருள்படுவதோடு, இந்தச்‌ சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகத்தால்‌ 

ஒப்புதலளிக்கப்பட்டிருப்பதாகக்‌ கருதப்படும்‌ கல்லூரியொன்றையும்‌ உள்ளடக்கும்‌; 

(6) "தன்னாட்சிக்‌ கல்லூரி" என்றால்‌, நிலைமுறை விதிகளால்‌ ஒரு 

தன்னாட்சிக்‌ கல்லூரறியெனப்‌ பெயர்‌ குறிக்கப்பட்ட கல்லூரி எதுவும்‌ என்று 

பொருள்படும்‌; 

(0) "கல்லூரி" என்கிற, இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படுகிற அல்லது 

அதனால்‌ ஒப்புதலளிக்கப்பட்டுள்ள அல்லது அதனுடன்‌ இணைக்கப்பட்டுள்ளதும்‌, 

மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகக்‌ 

குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவுகளுக்கு வகைசெய்கின்றதுமான கல்லூரி எதுவும்‌ 

என்று பொருள்படும்‌; 

(e) "அரசு" என்றால்‌ மாநில அரசு என்று பொருள்படும்‌; 

() "மாணவர்‌ விடுதி” என்றால்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ 

வகைமுறைகளுக்கிணங்க இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படுகிற அல்லது 

ஏற்பிசைவளிக்கப்பட்டுள்ள, இப்பல்கலைக்கழகத்தின்‌ மாணவர்கள்‌ 

தங்கியிருப்பதற்கான ஓரிடம்‌ என்று பொருள்படுவதோடு, இந்தச்‌ சட்டத்தின்படி 

இப்பல்கலைக்கழகத்தால்‌ ஏற்பிசைவளிக்கப்பட்டிருப்பதாகக்‌ கருதப்படும்‌ மாணவர்‌ 

விடுதியொன்றையும்‌ உள்ளடக்கும்‌; 

(ஐ "அறிவிக்கை செய்யப்பட்ட தேதி" என்றால்‌, 1-ஆம்‌ பிரிவின்‌ (4)-ஆம்‌ 

உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்பட்ட தேதி 

என்று பொருள்படும்‌; 

() "பட்ட மேற்படிப்பு கல்லூரி" என்றால்‌, இப்பல்கலைக்கழகப்‌ 

பரப்பிடத்திற்குள்‌ அமைந்துள்ளதும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்ட மேற்படிப்புகள்‌ 

வரையில்‌ படிக்க வழிசெய்கின்ற குறித்தகாலப்‌ பட்ட மேற்படிப்புப்‌ பிரிவுகளுக்கு



வகைசெய்கின்றதுமான பல்கலைக்கழகக்‌ கல்லூரி என்றோ, ஓர்‌ இணைக்கப்பட்ட 

கல்லூரி என்றோ பொருள்படும்‌; 

() "வகுத்துரைக்கப்பட்ட என்றால்‌, இந்தச்‌ சட்டத்தாலோ அல்லது 

நிலைமுறை விதிகளாலோ, துணைமுறை விதிகளாலோ ஒழுங்குமுறை 

விதிகளாலோ வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்‌; 

(J) முதல்வர்‌! என்றால்‌, கல்லூரியொன்றின்‌ தலைவர்‌ என்று பொருள்படும்‌; 

09 "தொழில்முறை கல்லூரி" என்றால்‌, இப்பல்கலைக்கழகத்தால்‌ 

நிறுவப்பட்டோ அல்லது பேணிவரப்பட்டோ அல்லது இப்பல்கலைக்கழகத்துடன்‌ 

இணைக்கப்பட்டோ உள்ளதும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ தொழில்முறைப்‌ பட்ட 

படிப்புகள்‌ வரையில்‌ படிக்க வழிசெய்கின்ற குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவுகளுக்கு 

வகைசெய்கின்றதுமான ஒரு கல்லூரி என்று பொருள்படும்‌; 

0) பதிவுபெற்ற பட்டதாரி" என்றால்‌, இந்தச்‌ சட்டத்தின்படி பதிவு 

செய்யப்பட்ட ஒரு பட்டதாரி என்று பொருள்படும்‌; 

(m) "நிலைமுறை விதிகள்‌", "நுணைமுறை விதிகள்‌" மற்றும்‌ "ஒழுங்குமுறை 

விதிகள்‌" என்றால்‌, இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்டுள்ள அல்லது தொடர்ந்து 

நடைமுறையில்‌ இருந்து வருமாறு செய்யப்பட்டுள்ள முறையே 

இப்பல்கலைக்கழகத்தின்‌ நிலைமுறை விதிகள்‌, துணைமுறை விதிகள்‌ மற்றும்‌ 

ஒழுங்குமுறை விதிகள்‌ என்று பொருள்படும்‌; 

(1) "ஆசிரியர்கள்‌" என்றால்‌, ஆசிரியர்களென நிலைமுறை விதிகளால்‌ 

விளம்பப்படக்கூடிய, பல்கலைக்கழகக்‌ கல்லூரிகளிலோ ஆய்வுக்‌ கூடங்களிலோ, 

இணைக்கப்பட்ட அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகளிலோ, மாணவ 

விடுதிகளிலோ கல்வி கற்பிக்கின்ற விரிவுரையாளர்கள்‌, சிறப்புப்‌ பேராசிரியர்கள்‌, 

உதவிப்‌ பேராசிரியர்கள்‌, பேராசிரியர்கள்‌ மற்றும்‌ கல்வி கற்பிக்கின்ற பிற நபர்கள்‌ 

என்றும்‌ நூலகர்கள்‌ என்றும்‌ பொருள்படும்‌; 

(௦) "பல்கலைக்கழக ஆசிரியர்கள்‌" என்றால்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ 

சார்பாகக்‌ கல்வி கற்பிப்பதற்காக அதனால்‌ நியமிக்கப்பட்டுள்ளவர்கள்‌ என்று 

பொருள்படும்‌; 

( "பல்கலைக்கழகம்‌" என்றால்‌, மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ 

பல்கலைக்கழகம்‌ என்று பொருள்படும்‌; 

(@) "பல்கலைக்கழகப்‌ பரப்பிடம்‌" என்றால்‌, 1-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ 

உட்பிரிவின்படி இந்தச்‌ சட்டம்‌ அளாவி நிற்கிற பரப்பிடம்‌ என்று பொருள்படும்‌;



(N "பல்கலைக்கழக மையம்‌" என்றால்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ 

பரிந்துரையின்‌ பேரில்‌ அரசால்‌ ஏற்பிசைவளிக்கப்பட்டதும்‌, இப்பல்கலைக்கழகப்‌ 

பரப்பிடத்திற்குள்‌ உள்ளதும்‌ மற்றும்‌ உயர்கல்வியிலும்‌ ஆராய்ச்சிப்‌ பணியிலும்‌ 

ஈடுபடுவதற்காகவும்‌ புதிய பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான ஆயத்தப்‌ 

பணிக்குத்‌ திட்டமிடப்பட்ட முறையில்‌ கழகத்தை உயிரூட்டி வளர்ப்பதற்காகவும்‌ 

தகுதிவாய்ந்த ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட கல்லூரிகளைக்‌ 

கொண்டிருக்கின்றதுமான பரப்பிடம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌; 

(5) "பல்கலைக்கழகக்‌ கல்லூரி” என்றால்‌, இப்பல்கலைக்கழகத்தால்‌ 

நிறுவப்பட்டதாயினும்‌. இல்லாவிடினும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்ட 

மேற்படிப்புகள்‌ வரையில்‌ படிக்க வழிசெய்கின்ற குறித்தகாலப்‌ படிப்புப்‌ 

பிரிவுகளுக்கும்‌ தொழில்முறைப்‌ பட்டப்‌ படிப்புகளுக்கும்‌ வகைசெய்கின்ற 

இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படுகின்ற ஒரு கல்லூரி என்றோ ஆராய்ச்சி 

நிலையமொன்றுடன்‌ இணைந்த ஒரு கல்லூரி என்றோ பொருள்படும்‌; 

(1) "பல்கலைக்கழக மானிய ஆணையம்‌" என்றால்‌, 1956-ஆம்‌ ஆண்டு 

பல்கலைக்கழக மானிய ஆணையச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 31956) 4 ஆம்‌ 

பிரிவின்படி நிறுவப்பட்டுள்ள ஆணையம்‌ என்று பொருள்படும்‌; 

(ம "பல்கலைக்கழக ஆய்வுக்கூடம்‌" என்றால்‌, இப்பல்கலைக்கழகத்தால்‌ 

நிறுவப்பட்டதாயினும்‌ இல்லாவிடினும்‌, அதனால்‌ பேணிவரப்படுவதும்‌, ஆராய்ச்சிப்‌ 

பணியைச்‌ செய்துவருவதற்காகவும்‌ அதனை மேம்படுத்துவதற்காகவுமென்றே 

கருதப்பட்டுள்ளதுமான ஜர்‌ ஆய்வுக்கூடம்‌ என்று பொருள்படும்‌; 

(V) "பல்கலைக்கழக விரிவுரையாளர்‌", "பல்கலைக்கழகச்‌ சிறப்புப்‌ பேராசிரியர்‌" 

அல்லது "பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்‌" என்றால்‌, முறையே 

இப்பல்கலைக்கழகத்தால்‌ அத்தகையவராக நியமிக்கப்பட்டுள்ள அல்லது 

நியமிக்கப்பட்டிருப்பதாகக்‌ கருதப்படும்‌, விரிவுரையாளர்‌, சிறப்புப்‌ பேராசிரியர்‌ 

அல்லது பேராசிரியர்‌ என்று பொருள்படும்‌; 

(W) "பல்கலைக்கழக நூலகம்‌" என்றால்‌, இப்பல்கலைக்கழகத்தால்‌ 

நிறுவப்பட்டதாயினும்‌ இல்லாவிடினும்‌, அதனால்‌ பேணிவரப்படுகின்ற ஒரு நூலகம்‌ 

என்று பொருள்படும்‌; 

அத்தியாயம்‌ ॥. 

பல்கலைக்கழகம்‌. 

3. பல்கலைக்கழகம்‌.- (1) மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகம்‌ என்ற 

பெயரில்‌ பல்கலைக்கழகமொன்று இருந்து வரும்‌.



(2) இப்பல்கலைக்கழகம்‌ ஒரு கூட்டமைப்பாக இருக்க வேண்டும்‌ 

என்பதோடு, நிலையான தொடர்பாட்டுரிமையையும்‌ தனித்த ஓர்‌ இலச்சினையையும்‌ 

பெற்றிருக்கும்‌; மேலும்‌, மேற்சொன்ன பெயரில்‌, தான்‌ வழக்கிடுதலும்‌. 

வழக்கிடப்படுதலும்‌ வேண்டும்‌. 

(3) இப்பல்கலைக்கழகத்தின்‌ தலைமையகம்‌ திருநெல்வேலி நகராட்சியின்‌ 

எல்லைகளுக்குள்ளோ அத்தகைய எல்லைகளைச்‌ சுற்றியுள்ள இருபத்தைந்து 

கிலோமீட்டர்‌ சுற்றளவிற்குள்‌ உள்ள இடம்‌ எதிலுமோ அமைந்திருத்தல்‌ வேண்டும்‌. 

4. பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களும்‌ அதிகாரங்களும்‌.- இப்பல்கலைக்கழகம்‌ 

பின்வரும்‌ நோக்கங்களையும்‌ அதிகாரங்களையும்‌ பெற்றதாயிருக்கும்‌, அதாவது:- 

(1) அது முடிவு செய்யக்கூடிய கல்விப்‌ பிரிவுகளில்‌ கல்வி கற்பிப்பதற்கும்‌ 

பயிற்சியளிப்பதற்கும்‌ வகைசெய்வது; 

(2) ஆராய்ச்சிக்கும்‌ கல்வியறிவின்‌ மேம்பாட்டிற்கும்‌ அதனைப்‌ 

பரப்புவதற்கும்‌ வகைசெய்வது; 

(3) பட்டங்கள்‌, விருதுகள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை 

நிறுவுவது; 

(4) தேர்வுகள்‌ வைத்துப்‌ பட்டங்கள்‌, விருதுகள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ 

சிறப்புகள்‌ ஆகியவற்றை, 

(ஐ பல்கலைக்கழகக்‌ கல்லூரியொன்றிலோ, ஆய்வுக்கூடமொன்றிலோ, 

இணைக்கப்பட்ட அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரியொன்றிலோ, 

ஒப்புதலளிக்கப்பட்ட குறித்த காலப்‌ படிப்புப்‌ பிரிவைத்‌ தொடர வேண்டியதில்லை 

என நிலைமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ 

விலக்களிக்கப்பட்டிருந்தாலொழிய அத்தகைய குறித்த காலப்‌ படிப்புப்‌ பிரிவைத்‌ 

தொடர்ந்துள்ளதோடு, இப்பல்கலைக்கழகத்தின்‌ வகுத்துரைக்கப்பட்ட தேர்வுகளில்‌ 

தேறியுமுள்ளவர்களுக்கோ; அல்லது 

(௦) வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி ஆராய்ச்சியைத்‌ தொடர்ந்து 

நடத்தி உள்ளவர்களுக்கோ; 

வழங்குவது. 

(5) தன்னாட்சிக்‌ கல்லூழியொன்றில்‌, ஒப்புதலளிக்கப்பட்ட குறித்த காலப்‌ 

படிப்புப்‌ பிரிவைத்‌ தொடர்ந்துள்ளவர்களுக்கு பட்டங்கள்‌, விருதுகள்‌, பட்டயங்கள்‌, 

பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை வழங்குவது;



(6) _ இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ தங்கியிருப்பவர்களாயினும்‌ 

அவ்வாறில்லையாயினும்‌, அஞ்சல்‌ வழிக்‌ கல்வியின்‌ மூலம்‌ ஒப்புதலளிக்கப்பட்ட 

குறித்த காலப்‌ படிப்புப்‌ பிரிவொனண்றைத்‌ தொடர்ந்துள்ளவர்களுக்குத்‌ தேர்வுகள்‌ 

வைத்துப்‌ பட்டங்கள்‌, விருதுகள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை 

வழங்குவதும்‌; மற்றும்‌ வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, 

இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ தங்கியிருப்பவர்களல்லாதவர்களுக்கு, 

அத்தகைய விரிவுரைகளுக்கும்‌ கல்வியளிப்பிற்கும்‌ வகைசெய்வதும்‌; 

(7) வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, மதிப்புறு பட்டங்களையோ 

அல்லது பிற கல்விச்‌ சிறப்புகளையோ வழங்குவது; 

(8) இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத்‌ 

தேவையான ஆராய்ச்சி நிலையங்கள்‌, பல்கலைக்கழகக்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ 

ஆய்வுக்கூடங்கள்‌, நூலகங்கள்‌, அருங்காட்சியகங்கள்‌ மற்றும்‌ பிற கல்வி 

நிலையங்கள்‌ ஆகியவற்றை நிறுவுதலும்‌ பேணுதலும்‌, நிருவகித்தலும்‌; 

(9) வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, கல்லூரிகளை 

இணைக்கப்பட்ட கல்லூரிகளாகவோ தொழில்முறைக்‌ கல்லூரிகளாகவோ அல்லது 

பட்டமேற்படிப்புக்‌ கல்லூரிகளாகவோ இப்பல்கலைக்கழகத்துடன்‌ இணைப்பதும்‌, 

கல்லூரிகளை இணைத்துக்‌ கொண்டதை விலக்கிக்‌ கொள்ளுவதும்‌; 

(10) வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி இப்பல்கலைக்கழகத்தின்‌ 

விருதுகள்‌ மற்றும்‌ பட்டயங்களுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்‌ 

கொள்ளப்படுவதற்கான குறித்த காலப்‌ படிப்புப்‌ பிரிவுகளுக்கு வகைசெய்கின்ற 

கல்லூரிகளுக்கு ஒப்புதலளிப்பதும்‌, அவ்வாறு அளிக்கப்பட்ட ஒப்புதலை விலக்கிக்‌ 

கொள்ளுவதும்‌; 

(11) வகுத்துரைக்கப்பட்ட முறையிலும்‌ நிபந்தனைகளின்படியும்‌ அரசின்‌ 

இசைவுடன்‌ கல்லூரி எதனையும்‌ தன்னாட்சி கல்லூரியெனப்‌ பெயரிட்டுக்‌ 

குறிப்பிடுவதும்‌ அவ்வாறு பெயர்‌ குறிப்பிடப்பட்டதை விலக்கிக்‌ கொள்ளுவதும்‌; 

(12) விரிவுரையாளர்‌ பதவிகள்‌, சிறப்புப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, பேராசிரியர்‌ 

பதவிகள்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்திற்குத்‌ தேவைப்படும்‌ பிற ஆசிரியர்‌ 

பதவிகள்‌ ஆகியவற்றை ஏற்படுத்துவதும்‌, அத்தகைய விரிவுரையாளர்‌ பதவிகள்‌, 

சிறப்புப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, பேராசிரியர்‌ பதவிகள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ பதவிகள்‌: 

ஆகியவற்றிற்கு நபர்களை நியமிப்பதும்‌; 

(13) நிலைமுறை விதிகளுக்கிணங்க பட்டதாரி உதவித்‌ தொகைகள்‌, பயண 

உதவித்‌ தொகைகள்‌, படிப்புதவித்‌ தொகைகள்‌, மாணவ உதவித்‌ தொகைகள்‌,



உதவிச்‌ சம்பளங்கள்‌, ஆதரவுப்‌ படித்‌ தொகைகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌: 

ஆகியவற்றை ஏற்படுத்துவதும்‌ வழங்குவதும்‌; 

(14) மாணவர்‌ விடுதிகளை நிறுவிப்‌ பேணி நிருவகித்து வருவதும்‌, 

இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படாத மாணவர்‌ விடுதிகளுக்கு 

ஏற்பிசைவளிக்கப்படுவதும்‌ மற்றும்‌ அவ்வாறு அளிக்கப்பட்ட ஏற்பிசைவினை 

விலக்கிக்‌ கொள்வதும்‌; 

(15) மாணவர்களின்‌ உடல்‌ நலன்‌, பொது நலன்‌, ஒழுங்குமுறை நடத்தை 

ஆகியவற்றை எய்தும்‌ வகையில்‌ கல்லூரிகளின்‌ மூலமாக இப்பல்கலைக்கழக 

மாணவர்களின்‌ மீது கட்டுப்பாட்டதிகாரம்‌ செலுத்தி வருவது; 

(16) இப்பல்கலைக்கழகத்தின்‌ நிலைக்‌ கொடைகளையும்‌ பிற 

சொத்துக்களையும்‌ மற்றும்‌ நிதியங்களையும்‌ வைத்து நிருவகித்து வருவது: 

(17) இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களுக்காக அரசின்‌: 

ஒப்புதலளிப்புடன்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ சொத்துப்‌ பிணையத்தின்‌ மீது, 

பணத்தைக்‌ கடன்‌ வாங்குவது; 

(18) கட்டணங்களை நிர்ணயிப்பதும்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய 

கட்டணங்களைக்‌ கோரிப்‌ பெறுவதும்‌; 

(19) தேசிய மாணவர்‌ படையின்‌ (60) பேணுகைக்காகப்‌ இப்பல்கலைக்கழக 

நிதியங்களிலிருந்து மாணியங்களை வழங்குவது; 

(20) பல்கலைக்கழக விரிவாக்கக்‌ குழுவொன்றை அமைத்துப்‌ பேணி 

வருவது; 

(21) (ஐ வெளியீட்டுப்‌ பிரிவொன்றை; 

(௦) வேலை வாய்ப்புப்‌ பிரிவொன்றை; 

(C) மாணவர்‌ சங்கங்களை; 

(0) பல்கலைக்கழக உடற்பயிற்சிக்‌ குழுக்களை; 

(6) அவை போன்ற பிற சங்கங்களை அமைத்து, அவற்றின்‌ 

பேணுகைக்காக நிதியங்களுக்கு வகைசெய்வது; 

(22) இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள கல்லூரிகள்‌, ஆய்வுக்‌ 

கூடங்கள்‌, கல்வி நிலையங்கள்‌ ஆகியவற்றிற்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதும்‌, 

இப்பல்கலைக்கழகம்‌ முடிவு செய்யக்கூடிய முறையிலும்‌ நோக்கங்களுக்காகவும்‌ 

பிற பல்கலைக்கழகங்களுடனும்‌ பிற அதிகாரஅமைப்புகளுடனும்‌ ஒத்துழைப்பதும்‌;



(23) இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள பரப்பிடம்‌ எதற்கும்‌ 

பல்கலைக்கழக மையமொன்றாக ஏற்பிசைவளிக்கப்படுவதற்கு அரசுக்குப்‌ 

பரிந்துரைப்பது; மற்றும்‌ 

(24) பொவாக இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களை 

மேம்படுத்துவதற்குத்‌ தேவையாயிருக்கக்கூடிய அல்லது விரும்பத்தக்கதாயிருக்கக்‌ 

கூடிய பிற செயல்கள்‌ அனைத்தையும்‌ செய்வது அல்லது நடவடிக்கைகள்‌ 

அனைத்தையும்‌ எடுப்பது. 

5. கல்லூரிகள்‌, பிற பல்கலைக்கழகம்‌ எதனுடனும்‌ இணைக்கப்படுதல்‌ ஆகாது 

என்பதும்‌ கல்வி நிலையங்களுக்குப்‌ பல்கலைக்கழகத்தால்‌ 

ஏற்பிசைவளிக்கப்படுதலும்‌.- (1) இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள 

கல்லூரி எதுவும்‌ மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகமல்லாத பிற 

பல்கலைக்கழகம்‌ எதனுடனும்‌ இணைக்கப்படுதலாகாது. 

(2) தமிழ்நாடு மாநிலத்தில்‌ உள்ள பிற பல்கலைக்கழகம்‌ எதனுடனும்‌ 

இணைக்கப்பட்டுள்ள அல்லது அதனோடு உறவுத்‌ தொடர்புடைய அல்லது 

அதனால்‌ பேணிவரப்படுகிற கல்வி நிலையம்‌ எதற்கும்‌, அரசின்‌ மற்றும்‌ 

தொடர்புடைய பல்கலைக்கழகத்தின்‌ முந்திய ஒப்புதலளிப்புடனல்லாமல்‌ எந்த 

நோக்கத்திற்காகவும்‌ இப்பல்கலைக்கழகத்தால்‌ ஏற்பிசைவளிக்கப்படுதலாகாது. 

6. உறுப்பினர்‌ பதவிக்கான தகுதிக்கேடு.- (1) நபரெவரேனும்‌, இப்பல்கலைக்கழக 

அதிகாரஅமைப்புகளில்‌ ஏதொன்றின்‌ உறுப்பினராகவும்‌ பெயர்‌ குறித்து 

நியமிக்கப்படும்‌ அல்லது தேர்ந்தெடுக்கப்படும்‌ தேதியில்‌, 

(ஐ) மனச்சீர்கேடுற்றவராகவோ அல்லது ஒரு செவிட்டு ஊமையராகவோ 

இருப்பாராயின்‌; அல்லது 

(௦) நொடித்துப்‌ போன ஒருவரென நீதிமுறையில்‌ தீர்ப்பளிக்கப்படுவதற்கான 

ஒரு விண்ணப்பதாரராகவோ அல்லது விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையர்‌ 

ஒருவராகவோ இருப்பாராயின்‌; அல்லது 

(2) ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கியிருக்கின்ற குற்றச்செயல்‌: 

எதற்காகவேனும்‌ குற்றவழக்கு நீதிமன்றம்‌ ஒன்றால்‌ சிறைத்‌ தண்டனை 

அளிக்கப்பட்டிருப்பாராயின்‌; 

அவர்‌ அவ்வாறு பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்கோ 

தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ தகுதியுடையவராகமாட்டார்‌. 

(2) (0-ஆம்‌ உட்பிரிவின்படி ஒருவர்‌ தகுதிக்கேடுற்றவரா என்பது குறித்துப்‌ 
பூசல்‌ அல்லது ஐயப்பாடு எழுகின்ற நேர்வில்‌, ஆட்சிக்‌ குழு (Syndicate) அதணை



முடிவு செய்தல்‌ வேண்டும்‌ என்பதோடு, அதன்‌ முடிவே அறுதியானதாகவும்‌ 

இருக்கும்‌. 

7. மேற்பார்வை அதிகாரம்‌.- (1) வேந்தர்‌, இப்பல்கலைக்கழகத்தையும்‌, அதன்‌ 

கட்டடங்களையும்‌, ஆய்வுக்‌ கூடங்களையும்‌, நூலகங்களையும்‌, 

அருங்காட்சியகங்களையும்‌, பட்டறைகளையும்‌, தளவாடத்தையும்‌, மற்றும்‌ 

பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படுகின்ற அல்லது ஏற்பிசைவளிக்கப்பட்டுள்ள, 

அல்லது ஒப்புதலளிக்கப்பட்டுள்ள அல்லது அதனுடன்‌ இணைக்கப்பட்டுள்ள கல்வி 

நிலையம்‌ ஏதொன்றையும்‌, மேலும்‌ இப்பல்கலைக்கழகத்தால்‌ நடத்தப்படும்‌ அல்லது 

செய்யப்படும்‌ தேர்வுகள்‌, கல்வி கற்பித்தல்‌, பிற பணிகள்‌ ஆகியவற்றையும்‌, தான்‌ 

பணிக்கக்கூடியவரால்‌ அல்லது பணிக்கக்கூடியவர்களால்‌, ஆய்வு அல்லது 

விசாரணை செய்யப்படுமாறு செய்விப்பதற்கும்‌, இப்பல்கலைக்கழகம்‌ தொடர்புடைய 

பொருட்பாடு எதனையும்‌ பொறுத்து விசாரணையொன்று செய்யப்படுமாறு 

செய்விப்பதற்குமான அதிகாரம்‌ பெற்றிருப்பார்‌. வேந்தர்‌, அவ்வாறு ஆய்வு 

செய்யப்படுமாறு அல்லது விசாரணை செய்யப்படுமாறு செய்விப்பதற்கான தனது 

எண்ணம்‌ குறித்து ஒவ்வொரு நேர்விலும்‌, இப்பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்புக்‌ 

கொடுத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகம்‌ அதில்‌ தன்‌ தரப்புக்‌ கருத்தை 

எடுத்துரைப்பதற்கு உரிமைத்‌ தகுதியுடையதாகயிருத்தல்‌ வேண்டும்‌. 

(2) வேந்தர்‌, அத்தகைய ஆய்வு அல்லது விசாரணையின்‌ முடிவுகள்‌ குறித்து 

தனது கருத்துக்களை ஆட்சிக்‌ குழுவிற்குத்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌ என்பதுடன்‌ 

அதன்‌ பேரிலான ஆட்சிக்‌ குழுவின்‌ கருத்தைக்‌ கண்டறிந்த பின்பு 

எடுக்கப்பபவேண்டிய நடவடிக்கை என்னவென்பது குறித்து 

இப்பல்கலைக்கழத்திற்கு ஆலோசனை கூறலாம்‌; மேலும்‌ அத்தகைய நடவடிக்கை 

எடுக்கப்படுவதற்கான காலவரம்பொனண்றையும்‌ நிர்ணயிக்கலாம்‌. 

(3) ஆட்சிக்‌ குழு, அத்தகைய ஆய்வு அல்லது விசாரணையின்‌ முடிவுகளின்‌ 

ம்து எடுக்கக்‌ கருதியுள்ள அல்லது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை 

ஏதேனுமிருப்பின்‌, அது குறித்து, வேந்தருக்கு அறிக்கை கொடுத்தல்‌ வேண்டும்‌. 

அத்தகைய அறிக்கையானது, வேந்தர்‌ பணிக்கக்கூடிய காலத்திற்குள்‌. 

அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 

(4) ஆட்சிக்‌ குழு, வேந்தரின்‌ எண்ணம்‌ நிறைவுறும்‌ வகையில்‌ நியாயமான 

காலத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்காதிருக்குமிடத்து, வேந்தர்‌ ஆட்சிக்‌ 

குழுவால்‌ அளிக்கப்பட்ட விளக்கம்‌ அல்லது எடுத்துரைப்பு எதையும்‌ கருதியாய்ந்த 

பின்னர்‌, தான்‌ பொருத்தமென நினைக்கக்கூடிய பணிப்பாணைகளைப்‌ 

பிறப்பிக்கலாம்‌. ஆட்சிக்‌ குழுவும்‌ அத்தகைய பணிப்பாணைகளுக்கு இணங்கி 

நடத்தல்‌ வேண்டும்‌. ஆட்சிக்‌ குழு, வேந்தரால்‌ அதன்‌ பொருட்டு



நிர்ணயிக்கப்படக்கூடிய காலத்திற்குள்ளாக அத்தகைய பணிப்பாணைகளுக்கு 

இணங்கி நடக்காத நேர்வில்‌, அத்தகைய பணிப்பாணைகளுக்கு இணங்கி நடக்கும்‌ 

பொருட்டு நபர்‌ எவரையும்‌ அல்லது குழுமம்‌ ஏதொன்றையும்‌ நியமிப்பதற்கான 

அதிகாரத்தைப்‌ வேந்தர்‌ பெற்றிருப்பார்‌ என்பதுடன்‌, அதற்கான செலவுகளுக்குத்‌ 

தேவைப்படக்கூடிய ஆணைகளை அவர்‌ பிறப்பித்தலும்‌ வேண்டும்‌. 

8. பல்கலைக்கழக அலுவலர்கள்‌.- இப்பல்கலைக்கழகம்‌, பின்வரும்‌ 

அலுவலர்களைக்‌ கொண்டதாயிருக்கும்‌. அதாவது,- 

(1) வேந்தர்‌; 

(2) இணை வேந்தர்‌; 

(3) துணை வேந்தர்‌; 

(4) பதிவாளர்‌; 

(5) நிதி அலுவலர்‌; 

(6) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌; மற்றும்‌ 

(7) இப்பல்கலைக்கழக அலுவலர்களென நிலைமுறை விதிகளால்‌ 

விளம்பப்படக்கூடிய பிற நபர்கள்‌. 

9. வேந்தர்‌.- (1) தமிழ்நாடு ஆளுநர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ வேந்தராக இருந்து 

வருவார்‌. அவர்‌ தமது பதவியின்‌ காரணத்தால்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ 

தலைவராக இருப்பார்‌ என்பதுடன்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டமளிப்பு விழா 

எதற்கும்‌ வந்திருக்கும்போது அதற்குத்‌ தலைமை வகித்து, பட்டங்கள்‌, விருதுகள்‌, 

பட்டயங்கள்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகளை, அவற்றைப்‌ பெறுவதற்கு 

உரிமையுடையவர்களுக்கு வழங்குவார்‌. 

(2) அதிகாரஅமைப்புகளுக்கு நபர்களைப்‌ பெயர்குறித்து நியமிப்பதற்கான 

அதிகாரம்‌ வேந்தருக்கு வழங்கப்பட்டிருக்கிறவிடத்து, வேந்தர்‌, துணை 

வேந்தருடன்‌ கலந்தாய்வு செய்தும்‌, தேவையான அளவுக்கும்‌ மற்றப்படி போதிய 

அளவு சார்பாண்மை (பிரதிநிதித்துவம்‌) பெற்றிராத பிரிவுகளைச்‌ சேர்ந்தவர்களின்‌ 

நலன்களுக்குச்‌ சார்பாளர்களாக அமையும்‌ பொருட்டு, அப்பிரிவுகளைச்‌ 

சேர்ந்தவர்களைப்‌ பெயர்குறித்து நியமித்தல்‌ வேண்டும்‌. 

(3) வேந்தர்‌, தாமே முற்பட்டோ, அல்லது விண்ணப்பத்தின்‌ மீதோ 

நடவடிக்கைகள்‌ எவற்றையும்‌ பொறுத்து, அத்தகைய நடவடிக்கைகளின்‌ 

முறைமை குறித்தோ, அவற்றில்‌ எடுக்கப்பட்ட முடிவு அல்லது பிறப்பிக்கப்பட்ட 

ஆணை ஏதொன்றின்‌ சீர்மை, சட்டமுறைமை அல்லது பொருத்தமுடைமை



குறித்தோ, தான்‌ தெளிவுற உறுதிப்படுத்திக்‌ கொள்ளும்பொருட்டு, 

இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்‌ எவரின்‌ அல்லது அதிகாரஅமைப்பு 

ஏதொன்றின்‌ பதிவுக்கட்டினையும்‌ தருவித்து ஆய்வு செய்யலாம்‌: மற்றும்‌ எந்த 

நேர்விலும்‌ அத்தகைய முடிவு அல்லது ஆணை எதுவும்‌ திருத்தி 
அமைக்கப்படவோ, அறவு செய்யப்படவோ, எதிர்‌ மாறாக்கப்படவோ, அல்லது 

மறுபரிசீலனைக்காகத்‌ திருப்பி அனுப்பி வைக்கப்படவோ வேண்டும்‌ என்று 

வேந்தருக்குத்‌ தோன்றுமாயின்‌, அவர்‌, அதன்படியே ஆணைகளைப்‌ 

பிறப்பிக்கலாம்‌: 

முதலாம்‌ வரம்புரை: ஆனால்‌, இந்தப்‌ பிரிவிண்படியான அதிகாரங்கள்‌ 

செலுத்தப்படுவதற்காக வேந்தரிடம்‌ செய்துகொள்ளப்படும்‌ ஒவ்வொரு 

விண்ணப்பமும்‌, அந்த விண்ணப்பம்‌ தொடர்புடையதாகவிருக்கிற நடவடிக்கை 

முடிவு அல்லது ஆணை எந்தத்‌ தேதியில்‌ அவ்விண்ணப்பதாரருக்கு 

தெரிவிக்கப்பட்டதோ அந்தத்‌ தேதியிலிருந்து மூன்று திங்களுக்குள்‌ செய்து 

கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌: 

இரண்டாம்‌ வரம்புரை: மற்றும்‌ எந்த நபருக்கும்‌ கேடு விளைவிக்கத்தக்கதான 

ஆணை எதுவும்‌, தன்‌ முறையீடுகளைச்‌ செய்து கொள்வதற்கான வாய்ப்பொன்று 

அத்தகையவருக்குக்‌ கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்படு தலாகாது. 

(4) வேந்தர்‌, இந்தச்‌ சட்டத்தினாலோ, அல்லது அதன்படியோ தமக்கு 

வழங்கப்படக்கூடிய அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதோடு பிற கடமைகளையும்‌ 

புரிந்து வருவார்‌. 

10. இணை வேந்தர்‌. (1) தமிழ்நாடு மாநிலத்தில்‌ கல்வித்துறையைப்‌ பொறுப்பில்‌ 

கொண்டுள்ள அமைச்சர்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ இணை வேந்தராக இருந்து 

வருவார்‌. 

(2) இணை வேந்தர்‌ இந்தச்‌ சட்டத்தினாலோ அல்லது அதன்படியோ தமக்கு 

வழங்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதோடும்‌ பிற 

கடமைகளையும்‌ புரிந்து வருவார்‌. 

11. துணை வேந்தர்‌.-- (1) ஒவ்வொரு முறையும்‌, துணை வேந்தர்‌, (2)-ஆம்‌ 

உட்பிரிவில்‌ குறிப்பிடப்படும்‌ குழுவினால்‌ பரிந்துரைக்கப்பட்ட மூன்று 

பெயர்களைக்‌ கொண்ட பட்டியல்‌ ஒன்றிலிருந்து வேந்தரால்‌ நியமிக்கப்படுதல்‌ 

வேண்டும்‌. அத்தகைய பெயர்ப்பட்டியலில்‌ மேற்சொன்ன குழுவின்‌ உறுப்பினர்‌ 

எவருடைய பெயரும்‌ அடங்கியிருத்தல்‌ ஆகாது.



(2) 0-ஆம்‌ உட்பிரிவின்‌ நோக்கத்திற்காக, அக்குழுவானது மூவரை 

கொண்டிருக்க வேண்டும்‌; அவர்களில்‌ ஒருவர்‌, அரசால்‌ பெயர்குறித்து நியமனம்‌: 

செய்யப்படடுதல்‌ வேண்டும்‌; ஒருவர்‌ ஆட்சிப்‌ பேரவையால்‌ பெயர்குறித்து நியமனம்‌: 

செய்யப்படுதல்‌ வேண்டும்‌; ஒருவர்‌, ஆட்சிக்‌ குழுவால்‌ பெயர்குறித்து நியமனம்‌: 

செய்யப்படுதல்‌ வேண்டும்‌; 

வரம்புரை: ஆனால்‌, அவ்வாறு பெயர்குறித்து நியமனம்‌ செய்யப்பட்டவர்‌, 

இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளில்‌ ஏதொன்றின்‌ உறுப்பினராகவும்‌ 

இருத்தலாகாது. 

(3) துணை வேந்தர்‌ மூன்றாண்டு காலஅளவுக்குப்‌ பதவி வசிப்பார்‌. 

மேற்கொண்டு மூன்றாண்டு காலஅளவுக்கு மீண்டும்‌ நியமிக்கப்படுவதற்கும்‌ 

தகுதியுடையவராயிருப்பார்‌; 

முதலாம்‌ வரம்புரை: ஆனால்‌, எவரும்‌ துணை வேந்தரின்‌ பதவியை 

மொத்தத்தில்‌ ஆறாண்டுக்கு மேல்‌ வகித்தல்‌ ஆகாது: 

இரண்டாம்‌ வரம்புரை: மற்றும்‌ 

(8) பதவிக்காலம்‌ முடிவடைந்துள்ள துணை வேந்தர்‌ ஒருவர்‌. மொத்தத்தில்‌ 

ஓராண்டுக்கு மேற்படாமல்‌, பணிப்புரையில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய 

காலஅளவிற்குப்‌ பதவியில்‌ தொடர்ந்து இருத்தல்‌ வேண்டும்‌ என வேந்தர்‌ 

பணிக்கலாம்‌; 

(b) துணை வேந்தர்‌, வேந்தருக்கு முகவரியிட்டுத்‌ தாம்‌ கையொப்பமிட்டு 

எழுத்து மூலமாகவும்‌, இரண்டு திங்கள்‌ கால முன்னறிவிப்புக்‌ கொடுத்ததற்குப்‌ 

பின்பும்‌, தமது பதவியை விட்டுவிலகலாம்‌; 

மூன்றாம்‌ வரம்புரை: மேலும்‌, துணை வேந்தராக நியமிக்கப்பட்ட ஒருவர்‌ 

தம்முடைய பதவிக்‌ காலத்தின்போதோ அதன்‌ நீட்டிப்பு எதனின்‌ போதுமோ 

அறுபத்தைந்து வவதினை அவர்‌ எய்துவாராயின்‌, பதவியிலிருந்து ஓய்வு பெறுதல்‌ 

வேண்டும்‌. 

(4) துணை வேந்தரின்‌ பதவியில்‌ தற்காலிகக்‌ காலியிடம்‌ ஏதேனும்‌ 

ஏற்படும்போது அல்லது நோய்‌, பணிக்கு வராமை என்கின்ற காரணத்தாலோ, 

அல்லது ஏதேனும்‌ பிற காரணத்தாலோ, அத்துணை வேந்தர்‌ தம்முடைய பதவியின்‌ 

அதிகாரங்களைச்‌ செலுத்தி வரவும்‌ கடமைகளைப்‌ புரிந்து வரவும்‌ 

இயலாதிருப்பாராயின்‌ துணை வேந்தரின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தி 

வருவதற்கும்‌, கடமைகளைப்‌ புரிந்து வருவதற்கும்‌ தேவைப்படும்‌ ஏற்பாடுகளை 

ஆட்சிக்குழு செய்கின்ற வரையிலும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ மிக்க முதுநிலைப்‌



பேராசிரியர்‌, அத்துணை வேந்தரின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்திவருவதோடு, 

கடமைகளையும்‌ புரிந்துவருவார்‌. 

(5) துணை வேந்தர்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ முழுநேர அலுவலராக 

இருந்து வருவார்‌; மற்றும்‌, அவருடைய ஊதியங்களும்‌ பணிகுறித்த பிற 

வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌ பின்வருமாறு இருக்கும்‌:- 

() துணை வேந்தருக்கு திங்களொன்றுக்கு ஏழாயிரத்து அறுநூறு ரூபாய்‌ 
சம்பளம்‌ வழங்கப்படும்‌ மற்றும்‌ அவருடைய பதவிக்காலம்‌ முழுவதும்‌ 

அறைகலன்களுடனான குடியிருப்பொன்றை  (Furnished Residence) வாடகைச்‌ 

செலுத்தமின்றிப்‌ பயன்படுத்துவதற்கு அவர்‌ உரிமைத்‌ தகுதியுடையவராயிருப்பார்‌. 

மேலும்‌ அத்தகைய குடியிருப்பைப்‌ பேணிவருவது பொறுத்த செலவுப்‌ பொறுப்பு 

எதுவும்‌ தனிப்பட்ட முறையில்‌ அத்துணை வேந்தரைச்‌ சார்தல்‌ ஆகாது. 

(i) துணை வேந்தர்‌ அவ்வப்போது வேந்தரின்‌ ஒப்புதலளிப்புடன்‌ 

ஆட்சிக்குழுவால்‌ முடிவு செய்யப்படக்கூடிய பணி முடிவுநிலை நனண்மைகளுக்கும்‌ 

(Terminal Benefits) படித்தொகைகளுக்கும்‌ உரிமைத்‌ தகுதியுடையவராயிருப்பார்‌: 

வரம்புரை: ஆனால்‌, 

(ஐ இப்பல்கலைக்கழகத்தின்‌; அல்லது 

(b) வேறேதேனும்‌ பல்கலைக்கழகத்தின்‌. அல்லது அந்தப்‌ 

பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படும்‌ அல்லது அதனோடு இணைக்கப்பட்டுள்ள 

கல்லூரி அல்லது கல்வி நிலையத்தின்‌ 

பணியாளரொருவர்‌, துணை வேந்தராக நியமிக்கப்படுமிடந்து, அவர்‌ 

தொகையளிப்புச்‌ செய்பவராக உள்ள வருங்கால வைப்பு நிதியத்திற்குத்‌ தொடர்ந்து 

தொகையளிக்க அவர்‌ அனுமதிக்கப்படுவார்‌ மேலும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ 

பங்களிப்பானது துணை வேந்தராக அவர்‌ நியமிக்கப்படுவதற்கு அடுத்து முன்பு அவர்‌ 

பங்களித்திருந்த அளவுக்கு மட்டுப்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌; 

(0) துணை வேந்தர்‌, ஆட்சிக்குழுவினால்‌ முடிவு செய்யப்படக்கூடிய 

விதங்களில்‌ பயணப்படிகளுக்கு உரிமைத்தகுதியுடையவராயிருப்பார்‌; 

0) துணை வேந்தர்‌ செயலார்ந்த பணியிலிருக்கையில்‌ அவரால்‌ பணியில்‌ 

செலவழிக்கப்பட்ட காலஅளவுகளில்‌ பதிவொன்றில்‌ ஒரு பங்குக்கு முழுச்‌ 

சம்பளத்துடன்‌ கூடிய ஈட்டிய விடுப்புக்கு அவர்‌ உரிமைத்‌ 

தகுதியுடையவராயிருப்பார்‌: 

வரம்புரை: ஆனால்‌, தம்முடைய பதவிக்காலம்‌ முடிவடையும்‌ தேதிக்கு முன்பு 

போதிய காலத்திற்குள்‌ அத்துணை வேந்தரால்‌ விண்ணப்பிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு



இப்பல்கலைக்கழகத்தின்‌ நலன்‌ கருதி வேந்தரால்‌ மறுக்கப்படுகிறபோதும்‌ 

தம்முடைய பதவிக்காலம்‌ முடிவடையும்‌ தேதிக்கு முன்பு அவ்விடுப்பினை அவர்‌ 

எடுக்காமலிருக்கும்‌ போதும்‌, இருநூற்று நாற்பது நாட்கள்‌ என்னும்‌ பெரும்‌ 

அளவிற்கு உட்பட்டு, தம்முடைய கணக்கில்‌ இருப்பில்‌ உள்ள ஈட்டிய விடுப்பைப்‌ 

பொறுத்து தம்முடைய பதவியைத்‌ துறந்த பின்பு விடுப்புச்‌ சம்பளத்திற்குச்‌ சம 

மதிப்புள்ள பணத்தைப்‌ பெறுவதற்கு அவர்‌ உரிமைத்‌ தகுதியுடையவராயிருப்பார்‌: 

(v) துணை வேந்தர்‌, தம்முடைய பதவிக்காலத்தின்போது மூன்று 

திங்களுக்கு மேற்பபாததொரு காலஅளவுக்குச்‌ சம்பளமில்லாத விடுப்புக்கு, 

மருத்துவக்‌ காரணங்களின்‌. பேரிலோ மற்றப்படியோ உரிமைத்‌ 

தகுதியுடையவராயிருப்பார்‌: 

வரம்புரை: ஆனால்‌, அத்தகைய விடுப்பானது, ()-ஆம்‌ கூறின்படி எந்த 

அளவுக்கு ஈட்டிய விடுப்புக்கு அவர்‌ உரிமைத்‌ தகுதியுடையவராயிருக்கின்றாரோ 

அந்த அளவுக்கு முழுச்‌ சம்பளத்துடன்கூடிய விடுப்பாக மாற்றிக்‌ கொள்ளப்படலாம்‌. 

12. துணை வேந்தருக்குள்ள அதிகாரங்களும்‌ கடமைகளும்‌.- (1) துணை வேந்தர்‌, 

கல்வித்‌ தலைவராகவும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ முதன்மை நிருவாக 

அலுவலராகவும்‌ இருந்து வருவார்‌; மற்றும்‌ வேந்தரும்‌, இணை வேந்தரும்‌ வருகை: 

தராதபோது, இப்பல்கலைக்கழகத்துப்‌ பட்டமளிப்பு விழா எதிலும்‌ தலைமை வகித்துப்‌ 

பட்டங்களை, விருதுகளை, பட்டயங்களை அல்லது பிற கல்விச்‌ சிறப்புகளை, 

அவற்றைப்‌ பெறுவதற்கு உரிமைத்‌ தகுதியுடையவர்களுக்கு வழங்குவார்‌; 

ஆட்சிப்பேரவை, ஆட்சிக்குழு, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு, நிதிக்குழு 

ஆகியவற்றின்‌ பதவிவழி உறுப்பினராகவும்‌, தலைவராகவும்‌ இருந்து வருவார்‌; 

மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்பு ஏதொன்றின்‌ கூட்டமெதிலும்‌ 

வந்திருப்பதற்கும்‌ உரை நிகழ்த்துவதற்கும்‌ உரிமை தகுதியுடையவராயிருப்பார்‌; 

ஆனால்‌, தொடர்புடைய அதிகாரஅமைப்பின்‌ உறுப்பினராக அவர்‌ இருந்தாலன்றி, 

அதில்‌ வாக்களிக்க உரிமைத்‌ தகுதியுடையவராகமாட்டார்‌. 

(2) இந்தச்‌ சட்டம்‌, நிலைமுறை விதிகள்‌ (Statutes), துணை முறை விதிகள்‌: 

(Ordinances), ஒழுங்குமுறை விதிகள்‌ (Regulations) ஆகியவற்றின்‌ வகைமுறைகள்‌ 

கடைப்பிடிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்திக்‌ கொள்வது, துணை 

வேந்தரின்‌ கடமையாகும்‌; மற்றும்‌ இந்த நோக்கத்திற்காகத்‌ தேவையான அனைத்து 

அதிகாரங்களையும்‌ அவர்‌ செலுத்தி வரலாம்‌. 

(3) ஆட்சிப்‌ பேரவை, ஆட்சிக்‌ குழு, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு, நிதிக்‌ 

குழு ஆகியவற்றின்‌ கூட்டங்களைக்‌ கூட்டுவதற்கு துணை வேந்தர்‌ அதிகாரம்‌ 

பெற்றிருப்பார்‌.



(4) (a) துணை வேந்தர்‌, எப்பொருள்‌ குறித்தும்‌ நடவடிக்கை எடுப்பதற்கு 

அகிகாரம்‌ பெற்றிருப்பார்‌; மற்றும்‌ ஆணையின்‌ மூலமாக தாம்‌ தேவையெனக்‌ 

கருதக்கூடிய நடவடிக்கையை எடுத்து வருவார்‌; ஆனால்‌, அப்பொருள்‌ குறித்து 

இயல்பாக நடவடிக்கை எடுத்திருக்கக்கூடிய அலுவலருக்கு அல்லது 

அதிகாரஅமைப்பிற்கு அல்லது பிற அதிகாரஅமைப்பிற்கு எடுக்கப்பட்ட 

அந்நடவடிக்கையைப்‌ பற்றி அதன்பின்பு கூடிய விரைவில்‌ அறிக்கை கொடுத்தல்‌ 

வேண்டும்‌; 

வரம்புரை: ஆனால்‌, அத்தகைய ஆணை எதுவும்‌, பெரும்பாலும்‌ 

பாதிக்கப்படக்கூடியவருக்கு கேட்கப்படுவதற்கான நியாயமானதொரு வாய்ப்பு 

கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்படுத்தலாகாது. 

(௦) இந்த உட்பிரிவின்படி துணை வேந்தரால்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கை, 

இப்பல்கலைக்கழகப்‌ பணியிலுள்ள எவரையேனும்‌ பாதிக்கிறபோது, அத்தகையவர்‌ 

அத்தகைய நடவடிக்கை குறித்து அவர்‌ அறிவிப்பு பெற்ற தேதியிலிருந்து முப்பது 
நாட்களுக்குள்‌ ஆட்சிக்‌ குழுவிடம்‌ மேல்முறையீிடொன்றை முன்னிடுவதற்கு 

உரிமைத்‌ தகுதியுடையவராவார்‌. துணை வேந்தர்‌, அத்தகைய 

மேல்முறையீட்டின்பேரில்‌ ஆட்சிக்‌ குழுவினால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையைச்‌ 

செயற்படுத்துதல்‌ வேண்டும்‌. 

(5) துணை வேந்தர்‌, இப்பல்கலைக்கழக ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற 

பணியாளர்களை நியமனம்‌ செய்வது, தற்காலிகப்‌ பணிநீக்கம்‌ செய்வது, பணியறவு 

செய்வது ஆகியவை தொடர்பான ஆட்சிக்குழுவின்‌ ஆணைகளைச்‌ 

செயற்படுத்துதல்‌ வேண்டும்‌. 

(6) துணை வேந்தர்‌, இப்பல்கலைக்கழக அலுவல்களின்‌ மீது கட்டுப்பாட்டு 

அதிகாரத்தை செலுத்தி வருவார்‌; மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தில்‌ உரியவாறு 

ஒழுங்குமுறை நடத்தை பேணிவரப்படுவதற்கு பொறுப்புடையவராயிருப்பார்‌. 

(7) துணை வேந்தர்‌, கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சி, விரிவாக்கக்‌ கல்வி மற்றும்‌ 

பாடத்திட்ட மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒத்திசைவிற்கும்‌  (Co—ordination) 

ஒருங்கிணைப்பிற்கும்‌ பொறுப்புடையவராயிருப்பார்‌. 

(8) துணைவேந்தர்‌, நிலைமுறை விதிகளின்‌ மூலம்‌ 

வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்திவருவதோடு பிற 

கடமைகளையும்‌ புரிந்து வருவார்‌. 

13. பதிவாளர்‌.- (1) பதிவாளர்‌, ஆட்சிக்‌ குழுவினால்‌ நியமிக்கப்படும்‌ 

இப்பல்கலைக்கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ முழு நேர அலுவலராக இருந்து வருவார்‌;



மற்றும்‌ பதிவாளரின்‌ பணிகுறித்த வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌ பின்வருமாறு 

இருக்கும்‌:- 

(i) பதிவாளரின்‌ பதவியை வகிப்பவர்‌, பல்கலைக்கழகம்‌ எதனுடனும்‌ 

இணைக்கப்பட்ட கல்லூரியொன்றின்‌ பேராசிரியர்‌ ஒருவரின்‌ படிநிலைக்குக்‌ 

குறையாத, கல்வித்‌ துறையைச்‌ சேர்ந்த ஒருவராக இருத்தல்‌ வேண்டும்‌; 

(0 பதிவாளர்‌, மூன்றாண்டு காலஅளவுக்குப்‌ பதவி வகிப்பார்‌; 

வரம்புரை: ஆனால்‌, பதிவாளர்‌ ஐம்பத்தெட்டு வயதினை எய்தியதும்‌ அல்லது 

இந்தக்‌ கூறில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலஅளவு முடிவடைந்ததும்‌ இவற்றில்‌ 

எது முந்தியதோ அதன்‌ பேரில்‌, ஓய்வு பெறுதல்‌ வேண்டும்‌; 

(i) பதிவாளரின்‌ ஊதியங்களும்‌ பணிகுறித்த பிற வரையறைகளும்‌ 

நிபந்தனைகளும்‌ வகுத்துரைக்கப்படக்கூடியவாறு இருக்கும்‌; 

(iv) பதிவாளரின்‌ பதவி காலியாக இருக்கும்போது அல்லது நோய்‌, பணிக்கு 

வராமை என்கிற காரணத்தால்‌ அல்லது பிற காரணம்‌ எதனாலேனும்‌ பதிவாளர்‌ 

தம்முடைய பதவிக்‌ கடமைகளை ஆற்றுவதற்கு இயலாதவராக இருக்கும்போது, 

பதிவாளரின்‌ பதவிக்‌ கடமைகள்‌ அந்த நோக்கத்திற்காகத்‌ துணை வேந்தரால்‌ 

குறிப்பிடப்படக்கூடியவரால்‌ புரிந்து வரப்படுதல்‌ வேண்டும்‌. 

(2) (a) பதிவாளர்‌, பல்கலைக்கழக ஆசிரியர்கள்‌ மற்றும்‌ கல்வித்துறைப்‌ 

பணியாளர்கள்‌ நீங்கலாக, ஆட்சிக்‌ குழுவின்‌ ஆணைகளில்‌ குறிப்பிடப்படக்கூடிய 

பணியாளர்கள்‌. ம்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும்‌, 

நடத்தப்படுவதற்கிடையே அவர்களைத்‌ தற்காலிக வேலை நீக்கம்‌ செய்வதற்கும்‌ 

மற்றும்‌ அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு அல்லது அவர்கள்‌ மீது கண்டனத்‌ 

தண்டனை விதிப்பதற்கு அல்லது சம்பள உயர்வை நிறுத்தி வைப்பதற்குமான 

அதிகாரத்தைப்‌ பெற்றிருப்பார்‌: 

வரம்புரை: ஆனால்‌ அவரைப்‌ பொறுத்து எடுக்கக்‌ கருதியுள்ள 

நடவடிக்கைக்கு எதிராகக்‌ காரணம்‌ காட்டுவதற்கான நியாயமானதொரு வாய்ப்பு 

அவருக்குக்‌ கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, தொடர்புடையவருக்கு அத்தகைய 

தண்டனை எதுவும்‌ விதிக்கப்படுதலாகாது: 

(b) (a) எனுங்கூறில்‌, குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகளில்‌ 

எதையும்‌ விதிக்கின்ற பதிவாளரின்‌ ஆணை எதற்கும்‌ எதிராக துணை வேந்தரிடம்‌ 

மேல்முறையீடு ஒன்றைச்‌ செய்து கொள்வதற்கு உரிமை உண்டு. 

(2 பதிவாளரின்‌ அதிகாரங்களுக்கு மேற்பட்ட தண்டனை 

தேவைப்படுகிறது என்று அந்த விசாரணை வெளிப்படுத்துகிற நேர்வு எதிலும்‌,



பதிவாளர்‌, அந்த விசாரணை முடிவடைவதன்‌ பேரில்‌ அறிக்கை ஒன்றை, 

தம்முடைய பரிந்துரைகளோடு துணை வேந்தருக்குக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌: 

வரம்புரை: ஆனால்‌, தண்டனை எதையும்‌ விதிக்கின்ற துணை வேந்தரின்‌ 

ஆணை ஒன்றுக்கு எதிராக, ஆட்சிக்‌ குழுவிடம்‌ மேல்முறையீடு ஒன்றைச்‌ செய்து 

கொள்வதற்கு உரிமை உண்டு. 

(0) (b) எனும்‌ கூறின்படி அல்லது (௦) எனும்‌ கூறின்படியான 

மேல்முறையீடு எதுவும்‌, எந்த ஆணைக்கு எதிராக மேல்முறையீடு 

செய்யப்பட்டதோ அந்த ஆணையை மேல்முறையீட்டாளர்‌ பெற்ற தேதியிலிருந்து 

அறுபது நாட்கள்‌ முடிவடைந்த பின்பு முன்னிடப்படுதலாகாது. 

(3) ஆட்சிப்‌ பேரவை, ஆட்சிக்குழு, புலங்கள்‌ (Faculties), பாடக்‌ குழுக்கள்‌ 

ஆகியவற்றின்‌ பதவிவழிச்‌ செயலாளராக பதிவாளர்‌, இருந்து வருவார்‌; ஆனால்‌ 

இந்த அதிகாரஅமைப்புகளில்‌ ஏதொன்றின்‌ உறுப்பினராகவும்‌ கருதப்படமாட்டார்‌. 

(4) (ஐ பதிவுக்‌ கட்டுகளுக்கும்‌ தனித்த இலச்சினைக்கும்‌ தம்முடைய 

பொறுப்புக்கு ஆட்சிக்குழு விடுகின்ற இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற சொத்துக்கும்‌ 

பாதுகாவலராக இருப்பது; 

(௦) ஆட்சிப்‌ பேரவையின்‌, ஆட்சிக்குழுவின்‌, புலங்களின்‌ (Faculties), பாடக்‌ 

குழுக்களின்‌, தேர்வாளர்‌ குழுக்களின்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ 

அதிகாரஅமைப்புகளினால்‌ நியமிக்கப்படும்‌ குழு ஏதொன்றின்‌ கூட்டங்களையும்‌ 

கூட்டுகிற அறிவிப்புகள்‌ அனைத்தையும்‌ அனுப்புவது; 

(6) ஆட்சிப்‌ பேரவையின்‌, ஆட்சிக்‌ குழுவின்‌, புலங்களின்‌, பாடக்‌ 

குழுக்களின்‌, தேர்வாளர்‌ குழுக்களின்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ 

அதிகாரஅமைப்புகளினால்‌ நியமிக்கப்படும்‌ குழு ஏதொன்றின்‌ கூட்ட 

நடவடிக்கைகள்‌ அனைத்தையும்‌ பற்றிய நடவடிக்கைக்‌ குறிப்பேடுகளை வைத்து 

வருவது; 

(0) ஆட்சிக்‌ குழுவின்‌ கடிதத்‌ தொடர்பை நடத்தி வருவது; 

(ஐ) இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளின்‌ கூட்டப்பொருள்‌ 

நிரலின்‌: படிகளை, அவை அனுப்பப்பட்டவுடன்‌, அத்தகைய கூட்ட 

நடவடிக்கைளின்‌ குறிப்புகளை வேந்தருக்கு வழங்குவது; மற்றும்‌ 

() நிலைமுறை விதிகளில்‌, துணைமுறை விதிகளில்‌ அல்லது 

ஒழுங்குமுறை விதிகளில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய அல்லது ஆட்சிக்‌ 

குழுவாலோ. துணை வேந்தராலோ அவ்வப்போது கோரப்படக்கூடிய பிற 

அதிகாரங்களைச்‌ செலுத்திவருவதும்‌ பிற கடமைகளைப்‌ புரிந்து வருவதும்‌,



பதிவாளரின்‌ கடமையாக இருக்கும்‌. 

(5) இப்பல்கலைக்கழகத்தினால்‌ அல்லது அதற்கு எதிராகத்‌ தொடரப்படும்‌ 

உரிமை வழக்குகள்‌ மற்றும்‌ எடுக்கப்படும்‌ பிற சட்ட நடவடிக்கைகள்‌ 

அனைத்திலும்‌, வாதுரைகள்‌  (Pleadings) பதிவாளரால்‌ கையொப்பமிடப்பட்டு 

உண்மையென உறுதிமொழி அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய 

உரிமை வழக்குகளிலும்‌ நடவடிக்கைகளிலும்‌ நீதிமுறைக்‌ கட்டளைகள்‌ 

(Processes) அனைத்தும்‌ பதிவாளருக்குப்‌ பிறப்பிக்கப்பட்டு அவருக்குச்‌ சார்வு 

செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 

14. நிதி அலுவலர்‌.- (1) நிதி அலுவலர்‌, இதன்‌ பொருட்டு ஆட்சிக்குழுவால்‌ 

குறிப்பிடப்படக்கூடிய கால அளவுக்கு, அந்த ஆட்சிக்‌ குழுவால்‌ நியமிக்கப்படும்‌ 

இப்பல்கலைக்கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ முழுநேர அலுவலராக இருந்து வருவார்‌. 

(2) ஒவ்வொரு முறையும்‌ நிதி அலுவலர்‌ அரசினால்‌ பரிந்துரை செய்யப்படும்‌ 

மூன்று பேர்களைக்‌ கொண்ட பட்டியல்‌ ஒன்றிலிருந்து ஆட்சிக்‌ குழுவால்‌ 

நியமிக்கப்படுவார்‌. 

(3) நிதி அலுவலரின்‌ ஊதியங்களும்‌, பணிகுறித்த பிற வரையறைகளும்‌ 

நிபந்தனைகளும்‌, அவசர விதிகளின்‌ மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடியவையாக 

இருக்கும்‌. 

(4) நிதி அலுவலர்‌ ஐம்பத்தெட்டு வயதினை எய்தியதன்‌ பேரில்‌ அல்லது (1) 

ஆம்‌ உட்பிரிவின்படி ஆட்சிக்‌ குழுவினால்‌ குறித்துரைக்கப்படும்‌ காலஅளவு 

முடிவடைவதன்‌ பேரில்‌, இவற்றில்‌ எது முந்தியதோ அதன்‌ பேரில்‌, ஓய்வு பெறுதல்‌ 

வேண்டும்‌. 

வரம்புரை: ஆனால்‌ நிதி அலுவலர்‌ ஐம்பத்தெட்டு வயதினை 

எய்தியிருந்தபோதிலும்‌, பதவியில்‌ அவருக்கு பின்வருபவர்‌ நியமிக்கப்பட்டு அவர்‌ 

தம்முடைய பதவியை மேற்கொள்கின்ற வரையில்‌ அல்லது ஓராண்டு காலஅளவு 

முடிவடையும்‌ வரையில்‌, இவற்றில்‌ எது முந்தியதோ அது வரையில்‌, தொடர்ந்து 

பதவியில்‌ இருந்து வருவார்‌. 

(5) நிதி அலுவலரின்‌ பதவி காலியாக இருக்கும்போது அல்லது நோய்‌ 

பணிக்கு வராமை என்கிற காரணத்தால்‌ அல்லது பிற காரணம்‌ எதனாலேனும்‌ நிதி 

அலுவலர்‌ தம்முடைய பதவிக்‌ கடமைகளை ஆற்றுவதற்கு இயலாதவராக 

இருக்கும்போது, நிதி அலுவலரின்‌ பதவிக்‌ கடமைகள்‌, அந்த நோக்கத்திற்காகத்‌ 

துணை வேந்தரால்‌ குறிப்பிடப்படக்‌ கூடியவரால்‌ புரிந்துவரப்படுதல்‌ வேண்டும்‌. 

(6) நிதி அலுவலர்‌, நிதிக்‌ குழுவின்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருந்து 

வருவார்‌; ஆனால்‌ அத்தகைய குழுவின்‌ உறுப்பினராகக்‌ கருதப்படமாட்டார்‌.



(7) நிதி அலுவலர்‌,- 

(ஐ இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதியங்களின்‌ மீது பொதுவான 

கண்காணிப்புச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதிக்‌ 

கொள்கை குறித்து அதற்கு ஆலோசனை வழங்குதலும்‌ வேண்டும்‌; மற்றும்‌ 

(௦) ஆட்சிக்‌ குழுவினால்‌ தமக்குக்‌ குறித்தளிக்கப்படக்கூடிய அல்லது 

நிலைமுறை விதிகளாலோ, அவசர விதிகளாலோ வகுத்துரைக்கப்படக்கூடிய 

அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌, பிற நிதி சார்ந்த அலுவல்களைப்‌ புரிந்து 

வருதலும்‌ வேண்டும்‌: 

வரம்புரை: ஆனால்‌ நிதி அலுவலர்‌, ஆட்சிக்குழுவின்‌ முன்‌ 

ஒப்புதலளிப்பின்றி செலவு எதையும்‌ செய்தலோ, வகுத்துரைக்கப்படக்கூடிய 

தொகைக்கு மேற்படும்‌ முதலீடு எதையும்‌ செய்தலோ ஆகாது. 

(8) ஆட்சிக்‌ குழுவின்‌ கட்டுப்பாட்டு அதிகாரத்திற்குட்பட்டு, நிதி அலுவலர்‌,- 

(ஐ கட்டளை மற்றும்‌ நிலைக்கொடை சொத்து உள்ளடங்கலாக 

இப்பல்கலைக்கழகத்தின்‌ சொத்தினையும்‌, முதலீடுகளையும்‌ வைத்து வருவதோடு 

நிருவகித்து வருதலும்‌ வேண்டும்‌; 

(௦) ஜராண்டிற்கான தொடர்‌ மற்றும்‌ தொடராச்‌ செலவினங்களுக்காக 

ஆட்சிக்‌ குழுவால்‌ நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேற்படாதவாறும்‌, பணங்கள்‌ 

அனைத்தும்‌ அவை வழங்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட்ட 

நோக்கங்களுக்காகச்‌ செலவிடப்படு வதையும்‌ உறுதி செய்து கொள்ள வேண்டும்‌; 

(௦) இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டு கணக்குகள்‌, நிதி மதிப்பீடுகள்‌, 

வரவு- செலவுத்‌ திட்டம்‌ ஆகியவற்றைத்‌ தயாரிப்பதற்கும்‌, ஆட்சிக்‌ குழுவிடம்‌ 

அவற்றை அளிப்பதற்கும்‌ பொறுப்புடையவராவார்‌; 

(0) பணம்‌ (ரொக்கம்‌) மற்றும்‌ வங்கி இருப்புகளையும்‌, முதலீடுகளையும்‌ 

இடைவிடாது கண்காணித்து வருதல்‌ வேண்டும்‌; 

(6) வருவாய்‌ வசூலின்‌ (தண்டலின்‌) முன்னேற்றத்தைக்‌ கண்காணித்து, 

வசூல்‌ (தண்டல்‌) செய்வதற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ முறைகள்‌ குறித்து 

ஆலோசனை வழங்குதல்‌ வேண்டும்‌; 

() கட்டடங்கள்‌, நிலம்‌, அறைகலன்‌ (furniture), சாதனம்‌ ஆகியவற்றின்‌ 

பதிவேடுகள்‌ நாளதுவரை வைத்துப்‌ பேணி வரப்படு வதையும்‌, 

இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படும்‌ அலுவலகங்கள்‌, சிறப்பு மையங்கள்‌, 

தனிச்சிறப்பு ஆய்வுக்‌ கூடங்கள்‌, கல்லூரிகள்‌ ஆகிய அனைத்திலுமுள்ள



சாதனங்கள்‌ மற்றும்‌ பிற நுகரத்தக்க பொருட்களின்‌ இருப்பு நிலையைச்‌ 

சரிபார்க்கும்‌ பணி நடத்தப்படுவதையும்‌ உறுதி செய்து கொள்ளுதல்‌ வேண்டும்‌; 

(ஐ அதிகாரமளிக்கப்படாத செலவினம்‌ எதையும்‌ பற்றி அல்லது பிற 

நிதிசார்‌ முறைகேடு பற்றித்‌ துணை வேந்தரின்‌ கவனத்திற்கு கொண்டு வருதல்‌ 

வேண்டும்‌; மற்றும்‌ தவறு செய்துள்ளவர்‌ மீது எடுக்கப்பட வேண்டிய உரிய 

நடவடிக்கை குறித்து யோசனை கூறுதலும்‌ வேண்டும்‌; மற்றும்‌ 

(h) தம்முடைய கடமைகளைப்‌ புரிந்துவருவதற்காகத்‌ தாம்‌ தேவையெனக்‌ 

கருதக்கூடிய தகவல்‌ அல்லது விவர அறிக்கை எதையும்‌ 

இப்பல்கலைக்கழகத்தினால்‌ பேணிவரப்படும்‌ அலுவலகம்‌, மையம்‌, ஆய்வுக்‌ கூடம்‌, 

கல்லூரி ஆகிய எதிலிருந்தும்‌ தருவித்தல்‌ வேண்டும்‌. 

(9) இப்பல்கலைக்கழகத்திற்குச்‌ செலுத்தத்தக்க பணம்‌ எதற்காகவும்‌ நிதி 

அலுவலரோ அல்லது ஆட்சிக்‌ குழுவால்‌ இதற்கென உரியவாறு 

அதிகாரமளிக்கப்பட்டவரோ, அதிகாரமளிக்கப்பட்டவர்களோ அளிக்கும்‌ பற்றுச்‌ 

சீட்டானது, அப்பணம்‌ செலுத்தப்பட்டதற்கான போதிய நிறைவேற்றச்‌ சான்றாகும்‌. 

15. தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌.- (1) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, 

வகுத்துரைக்கப்படக்கூடிய காலஅளவுக்கும்‌, வரையறைகள்‌ மற்றும்‌ 

நிபந்தனைகளின்‌ பேரிலும்‌, ஆட்சிக்‌ குழுவால்‌ நியமிக்கப்படும்‌ 

இப்பல்கலைக்கழகத்தின்‌ ஒரு முழுநேர அலுவலராக இருந்து வருவார்‌. 

(2) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய 

அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதோடு கடமைகளையும்‌ புரிந்து வருவார்‌, 

16. பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகள்‌.- ஆட்சிப்‌ பேரவை, ஆட்சிக்‌ குழு, 

கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு, புலங்கள்‌, பாடக்‌ குழுக்கள்‌, நிதிக்‌ குழு, திட்டமிடும்‌ 

குழு மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளென, நிலைமுறை 

விதிகளின்‌ மூலம்‌ விளம்பப்படக்கூடிய பிற அதிகாரஅமைப்புகள்‌ ஆகியவை, 

இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளாக இருந்து வரும்‌. 

17. திட்டமிடும்‌ குழு.-- (1) இப்பல்கலைக்கழகத்திற்குத்‌ திட்டமிடும்‌ குழு ஒன்று 

அமைக்கப்படும்‌; அது இப்பல்கலைக்கழகத்தின்‌ திட்டமிடல்‌ மற்றும்‌ வளர்ச்சி 

குறித்துப்‌ பொதுவாக ஆலோசனை நல்குதல்‌ வேண்டும்‌; மேலும்‌ அது 

இப்பல்கலைக்கழகக்‌ கல்வித்தரம்‌ மற்றும்‌ ஆராய்ச்சியை மேலாய்வு செய்து 

வருதலும்‌ வேண்டும்‌.



(2) திட்டமிடும்‌ குழு, பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டதாயிருக்கும்‌; 

அதாவது, 

(i) துணை வேந்தர்‌; அவர்‌ அக்குழுவின்‌ பதவிவழித்‌ தலைவராக இருந்து 

வருவார்‌; மற்றும்‌ 

(i) கல்வியிற்‌ சிறந்த எண்மருக்கு மேற்படாதவர்கள்‌. 

(3) திட்டமிடும்‌ குழுவின்‌ உறுப்பினர்கள்‌, வேந்தரால்‌ நியமிக்கப்படுவர்‌ 

மற்றும்‌ அவர்‌ முடிவு செய்யக்கூடிய கால அளவுக்குப்‌ பதவி வகிப்பார்‌; 

(4) திட்டமிடும்‌ குழு, இந்தச்‌ சட்டத்தினால்‌ அதனிடம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ள 

பிற அதிகாரங்கள்‌ அனைத்தினோடுங்கூட, கல்வி அலுவல்கள்‌ எவைபற்றியும்‌ 

ஆட்சிக்‌ குழுவிற்கும்‌, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவிற்கும்‌ ஆலோசனை 

கூறுவதற்கு உரிமை கொண்டதாயிருக்கும்‌. 

18. துணை வேந்தர்‌ மற்றும்‌ பிற அலுவலர்கள்‌ முதலானோர்‌ பொது ஊழியர்களாக 

இருப்பார்‌ என்பது-- துணை வேந்தர்‌, பதிவாளர்‌, நிதி அலுவலர்‌, தேர்வுக்‌ 

கட்டுப்பாட்டு அலுவலர்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற பணியாளர்கள்‌: 

ஆகியோர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளில்‌ எதனையுமொட்டிச்‌ 

செயற்படுகின்றபோது அல்லது செயற்படுவதாகப்‌ புலப்படுகிண்றபோது, இந்திய 

தண்டனை தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ XLV/1860) 21-ஆம்‌ பிரிவின்‌ 

பொருளின்படி பொது ஊழியர்களாகக்‌ கருதப்படுவர்‌. 

அத்தியாயம்‌ ॥ 

ஆட்சிப்‌ பேரவையும்‌, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவும்‌, அதிகாரங்களும்‌, 

கடமைகளும்‌. 

19. ஆட்சிப்‌ பேரவை (Senate).— (8) ஆட்சிப்‌ பேரவை (Senate), பின்வருபவர்களைக்‌ 

கொண்டதாயிருக்கும்‌. அதாவது;- 

வகை |- பதவிவழி உறுப்பினர்கள்‌. 

(1) வேந்தர்‌; 

(2) இணை வேந்தர்‌; 

(3) துணை வேந்தர்‌; 

(4) கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌; 

(5 (மேல்நிலைக்‌ கல்வியை பொறுப்பில்‌ கொண்டுள்ள) பள்ளிக்‌ 

கல்வி இயக்குநர்‌:



(6) தொழிற்கல்வி இயக்குநர்‌; 

(7) சட்டக்‌ கல்வி இயக்குநர்‌: 

(8) மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌; 

(9) இப்பல்கலைக்கழகப்‌ பாட மற்றும்‌ ஆராய்ச்சித்‌ துறைகளின்‌ 

தலைவர்கள்‌; 

(10) இணைக்கப்பட்ட அனைத்துக்‌ கல்லூரிகளின்‌ முதல்வர்கள்‌; 

(14) இப்பல்கலைக்கழக நூலகத்தின்‌ நூலகர்‌; 

(12) இப்பல்கலைக்கழகத்தின்‌ உடற்பயிற்சிக்‌ கல்வி இயக்குநர்‌; 

மற்றும்‌ 

(13) மற்றப்படி ஆட்சிப்‌ பேரவையின்‌ உறுப்பினர்களாக இல்லாத 

ஆட்சிக்‌ குழுவின்‌ உறுப்பினர்கள்‌. 

வகை ॥-பிற உறுப்பினர்கள்‌. 

1) இணைக்கப்பட்ட கல்லூரி ஒவ்வொன்றின்‌ ஆசிரியர்களாலும்‌ 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர்‌ உறுப்பினர்‌; 

(2) இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள, 1976-ஆம்‌ ஆண்டு 

தமிழ்நாடு தனியார்‌ கல்லூரிகள்‌ (முறைப்படுத்துதல்‌) சட்டத்தில்‌ (குடியரசுத்‌ 
தலைவர்‌ சட்டம்‌ 191976) பொருள்‌ வரையறுக்கப்பட்டவாறான தனியார்‌ 

கல்லூரிகளில்‌ உள்ள கல்லூரிக்‌ குழுக்களின்‌ செயலாளர்களால்‌ 

அவர்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர்‌ உறுப்பினர்‌; 

(3) இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள வருவாய்‌ மாவட்டம்‌ 

ஒவ்வொன்றிலுமுள்ள மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ தலைமையாசிரியர்களால்‌ 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர்‌ உறுப்பினர்‌; 

(4) இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள வருவாய்‌ மாவட்டம்‌ 

ஒவ்வொன்றிலுமுள்ள பதிவுபெற்ற பட்டதாரிகளால்‌ அவர்களுக்கிடையேயிருந்து 

தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்‌; 

(5) தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ உறுப்பினர்களால்‌ 

தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கன்‌; 

(6) (i) ஏற்பிசைவளிக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையங்களின்‌; 

(1) ஏற்பிசைவளிக்கப்பட்ட பண்பாட்டுக்‌ கழகங்களின்‌; 

(1) வர்த்தகச்‌ சங்கங்களின்‌;



(iv) தொழில்‌ துறைகளின்‌; 

(v) படைப்பாசிரியர்களின்‌; 

(vi) இதழியலாளர்களின்‌; 

(ரி) வழக்குரைஞர்களின்‌; 

(vill) விளையாட்டுத்‌ துறைகளின்‌; 

வேந்தரால்‌ நியமனஞ்செய்யப்பட்ட எண்மருக்கு மேற்படாத உறுப்பினர்கள்‌; 

மற்றும்‌ 

(7) 6) இணை வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்பட்ட ஆறு 

உறுப்பினர்கள்‌; இவர்களில்‌ மூவருக்குக்‌ குறையாதவர்கள்‌, மற்றப்படி போதிய 

அளவுக்கு சார்பாண்மை பெற்றிராத பட்டியல்‌ சாதியினர்‌ மற்றும்‌ பட்டியல்‌ 

பழங்குடியினருக்குச்‌ சார்பாண்மை பெற்றுத்தருவதற்காக அவ்வாறு பெயர்‌ குறித்து 

நியமனஞ்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 

(௦) மற்றப்படி வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட 

மற்றும்‌ பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்பட்ட ஆட்சிப்‌ பேரவையின்‌ 

உறுப்பினர்கள்‌ மூன்றாண்டு கால அளவுக்குப்‌ பதவி வகிப்பர்‌: 

வரம்புரை: ஆனால்‌, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்குறித்து நியமனஞ்‌ 

செய்யப்பட்ட ஆட்சிப்‌ பேரவையின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌ எந்தப்‌ பதவிகளின்‌. 

காரணமாக ஆட்சிப்‌ பேரவையின்‌ பதவிவழி உறுப்பினர்‌ ஒருவராக இருப்பதற்கு 

அவரே உரிமையுடைவராயிருக்கிறாரோ அந்தப்‌ பதவிகளில்‌ எதற்கேனும்‌ 

தற்காலிகமாக நியமிக்கப்படுகிறவிடத்து அவர்‌ தாம்‌ நியமனப்‌ பொறுப்பை 

மேற்கொண்ட தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்‌ தம்மால்‌ கையொப்பமிடப்பட்டு 

துணை வேந்தருக்குத்‌ தெரிவிக்கப்பட்ட எழுத்து மூலமான அறிவிப்பின்‌ வாயிலாக, 

தாம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டதன்‌ காரணமாக அல்லது பெயர்குறித்து நியமனஞ்‌ 

செய்யப்பட்டதன்‌ காரணமாக ஆட்சிப்‌ பேரவையின்‌ உறுப்பினராக அவர்‌ 

தொடர்ந்திருக்க விரும்புகிறாரா அல்லது அத்தகைய உறுப்பினராக இருக்கும்‌ 

பதவியை அவர்‌ விட்டு நீங்கி தம்முடைய நியமனத்தின்‌ காரணமாக பதவிவழி 

உறுப்பினரொருவராக ஆக விரும்புகிறாரா என்பதன்‌ வாயிலாக தெரிவு செய்தல்‌ 

வேண்டும்‌; மற்றும்‌ அந்த விருப்பத்தெரிவே (Choice) அறுதியானதாகும்‌. அத்தகைய 

விருப்பத்‌ தெரிவைச்‌ செய்யத்‌ தவறுவதன்‌ பேரில்‌, தேர்த்தெடுக்கப்பட்ட அல்லது 

பெயர்‌ குறித்து நியமானஞ்‌ செய்யப்பட்ட உறுப்பினராக உள்ள தம்முடைய பதவியை 

அவர்‌ விட்டு நீங்கியிருப்பதாகக்‌ கருதப்படுவார்‌.



(6) ஒருவர்‌ ஆட்சிப்‌ பேரவையின்‌ உறுப்பினரொருவராக இல்லாது 

போகும்போது, அவர்‌ ஆட்சிப்‌ பேரவையில்‌ தமக்கிருந்த உறுப்பினர்‌ பதவியின்‌ 

காரணத்தால்‌ இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளில்‌ எதிலேனும்‌ 

உறுப்பினராக இருந்திருக்கக்கூடியதும்‌ இணி இல்லாமற்போகும்‌. 

(d) துணை வேந்தர்‌, ஆட்சிப்‌ பேரவையின்‌ பதவிவழித்‌ தலைவராக 

இருந்து வருவார்‌. 

(6) ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய நாட்படி 

மற்றும்‌ பயணப்படிகள்‌ நீங்கலாக, இப்பல்கலைக்கழகத்திலிருந்து ஊதியம்‌ 

எதனையும்‌ பெறுவதற்கு உரிமைத்‌ தகுதியுடையவராகமாட்டார்கள்‌. 

வரம்புரை: ஆனால்‌, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, உறுப்பினர்‌ 

எவரையும்‌, அவர்‌ வகிக்கிற பதவியின்‌ காரணமாக அவர்‌ உரிமைத்‌ 

தகுதியுடையவராயிருக்கிற இயல்பான ஊதியங்களை அவர்‌ பெறுவதைத்‌ தடை 

செய்தலாகாது. 

(0) பதவிவழி உறுப்பினரல்லாத ஆட்சிப்‌ பேரவை உறுப்பினரொருவர்‌, 

அவருடைய பதவிக்காலம்‌ முடிவடைவதற்கு முன்னர்‌ எந்த நேரத்திலும்‌ 

தம்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்து விலகிக்கொள்ள முற்படலாம்‌. அத்தகைய பதவி 

விலகலானது அந்த உறுப்பினரால்‌ எழுத்து வாயிலாக கடிதமொன்றின்‌ மூலமாக 

வேந்தருக்குத்‌ தெரியப்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌; மேலும்‌, அப்பதவி விலகலானது, 

வேந்தரால்‌ அது ஏற்கப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்‌. 

20. பல்கலைக்கழகத்தின்‌ விரிவான கொள்கைகளையும்‌ செயல்‌ திட்டங்களையும்‌ 

ஆட்சிப்‌ பேரவை மேலாய்வு செய்தல்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ பிற 

வகைமுறைகளுக்குட்பட்டு, ஆட்சிப்‌ பேரவை பின்வரும்‌ அதிகாரங்களையும்‌ 

அலுவல்களையும்‌ பெற்றதாயிருக்கும்‌, அதாவது;- 

(ஐ) இப்பல்கலைக்கழகத்தின்‌ விரிவான கொள்கைகளையும்‌ செயல்‌ 

திட்டங்களையும்‌ அவ்வப்போது ஆய்வு செய்து இப்பல்கலைக்கழகத்தின்‌ 

மேம்பாட்டிற்கும்‌ வளர்ச்சிக்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான யோசனை 

கூறுதல்‌; 

(b) ஆலோசனைக்காகத்‌ தன்னிடம்‌ குறிப்பிட்டனுப்பப்படக்கூடிய 

எப்பொருள்‌ குறித்தும்‌ வேந்தருக்கு ஆலோசனை கூறுதல்‌; மற்றும்‌ 

(c) நிலைமுறை விதிகளின்‌ மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய பிற 

அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌, பிற அலுவல்களைப்‌ புரிந்து வருதலும்‌.



21. ஆட்சிப்‌ பேரவையின்‌ கூட்டங்கள்‌.- (1) ஆட்சிப்‌ பேரவை, ஒவ்வோர்‌ 

ஆண்டிலும்‌ குறைந்தது இருமுறையேனும்‌ துணை வேந்தரால்‌ நிர்ணயிக்கப்படும்‌ 

தேதிகளில்‌ கூடுதல்‌ வேண்டும்‌. அத்தகைய கூட்டங்களில்‌ ஒன்று, ஆண்டு கூட்டம்‌ 

என வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. ஆட்சிப்‌ பேரவை, தான்‌ அவ்வப்போது முடிவு 

செய்யக்கூடிய பிற நேரங்களிலும்‌ கூடக்‌ கூடலாம்‌. 

(2) ஆட்சிப பேரவையின்‌ உறுப்பினர்களின்‌ மொத்த எண்ணிக்கையில்‌ 

மூன்றில்‌ ஒரு பகுதி, ஆட்சிப்‌ பேரவையின்‌ கூட்டமொன்றுக்காகத்‌ தேவைப்படும்‌ 

குறைவெண்‌ (Quorum) வரம்பாகும்‌. 

வரம்புரை: ஆனால்‌, அத்தகைய குறைவெண்‌ வரம்பு, பட்டங்களை, 

விருதுகளை பட்டயங்களை அல்லது பிற கல்விச்‌ சிறப்புகளை வழங்குகின்ற 

நோக்கத்திற்காக நடத்தப்படும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டமளிப்பு விழா 

ஒன்றிற்கோ ஆட்சிப்‌ பேரவைக்‌ கூட்டமொன்றிற்கோ தேவைப்படுதல்‌ ஆகாது. 

(3) துணை வேந்தர்‌, தாம்‌ பொருத்தமென நினைக்கின்ற போதெல்லாம்‌ 

ஆட்சிப்‌ பேரவையின்‌ சிறப்புக்‌ கூட்டத்தைக்‌ கூட்டலாம்‌; ஆனால்‌ ஆட்சிப்‌ 

பேரவையின்‌ மொத்த உறுப்பினர்களில்‌ ஐம்பது விழுக்காட்டீற்குக்‌ 

குறையாதவர்களால்‌ கையொப்பமிடப்பட்டுச்‌ செய்யப்படும்‌ எழுத்துருவிலான 

வேண்டுகோள்‌ ஒன்றின்‌ பேறில்‌, ஆட்சிப்‌ பேரவையின்‌ சிறப்புக்‌ கூட்டத்தைக்‌ 

கூட்டுதல்‌ வேண்டும்‌. 

22. கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு.- (1) இப்பல்கலைக்கழகத்திற்குக்‌ கல்வி அலுவல்‌ 

நிலைக்குழுவொன்று இருந்து வரும்‌: அது, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, 

நிலைமுறை விதிகள்‌, துணைமுறை விதிகள்‌ ஆகியவற்றின்‌ 

வகைமுறைகளுக்குட்பட்டு, இப்பல்கலைக்கழகத்தின்‌ கல்வி அலுவல்களை 

ஒருங்கிணைப்பதோடு பொதுவான மேற்பார்வையைச்‌ செலுத்தி வரும்‌. 

(2) (a) கல்வி அலுவல்‌ நிலைக்குழு, துணை வேந்தரோடு கூடப்‌ பின்வரும்‌ 

உறுப்பினர்களைக்‌ கொண்டதாயிருக்கும்‌, அதாவது:- 

வகை |- பதவிவழி உறுப்பினர்கள்‌. 

(1) கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌; 

(2) தொழிற்கல்வி இயக்குநர்‌; 

(3) மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌; 

(4) பட்டப்‌ படிப்பிற்காகவும்‌ பட்ட மேற்படிப்பிற்காகவுமான பாடத்‌ 

திட்டக்‌ குழுக்களின்‌ தலைவர்கள்‌; மற்றும்‌ 

(5) அனைத்துப்‌ புலங்களின்‌ (faculties) முதன்மையர்கள்‌ 0௯5).



வகை ॥- பிற உறுப்பினர்கள்‌. 

(a) இணைக்கப்பட்ட கல்லூரிகளின்‌. முதல்வர்களால்‌, 

அவர்களுக்கிடையேயிருந்து ஒற்றை மாற்று வாக்குரிமையின்‌ மூலமாக 

விகிதாச்சார சார்பாண்மை முறைக்கிணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு 

உறுப்பினர்கள்‌. 

(b) துணை வேந்தர்‌, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவின்‌ பதவிவழித்‌ 

தலைவராக இருந்து வருவார்‌. 

(6) பதவிவழி உறுப்பினர்களல்லாத கல்வி அலுவல்‌ நிலைக்குழுவின்‌ 

பிற உறுப்பினர்கள்‌, மூன்றாண்டு காலஅளவிற்குப்‌ பதவி வகிப்பார்‌. 

வரம்புரை: மேலும்‌ கல்வி அலுவல்‌ நிலைக்குழுவின்‌ 

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்‌ ஒருவர்‌ எந்தப்‌ பதவிகளின்‌ காரணமாக 

கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவின்‌ பதவி வழி உறுப்பினராக இருப்பதற்கு 

அவர்‌ உரிமைத்தகுதியுடையவராக இருக்கிறாரோ, அந்தப்‌ பதவிகளில்‌ 

எதற்கேனும்‌ தற்காலிகமாக நியமிக்கப்படுகிறவிடத்து, அவர்‌ தாம்‌ நியமனப்‌ 

பொறுப்பு எடுத்துக்கொண்ட தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாக 

தம்மால்‌ கையொப்பமிடப்பட்டு, துணை வேந்தருக்குத்‌ தெரிவிக்கப்பட்ட 

எழுத்துருவிலான அறிவிப்பின்‌ மூலமாக, தமது தேர்தல்‌ காரணமாக கல்வி 

அலுவல்‌ நிலைக்குழுவின்‌ உறுப்பினராக அவர்‌ தொடர்ந்து இருப்பதற்கு 

விரும்புகிறாரா அல்லது அத்தகைய உறுப்பினராக இருக்கும்‌ 

பதவியிலிருந்து தாம்‌ விலகிவிட்டு தம்முடைய நியமனத்தின்‌ காரணமாக 

பதவிவழி உறுப்பினராக ஆவதற்கு விரும்புகிறாரா என்பதைத்‌ தெரிவு 

செய்தல்‌ வேண்டும்‌: மற்றும்‌ அந்த விருப்பத்தெறிவே  (Choice) 

அறுதியானதாகும்‌. அத்தகைய விருப்பத்தெரிவை செய்யத்‌ 

தவறுவதன்பேரில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ள தம்முடைய 

பதவியை விட்டு அவர்‌ விலகியிருப்பதாகக்‌ கொள்ளப்படுவார்‌. 

(d) கல்வி அலுவல்‌ நிலைக்குழுவின்‌ உறுப்பினர்கள்‌. 

வகுத்துரைக்கப்படக்கூடிய நாட்படி மற்றும்‌ பயணப்படிகள்‌ தவிர, 

இப்பல்கலைக்கழகத்திடமிருந்து ஊதியம்‌ எதையும்‌ பெறுவதற்கு உரிமைத்‌ 

தகுதியுடையவர்கள்‌ ஆகமாட்டார்கள்‌. 

வரம்புரை: ஆனால்‌, இந்தக்‌ கூறில்‌ அடங்கியுள்ள எதுவும்‌ உறுப்பினர்‌ 

எவரையும்‌ அவர்‌ வகிக்கிற பதவியின்‌: காரணமாக உரிமை 

தகுதியுடையவராயிருக்கிற தம்முடைய இயல்பான ஊதியங்களை அவர்‌ 

பெறுவதைத்‌ தடை செய்தலாகாது.



(6) பதவிவழி உறுப்பினர்‌ அல்லாத கல்வி அலுவல்‌ நிலைக்‌ 

குழுவின்‌ பிற உறுப்பினர்‌ ஒருவர்‌, தமது பதவி முடிவடைகிற கால அளவுக்கு 

முன்பு எந்த நேரத்திலும்‌ தம்முடைய உறுப்பினர்‌ பதவியை விட்டு 

விலகலாம்‌. அத்தகைய பதவி விலகலானது துணை வேந்தருக்கு எழுத்து 

மூலமான கடிதம்‌ ஒன்றின்‌ வாயிலாக அவ்வுறுப்பினரால்‌ தெரிவிக்கப்படுதல்‌ 

வேண்டும்‌ மற்றும்‌, அப்பதவி விலகலானது, துணை வேந்தரால்‌ அது 

ஏற்கப்படும்‌ தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்‌. 

(3) கல்லி அலுவல்‌ நிலைக்‌ குழுவின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌ 

நிலைமுறை விதிகளின்‌ மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடியவையாக இருக்கும்‌. 

அத்தியாயம்‌ 1V. 

ஆட்சிக்குழு (Syndicate). 

23. ஆட்சிக்குழு.-- (ஐ) வேந்தரானவர்‌, 54-ஆம்‌ பிரிவின்படி முதல்‌ துணை வேந்தர்‌ 

நியமிக்கப்பட்டதற்குப்‌ பின்பு, கூடிய விரைவில்‌, ஆட்சிக்குழுவை அமைத்தல்‌ 

வேண்டும்‌. 

(௦) அவ்வாட்சிக்குழு துணை வேந்தரோடுகூட, பின்வருபவர்களைக்‌ 

கொண்டதாயிருக்கும்‌, அதாவது:- 

வகை ।-பதவிவழி உறுப்பினர்கள்‌. 

(1) கல்வித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; 

(2) மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்ப நலத்துறையைப்‌ பொறுப்பில்‌ 

கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; 

(3) சட்டத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; 

(4) கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌; 

(5) தொழிற்‌ கல்வி இயக்குநர்‌; 

(6) மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌; மற்றும்‌ 

(7) சட்டக்‌ கல்வி இயக்குநர்‌. 

வகை ॥-பிற உறுப்பினர்கள்‌. 

(1) இணைக்கப்பட்ட கல்லூரிகளின்‌: முதல்வர்களால்‌, 

அவர்களுக்கிடையேயிருந்து, ஒற்றை மாற்று வாக்கின்‌ மூலமாக



விகிதாச்சார சார்பாண்மை முறைக்கிணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு 

உறுப்பினர்கள்‌. 

(2) இணைக்கப்பட்ட கல்லூரிகளின்‌ முதல்வர்களல்லாத, ஆட்சிப்‌ 

பேரவையின்‌ உறுப்பினர்களாகவுள்ள பிற ஆசிரியர்களால்‌ 

அவர்களுக்கிடையேயிருந்து ஒற்றை மாற்று வாக்கின்‌ மூலம்‌ விகிதாச்சார 

சார்பாண்மை முறைக்கிணங்க தேர்ந்தெடுக்கப்பட்ட கரண்டு 

உறுப்பினர்கள்‌. 

விளக்கம்‌:- இந்த இனத்தின்‌ நோக்கத்திற்காக, "ஆசிரியர்கள்‌" 

என்றால்‌, இணைக்கப்பட்ட கல்லூரிகனின்‌ ஆசிரியர்களால்‌ 

அவர்களுக்கிடையேயிருந்து ஆட்சிப்‌ பேரவைக்குத்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட 

ஆசிரியர்கள்‌ என்று பொருள்படும்‌. 

(3) ஆழ்படிப்பு மற்றும்‌ ஆராய்ச்சித்‌ துறைகள்‌ அல்லது, சிறப்புப்‌ 

பள்ளிகள்‌ அல்லது உயர்படிப்பு மையங்கள்‌ ஒவ்வொரு பத்தின்‌ அல்லது 

அவற்றின்‌ பகுதியின்‌ தலைவர்களுக்கும்‌ அத்தகைய துறைகள்‌, பள்ளிகள்‌ 

மற்றும்‌ மையங்களுக்கிடையேயிருந்து சுற்றுமுறையின்‌ மூலமாகத்‌ துணை 

வேந்தரின்‌ பரிந்துரையின்பேரில்‌, வேந்தரால்‌ பெயர்குறித்து நியமிக்கப்பட 

வேண்டிய பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌; 

(4) மேற்சொல்லப்பட்ட மூன்று வகைப்‌ பிரிவுகளில்‌ ஏதொன்றின்‌ 

கீழும்‌ வராத, ஆனால்‌ ஆட்சிப்‌ பேரவையால்‌ அதன்‌ 

உறுப்பினர்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர்‌ உறுப்பினர்‌; 

(5 கல்வித்துறை வல்லுநர்களுக்கிடையேயிருந்து, வேந்தரால்‌ பெயர்‌ 

குறித்து நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள்‌; 

(6) பணி முதுநிலைக்கிணங்கச்‌ சுற்றுமுறையின்‌ மூலமாக, துணை 

வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட பல்கலைக்கழகச்‌ சிறப்புப்‌ 

பேராசிரியர்‌ ஒருவர்‌; 

(7) பணி முதுநிலைக்கிணங்கச்‌ சுற்றுமுறையில்‌, துணை வேந்தரால்‌, 

பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்‌ 

ஒருவர்‌; 

(6) துணை வேந்தர்‌, ஆட்சிக்குழுவின்‌ பதவிவழித்‌ தலைவராக இருத்து 

வருவார்‌. 

(0) கல்வித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளரோ 

மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்ப நலத்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள



அரசுச்‌ செயலாளரோ அல்லது சட்டத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ 

செயலாளரோ எக்காரணத்தினாலேனும்‌ ஆட்சிக்‌ குழுவின்‌ கூட்டங்களுக்கு வர 

இயலாத நேர்வில்‌, அவர்‌, அரசுத்‌ துணைச்‌ செயலாளரின்‌ படிநிலைக்குக்‌ கீழல்லாத 

தம்முடைய துறை அலுவலர்‌ எவரையும்‌, அக்கூட்டங்களுக்கு வருகை தருவதற்கு 

அனுப்பி வைக்கலாம்‌. 

(6) வேறுவிதமாக வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, ஆட்சிக்‌ குழுவின்‌ 

பதவிவழி உறுப்பினர்களல்லாத பிற உறுப்பினர்கள்‌, மூன்றாண்டு கால அளவிற்குப்‌ 

பதவி வகிப்பர்‌: 

வரம்புரை: ஆனால்‌, ஆட்சிக்குழுவிற்குத்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது 

பெயர்குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்‌ ஒருவர்‌, எந்தப்‌ பதவியின்‌ காரணமாக 

ஆட்சிக்குழுவின்‌ பதவிவழி உறுப்பினராக இருப்பதற்கு அவர்‌ உரிமைத்‌ 

தகுதியுடையவராயிருக்கின்றாரோ அந்தப்‌ பதவிகளில்‌ எதற்கேனும்‌ தற்காலிகமாக 

நியமிக்கப்படுகிறவிடத்து, தாம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டதன்‌ காரணமாக அல்லது 

பெயர்குறித்து நியமிக்கப்பட்டதன்‌ காரணமாக ஆட்சிக்குழுவின்‌ உறுப்பினராகத்‌ 

தாம்‌ தொடர்ந்து இருப்பதற்கு விரும்புகிறாரா அல்லது அத்தகைய உறுப்பினராக 

இருக்கும்‌ பதவியை விட்டு நீங்கித்‌ தாம்‌ நியமிக்கப்பட்டதன்‌ காரணமாகப்‌ பதவிவழி 

உறுப்பினராக ஆவதற்கு விரும்புகிறாரா என்பதை அவர்‌ தம்‌ நியமனப்‌ பொறுப்பை 

மேற்கொள்கின்ற தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாக தம்மால்‌ 

கையொப்பமிடப்பட்டு துணை வேந்தருக்குத்‌ தெரிவிக்கப்பட்ட எழுத்து மூலமான 

அறிவிப்பின்‌ வாயிலாக, தெரிவு செய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அந்த 

விருப்பத்தெரிவே (choice) அறுதியானதாகும்‌. அத்தகைய விருப்பத்தெரிவைச்‌ 

செய்யத்‌ தவறுவதன்‌ பேரில்‌, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்குறித்து 

நியமிக்கப்பட்ட உறுப்பினராக உள்ள தம்முடைய பதவியை விட்டு அவர்‌ 

நீங்கியிருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 

() ஒருவர்‌ ஆட்சிக்குழுவின்‌ உறுப்பினராக இல்லாது போகும்போது அவர்‌ 

ஆட்சிக்குழுவில்‌ தமக்கிருந்த உறுப்பினர்‌ பதவியின்‌: காரணத்தால்‌ 

இப்பல்கலைக்கழக அமைப்புகளில்‌ எதிலேனும்‌ உறுப்பினராக இருந்திருக்கக்‌ 

கூடியதும்‌ இனி இல்லாமற்போகும்‌. 

(9) ஆட்சிக்குழுவின்‌ உறுப்பினர்கள்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய நாட்படி 

மற்றும்‌ பயணப்படிகள்‌ தவிர, இப்பல்கலைக்கழகத்திடமிருந்து ஊதியம்‌ எதையும்‌ 

பெறுவதற்கு உரிமைத்‌ தகுதியுடையவர்கள்‌ ஆக மாட்டார்கள்‌; 

வரம்புரை: ஆனால்‌, இந்தக்‌ கூறில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, உறுப்பினர்‌ 

எவரையும்‌ தாம்‌ வகிக்கிற பதவியின்‌ காரணமாக தாம்‌ உரிமைத்‌



தகுதியுடையவராயிருக்கிற தம்முடைய இயல்பான ஊதியங்களைப்‌ பெறுவதைத்‌ 

தடை செய்தலாகாது; 

(h) ஆட்சிக்குழுவின்‌ பதவிவழி உறுப்பினர்‌ அல்லாத பிற உறுப்பினர்‌ ஒருவர்‌, 

தமது பதவி முடிவடைகிற காலஅளவிற்கு முன்பு எந்தச்‌ சமயத்திலும்‌ தம்முடைய 

உறுப்பினர்‌ பதவயை விட்டு விலகலாம்‌. அத்தகைய பதவி விலகலானது, 

அவ்வுறுப்பினரால்‌ வேந்தருக்கு எழுத்து மூலமான கடிதம்‌ ஒன்றின்‌ வாயிலாக 

தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அப்பதவி விலகலானது, வேந்தரால்‌ அது 

ஏற்கப்படும்‌ தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்‌. 

24. ஆட்சிக்குழு அதிகாரங்கள்‌.- @ ஆட்சிக்குழு, பின்வரும்‌ 

அதிகாரங்களைக்‌ கொண்டதாயிருக்கு . அதாவது, 

(1) நிலைமுறை விதிகளைச்‌ செய்தல்‌ மற்றும்‌ அந்நிலைமுறை விதிகளைத்‌ 

திருத்துதல்‌ அல்லது அறவு செய்தல்‌; 

(2) துணைமுறை விதிகளைச்‌ செய்தல்‌ மற்றும்‌ அவற்றைத்‌ திருத்துதல்‌ 

அல்லது அறவு செய்தல்‌; 

(3) தான்‌ தீர்மானிக்கக்கூடிய முறையிலும்‌, நோக்கங்களுக்காகவும்‌ பிற 

பல்கலைக்கழகங்கள்‌, பிறா கல்வி அதிகாரஅமைப்புகள்‌, கல்லூரிகள்‌. 

ஆகியவற்றுடன்‌ ஒத்துழைத்தல்‌; 

(4) தான்‌ பொருத்தமென நினைக்கக்கூடிய கல்விப்‌ பிரிவுகளில்‌ 

கற்பிப்பதற்கும்‌ பயிற்றுவிப்பதற்கும்‌ வகைசெய்தல்‌; 

(5) இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌ அல்லது பட்டயங்களுக்கு 

மாணவர்களைத்‌ தயார்‌ செய்ய வகைசெய்யும்‌ கல்லூரிகளுக்கு அல்லது 

நிறுவனங்களுக்கு ஒப்புதல்‌ அளிப்பதற்கான நிபந்தனைகளை 

வகுத்துரைப்பதற்கும்‌ அவ்வாறு அளித்த ஒப்புதலை விலக்கிக்கொள்வதற்கும்‌; 

(6) அறிவார்ந்த ஆராய்ச்சி செய்வதற்கும்‌, மேம்பாடு செய்வதற்கும்‌ 

பரப்புவதற்கும்‌ வகைசெய்தல்‌; 

(7) இப்பல்கலைக்கழகத்திற்குத்‌ தேவைப்படும்‌ விரிவுரையாளர்‌ பதவிகள்‌, 

சிறப்புப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, பேராசிரியர்‌ பதவிகள்‌ மற்றும்‌ பிற ஆசிரியர்‌ 

பதவிகளை ஏற்படுத்துதல்‌; 

(8) இப்பல்கலைக்கழகத்தோடு கல்லூரிகளை இணைப்பதற்கும்‌ 

கல்லூரிகளிலிருந்து இணைப்பினை விலக்கிக்கொள்வதற்குமான 

நிபந்தனைகளை வகுத்துரைத்தல்‌;



(9) கல்லூரியொன்று எந்த முறையிலும்‌ எந்த நிபந்தனைகளுக்குட்பட்டும்‌ 

தன்னாட்சிக்‌ கல்லூரியென பெயரிட்டுக்‌ குறிப்பிடப்படலாம்‌ என்பதனையும்‌, 

அவ்வாறு பெயரிட்டுக்‌ குறிப்பிடப்ப்டதை அறவு செய்யலாம்‌ என்பதனையும்‌ 

வகுத்துரைத்தல்‌; 

(10) பல்கலைக்கழகக்‌ கல்லூரிகள்‌, இணைப்புக்‌ கல்லூரிகள்‌, ஒப்புதல்‌ 

அளிக்கப்பட்ட கல்லூரிகள்‌ ஆகியவற்றின்‌ மாணவர்களுக்கு, ஆட்சிப்‌ பேரவை 

முடிவு செய்யக்கூடிய விரிவுரைகளுக்கும்‌ கற்பிப்பதற்கும்‌ வகை செய்தல்‌; மற்றும்‌ 

அக்கல்லூரிகளின்‌ மாணவர்களாயில்லாதவர்களுக்கு விரிவுரைகளுக்கும்‌, 

கற்பிப்பதற்கும்‌ வகைசெய்தலும்‌ அவர்களுக்கு பட்டயங்கள்‌ அளித்தலும்‌; 

(11) பட்டங்கள்‌, விருதுகள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ பிற கல்வி சிறப்புப்‌ 

பட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்‌; 

(12) பட்டங்களையும்‌, விருதுகளையும்‌, பட்டயங்களையும்‌, பிற கல்விச்‌ 

சிறப்புகளையும்‌; 

(ஐ பல்கலைக்கழகக்‌ கல்லூரியில்‌ அல்லது ஆய்வுக்‌ கூடத்தில்‌ 

அல்லது இணைக்கப்பட்ட அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரியொன்றில்‌ 

ஒப்புதல்‌ அளிக்கப்பட்ட குறித்தகாலப்‌ படிப்பொன்றைத்‌ தொடர்ந்திருந்து 

அல்லது வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ அதிலிருந்து 

விலக்களிக்கப்பட்டிருந்து இப்பல்கலைக்கழகத்தின்‌ வகுத்துரைக்கப்பட்ட 

தேர்வுகளில்‌ தேறியுள்ளவர்களுக்கு; 

(b) வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, ஆராய்ச்சி 

நடத்தியுள்ளவர்களுக்கு 

அளித்தல்‌. 

(13) ஆட்சிக்‌ குழுவின்‌ மூன்றில்‌ இரண்டு பங்குக்குக்‌ குறையாத 

உறுப்பினர்களின்‌ பரிந்துரையின்பேரில்‌, மதிப்புறு (கெளரவப்‌) பட்டங்களை அல்லது 

கல்விச்‌ சிறப்புப்‌ பட்டங்களை அளித்தல்‌; 

(14) மாணவர்‌ விடுதிகளை நிறுவிப்‌ பேணிவருதல்‌; 

(15) பட்டதாரி உதவித்‌ தொகைகள்‌, பயண உதவித்‌ தொகைகள்‌, படிப்புதவித்‌ 

தொகைகள்‌, மாணவ உதவித்‌ தொகைகள்‌, உதவிச்‌ சம்பளங்கள்‌, ஆதரவுப்படித்‌ 

தொகைகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை ஏற்படுத்துதல்‌; 

(16) கல்லூரிகளுக்கு ஒப்புதலளிப்பதற்காகவும்‌ அவற்றை 

இணைப்பதற்காகவும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ தேர்வுகள்‌, பட்டங்கள்‌, விருதுகள்‌, 

பட்டயங்கள்‌ ஆகியவற்றிற்கு அனுமதிக்கப்படுவதற்காகவும்‌ பட்டதாரிகளைப்‌ பதிவு



செய்வதற்காகவும்‌ அத்தகைய பதிவினைப்‌ புதுப்பிப்பதற்காகவும்‌ மற்றும்‌ 4 ஆம்‌ 

பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்கள்‌ அனைத்திற்காகவும்‌ அல்லது 

அவற்றில்‌ எதற்காகவும்‌ விதிக்கப்பட்ட வேண்டிய கட்டணங்களை 

வகுத்துரைத்தல்‌; 

(17) ஆண்டறிக்கை, ஆண்டு கணக்குகள்‌, நிதிநிலை மதிப்பீடுகள்‌ 

ஆகியவற்றைப்‌ பரிசீலனை செய்தலும்‌, அவற்றின்மீது தான்‌ பொருத்தமென 

கருதக்கூடிய நடவடிக்கையை எடுத்தலும்‌; 

(18) பல்கலைக்கழக விரிவாக்கக்‌ குழு ஒன்றை அமைத்து அதைப்‌ 

பேணிவருதல்‌; 

(19) நூல்‌ வெளியீட்டுப்‌ பிரிவு, மாணவர்‌ சங்கங்கள்‌, வேலை வாய்ப்புப்புப்‌ 

பிரிவு, பல்கலைக்கழக உடற்பயிற்சிக்‌ கழகங்கள்‌ ஆகியவற்றை நிறுவி அவற்றைப்‌ 

பேணிவருதல்‌; 

(20) நிறுவனம்‌ ஏதொன்றின்‌ நிருவாகத்தையும்‌ மேற்கொள்வதற்காகவும்‌ 

அதன்‌ சொத்துக்களையும்‌ கடப்பாடுகளையும்‌ மேற்கொள்வதற்காகவும்‌ அல்லது 

இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாயிராத பிற நோக்கங்கள்‌ 

எவற்றிற்காகவும்‌ மைய அல்லது மாநில அரசு அல்லது தனியார்‌ நிறுவனம்‌: 

எதனுடனும்‌ உடன்படிக்கை எதையும்‌ செய்து கொள்ளுதல்‌; 

(21) இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளுக்கான தேர்தல்‌ 

முறையையும்‌, ஆட்சிப்‌ பேரவை, ஆட்சிக்குழு மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ 

பிற அதிகாரஅமைப்புகள்‌ ஆகியவற்றின்‌ கூட்டங்களுக்கான நடைமுறையையும்‌, 

இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆட்சிப்‌ பேரவை அல்லாத பிற 

அதிகாரஅமைப்புகளினால்‌ அலுவல்‌ நடத்தப்‌ பெறுவதற்குத்‌ தேவைப்படும்‌ 

உறுப்பினர்களின்‌ குறைவெண்‌ வரம்பினையும்‌ (Quorum) முறைப்படுத்துகின்ற 

நிலைமுறை விதிகளைச்‌ செய்தல்‌; 

(22) இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ இருக்கும்‌ பகுதி (பரப்பிடம்‌) 

ஒன்றிற்கு, பல்கலைக்கழக மையமாக ஏற்பிசைவளிக்க அரசுக்குப்‌ பரிந்துரைத்தல்‌; 

(23) இப்பல்கலைக்கழகத்தின்‌ சொத்துக்களையும்‌ நிதியங்களையும்‌ வைத்து 

வருதலும்‌, கட்டுப்பாடு செய்தலும்‌, நிருவகித்து வருதலும்‌; 

(24) இப்பல்கலைக்கழகத்தின்‌ தனித்த இலச்சினையின்‌ வடிவம்‌ அதைப்‌ 

பாதுகாப்பில்‌ வைத்திருப்பது, பயன்படுத்துவது ஆகியவை குறித்துப்‌ பணித்தல்‌; 

(25) இந்தச்‌ சட்டத்திற்கும்‌, நிலைமுறை விதிகளுக்கும்‌ துணைமுறை 

விதிகளுக்கும்‌ ஒழுங்குமுறை விதிகளுக்கும்‌ இணங்க, இப்பல்கலைக்கழகம்‌



தொடர்பான அனைத்துப்‌ பொருட்பாடுகளையும்‌ முறைப்படுத்துதலும்‌ 

முடிவுசெய்தலும்‌; 

(26) திட்டவட்டமான நோக்கங்களுக்காக இப்பல்கலைக்கழகத்தின்‌ 

பொறுப்பில்‌ விடப்பட்டுள்ள சொத்துக்கள்‌, நிதியங்கள்‌ ஆகிய அனைத்தையும்‌ 

நிருவகித்தல்‌; 

(27) (ஐ) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்‌, பல்கலைக்கழகச்‌ சிறப்புப்‌ 

பேராசிரியர்கள்‌, பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்கள்‌, பல்கலைக்கழக ஆசிரியர்கள்‌ 

ஆகியோரை நியமித்தல்‌; அவர்களின்‌ ஊதியங்கள்‌ எலையேனுமிருப்பின்‌, 

அவற்றை நிர்ணயித்தல்‌; அவர்களுடைய கடமைகளையும்‌ அவர்களது பணிகள்‌: 

குறித்த நிபந்தனைகளையும்‌ வரையறுத்தல்‌ மற்றும்‌ தற்காலிகக்‌ காலியிடங்களை 

நிரப்புவதற்கு வகைசெய்தல்‌; 

(b) நிருவாக மற்றும்‌ அதுபோன்ற பிற பதவிகளுக்கான நியமன 

முறையைக்‌ குறித்துரைக்கின்ற துணைமுறை விதிகளைச்‌ செய்தல்‌ மற்றும்‌ 

அவற்றின்‌ ஊதியங்கள்‌ எவையேனும்‌ இருப்பின்‌ அவற்றை நிர்ணயித்தல்‌ 

அவற்றினுடைய கடமைகளையும்‌ அவற்றின்‌ பணி நிபந்தனைகளையும்‌ 

வரையறுத்தல்‌, மற்றும்‌ தற்காலிகக்‌ காலி இடங்களை நிரப்புவதற்கு வகைசெய்தல்‌; 

(28) இப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்‌, பல்கலைக்கழகச்‌ சிறப்புப்‌ 

பேராசிரியர்கள்‌, பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ 

இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற பணியாளர்கள்‌ ஆகியோரைத்‌ தற்காலிகமாகப்‌ பணி 

நீக்கம்‌ செய்தல்‌ மற்றும்‌ பணியறவு செய்தல்‌; 

(29) இப்பல்கலைக்கழகத்திடம்‌ அசையும்‌ மற்றும்‌ அசையாச்‌ சொத்துக்கள்‌ 

எவையேனும்‌, நிலைக்‌ கொடைகள்‌, விருப்ப ஆவண வழிக்‌ கொடைகள்‌, 

நன்கொடைகள்‌, மானியமளிப்புகள்‌ மற்றும்‌ உரிமை மாற்றங்கள்‌ மூலமாக 

அளிக்கப்படும்போது, அவற்றை இப்பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக 

ஏற்றுக்கொள்ளுதல்‌; 

வரம்புரை: ஆனால்‌, அத்தகைய நிலைக்‌ கொடைகள்‌, விருப்ப ஆவண வழிக்‌ 

கொடைகள்‌, நன்கொடைகள்‌, மானியமளிப்புகள்‌, உரிமை மாற்றங்கள்‌ ஆகியவை 

அனைத்தும்‌ பற்றி ஆட்சிப்‌ பேரவைக்கு அதன்‌ அடுத்த கூட்டத்தில்‌ அறிவிக்கை 

தருதல்‌ வேண்டும்‌; 

(30) (i) மைய அல்லது மாநில அரசு எதனிடமிருந்தும்‌, அல்லது பொது 

மக்களிடமிருந்து, அல்லது மைய அல்லது மாநில அரசு எதற்கேனும்‌ சொந்தமான 

அல்லது அதன்‌. கட்டுப்பாட்டிலுள்ள கழகம்‌ எதனிடமிருந்தும்‌, 

இப்பல்கலைக்கழகத்தின்‌ சார்பாகக்‌ கடன்களைப்‌ பெறுதல்‌;



(ii) இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களுக்காக அரசின்‌ 

ஒப்புதலளிப்புடன்‌ இப்பல்கலைக்கழகச்‌ சொத்தின்‌ பிணையத்தின்‌ பேரில்‌, 

பணத்தைக்‌ கடன்‌ வாங்குதல்‌; 

(31) இப்பல்கலைக்கழகத்தின்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள கல்லூரிகளை 

இப்பல்கலைக்கழகத்துடன்‌ இணைத்தலும்‌, ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகளாக 

கல்லூரிகளுக்கு ஏற்பிசைவு அளித்தலும்‌; 

(32) கல்லூரி எதனையும்‌, அரசின்‌ ஒத்திசைவுடன்‌, தன்னாட்சிக்‌ 

கல்லூரியாகப்‌ பெயரிட்டுக்‌ குறிப்பிடுதலும்‌, அவ்வாறாகப்‌ பெயரிட்டுக்‌ 

குறிப்பிட்டதை விலக்கிக்கொள்ளுதலும்‌; 

(33) இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படாத மாணவர்‌ விடுதிகளுக்கு 

ஏற்பிசைவளித்தல்‌ மற்றும்‌ துணைமுறை விதிகளுக்கிணங்கவும்‌ அதன்படி 

விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கிணங்கவும்‌ நடத்தப்பெறாத மாணவர்‌ விடுதி 

எதனின்‌ ஏற்பிசைவையும்‌ தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்‌ அல்லது 

விலக்கிக்கொள்ளுதல்‌; 

(34) பல்கலைக்கழகக்‌ கல்லூரிகள்‌, இணைக்கப்பட்ட மற்றும்‌ 

ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகள்‌, மாணவர்‌ விடுதிகள்‌ ஆகிய அனைத்தையும்‌ 

ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்தலும்‌ ஆய்வு செய்யப்‌ பணித்தலும்‌; 

(35) பல்கலைக்கழகக்‌ கல்லூரிகள்‌, இணைக்கப்பட்ட மற்றும்‌ 

ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகள்‌, மாணவர்‌ விடுதிகள்‌ ஆகியவற்றிற்கான 

ஆசிரியர்களின்‌ தகுதிப்பாடுகளை வகுத்துரைத்தல்‌; 

(36) பட்டதாரி உதவித்‌ தொகைகள்‌, பயண உதவித்‌ தொகைகள்‌, 

படிப்புதவித்‌ தொகைகள்‌, மாணவ உதவித்‌ தொகைகள்‌, உதவிச்‌ சம்பளங்கள்‌, 

ஆதரவுப்‌ படித்தொகைகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை நிலைமுறை 

விதிகளுக்கிணங்க அளித்தல்‌; 

(37) வகுத்துரைக்கப்படக்‌ கூடிய கட்டணங்களை விதித்தலும்‌ 

வசூலித்தலும்‌; 

(38) இப்பல்கலைக்கழகத்‌ தேர்வுகளை நடத்துதலும்‌, அவற்றின்‌ 

முடிவுகளுக்கு ஒப்புதலளித்து வெளியிடுதலும்‌; 

(39) இப்பல்கலைக்கழகத்தில்‌ மாணவர்களைச்‌ சேர்த்துக்கொள்வது 

தொடர்பாக அல்லது பல்கலைக்கழகத்‌ தேர்வுகளுக்குச்‌ சமமானதாய்‌ இருப்பதாக 

ஏற்பிசைவு அளிக்கப்படுவதற்கான தேர்வுகளை வகுத்துரைக்கின்ற துணைமுறை 

விதிகளைச்‌ செய்தல்‌;



(40) பாடக்‌ குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமித்தல்‌; 

(41) டு பாடக்‌ குழுக்களின்‌ பரிந்துரைகளைப்‌ பரிசீலனை செய்ததற்குப்‌ பின்பு, 

தேர்வாளர்களை நியமித்தல்‌; மற்றும்‌. 

(il) அவர்களுடைய ஊதியங்களை நிர்ணயித்தல்‌; 

(42) இப்பல்கலைக்கழக மாணவர்கள்‌ தங்கியிருக்கும்‌ இடத்தையும்‌ ஒழுங்கு 

நடத்தையையும்‌ கண்காணித்துக்‌ கட்டுப்பாடு செய்தலும்‌, அவர்கள்‌ உடல்‌ நலமும்‌ 

பொது நலமும்‌ பெறுவதை உறுதிப்படுத்திக்‌ கொள்வதற்காகக்‌ கல்லூரிகளின்‌ 

மூலமாக ஏற்பாடுகளைச்‌ செய்தலும்‌; 

(43) பல்கலைக்கழக மையங்கள்‌, பல்கலைக்கழகக்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ 

ஆய்வுக்‌ கூடங்கள்‌, நூலகங்கள்‌, அருங்காட்சியகங்கள்‌, ஆராய்ச்சி நிலையங்கள்‌ 

ஆகியவற்றை நிறுவுதலும்‌, மேலாண்மை செய்தலும்‌; இப்பல்கலைக்கழகத்தால்‌ 

நிறுவப்பட்ட அல்லது பேணிவரப்படும்‌ பிற நிலையங்களை மேலாண்மை செய்தலும்‌; 

(44) இப்பல்கலைக்கழகத்தால்‌ ஏற்படுத்தப்பட்ட மாணவர்‌ விடுதிகளை 

நிருவகித்து வருதல்‌; 

(45) இப்பல்கலைக்கழக விரிவாக்கக்‌ குழுவின்‌ செயற்பாட்டை 

முறைப்படுத்துதல்‌; 

(46) இப்பல்கலைக்கழகத்தால்‌ ஏற்படுத்தப்பட்ட நூல்‌ வெளியிட்டுப்‌ பிரிவு, 

மாணவர்‌ சங்கங்கள்‌, வேலைவாய்ப்புப்‌ பிரிவு, பல்கலைக்கழக உடற்பயிற்சி 

கழகங்கள்‌ ஆகியவற்றை நிருவகித்து வருதல்‌; 

(47) இப்பல்கலைக்கழகத்தில்‌ கற்பித்தலையும்‌, பயிற்றுவித்தலையும்‌ 

ஆய்வுசெய்தல்‌; 

(48) இப்பல்கலைக்கழகத்திற்குள்‌ ஆராய்ச்சியை வளர்த்தலும்‌, அத்தகைய 

ஆராய்ச்சி பற்றி அவ்வப்போது அறிக்கைகளைக்‌ கோருதலும்‌; 

(49) இந்தச்‌ சட்டத்தினாலோ அல்லது நிலைமுறை விதிகளினாலோ, 

துணைமுறை விதிகளினாலோ அல்லது ஒழுங்குமுறை விதிகளினாலோ தனக்கு 

வழங்கப்படக்கூடிய அல்லது விதிக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ 

செலுத்திவருதலும்‌, பிற கடமைகளைப்‌ புரிந்துவருதலும்‌; மற்றும்‌ 

(50) (ஐ தன்‌ அதிகாரங்களில்‌ எதையும்‌ துணை வேந்தருக்கோ தன்‌ 

உறுப்பினர்களுக்கிடையேயிருந்து அமைந்த குழுவொன்றிற்கோ அல்லது 

நிலைமுறை விதிகளுக்கிணங்க நியமிக்கப்பட்ட குழுவொன்றிற்கோ ஒப்படைவு 

செய்தல்‌;



(௦) ஆட்சிக்‌ குழு, கல்வி சார்ந்த பொருட்பாடு எதனைப்‌ பொறுத்தும்‌ 

கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவைக்‌ கலந்தாய்வது தேவையானதென்று தான்‌ 

கருதுகிறவிடத்து, அவ்வாறே கலந்தாய்வு செய்யலாம்‌. 

25. ஆட்சிக்‌ குழுவின்‌ கூட்டங்கள்‌- (1) ஆட்சிக்‌ குழு, வகுத்துரைக்கப்படக்கூடிய 

காலங்களிலும்‌, இடங்களிலும்‌ கூடுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (2), (3) ஆகிய 

உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, தன்‌: கூட்டங்களுக்கான 

குறைவெண்‌ வரம்பு உள்ளடங்கலாக, அக்கூட்டங்களில்‌ அலுவல்‌ நடத்துவது 

தொடர்பாக, வகுத்துரைக்கப்படக்கூடிய நடைமுறை விதிகளைக்‌ கடைப்பிடித்தல்‌ 

வேண்டும்‌: 

வரம்புரை: ஆனால்‌, ஆட்சிக்‌ குழு, குறைந்தது மூன்று திங்களுக்கு ஒரு 
முறையேனும்‌ கூடுதல்‌ வேண்டும்‌. 

(2) துணை வேந்தர்‌, அல்லது அவர்‌ வராதபோது, வந்திருக்கும்‌ 

உறுப்பினர்களால்‌ தெரிந்தெடுக்கப்படும்‌ உறுப்பினர்‌ எவரேனும்‌, ஆட்சிக்‌ குழுவின்‌ 

கூட்டமொன்றுக்குத்‌ தலைமை வகிப்பார்‌. 

(3) ஆட்சிக்‌ குழுவின்‌ கூட்டம்‌ எதிலும்‌ எழும்‌ அனைத்துக்‌ கேள்விகளும்‌, 

வந்திருந்து வாக்களிக்கின்ற உறுப்பினர்களின்‌ வாக்குகளின்‌ 

பெரும்பான்‌ மையினால்‌ முடிவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வாக்குகள்‌ 

சமமானவையாக அமைகின்ற நேர்வில்‌, துணை வேந்தரோ அல்லது நேர்விற்கேற்ப 

தலைமை வகிக்கின்ற உறுப்பினரோ இரண்டாவது அல்லது அறுதி வாக்கு (Casting 

Vote) ஒன்றைப்‌ பெற்றிருத்தலும்‌ அதைச்‌ செலுத்துதலும்‌ வேண்டும்‌. 

(4) (a) ஆட்சிக்‌ குழு, கலந்தாய்வு நோக்கத்திற்காக, பரிசீலனையில்‌ உள்ள 

பொருள்‌ எதிலும்‌ சிறப்பு அறிவையோ அல்லது நடைமுறைப்‌ பட்டறிவையோ 

பெற்றிருக்கின்ற எவரையும்‌, கூட்டம்‌ எதற்கும்‌ வருகை தருமாறு அழைப்பு 

விடுக்கலாம்‌. அத்தகையவர்‌ அத்தகைய கூட்டங்களின்‌ நடவடிக்கைகளில்‌ 

பேசலாம்‌, மற்றும்‌ மற்றப்படி பங்கேற்கலாம்‌; ஆனால்‌ வாக்களிப்பதற்கு உரிமைத்‌ 

தகுதியுடையவராகமாட்டார்‌. 

(b) அவ்வாறு அழைக்கப்பட்டவர்‌, ஆட்சிக்‌ குழுவின்‌ உறுப்பினர்‌ 

ஒருவருக்கு அனுமதிக்கத்தக்கதான நாட்படி மற்றும்‌ பயணப்படிகளுக்கு உரிமைத்‌ 

தகுதியுடையவராய்‌ இருப்பார்‌. 

26. ஆண்டறிக்கை. இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டறிக்கை, ஆட்சிக்‌ 

குழுவால்‌ தயாரிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ நிலைமுறை விதிகளின்‌ மூலம்‌ 

வகுத்துரைக்கப்படக்கூடிய தேதியிலோ அதற்கு முன்போ ஆட்சிப்‌ பேரவைக்குப்‌



பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அடுத்து நடக்கும்‌ ஆட்சிப்‌ பேரவையின்‌ 

ஆண்டு கூட்டத்தில்‌ அதனால்‌ பரிசீலனை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. ஆட்சிப்‌ 

பேரவை அதன்‌ பேரில்‌ தீர்மானங்கள்‌ நிறைவேற்றி அதை ஆட்சிக்‌ குழுவிற்குத்‌ 

தெரியப்படுத்தலாம்‌; ஆட்சிக்குழு அதற்கிணங்க நடவடிக்கை எடுத்தல்‌ வேண்டும்‌. 

ஆட்சிக்குழு தன்னால்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆட்சிப்‌ பேரவைக்குத்‌ 

தகவல்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. அந்த அறிக்கையின்‌ படியொன்று, அதன்‌ பேரிலான 

ஆட்சிப்‌ பேரவையின்‌ தீர்மானங்கள்‌ எவையேனுமன்று, இருப்பின்‌ அவற்றின்‌. 

படியொன்றுடன்‌ சேர்த்து, தகவலுக்காக அரசுக்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 

27. ஆண்டு கணக்குகள்‌. (1) இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டு கணக்குகள்‌, அரசு 

பணிக்கக்கூடிய பரிசீலனைக்கும்‌ தணிக்கைக்கும்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 

மற்றும்‌ ஆண்டு கணக்குகள்‌, தணிக்கை அறிக்கை ஆகியவற்றின்‌ படியொன்று 

அரசுக்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 

(2) இப்பல்கலைக்கழகம்‌ அத்தகைய தணிக்கையில்‌ எழுப்பப்பட்ட 

மறுப்புரைகளைத்‌ தீர்த்து வைப்பதோடு, அறிக்கையின்‌ அத்தணிக்கை 

அறிக்கையின்‌ பேரில்‌ அரசினால்‌ பிறப்பிக்கப்படக்கூடிய அறிவுறுத்தங்களை 

நிறைவேற்றுதலும்‌ வேண்டும்‌. 

(3) கணக்குகள்‌ தணிக்கை செய்யப்படும்போது, துணைமுறை விதிகளின்‌ 

மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில்‌, ஆட்சிக்‌ குழுவினால்‌ 

வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அதன்‌ படிகள்‌, ஆட்சிப்‌ பேரவைக்கு அதன்‌ 

அடுத்த கூட்டத்திலும்‌, அத்தகைய வெளியீட்டிலிருந்து மூன்று திங்களுக்குள்ளாக 

அரசுக்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 

அத்தியாயம்‌ V. 

புலங்கள்‌ (Faculties), பாடக்‌ குழுமங்கள்‌, நிதிக்‌ குழு மற்றும்‌ பிற 

அதிகாரஅமைப்புகள்‌. 

28. புலங்களின்‌ அமைப்பும்‌ அலுவல்களும்‌.- (1) இப்பல்கலைக்கழகம்‌, கலைகள்‌, 

அறிவியல்‌, சட்டம்‌, பொறியியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்பவியல்‌, கல்வி, வணிகம்‌, 

இந்திய மொழிகள்‌ மற்றும்‌ பிற மொழிகள்‌, நுண்கலைகள்‌ ஆகிய புலங்களையும்‌, 

நிலைமுறை விதிகளின்‌ மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய பிற புலங்களையும்‌ 

உள்ளடக்கியதாயிருக்கும்‌. 

(2) இப்புலங்களின்‌ அமைப்பும்‌, அலுவல்களும்‌, பிற எல்லா வகைகளிலும்‌, 

ஒழுங்குமுறை விதிகளின்‌ மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடியனவாக இருக்கும்‌.



(3) 2 ஆம்‌ உட்பிரிவில்‌ எண்ன அடங்கியிருந்தபோதிலும்‌, கல்வி அலுவல்‌ 

நிலைக்‌ குழு, ஆட்சிக்‌ குழுவின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ 

ஆசிரியர்‌ எவரையும்‌ புலம்‌ ஒன்றின்‌ உறுப்பினராக நியமிக்கலாம்‌. 

(4) புலம்‌ ஒவ்வொன்றும்‌, நிலைமுறை விதிகளின்‌ மூலமாக 

வகுத்துரைக்கப்படக்கூடிய கற்பிக்கின்ற துறைகளைக்‌ கொண்டதாயிக்கும்‌. 

29. பாடக்‌ குழுமங்கள்‌.- கற்பிக்கின்ற துறை ஒவ்வொன்றுடனும்‌ இணைக்கப்பட்ட 

பாடக்‌ குழுமங்கள்‌ இருந்து வரும்‌. அப்பாடக்‌ குழுமங்களின்‌ அமைப்பும்‌, 

அதிகாரங்களும்‌, துணைமுறை விதிகளின்‌ மூலம்‌ 

வகுத்துரைக்கப்படக்கூடியனவாக இருக்கும்‌. 

30. பிற அதிகாரஅமைப்புகளை அமைத்துருவாக்குதல்‌.- இப்பல்கலைக்கழகத்தின்‌ 

அதிகாரஅமைப்புகளென நிலைமுறை விதிகளின்‌ மூலம்‌ விளம்பப்படக்கூடிய பிற 

அமைப்புகளின்‌ அமைப்பும்‌, அவற்றின்‌ அதிகாரங்களும்‌, 

வகுத்துரைக்கப்படக்கூடியனவாக இருக்கும்‌. 

31. நிதிக்குழு (1) நிதிக்‌ குழு, பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ 

கொண்டதாயிருக்கும்‌, அதாவது:- 

(i) துணை வேந்தர்‌; 

(i) நிதித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; 

0) கல்வித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; 

(iv) ஆட்சிக்‌ குழுவினால்‌ அதனுடைய உறுப்பினர்களுக்கிடையேயிருந்து 

நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள்‌; அவர்களில்‌ ஒருவர்‌ பேராசிரியராகவும்‌, 

ஒருவர்‌ வேந்தரால்‌ ஆட்சிக்‌ குழுவிற்குப்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுபவராகவும்‌ 

இருத்தல்‌ வேண்டும்‌. 

(2) (1) ஆம்‌ உட்பிரிவின்‌ 0) ஆம்‌ கூறிலோ (0) ஆம்‌ கூறிலோ குறிப்பிடப்படும்‌ 

அலுவலர்‌ எக்காரணத்தினாலேனும்‌ நிதிக்‌ குழுக்‌ கூட்டத்திற்கு வருவதற்கு 

இயலாதிருப்பாராயின்‌ அவர்‌, அரசுத்‌ துணைச்‌ செயலாளரின்‌ படிநிலைக்குக்‌ 

கீழல்லாத, தம்‌ துறையின்‌ அலுவலர்‌ எவரையும்‌ அத்தகைய கூட்டத்திற்கு வருகை 

தருவதற்கு அனுப்பி வைக்கலாம்‌; அவ்வாறு அனுப்பி வைக்கப்படும்‌ அலுவலர்‌, 

அக்குழுவின்‌ விவாதங்களில்‌ பங்கேற்க உரிமை பெற்றிருப்பார்‌; மற்றும்‌ 

வாக்களிப்பதற்கும்‌ உரிமை பெற்றவராயிருப்பார்‌. 

(3) துணை வேந்தர்‌, நிதிக்‌ குழுவின்‌ பதவிவழித்‌ தலைவராயிருந்து வருவார்‌; 

மற்றும்‌ நிதி அலுவலர்‌ நிதிக்‌ குழுவின்‌ பதவிவழிச்‌ செயலாளராய்‌ இருந்து வருவார்‌.



(4) பதவிவழி உறுப்பினர்களல்லாத நிதிக்‌ குழுவின்‌ மற்ற அனைத்து 

உறுப்பினர்களும்‌, மூன்றாண்டு கால அளவிற்குப்‌ பதவி வகிப்பர்‌. 

(5 நிதிக்‌ குழு, கணக்குகளைப்‌ பரிசீலனை செய்வதற்கும்‌ 

செலவினத்திற்கான கருத்துரைகளைக்‌ கூர்ந்தாய்வு செய்வதற்குமென ஒவ்வோர்‌ 

ஆண்டிலும்‌ குறைந்தது இருமுறையாவது கூடுதல்‌ வேண்டும்‌. 

(6)_ நிதி அலுவலரால்‌ தயாரிக்கப்பட்ட இப்பல்கலைக்கழக ஆண்டு 

கணக்குகள்‌, பரிச்லனைக்காகவும்‌ கருத்துரைகளுக்காகவும்‌ நிதிக்‌ குழுவின்‌ 

முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அதன்‌ பின்பு, ஒப்புதலளிப்பிற்காக 

ஆட்சிக்‌ குழுவிற்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 

(7) நிதிக்‌ குழுவானது, இப்பல்கலைக்கழகத்தின்‌ வருமானம்‌ மற்றும்‌ வள 

ஆதாரங்கள்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ ஆண்டிற்கான மொத்த தொடர்‌ 

செலவினம்‌, மொத்த தொடராச்‌ செலவினம்‌ ஆகியவற்றின்‌ வரம்புகளைப்‌ 

பரிந்துரைத்தல்‌ வேண்டும்‌. அத்தகைய வரம்புகள்‌, ஆக்கப்பூர்வமான பணிகளைப்‌ 

பொறுத்த அளவில்‌, கடன்களிலிருந்து பெறும்‌ தொகையை உள்ளடக்கியனவாக 

இருக்கலாம்‌. 

(3) நிதிக்‌ குழு- 

(ஐ அவ்வப்போது இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதி நிலைமையை ஆய்வு 

செய்து வரும்‌; 

(b) ஆண்டு நிதி மதிப்பீடுகளில்‌ வகைமுறை எதுவும்‌ செய்யப்பட்டிராத 

முதலீடு அல்லது செலவினத்தை உள்ளடக்கியுள்ள அல்லது ஆண்டு நிதி 

மதிப்பீடுகளில்‌ வகைசெய்யப்பட்டுள்ள தொகைக்கும்‌ மிகையாக உள்ள 

செலவினத்தை உள்ளடக்குகிற கருத்துரு ஒவ்வொன்றின்‌ பேரிலும்‌, ஆட்சிக்‌ 

குழுவுக்குப்‌ பரிந்துரை செய்யும்‌; 

(69) இப்பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌ ஆகியவற்றின்‌. 

கணக்குகளை வைத்து வருவதற்கான முறைகளையும்‌, நடைமுறையையும்‌ 

படிவங்களையும்‌ வகுத்துரைக்கும்‌; 

(0) இப்பல்கலைக்கழக நிதிகள்‌ தொடர்பான அனைத்துப்‌ பொருள்களின்‌. 

பேரிலும்‌ ஆட்சிக்‌ குழுவிற்குப்‌ பரிந்துரை செய்யும்‌; மற்றும்‌ 

(6) வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அலுவல்களைப்‌ புரிந்து வரும்‌. 

(9) நிதி அலுவலரால்‌ தயாரிக்கப்பட்ட இப்பல்கலைக்கழக நிதி மதிப்பீடுகள்‌ 

பரிசீலனைக்காகவும்‌ கருத்துரைகளுக்காகவும்‌ நிதிக்‌ குழுவின்‌ முன்பு 

வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. நிதிக்‌ குழுவினால்‌ மாற்றியமைக்கப்பட்டபடியான



மேற்சொன்ன மதிப்பீடுகள்‌,அதற்குப்‌ பின்பு, பரிசலனைக்காக ஆட்சிக்‌ குழுவின்‌ 

முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. ஆட்சிக்‌ குழு, நிதிக்‌ குழுவினால்‌ செய்யப்பட்ட 

மாறுதல்களை ஏற்றுக்‌ கொள்ளலாம்‌. 

அத்தியாயம்‌ VI. 

நிலைமுறை விதிகள்‌ (Statutes), துணைமுறை விதிகள்‌ (Ordinances), 

ஒழுங்குமுறை விதிகள்‌ (Regulations) ஆகியவை. 

32. நிலைமுறை விதிகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, 

பின்வரும்‌ பொருள்கள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றில்‌ எதற்கும்‌ நிலைமுறை 

விதிகள்‌ வகைசெய்யலாம்‌; அதாவது:- 

(i) பட்டங்களை வழங்குவதற்குப்‌ பட்டமளிப்பு விழாவை நடத்துதல்‌; 

(i) மதிப்புறு (கெளரவப்‌) பட்டங்களையும்‌ கல்விச்‌ சிறப்புப்‌ பட்டங்களையும்‌ 

வழங்குதல்‌; 

0 இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளின்‌ அமைப்பு, அதிகாரங்கள்‌ 

மற்றும்‌ அலுவல்கள்‌; 

(iv) அதிகார அமைப்புகளின்‌ உறுப்பினர்களிடையே எழும்‌ காலியிடங்களை 

நிரப்புகின்ற முறை; 

) அதிகாரஅமைப்புகளின்‌ மற்றும்‌ அவற்றின்‌ குழுக்களின்‌ 

உறுப்பினர்களுக்கு வழங்கப்படத்தக்க படித்தொகை. 

(vi) கூட்டங்களில்‌ பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை அத்தகைய 

கூட்டங்களில்‌ அலுவல்‌ நடப்பிற்கான குறைவெண்‌ வரம்பு  (Quorum) 

உள்ளடங்கலாக; 

0) அதிகாரஅமைப்புகளின்‌ முடிவுகள்‌ பற்றிய ஆணைகளுக்கு 

உறுதியொப்பமளித்தல்‌: 

9)  இப்பல்கலைக்கழகத்திலும்‌, பல்கலைக்கழகக்‌ கல்லூரிகளிலும்‌ 

கற்பிக்கின்ற உருவாக்குதல்‌; 

(ix) வேந்தர்‌ மற்றும்‌ இணை வேந்தர்‌ அல்லாத இப்பல்கலைக்கழகத்தின்‌ 

மற்ற அலுவலர்களின்‌ பதவிக்‌ கால அளவும்‌ அவர்களின்‌ நியமன முறைகளும்‌ பணி 

பற்றிய நிபந்தனைகளும்‌; 

(X) இப்பல்கலைக்கழகத்தினால்‌ பணியிலமர்த்தப்படும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ 

ஏனையோரின்‌ தகுதிப்பாடுகள்‌;



(xi) இப்பல்கலைக்கழகத்தினால்‌ பணியிலமர்த்தப்படும்‌ ஆசிரியர்களையும்‌ 

ஏனையோரையும்‌ வகைப்படுத்துதல்‌, அவர்களின்‌ நியமன முறை மற்றும்‌ 

அவர்களின்‌ பணி பற்றிய வரையறைகளையும்‌ நிபந்தனைகளையும்‌ முடிவு 

செய்தல்‌; 

00). இப்பல்கலைக்கழகத்தினால்‌ பணியிலமர்த்தப்படும்‌ அலுவலர்கள்‌, 

ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஏனையோரின்‌ நன்மைக்காக ஓய்வூதியம்‌, பணிக்கொடை, 

காப்பீட்டு அல்லது வருங்கால வைப்பு நிதியத்தை ஏற்படுத்துதல்‌; 

00) பட்டதாரி உதவித்தொகைகள்‌, பபண உதவித்‌ தொகைகள்‌, படிப்புதவித்‌ 

தொகைகள்‌, மாணவ உதவித்‌ தொகைகள்‌, உதவி சம்பளங்கள்‌, ஆதரவுப்‌ படிப்புத்‌ 

தொகைகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை ஏற்படுத்துதலும்‌ அவற்றை 

அளிப்பதற்கான நிபந்தனைகளும்‌; 

(xiv) கூடங்கள்‌, மாணவர்‌ விடுதிகள்‌, ஆய்வுக்கூடங்கள்‌ ஆகியவற்றை 

நிறுவுதலும்‌, பேணிவருதலும்‌; 

பே) கூடங்களிலும்‌, மாணவர்‌ விடுதிகளிலும்‌, இப்பல்கலைக்கழக 

மாணவர்கள்‌. தங்கியிருப்பதற்கான நிபந்தனைகளும்‌ அவ்வாறு 

தங்கியிருப்பதற்கான கட்டணங்களையும்‌ பிற தொகைகளையும்‌ விதித்தலும்‌; 

(xvi) பட்டதாரிகளைப்‌ பதிவு செய்வதற்கான நிபந்தனைகளும்‌ மற்றும்‌ 

அதற்கான பதிவேட்டினை வைத்துப்‌ பேணி வருதலும்‌; 

ரி) ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு ஏற்பிசைவு அளித்தல்‌ மற்றும்‌ 

இணைக்கப்படவேண்டிய கல்லூரிகள்‌ இப்பல்கலைக்கழகத்தோடு 

இணைக்கப்படுதல்‌ ஆகியவற்றிற்கான நிபந்தனைகள்‌; 

பரி) கல்லூரியொன்று தன்னாட்சிக்‌ கல்லூரியாக பெயர்‌ குறிக்கப்படுதலோ 

அல்லது அத்தகைய கல்லூரியை அவ்வாறு பெயர்‌ குறிக்கப்பட்டதை விலக்கிக்‌ 

கொள்ளுதலோ எந்த முறையிலும்‌ எந்த நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டும்‌ 

செய்யப்பட வேண்டும்‌ என்பதும்‌ மற்றும்‌ கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு, பணியாளர்‌ 

மன்றம்‌, பாடக்‌ குழுமங்கள்‌, தேர்வாளர்‌ குழுமங்கள்‌ ஆகியவற்றை அமைத்தல்‌ 

அல்லது மாற்றியமைத்தல்‌, அவற்றின்‌ அதிகாரங்கள்‌, பணிகள்‌ ஆகியவை 

உள்ளடங்கலாக தன்னாட்சி கல்லூரிகளை நிருவகித்தல்‌ தொடர்பான 

பொருள்களும்‌; 

000 இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளிடம்‌ அல்லது அலுவலர்களிடம்‌ 

மேவியுள்ள அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்‌; மற்றும்‌



(xx) நிலைமுறை விதிகளின்‌ மூலம்‌ வகுத்துரைக்கப்படத்‌ தேவைப்படுகின்ற 

அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற பொருள்‌ எதுவும்‌. 

33. நிலைமுறை விதிகள்‌ எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது.- (1) ஆட்சிக்குழு, 

அவ்வப்போது, நிலைமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌, மற்றும்‌ இந்தப்‌ பிரிவில்‌ 

இதன்பின்பு வகைசெய்யப்பட்டுள்ள முறையில்‌ அந்நிலைமுறை விதிகளைத்‌ 

திருத்தலாம்‌ அல்லது நீக்கலாம்‌. 

(2) கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு, ஆட்சிக்‌ குழுவிற்கு, அவ்வாட்சிக்‌ 

குழுவால்‌ நிறைவேற்றப்படவேண்டிய நிலைமுறை விதி எதனின்‌ அல்லது 

நிலைமுறை விதியொன்றின்‌ திருத்தம்‌ அல்லது நீக்கம்‌ எதனின்‌ வரைவையும்‌ 

முன்மொழியலாம்‌ மற்றும்‌ அத்தகைய வரைவானது ஆட்சிக்‌ குழுவினால்‌ அதன்‌ 

அடுத்த கூட்டத்தில்‌ பரிசீலனை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 

வரம்புரை: ஆனால்‌, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு, கல்வி சார்ந்த அலுவல்கள்‌ 

அல்லாத பிற பொருட்கள்‌ பற்றி நிலைமுறை விதி எதனின்‌ அல்லது நிலைமுறை 

விதியொன்றின்‌ திருத்தம்‌ அல்லது நீக்கம்‌ எதனின்‌ வரைவையும்‌ ஆட்சிக்‌ 

குழுவிற்கு முன்மொழிதலாகாது. 

(3) ஆட்சிக்குழு, (2) ஆம்‌ உட்பிரிவின்படி கல்வி அலுவல்‌ நிலைக்‌ 

குழுவினால்‌ முன்மொழியப்பட்ட வரைவைப்‌ பரிசீலனை செய்யலாம்‌: மற்றும்‌ அது 

அவ்வரைவு நிலைமுறை விதியை நிறைவேற்றலாம்‌ அல்லது மறுத்துத்‌ 

தள்ளிவிடலாம்‌ அல்லது திருத்தங்களுடனோ இல்லாமலோ அதை 

மறுபரிசீலனைக்காகக்‌ கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவிற்குத்‌ திருப்பியனுப்பலாம்‌. 

(4) (@) ஆட்சிக்‌ குழுவின்‌ உறுப்பினர்‌ எவரும்‌, நிலைமுறை விதி ஒன்றின்‌ 

அல்லது நிலைமுறை விதியொன்றின்‌ திருத்தம்‌ அல்லது நீக்கம்‌ எதனின்‌ 

வரைவையும்‌ ஆட்சிக்‌ குழுவிற்கு முண்மொழியலாம்‌; மற்றும்‌ ஆட்சிக்‌ குழு 

அவ்வரைவை ஏற்றுக்கொள்ளலாம்‌ அல்லது கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவின்‌ 

உள்ளிட்டெல்லைக்குள்‌ வராத பொருள்‌ ஒன்றைப்‌ பற்றியதாக இருக்குமாயின்‌, , 

அதை மறுத்துத்‌ தள்ளிவிடலாம்‌; 

(b) அத்தகைய வரைவு, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவின்‌ 

உள்ளிட்டெல்லைக்குள்‌ உள்ள பொருள்‌ ஒன்றைப்‌ பற்றியதாக இருக்கிற நேர்வில்‌, 

ஆட்சிக்‌ குழு, அதைப்‌ பரிசீலனை செய்வதற்காகக்‌ கல்வி அலுவல்‌ நிலைக்‌ 

குழுவிற்குக்‌ குறித்தனுப்புதல்‌ வேண்டும்‌; அக்குழு தான்‌ அவ்வரைவிற்கு, 

ஒப்புலளிக்கவில்லை என்று ஆட்சிக்‌ குழுவிற்கு அறிக்கை செய்யலாம்‌; அல்லது 

கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு ஒப்புதலளிக்கக்கூடிய வடிவில்‌ ஆட்சிக்‌ குழுவிற்கு 

அவ்வரைவைப்‌ பணிந்தனுப்பலாம்‌; மேலும்‌, அவ்வாட்சிக்‌ குழு அவ்வரைவைத்‌



திருத்தங்களுடனோ இல்லாமலோ நிறைவேற்றலாம்‌ அல்லது மறுத்துத்‌ 

தள்ளிவிடலாம்‌. 

(5) ஆட்சிக்‌ குழுவினால்‌ நிறைவேற்றப்பட்ட நிலைமுறை விதி ஒன்று 

அல்லது நிலைமுறை விதியொன்றின்‌ திருத்தம்‌ அல்லது நீக்கமானது, 

வேந்தருக்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; அவர்‌ அதற்கு இசைவை 

அளிக்கலாம்‌ அல்லது தமது இசைவை அளிக்க மறுக்கலாம்‌. ஆட்சிக்‌ குழுவினால்‌ 

நிறைவேற்றப்பட்ட நிலைமுறை விதி ஒன்று அல்லது நிலைமுறை 

விதியொன்றின்‌ திருத்தம்‌ அல்லது நீக்கமானது, வேந்தரால்‌ அதற்கு 

இசைவளிக்கப்பட்டிருக்கின்ற வரையிலும்‌ செல்லுந்தன்மை 

கொண்டிருத்தலாகாது. 

34. துணைமுறை விதிகள்‌.- இந்தச்‌ சட்டம்‌, நிலைமுறை விதிகள்‌ ஆகியவற்றின்‌. 

வகைமுறைகளுக்குட்பட்டு, அவசர விதிகள்‌ பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ 

அனைத்திற்கும்‌ அல்லது அவற்றின்‌ எதற்கேனும்‌ வகைசெய்யலாம்‌, அதாவது, 

() இப்பல்கலைக்கழகத்திலும்‌ அதனால்‌ ஒப்புதலளிக்கப்பட்ட அல்லது 

அதனோடு இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும்‌ மாணவர்களைச்‌ 

சேர்த்துக்கொள்ளுதல்‌; மற்றும்‌ பல்கலைக்கழகக்‌ கல்லூரிகளிலும்‌ ஆய்வுக்‌ 

கூடங்களிலும்‌ கட்டணங்களை விதித்தல்‌; 

(0 இப்பல்கலைக்கழகத்தின்‌ அனைத்துப்‌ பட்டங்கள்‌, விருதுகள்‌, 

பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புப்‌ பட்டங்கள்‌ ஆகியவற்றைப்‌ பெறுவதற்கு 

வகைசெய்கின்ற குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவுகள்‌; 

00 இப்பல்கலைக்கழக மாணவர்களின்‌ தங்குமிடம்‌ குறித்த நிபந்தனைகளும்‌ 

இப்பல்கலைக்கழகத்தினால்‌ பேணிவரப்படும்‌ மாணவர்‌ விடுதிகளில்‌ 

தங்குமிடத்திற்கான கட்டணங்களை விதித்தலும்‌; 

(iv) இப்பல்கலைக்கழகத்தினால்‌ பேணிவரப்படாத மாணவர்‌ விடுதிகளுக்கு 

ஏற்பிசைவளிப்பதற்கான நிபந்தனைகள்‌; 

(v) எந்த நிபந்தனைகளின்படி, இப்பல்கலைக்கழகப்‌ பட்டங்கள்‌, விருதுகள்‌, 

பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றைப்‌ பெறுவதற்கு வகைசெய்கின்ற 

குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவுகளுக்கு மாணவர்கள்‌ சேர்த்துக்‌ கொள்ளப்படுதல்‌ 

வேண்டும்‌ என்பது; 

(vi) இப்பல்கலைக்கழகத்தின்‌ தேர்வுகளை நடத்துதலும்‌ எந்த 

நிபந்தனைகளின்‌ பேரில்‌ அத்தகைய தேர்வுகளுக்கு மாணவர்கள்‌ அனுமதிக்கப்பட 

வேண்டும்‌ என்பது:



0) தேர்வுகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக எந்த 

முறையில்‌ விலக்கு அளிக்கப்படலாம்‌ என்பது; 

0. தேர்வுக்‌ குழுமங்களின்‌ மற்றும்‌ தேர்வாளர்களின்‌ நியமன 

நிபந்தனைகளும்‌ நியமன முறையும்‌ அவர்களுடைய கடமைகளும்‌; 

(9 இப்பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒழுங்கு நடத்தையைப்‌ பேணி 

வருதல்‌; 

(x) குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவு, ஆராய்ச்சி ஆய்வு (பரிசோதனை) மற்றும்‌ 

நடைமுறைப்‌ பயிற்சி ஆகியவற்றிற்காகவும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌, 

விருதுகள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றிற்கான தேர்வுகளுக்கு 

ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகவும்‌ விதிக்கப்படவேண்டிய கட்டணங்கள்‌; 

ல. இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆசிரியர்களுக்கான தகுதிப்பாடுகளும்‌ 

ஊதியங்களும்‌; 

0. எந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இதன்பின்பு நிரந்தரமாக 

பணியமர்த்தப்படுபவர்கள்‌ பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட மற்றும்‌ 

ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகளிலும்‌ மாணவர்‌ விடுதிகளிலும்‌ கற்பிப்பதற்குத்‌ 

தகுதியுடையவர்களென ஏற்பிசைவு அளிக்கப்படலாகும்‌ என்பது; மற்றும்‌ 

(00) இந்தச்‌ சட்டத்தினாலோ, நிலைமுறை விதிகளினாலோ செய்யப்பட 

வேண்டியதாகவுள்ள அல்லது துணைமுறை விதிகளால்‌ 

வகுத்துரைக்கப்படக்கூடிய பிற பொருள்‌ எதுவும்‌. 

35. துணைமுறை விதிகள்‌ எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது.- (1) 

துணைமுறை விதிகளைச்‌ செய்வதில்‌, ஆட்சிக்‌ குழு- 

() அத்தகைய துணைமுறை விதிகள்‌ தேர்வாளர்களின்‌ நியமனத்தையும்‌ 

கடமைகளையும்‌ பாதிக்கிறபோது பாடக்‌ குழுமங்களையும்‌; மற்றும்‌ 

(i) தேர்வுகள்‌ நடத்தப்படுவதை அல்லது அவற்றின்‌ தரத்தை அல்லது 

மாணவர்களின்‌ தங்குமிடம்‌ குறித்த நிபந்தனைகளை அவை பாதிக்கிறபோது 

கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவையும்‌ கலந்தாய்வு செய்தல்‌ வேண்டும்‌. 

(2) ஆட்சிக்‌ குழுவினால்‌ செய்யப்படும்‌ துணைமுறை விதிகள்‌ அனைத்தும்‌, 

அது பணிக்கக்கூடிய தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்‌; ஆனால்‌; அவ்வாறு 

செய்யப்படும்‌ துணைமுறை விதி ஒவ்வொன்றும்‌, கூடிய விரைவில்‌ வேந்தருக்கும்‌ 

ஆட்சிப்‌ பேரவைக்கும்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது ஆட்சிப்‌ 

பேரவையினால்‌ அதன்‌ அடுத்துப்‌ பின்வரும்‌ கூட்டத்தில்‌ பரிச்லனை 

செய்யப்படுதல்‌ வேண்டும்‌.



(3) வேந்தர்‌, துணைமுறை விதி ஏதொன்றின்‌ செயற்பாடும்‌, ஆட்சிப்‌ பேரவை 

அதைப்‌ பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு ஒன்றினைப்‌ பெற்றிருக்கிற காலம்‌ 

வரையிலும்‌, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட வேண்டும்‌ என்று பணிக்கலாம்‌. 

36. ஒழுங்குமுறை விதிகள்‌ எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது.- (1) கல்வி 

அலுவல்‌ நிலைக்‌ குழு, இந்தச்‌ சட்டம்‌, நிலைமுறை விதி, துணைமுறை விதிகள்‌. 

ஆகியவற்றிற்கு ஒவ்விய வகையில்‌ அவற்றின்படி தனக்குக்‌, 

குறித்தளிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஒழுங்குமுறை 

விதிகளைச்‌ செய்யலாம்‌. 

(2) அத்தகைய ஒழுங்குமுறை விதிகள்‌ அனைத்தும்‌, கல்வி அலுவல்‌ 

நிலைக்‌ குழு பணிக்கக்கூடிய தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்‌; ஆனால்‌ 

அவ்வாறு செய்யப்பட்ட ஒவ்வோர்‌ ஒழுங்குமுறை விதியும்‌, கூடிய விரைவில்‌ 

ஆட்சிப்‌ பேரவைக்கு அதன்‌ அடுத்துப்‌ பின்வரும்‌ கூட்டத்தில்‌ அது பரிசலனை 

செய்யப்படுவதற்காகப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 

அத்தியாயம்‌ VI 

மாணவர்களைச்‌ சேர்த்துக்கொள்ளுதலும்‌ அவர்களின்‌ தங்குமிடமும்‌. 

37. பல்கலைக்கழகக்‌ குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவுகளுக்கு சேர்த்துக்‌ கொள்ளுதல்‌.- 

(1) இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்களுக்கு அல்லது விருதுகளுக்கு அல்லது 

பட்டயங்களுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக, 

இப்பல்கலைக்கழகத்தின்‌ குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவு ஒன்றிற்கு எவரும்‌,- 

() அவர்‌ அதற்காக வகுத்துரைக்கப்படும்‌ தேர்வில்‌ தேறியிருந்தாலன்றி; 

மற்றும்‌ 

0 அவர்‌ இப்பல்கலைக்கழத்தால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய பிற 

நிபந்தனைகளை நிறைவு செய்தாலன்றி 

சேர்த்துக்கொள்ளப்படுதல்‌ ஆகாது. 

(2) பல்கலைக்கழகத்‌ தேர்வு ஒன்றிற்காகத்‌ தேர்வு நாடுகிற ஒருவர்‌ கல்வி 

அலுவல்‌ நிலைக்‌ குழுவின்‌ பரித்துரையின்‌ பேரில்‌ ஆட்சிக்‌ குழுவினால்‌ 

செய்யப்படும்‌ தனி ஆணை ஒன்றின்‌ மூலமாக இந்த உட்பிரிவின்‌ 

வகைமுறைகளிலிருந்து அவர்‌ விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி பல்கலைக்கழகக்‌ 

கல்லூரி ஒன்றின்‌ அல்லது ஆய்வுக்கூடம்‌ ஒன்றின்‌ அல்லது இணைக்கப்பட்ட 

அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரியொன்றின்‌ உறுப்பினரொருவராகச்‌



சேர்த்துக்‌ கொள்ளப்படுவார்‌. அத்தகைய விலக்களிப்பு எதுவும்‌ ஆட்சிக்குழு 

பொருத்தமென நினைக்கக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுச்‌ செய்யப்படலாம்‌. 

(3) (2-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள 

மாணவர்களும்‌, பட்டமொன்றுக்கான குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவு அல்லாத பிற 

குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவுகளுக்கு வகுத்துரைக்கப்படும்‌ 

நிபந்தனைகளுக்கிணங்கச்‌ சேர்த்துக்கொள்ளப்படும்‌ மாணவர்களும்‌, 

இப்பல்கலைக்கழகத்தின்‌ கல்லூரி சாரா மாணவர்களாக இருப்பர்‌. 

38. பல்கலைக்கழகத்‌ தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுதல்‌.- தேர்வு நாடுபவர்‌ 

எவரும்‌, பல்கலைக்கழகக்‌ கல்லூரி, அல்லது ஆய்வுக்‌ கூடமொன்றின்‌ அல்லது 

இணைக்கப்பட்ட அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரியொன்றின்‌ உறுப்பினராக 

அவர்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட்டிருந்தாலன்றியும்‌ மற்றும்‌ அதற்கான ஒழுங்குமுறை 

விதிகளின்படி தேவைப்படும்‌ வருகைப்பதிவு குறித்த தேவைப்பாடுகளை நிறைவு 

செய்திருந்தாலன்றியும்‌, அல்லது வகுத்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை 

விதிகளின்படி செய்யப்பட்ட கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவின்‌ பரிந்துரையின்‌ 

பேரில்‌ பிறப்பிக்கப்பட்ட ஆட்சிக்குழுவின்‌ ஆணை ஒன்றின்‌ மூலமாக, அவ்வாறு 

சேர்த்துக்‌ கொள்ளப்படுவது அல்லது வருகைப்பதிவு குறித்த அல்லது இரண்டையும்‌ 

குறித்த தேவைப்பாடுகளிலிருந்து அவருக்கு விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி, 

பல்கலைக்கழகத்‌ தேர்வு எதற்கும்‌ ஏற்றுக்கொள்ளப்படுதல்‌ ஆகாது. இந்தப்‌ 

பிரிவின்படி வழங்கப்படும்‌ விலக்களிப்புகளானவை, ஆட்சிக்குழு பொருத்தமென 

நினைக்கக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாயிருக்கும்‌. 

39. பல்கலைக்கழகத்‌ தேர்வுகளுக்குத்‌ தகுதியுடையதாக ஆக்கப்படுகின்ற 

வருகைப்பதிவு.- இப்பல்கலைக்கழகத்தினால்‌ நடத்தப்படும்‌ அல்லது அதனுடன்‌ 

இணைக்கப்பட்ட அல்லது அதனால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டதல்லாத பிற கல்லூரி 

அல்லது கல்வி நிலையம்‌ எதிலும்‌ கல்வி கற்பிக்கப்படுவதன்‌ போதான 

வருகைப்பதிவு எதுவும்‌, இப்பல்கலைக்கழகத்‌ தேர்வு எதற்கும்‌ 

ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத்‌ தகுதியுடையதாக ஆக்காது. 

40. தங்குமிடங்களும்‌, மாணவர்‌ விடுதிகளும்‌.- கல்லூரி சாரா மாணவரல்லாத 

இப்பல்கலைக்கழகத்தின்‌, பிற மாணவர்‌ ஒவ்வொருவரும்‌, மாணவர்‌ 

விடுதியொன்றிலோ அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற 

நிபந்தனைகளின்படியோ தங்குமாறு கோரப்படுவார்‌.



அத்தியாயம்‌ VIl 

பல்கலைக்கழக நிதியங்கள்‌. 

41. பொது நிதியம்‌.- இப்பல்கலைக்கழகம்‌, பொது நிதியம்‌ ஒன்றைப்‌ பெற்றிருக்கும்‌. 

அந்நிதியத்தில்‌,- 

(8) கட்டணங்கள்‌, மானியங்கள்‌, நன்கொடைகள்‌, கொடைகள்‌ ஆகியவை 

எவையேனும்‌ இருப்பின்‌ அவற்றிலிருந்து பெறப்படும்‌ அதன்‌ வருமானத்தையும்‌; 

(b) மைய அரசு, மாநில அரசு, பல்கலைக்கழக மானிய ஆணையம்‌ அல்லது 

அதுபோன்ற அதிகாரஅமைப்பு, உள்ளாட்சி அதிகாரஅமைப்பு எதனாலும்‌ அல்லது 

அரசுக்குச்‌ சொந்தமான அல்லது அதன்‌ கட்டுப்பாட்டின்‌ கீழுள்ள கூட்டு நிறுவனம்‌ 

எதனாலும்‌ வழங்கப்பட்ட பங்களிப்பு அல்லது மானியம்‌ எதையும்‌; மற்றும்‌ 

(9) நிலைக்‌ கொடைகளையும்‌ பிற வரவுகளையும்‌ 

வரவு வைத்தல்‌ வேண்டும்‌. 

அத்தியாயம்‌ 1X. 

பணி நிடந்தனைகள்‌. 

42. ஓய்வூதியம்‌, பணிக்கொடை முதலானவை.- (1) இப்பல்கலைக்கழகம்‌, 

இப்பல்கலைக்கழகத்தால்‌ நியமிக்கப்பட்டுள்ள தன்‌ அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, 

மற்ற நபர்கள்‌ ஆகியோரின்‌ நலனுக்காக, வகுத்துரைக்கப்படக்கூடிய முறையிலும்‌ 

நிபந்தனைகளுக்குட்பட்டும்‌ தான்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய ஓய்வூதியம்‌, 

பணிக்கொடை, காப்பீடு, வருங்கால வைப்பு நிதியம்‌ ஆகியவற்றை ஏற்படுத்துதல்‌ 

வேண்டும்‌. 

(2) இப்பல்கலைக்கழகம்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி வருங்கால வைப்பு நிதியம்‌ 

ஒன்றை அவ்வாறு ஏற்படுத்தியுள்ளவிடத்து இப்பல்கலைக்கழகம்‌ ஓர்‌ உள்ளாட்சி 

அதிகாரஅமைப்பாகவும்‌, அந்நிதியம்‌ ஓர்‌ அரசு வருங்கால வைப்பு நிதியமாகவும்‌ 

இருந்தாற்போன்றே 1925 ஆம்‌ ஆண்டு வருங்கால வைப்பு நிதியங்கள்‌ சட்டத்தின்‌ 

(மையச்‌ சட்டம்‌ (XIX/1925) வரைமுறைகள்‌ அந்த நிதியத்திற்குப்‌ பொருந்தும்‌ 

என்று அரசு விளம்பலாம்‌. 

(3) இப்பல்கலைக்கழகம்‌, நிதிக்‌ குழுவைக்‌ கலந்தாய்வு செய்து, தான்‌ முடிவு 

செய்யக்கூடிய முறையில்‌ அவ்வருங்கால வைப்பு நிதியத்‌ தொகையை முதலீடு 

செய்யலாம்‌.



43. பணி நிபந்தனைகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, 

இப்பல்கலைக்கழகத்தில்‌ பணியிலமர்த்தப்பட்டுள்ள அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, 

மற்ற நபர்கள்‌ ஆகியோரின்‌ நியமனம்‌, அவர்களைத்‌ தெரிவு செய்வதற்கான 

நடைமுறை, அவர்களின்‌ சம்பளம்‌ மற்றும்‌ படித்தொகைகள்‌ மற்றும்‌ பிற பணி 

நிபந்தனைகள்‌ ஆகியவை வகுத்துரைக்கப்படக்கூடியவாறு இருக்கும்‌. 

விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, "அலுவலர்கள்‌" என்னுஞ்‌ 

சொல்‌, வேந்தரையும்‌ இணை வேந்தரையும்‌ உள்ளடக்குதல்‌ ஆகாது. 

44. தெரிவுக்குழு (Selecton Committee).— (1) இப்பல்கலைக்கழகத்தினால்‌ 

பேணிவரப்படும்‌ கல்வி நிலையங்களின்‌ பேராசிரியர்‌, உதவிப்‌ பேராசிரியர்‌, சிறப்புப்‌ 

பேராசிரியர்‌, விரிவுரையாளர்‌, நூலகர்‌ ஆகிய பதவிகளுக்கு நியமனஞ்செய்வதற்காக 

ஆட்சிக்‌ குழுவிற்குப்‌ பரிந்துரைகளைச்‌ செய்வதற்காகத்‌ தெரிவுக்‌ குழுக்கள்‌ 

இருந்துவரும்‌. 

(2) கீழ்க்காணும்‌ அட்டவணையின்‌ (1) ஆம்‌ கலப்பத்தியில்‌  (column) 

குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு நியமனம்‌ செய்வதற்கான தெரிவுக்‌ குழுவானது, 

துணை வேந்தரையும்‌, வேந்தரால்‌ பெயர்‌ குறிப்பிடப்பட்ட ஒருவரையும்‌ அரசால்‌ 

பெயர்‌ குறிப்பிடப்பட்ட ஒருவரையும்‌ மேற்சொல்லப்பட்ட அட்டவணையின்‌ (2) ஆம்‌ 

கலப்பத்தியிலுள்ள நேரிணையான பதவியில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ளவர்களையும்‌ 

கொண்டதாயிருக்கும்‌ மற்றும்‌, துறை ஒன்றில்‌ பேராசிரியர்‌ ஒருவரையோ, சிறப்புப்‌ 

பேராசிரியர்‌ ஒருவரையோ, உதவிப்‌ பேராசிரியர்‌ ஒருவரையோ, விரிவுரையாளர்‌ 

ஒருவரையோ நியமனஞ்‌ செய்யும்‌ நேர்வில்‌, அத்துறையின்‌ தலைவர்‌ எவரும்‌ 

இல்லாதவிடத்து, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவினால்‌ அதன்‌ 

உறுப்பினர்களுக்கிடையேயிருந்து பெயர்‌ குறிப்பிடப்படும்‌ ஒருவரையும்‌ கூடக்‌ 

கொண்டதாயிருக்கும்‌:- 

அட்டவணை 

(1) (2) 

பேராசிரியர்‌, உதவிப்‌ பேராசிரியர்‌ () தொடர்புடைய துறையின்‌ தலைவர்‌; 

அல்லது சிறப்புப்‌ பேராசிரியர்‌. அவர்‌ பேராசிரியர்‌ ஒருவராக 

இருப்பாரானால்‌; 

0) துணை வேந்தரால்‌ பெயர்‌ குறித்து 
நியமிக்கப்பட வேண்டிய இயக்குநர்‌ 

ஒருவர்‌ அல்லது முதனண்மையர்‌ (Dean) 

ஒருவர்‌ அல்லது பேராசிரியர்‌ ஒருவர்‌;



விரிவுரையாளர்‌. 

நூலகர்‌. 

(1) அப்பேராசிரியர்‌, உதவிப்‌ பேராசிரியர்‌ 

அல்லது சிறப்புப்‌ பேராசிரியர்‌ 

தொடர்புடையவராக இருக்கின்ற பாட 

இயலில்‌ பெற்றுள்ள சிறப்பு 

அறிவுக்காக அல்லது அக்கறை 

பெற்றிருப்பதற்காக, கல்வி அலுவல்‌ 

நிலைக்‌ குழுவினால்‌ 

பறிந்துரைக்கப்படும்‌ பெயர்ப்‌ பட்டியல்‌ 

ஒன்றிலிருந்து ஆட்சிக்‌ குழுவினால்‌ 

பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ 

இப்பல்கலைக்கழகப்‌ பணியில்‌ இல்லாத 

மூவர்‌. 

(i) தொடர்புடைய துறையின்‌ தலைவர்‌; 

(i) துணை வேந்தரால்‌ பெயர்‌ குறித்து 

நியமிக்கப்படும்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌; 

(0 அவ்விரிவுரையாளர்‌ 

தொடர்புடையவராக இருக்கின்ற பாட 

இயலில்‌ பெற்றுள்ள சிறப்பு 

அறிவுக்காக அல்லது அக்கறை 

பெற்றிருப்பதற்காக, கல்வி அலுவல்‌ 

நிலைக்‌ குழுவினால்‌ 

பறிந்துரைக்கப்படும்‌ பெயர்ப்‌ பட்டியல்‌ 

ஒன்றிலிருந்து ஆட்சிக்‌ குழுவினால்‌ 

பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ 

இப்பல்கலைக்கழகப்‌ பணியில்‌ இல்லாத 

இருவர்‌. 

() நூலக அறிவியல்‌ அல்லது நூலக 

நிருவாகம்‌ குறித்த பாடவியல்‌ சிறப்பு 

அறிவு பெற்றிருக்கின்ற, ஆட்சிக்‌ 

குழுவினால்‌ பெயர்‌ குறித்து 

நியமிக்கப்படும்‌ இப்பல்கலைக்கழகப்‌ 

பணியில்‌ இல்லாத இருவர்‌; 

(il) ஆட்சிக்‌ குழுவினால்‌ பெயர்‌ குறித்து 

நியமிக்கப்படும்‌, இப்பல்கலைக்கழகப்‌ 

பணியில்‌ இல்லாத ஒருவர்‌.



| ஆம்‌ விளக்கம்‌.- துறைப்‌ பிரிவுகளுக்கிடையேயான செயல்‌ திட்டத்திற்காக 

(Inter disciplinary project) அந்நியமனங்கள்‌ செய்யப்படுகின்றவிடத்து; அச்செயல்‌ 

திட்டத்தின்‌. தலைவரையே தொடர்புடைய துறையின்‌ தலைவராகக்‌ 

கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 

॥ ஆம்‌ விளக்கம்‌.- பெயர்‌ குறித்து அமர்த்தப்படும்‌ பேராசிரியர்‌, எந்தச்‌ சிறப்புத்‌ 

தகுதிக்காக அத்தெரிவு செய்யப்படுகின்றதோ அந்தச்‌ சிறப்புத்‌ தகுதியுடன்‌ 

தொடர்புடைய பேராசிரியராக இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ துணை வேந்தர்‌ 

அப்பேராசிரியரைப்‌ பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்வதற்கு முன்பு, துறைத்‌ 

தலைவரையும்‌ புல முதன்மையரையும்‌ (Dean of Faculties) கலந்தறிதல்‌ வேண்டும்‌. 

Il ஆம்‌ விளக்கம்‌.- (2) ஆம்‌ கலப்பத்தியின்கீழ்‌ குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புத்‌ 

தகுதியுடன்‌ தொடர்புடைய குறைந்தது நான்கு உறுப்பினர்களில்‌ மூவரோ அல்லது 

நேர்விற்கேற்ப மூன்று உறுப்பினர்களில்‌ இருவரோ, அத்தெரிவுக்‌ குழுக்‌ 

கூட்டத்திற்கு வந்திருத்தல்‌ வேண்டும்‌. 

(3) துணை வேந்தர்‌, தெரிவுக்‌ குழுவின்‌ கூட்டங்களில்‌ தலைமை 

வகிப்பார்‌. 

(34) தேர்வுக்‌ குழுவின்‌ கூட்டங்கள்‌ துணை வேந்தரால்‌ கூட்டப்படும்‌. 

(5 பரிந்துரைகளைச்‌ செய்வதில்‌ தெரிவுக்‌ குழுவினால்‌ பின்பற்றப்பட 

வேண்டிய நடைமுறை என்னவென்று, அவசர விதிகளின்‌ மூலம்‌ விதிக்கப்படுதல்‌ 

வேண்டும்‌. 

(6) தெரிவுக்‌ குழு ஒன்றினால்‌ செய்யப்படும்‌ பரிந்துரைகளை ஆட்சிக்குழு 

ஏற்றுக்‌ கொள்வதற்கு இயலாதிருக்குமானால்‌, அது தன்‌ காரணங்களைப்‌ பதிவு 

செய்து, இறுதி ஆணைகளுக்காக, அதை வேந்தருக்குப்‌ பணிந்தனுப்புதல்‌ 

வேண்டும்‌. 

(7) தற்காலிகப்‌ பதவிகளுக்கான நியமனங்கள்‌, கீழே 

குறித்துக்காட்டப்பட்டுள்ள முறையில்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌:- 

(i) அத்தற்காலிகக்‌ காலியிடமானது ஒரு கல்விக்‌ காலத்‌ தொடருக்கும்‌ 

அதிகமானதொரு கால அளவிற்கானதாக இருக்குமானால்‌, அது, முன்சென்ற 

வகைமுறைகளில்‌ குறித்துக்காட்டப்பட்டுள்ள நடைமுறைக்கிணங்க தெரிவுக்‌ 

குழுவின்‌ ஆலோசனையின்பேரில்‌ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌: 

வரம்புரையாக: துணை வேந்தர்‌, பணி நலனை முன்னிட்டு அக்காலி 

இடத்தை நிரப்புவது தேவையாயிருக்கிறது என்று தெளிவுறக்‌ காண்பாரானால்‌; (i) 

ஆம்‌ உட்கூறில்‌ குறிப்பிடப்படும்‌ உள்ளமை தெரிவுக்குழு (௦௮ Selection



Committee) ஒன்றினால்‌, ஒரு தற்காலிக அடிப்படையின்பேரில்‌ ஆறு திங்களுக்கு 

மேற்படாத ஒரு கால அளவிற்கு அந்த நியமனம்‌ செய்யப்படலாம்‌. 

(i) அத்தற்காலிகக்‌ காலியிடமானது ஓராண்டுக்கு குறைவானதொரு 

கால அளவுக்கானதாக இருக்குமானால்‌, தொடர்புடைய புலத்தின்‌ (8௦0065) 

முதன்மையரையும்‌ (Dean), துறைத்‌ தலைவரையும்‌, துணை வேந்தரால்‌ பெயர்‌ 

குறிக்கப்பட்ட ஒருவரையும்‌ உள்ளடக்கிய உள்ளமை தெரிவுக்‌ குழு ஒன்றின்‌ 

பரிந்துரையின்‌ பேரில்‌, அத்தகைய காலி இடத்திற்கு நியமனஞ்‌ செய்யப்படுதல்‌ 

வேண்டும்‌; 

வரம்புரையாக: ஒருவரே முதன்மையர்‌ பதவியையும்‌ மற்றும்‌ துறைத்‌ 

தலைவர்‌ பதவியையும்‌ சேர்த்து வகிப்பாரானால்‌, அத்தெரிவுக்‌ குழு துணை 

வேந்தரால்‌ பெயர்‌ குறிக்கப்பட்ட இருவரை உள்ளடக்கியதாக இருக்கலாம்‌; 

மேலும்‌ வரம்புரையாக: கற்பிக்கின்ற பதவிகளில்‌ இறப்பினாலோ, பிற 

காரணம்‌ எதனாலுமோ எதிர்பாராத தற்செயல்‌ காலியிடங்கள்‌ ஏற்படும்‌ நேர்வில்‌, 

முதன்மையர்‌ தொடர்புடைய துறையின்‌ தலைவரைக்‌ கலந்தறிந்து ஒரு 

திங்களுக்குத்‌ தற்காலிகப்‌ பணி நியமனம்‌ ஒன்றைச்‌ செய்து அத்தகைய நியமனம்‌ 

குறித்துத்‌ துணை வேந்தருக்கும்‌ பதிவாளருக்கும்‌ அறிவிக்கலாம்‌; 

(i) தற்காலிகமாக நியமிக்கப்படும்‌ ஆசிரியர்‌ எவரும்‌ இந்தச்‌ 

சட்டத்தின்படி நியமிக்கப்படுவதற்காக முறையான  (Regular) தெரிவுக்குழு 

ஒன்றினால்‌ அவர்‌ பரிந்துரைக்கப்படவில்லையானால்‌ அவர்‌ தற்காலிக அல்லது 

நேர்விற்கேற்ப நிலையான நியமனத்திற்காக ஓர்‌ உள்ளமை தெரிவுக்‌ 

குழுவினாலோ அல்லது ஒரு முறையான தெரிவுக்‌ குழுவினாலோ பின்னர்‌ 

தெரிந்தெடுக்கப்பட்டாலன்றி, அத்தகைய தற்காலிக வேலை வாய்ப்பின்பேரில்‌ 

பணியில்‌ தொடர்ந்து இருத்தல்‌ ஆகாது. 

45. துறைத்‌ தலைவர்களின்‌ பணி வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌. (1) 

இப்பல்கலைக்கழகத்தின்‌ ஒவ்வொரு துறையும்‌, ஒரு பேராசிரியராக இருக்க 

வேண்டிய ஒரு தலைவரை அல்லது இயக்குநரைக்‌ கொண்ட தாயிருக்கும்‌; மற்றும்‌ 

அவருடைய அலுவல்களும்‌ கடமைகளும்‌, நியமனத்திற்கான வரையறைகளும்‌ 

நிபந்தனைகளும்‌ அவசர விதிகளால்‌ வகுத்துரைக்கப்படுதல்‌ வேண்டும்‌; 

முதலாம்‌ வரம்புரை: ஆனால்‌, துறை எதிலேனும்‌ ஒருவருக்கு மேற்பட்ட 

பேராசியர்கள்‌ இருப்பார்களாயின்‌, அந்தத்‌ துறையின்‌ தலைவர்‌, துணைமுறை 

விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌; 

இராண்டாம்‌ வரம்புரை: மேலும்‌, பேராசிரியர்‌ எவரும்‌ இல்லாத 

துறையொன்றில்‌, துணைப்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌ அல்லது சிறப்புப்‌ பேராசிரியர்‌



ஒருவர்‌, அவசர விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ துறையின்‌. 

தலைவராக நியமிக்கப்படலாம்‌. 

(2) துறைத்‌ தலைவராக நியமிக்கப்பட முன்‌ வந்ததை ஏற்க 

மறுத்துவிடுவதற்கு ஒரு பேராசிரியருக்கு அல்லது துணைப்‌ பேராசிரியருக்கு 

அல்லது சிறப்புப்‌ பேராசிரியருக்கு உரிமையுண்டு. 

(3) துறைத்‌ தலைவராக நியமிக்கப்பட்ட ஒருவர்‌, மூன்றாண்டு கால 

அளவிற்கு அத்தகையவராகப்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மீண்டும்‌ 

நியமிக்கப்படுவதற்குத்‌ தகுதியுடையவராவார்‌. 

(4) துறைத்‌ தலைவரொருவர்‌, தம்முடைய பதவிக்‌ கால அளவின்போது, எந்த 

நேரத்திலும்‌ தம்முடைய பதவியை விட்டு விலகலாம்‌. 

(5 துறைத்‌ தலைவராருவர்‌, துணைமுறை விதிகளால்‌ 

வகுத்துரைக்கப்படக்கூடிய அலுவல்களைப்‌ புரிந்து வருவார்‌. 

46. புலங்களின்‌ முதன்மையர்கள்‌-- (1) புலங்களின்‌ முதன்மையர்‌ ஒவ்வொருவரும்‌, 

அப்புலத்திலுள்ள பேராசிரியர்களுக்கிடையேயிருந்து துணை வேந்தரால்‌ 

மூன்றாண்டு கால அளவுக்கு நியமிக்கப்படுவார்‌; மற்றும்‌ அவர்‌ மீண்டும்‌ 

நியமிக்கப்படுவதற்குத்‌ தகுதியுடையவராவார்‌. 

வரம்புரையாக: முதன்மையர்‌ ஒருவர்‌ ஐம்பத்தெட்டு வயது 

நிறைவெய்தியதின்பேரில்‌, அத்தகையவராகப்‌ பதவி வகிப்பது அற்றுப்போகும்‌: 

மேலும்‌ வரம்புரையாக: எந்தச்‌ சமயத்திலேனும்‌ புலம்‌ ஒன்றின்‌ பேராசிரியர்‌ 

எவரும்‌ இல்லாதிருந்தால்‌ துணை வேந்தர்‌ அப்புலமுதன்மையருக்குள்ள 

அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவார்‌. 

(2) முதன்மையரின்‌ பதவி காலியாக இருக்கின்றபோது அல்லது 

அம்முதன்மையரானவர்‌ நோய்‌, பணிக்கு வராமை காரணமாகவோ அல்லது பிற 

காரணம்‌ எதனாலேனும்‌ தம்முடைய பதவியில்‌ கடமைகளை ஆற்றுவதற்கு 

இயலாதவராக இருக்கின்ற போது, அவருடைய பதவியின்‌ கடமைகள்‌ 

அந்நோக்கத்திற்காகத்‌ துணை வேந்தரால்‌ நியமிக்கப்படக்கூடியவரால்‌ புரிந்து 

வரப்படும்‌. 

(3) முதனண்மையரானவர்‌ அப்புலத்தின்‌ தலைவராயிருப்பார்‌ மற்றும்‌ 

அப்புலத்தில்‌ கற்பிக்கப்படுவதற்கும்‌ ஆராய்ச்சி செய்யப்படுவதற்கும்‌ அவற்றின்‌. 

தரங்களைப்‌ பேணி வருவதற்கும்‌ பொறுப்புடையவராய்‌ இருப்பார்‌. முதண்மையர்‌ 

துணைமுறை விதிகளின்‌ மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய பிற பணிகளையும்‌ 

பெற்றிருப்பார்‌.



(4) முதன்மையர்‌, பாடக்குழுமங்களின்‌ அல்லது நேர்விற்கேற்ப 

புலக்குழுக்களின்‌ கூட்டம்‌ எதற்கும்‌ வருகை தருவதற்கும்‌, அதில்‌ பேசுவதற்கும்‌ 

உரிமை பெற்றிருப்பார்‌: ஆனால்‌ அதன்‌ உறுப்பினராக அவர்‌ இருந்தாலன்றி, அதில்‌ 

வாக்களிப்பதற்கு அவர்‌ உரிமை பெற்றிருக்கமாட்டார்‌. 

அத்தியாயம்‌ X. 

பல்வகைப்பட்டவை. 

47. தற்செயல்‌ காலியிடங்களை நிரப்புதல்‌. இப்பல்கலைக்கழகத்தின்‌ 

அதிகாரஅமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌ (பதவிவழி 

உறுப்பினர்களல்லாத பிற) உறுப்பினர்களுக்கிடையேயும்‌ எழும்‌ தற்செயல்‌ 

காலியிடங்கள்‌ அனைத்தும்‌, எந்த உறுப்பினருடைய பதவியிடம்‌ காலியாக 

ஆகியுள்ளதோ அந்த உறுப்பினரைப்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்தவரால்‌ 

அல்லது தேர்ந்தெடுத்தவரால்‌ அல்லது அமைப்பினால்‌ வசதிக்கேற்றபடி எவ்வளவு 

விரைவில்‌ கூடுமோ அவ்வளவு விரைவில்‌ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ 

தற்செயல்‌ காலியிடமொன்றுக்கு பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டவர்‌ அல்லது 

தேர்ந்தெடுக்கப்பட்டவர்‌ எவருடைய பதவியிடத்தை அவர்‌ நிரப்புகிறாரோ அவர்‌ ஓர்‌ 

உறுப்பினரால்‌ இருந்திருக்கக்கூடிய கால அளவின்‌ எஞ்சிய பகுதிக்கு அத்தகைய 

அதிகாரஅமைப்பு அல்லது அமைப்பின்‌ உறுப்பினராக இருந்து வருவார்‌. 

வரம்புரையாக: இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்பு எதனின்‌ அல்லது 

பிற அமைப்பு எதனின்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கிடையேயும்‌ காலக்‌ 

கழிவினால்‌ எழுகின்ற காலியிடங்கள்‌, அந்தக்‌ காலியிடங்கள்‌ ஏற்படும்‌ 

தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முந்தியதல்லாத, துணை வேந்தர்‌ 
பொருத்தமென நினைக்கின்ற நாட்களில்‌ நடைபெற வேண்டுமென்று அவரால்‌ 

தீர்மானிக்கப்படக்கூடிய தேர்தல்கள்‌ மூலம்‌ நிரப்பப்படலாம்‌. 

மேலும்‌ வரம்புரையாக: தற்செயல்‌ காலியிடம்‌ எதுவும்‌ 

இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு 

எதனின்‌ உறுப்பினரின்‌ பதவிக்‌ காலமும்‌ முடிவடையும்‌ தேதிக்குமுன்‌, ஆறு 

மாதங்களுக்குள்ளாக அத்தகைய காலியிடம்‌ ஏற்படுமானால்‌ நிரப்பப்படுதலாகாது. 

48. பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளின்‌ மற்றும்‌ பிற அமைப்புகளின்‌. 

நடவடிக்கைகள்‌ காலியிடங்கள்‌ காரணமாகச்‌ செல்லாதவையாக ஆக்கப்படுதல்‌ 

ஆகாது.:- இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்பு எதனின்‌ அல்லது பிற 

அமைப்பு எதனின்‌ செயல்‌ அல்லது நடவடிக்கை எதுவும்‌ காலியிடம்‌ ஏதேனும்‌ 

இருக்கின்ற காரணத்தால்‌ மட்டுமே, அல்லது இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு 

எதனின்‌ பிற அல்லது அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌



தேர்ந்தெடுக்கப்பட்டதில்‌ அல்லது பெயர்‌ குறித்த நியமிக்கப்பட்டதில்‌ குறைபாடு 

அல்லது முறைகேடு ஏதேனும்‌ உள்ள காரணத்தால்‌ மட்டுமே, அல்லது 

நேர்வுக்குள்ள தகுதிகளை ஊறுபடுத்தாத (பாதிக்காத) அத்தகைய செயல்‌ அல்லது 

நடவடிக்கையில்‌, குறைபாடு அல்லது முறைகேடு ஏதேனும்‌ உள்ள காரணத்தால்‌ 

மட்டுமே. அல்லது எந்த ஆண்டிலேனும்‌ ஆட்சிப்‌ பேரவை இருமுறை 

கூடவில்லை என்னும்‌ காரணத்தால்‌ மட்டுமே செல்லாததாக ஆக்கப்படுதலாகாது. 

49. இப்பல்கலைக்கழகத்தின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்து நீக்குதல்‌.- (1) ஆட்சி 

குழுவானது- 

(ஐ) ஆட்சி குழுவின்‌ உறுப்பினர்களில்‌ மூன்றில்‌ இரண்டு பங்குக்குக்‌ 

குறையாதவர்களின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, இதன்‌ பொருட்டு செய்யப்படும்‌ 

எழுத்துருவிலான ஆணை ஒன்றின்‌ மூலமாக பட்டதாரிகள்‌ பதிவேட்டிலிருந்து 

நபர்‌ எவரின்‌ பெயரையும்‌ நீக்கம்‌ செய்யலாம்‌; அல்லது 

(௦) இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ எவரேனும்‌ 

ஆட்சிக்‌ குழுவின்‌ கருத்தின்படி ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கியதாக உள்ள ஒரு 

குற்றச்‌ செயலுக்காக குற்றவியல்‌ வழக்கு நீதிமன்றமொன்றினால்‌ தண்டனைத்‌ 

தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பாரானால்‌ அல்லது கடுந்தவறான நடத்தை (6௦55 

misconduct) இழைத்த குற்றவாளியாக இருப்பாரானால்‌ ஆட்சிக்குழுவின்‌ மொத்த 

உறுப்பினர்களின்‌ பெரும்பாண்மையரால்‌ கூட்டத்திற்கு வருகை தந்து 

வாக்களிக்கும்‌ ஆட்சிக்‌ குழுவின்‌ உறுப்பினர்களின்‌ மூன்றில்‌ இரண்டு பங்குக்கு 

குறைந்ததல்லாத பெரும்பாண்மையாராலும்‌ நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்‌ 

மூலமாகவும்‌ இதன்‌ பொருட்டு பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான ஆணை 

ஒன்றின்‌ மூலம்‌ அத்தகைய நபரை, இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின்‌ 

உறுப்பினர்‌ பதவியிலிருந்தும்‌ நீக்கம்‌ செய்யலாம்‌; மற்றும்‌ அதே காரணத்திற்காக, 

இப்பல்கலைக்கழகத்தால்‌ அந்த நபருக்கு அளிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட 

பட்டம்‌ அல்லது பட்டயம்‌ எதனையும்‌ திரும்பவும்‌ பெறலாம்‌. 

(2) நபர்‌ எவரும்‌ மனச்‌ சீர்கேடுற்றவராகவோ அல்லது ஒரு செவிட்டு 

ஊமையராகவோ ஆகியிருக்கின்றரென்றால்‌, அல்லது நொடித்த ஒருவராக நீதித்‌ 

தீர்ப்பு பெறுவதற்கு விண்ணப்பித்துக்‌ கொண்டிருந்தால்‌ அல்லது நொடித்த 
ஒருவராக ந்தித்‌ தீர்ப்பு அளிக்கப்‌ பெற்றிருந்தால்‌, இதன்‌ பொருட்டுப்‌ 

பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான ஆணையொன்றின்‌ மூலம்‌ ஆட்சிக்‌ 

குழுவானது. இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ 

பதவியிலிருந்தும்‌ அவரை நீக்கஞ்செய்யலாம்‌. 

(3) நபரொருவரின்‌ மீதும்‌ எடுக்கக்‌ கருதியுள்ள நடவடிக்கைக்கு எதிராகக்‌ 

காரணங்காட்டுவதற்கு, அவருக்கு நியாயமான வாய்ப்பொன்று



கொடுக்கப்பட்டிருந்தாலன்றி இந்தப்‌ பிரிவின்படி நடவடிக்கை எதுவும்‌ 

எடுக்கப்படுதல்‌ ஆகாது. 

(4) (0-ஆம்‌ உட்பிரிவு அல்லது நேர்விற்கேற்ப (2)-ஆம்‌ உட்பிரிவின்‌ படி 

பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றின்படி (நகல்‌) ஒன்றினை, அது அவ்வாறு 

பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌, கூடிய விரைவில்‌, ஒழுங்குமுறை விதிகளால்‌ 

வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ தொடர்புடைய நபருக்குத்‌ தெரிவிக்கப்படுதல்‌ 

வேண்டும்‌. 

5௦. பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளையும்‌ பிற அமைப்புகளையும்‌ 

அமைத்துருவாக்குதல்‌ பற்றிய தகராறுகள்‌.- இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு 

எதனின்‌ அல்லது இப்பல்கலைக்கழக பிற அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ ஒருவராக 

எவரேனும்‌ உரியவாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா அல்லது பெயர்‌ குறித்து 

நியமனம்‌ செய்யப்பட்டுள்ளாரா அல்லது உறுப்பினராயிருப்பதற்குத்‌ 

தகுதியுடையவராயிருக்கின்றாரா என்பது குறித்து வினா ஏதேனும்‌ எழுமானால்‌, 

அவ்வினா, வேந்தருக்குக்‌ குறித்தணுப்பப்படுதல்‌ வேண்டும்‌. அதன்‌ மீதான 

அவருடைய முடிவே அறுதியானதாகும்‌. 

51. குழுக்களை அமைத்துருவாக்குதல்‌.- இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகள்‌ 

அனைத்தும்‌, குழுக்களை அமைத்துருவாக்குவதற்கும்‌ அல்லது 

மாற்றியமைப்பதற்கும்‌ மற்றும்‌ தங்களுடைய அதிகாரங்களுக்குள்‌ தாங்கள்‌ 

பொருத்தமெனக்‌ கருதுகிறவற்றை அவற்றிடம்‌ ஒப்படைவு செய்வதற்கும்‌ 

அதிகாரம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. அத்தகைய குழுக்கள்‌, மற்றபடி வகை: 

செய்யப்பட்டுள்ளவாறு தவிர, தொடர்புடைய அதிகாரஅமைப்பின்‌. 

உறுப்பினர்களையும்‌ அவ்வதிகாரஅமைப்பு ஒவ்வொரு நேர்விலும்‌ 

பொருத்தமெனக்‌ கருதக்கூடிய பிற நபர்கள்‌ எவரேனும்‌ இருப்பின்‌ அவர்களையும்‌ 

உள்ளடக்கியிருத்தல்‌ வேண்டும்‌. 

52. தகவல்‌ பெறுவதற்கான அதிகாரம்‌.-- இந்தச்‌ சட்டத்திலோ அப்போதைக்கு 

செல்லாற்றல்‌ பெற்றுள்ள பிற சட்டம்‌ எதிலுமோ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, 

அரசு எழுத்துருவிலான ஆணையின்‌ மூலமாக, இப்பல்கலைக்கழக அலுவலர்கள்‌ 

தொடர்பான பொருட்பாடு எதையும்‌ பற்றி, இப்பல்கலைக்கழகத்திடமிருந்து தகவல்‌ 

எதையும்‌ கேட்டுப்‌ பெறலாம்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகம்‌ அத்தகைய தகவல்‌ 

தன்னிடம்‌ இருக்குமானால்‌, அத்தகைய தகவலை நியாயமானதொரு கால 

அளவுக்குள்‌ அரசுக்கு அளித்தல்‌ வேண்டும்‌. 

வரம்புரையாக: இப்பல்கலைக்கழகம்‌ கமுக்கமானதெனக்‌ கருதுகிற 

தகவலைப்‌ பொறுத்த வரையில்‌, இப்பல்கலைக்கழகமானது அதை வேந்தர்‌ மற்றும்‌ 

இணை வேந்தர்‌ ஆகியோர்‌ முன்பு வைக்கலாம்‌.



53. பட்டதாரிகளைப்‌ பதிவு செய்தல்‌.- (1) அறிவிக்கை செய்யப்பட்ட நாளன்றும்‌ 

அது முதற்கொண்டும்‌; 

(i) இந்தியாவின்‌ பரப்பெல்லைக்குள்‌ இருக்கின்ற பல்கலைக்கழகம்‌ 

ஏதொன்றில்‌ பட்டதாரியாகக்‌ குறைந்தது மூன்றாண்டுகளுக்கு இருந்து 

வந்துள்ளவரும்‌; அல்லது 

(0 இந்தியாவின்‌ பரப்பெல்லைக்குள்‌ இருக்கின்ற பல்கலைக்கழகம்‌ 

ஏதொன்றின்‌ பதிவுபெற்ற பட்டதாரியாக இருக்கின்றவரும்‌ இப்பல்கலைக்கழகப்‌ 

பரப்பிடத்திற்குள்‌ வழக்கமாக குடியிருந்து வருகின்றவருமான நபர்‌ எவரும்‌ 

நிலைமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ கட்டணத்தைச்‌ 

செலுத்துவதன்‌ பேரிலும்‌ வரைகட்டுகளுக்குட்பட்டும்‌, ஐந்தாண்டு கால அளவுக்கு, 

இந்தச்‌ சட்டத்தின்படி பேணி வரப்படும்‌ பட்டதாரிகள்‌ பதிவேட்டில்‌, தனது பெயர்‌ 

பதிவு செய்யப்பெறுவதற்கு உரிமைத்‌ தகுதியுடையவராவார்‌. 

(2) ௬-ஆம்‌ உட்பிரிவின்படி பதிவு செய்யப்படுவதற்கான அனைத்து 

விண்ணப்பங்களும்‌, வகுத்துரைக்கப்பட்ட கட்டணத்துடன்‌, நிலைமுறை 

விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய கல்வித்‌ தகுதிகளுக்கான 

நிரூுபணங்களையும்‌ சேர்த்து, பதிவாளருக்கு அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 

(3) பதிவாளரானவர்‌, (2)-ஆம்‌ உட்பிரிவின்படி செய்து கொள்ளப்பட்ட 

விண்ணப்பம்‌ ஒன்றைப்‌ பெற்றதன்பேரிலும்‌, தான்‌ பொருத்தமெனக்‌ கருதுகின்ற 

விசாரணையைச்‌ செய்த பின்னரும்‌ அவ்விண்ணப்பதாரரின்‌ பெயரைப்‌ 

பட்டதாரிகள்‌ பதிவேட்டில்‌ பதிவு செய்தல்‌ வேண்டும்‌. 

(4) (3) ஆம்‌ உட்பிரிவின்படி பட்டதாரிகள்‌ பதிவேட்டில்‌ தம்‌ பெயர்‌ பதிவு 

செய்யப்பெற்றுள்ள நபர்‌ ஒவ்வொருவரும்‌, அப்பெயர்‌ பதிவினைப்‌ புதுப்பிக்கும்‌ 

பொருட்டு, நிலைமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ காலத்திற்குள்ளும்‌ 

முறையிலும்‌, கட்டணங்களைச்‌ செலுத்துவதன்‌ பேரிலும்‌, பதிவாளருக்கு 

விண்ணப்பஞ்‌ செய்து கொள்வதன்‌ பேரில்‌, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும்‌ 

அத்தகைய பெயர்‌ பதிவினைப்‌ புதுப்பிக்கச்‌ செய்யப்‌ பெறுவதற்கு உரிமைத்‌ 

தகுதியுடையவராவார்‌. 

54. முதல்‌ துணை வேந்தரின்‌ நியமனம்‌.- 11 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ 

என்ன அடங்கியிருந்த போதிலும்‌, இந்தச்‌ சட்டமானது தமிழ்நாடு அரசிதழில்‌ 

வெளியிடப்படும்‌ தேதியிலிருந்து மூன்று திங்களுக்குள்ளாக, முதல்‌ துணை 

வேந்தரானவர்‌, அரசினால்‌ மூண்றாண்டுகளுக்கு மேற்படாததொரு கால அளவிற்கு 

அதனால்‌ நிர்ணயிக்கப்படும்‌ சம்பளத்தின்‌ பேரிலும்‌ அது பொருத்தமெனக்‌ 

கருதலாகும்‌ பிற வரைகட்டுகளின்‌ பேரிலும்‌ நியமிக்கப்படுவார்‌.



வரம்புரையாக: முதல்‌ துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர்‌, அவருடைய 

பதவிக்‌ காலத்தின்போது அறுபத்தைந்து வயதை நிறைவெய்துவாரானால்‌, 

பதவியிலிருந்து ஓய்வு பெறுவார்‌. 

5௧. முதல்‌ பதிவாளரின்‌ நியமனம்‌.- 13 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன 

அடங்கியிருந்த போதிலும்‌, இந்தச்‌ சட்டமானது தமிழ்நாடு அரசிகழில்‌ 

வெளியிடப்படும்‌ தேதியிலிருந்து மூன்று திங்களுக்குள்ளாக, முதல்‌ 

பதிவாளரானவர்‌, அரசினால்‌ மூன்றாண்டுக்கு மேற்படாததொரு கால அளவிற்கும்‌ 

அதனால்‌ நிர்ணயிக்கப்படும்‌ சம்பளத்தின்‌ பேரிலும்‌ மற்றும்‌ அது பொருத்தமெனக்‌ 

கருதலாகும்‌ பிற வரைகட்டுகளின்பேரிலும்‌ நியமிக்கப்படு வார்‌. 

வரம்புரையாக: முதல்‌ பதிவாளராக நியமிக்கப்பட்டவர்‌ அவருடைய பதவி 

காலத்தின்‌ போதும்‌ ஐம்பத்தெட்டு வயதை அவர்‌ நிறைவெய்துவாரேயானால்‌ 

பதவியிலிருந்து ஓய்வு பெறுவார்‌. 

56. முதல்‌ துணை வேந்தரின்‌ மாறுதற்கால அதிகாரங்கள்‌.- (1) அறிவிக்கை 

செய்யப்பட்ட தேதிக்குப்‌ பின்பு ஆறு திங்களுக்குள்‌ அல்லது அறிவிக்கையின்‌ 

மூலம்‌ அரசு பணிக்கக்கூடிய ஓராண்டுக்கு மேற்படாத மேலுமான கால அளவிற்குள்‌, 

ஆட்சிப்‌ பேரவை, ஆட்சிக்குழு, கல்வி அலுவல்‌ ஆகியவற்றையும்‌ 

இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற அதிகார அமைப்புகளையும்‌ அமைப்பதற்கான 

ஏற்பாடுகளைச்‌ செய்ய வேண்டியது முதல்‌ துணை வேந்தரின்‌ கடமையாகும்‌. 

(2) முதல்‌ துணை வேந்தர்‌, அரசைக்‌ கலந்தறிந்து, இப்பல்கலைக்கழகம்‌ 

செயல்படுவதற்கு தேவையாயிருக்கக்கூடிய மாணா) விதிகளைச்‌ செய்தல்‌ 

வேண்டும்‌. 

(3) (0-ஆம்‌ உட்பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட அதிகாரஅமைப்புகள்‌, 

அரசு இதன்பொருட்டு அறிவிக்கையின்‌ மூலம்‌ குறித்துரைக்கக்கூடிய தேதியில்‌ 

அவற்றின்‌ அலுவல்களைச்‌ செலுத்தத்‌ தொடங்குவார்‌. 

(4) தேவைப்படலாகும்‌ நிலைமுறை விதிகள்‌, அவசர விதிகள்‌, 

ஒழுங்குமுறை விதிகள்‌ ஆகியவற்றை வரைந்து, அவற்றை முடிவு செய்வதற்காக, 

அவை பற்றிய நடவடிக்கை எடுக்கத்‌ தகுதிவாய்ந்த அந்தந்த 

அதிகாரஅமைப்புகளுக்கு அவற்றைப்‌ பணிந்தனுப்ப வேண்டியது, முதல்‌ துணை 

வேந்தரின்‌ கடமையாகும்‌. அத்தகைய நிலைமுறை விதிகள்‌, அவசர விதிகள்‌, 

ஒழுங்குமுறை விதிகள்‌ ஆகியவை, உருவாக்கப்பட்டவுடன்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ 

வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌. 

(5 இந்தச்‌ சட்டத்திலும்‌ நிலைமுறை விதிகளிலும்‌, என்ன 

அடங்கியிருந்தபோதிலும்‌, மற்றும்‌ அதிகாரஅமைப்பு ஒன்று உரியவாறு



அமைக்கப்படும்‌ காலம்‌ வரையிலும்‌, முதல்‌ துணை வேந்தர்‌, இந்தச்‌ சட்டம்‌ மற்றும்‌ 

நிலைவிதிகளின்படி அத்தகைய அதிகாரஅமைப்பின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ 

கடமைகளில்‌ எதனையும்‌ செலுத்திவருவதற்கும்‌ புரிந்துவருவதற்கும்‌. 

தற்காலிகமாக அலுவலர்‌ எவரையும்‌ நியமிக்கலாம்‌ அல்லது குழு எதையும்‌ 

அமைத்துருவாக்கலாம்‌. 

57. மதுரை காமராசர்‌ பல்கலைக்கழகப்‌ பணியாளர்கள்‌ ஒரு சிலரின்‌ பணியை 

இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல்‌.- (1) அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு 

அடுத்து முன்னர்‌ பாளையங்கோட்டையில்‌ உள்ள பல்கலைக்கழக மையத்தில்‌ 

மதுரை காமராசர்‌ பல்கலைக்கழக அலுவல்‌ தொடர்பாகப்‌ பணியாற்றி வருகின்ற 

ஒவ்வொரு நபரும்‌, மேற்சொன்ன தேதியிலிருந்து, மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ 

பல்கலைக்கழகத்தின்‌ பணியாளர்‌ ஆவார்‌, மற்றும்‌ அவர்‌ மதுரை காமராசர்‌ 

பல்கலைக்கழகப்‌ பணியாளராய்‌ இருத்தல்‌ அற்றுப்போகும்‌. 

(2) (8) அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்குப்‌ பின்பு கூடிய விரைவில்‌ அரசு, 

மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ 

பல்கலைக்கழகம்‌ ஆகியவற்றின்‌ துணை வேந்தர்களுடன்‌ கலந்தறிந்த பின்பு, 

பொது அல்லது சிறப்பு ஆணையின்‌ மூலம்‌, அத்தகைய ஆணையில்‌ 

குறித்துரைக்கப்படும்‌ மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகத்தின்‌ அத்தகைய 

பணியாளர்கள்‌, அவ்வாணையில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய தேதியன்றும்‌ அது 

முதற்கொண்டும்‌ மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகந்தின்‌ அலுவல்கள்‌ 

தொடர்பாகப்‌ பணியாற்றுவதற்கு ஒதுக்கியளிக்கப்பட்டவராவர்‌ என்று பணிக்கலாம்‌. 

வரம்புரை: ஆனால்‌, அத்தகைய பணிப்பாணை எதுவும்‌, அத்தகைய பணியாளர்‌ 

எவரையும்‌ பொறுத்து, அத்தகைய ஒதுக்கீட்டிற்கு அவருடைய இசைவில்லாமல்‌, 

பிறப்பிக்கப்படுதல்‌ ஆகாது. 

(b) (a) கூறின்படியான ஆணையில்‌ குறிப்பிடப்படும்‌ தேதியிலும்‌ அது 

முதற்கொண்டும்‌, அத்தகைய ஆணையில்‌ குறித்துரைக்கப்படுபவர்கள்‌ 

மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பணியாளர்களாக ஆதல்‌ 

வேண்டும்‌; மற்றும்‌ அவர்கள்‌ மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகத்தின்‌. 

பணியாளர்களாய்‌ இருத்தல்‌ அற்றுப்போகும்‌. 

(3) (1) ஆம்‌ உட்பிரிவு அல்லது (2) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்படும்‌ நபர்‌ 

ஒவ்வொருவரும்‌ இந்தச்‌ சட்டம்‌ நிறைவேற்றப்பட்டிராதது போன்ற அறிவிக்கை 

செய்யப்பட்ட தேதியன்று அல்லது நேர்விற்கேற்ப (2)-ஆம்‌ உட்பிரிவின்படியான 

ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட தேதியன்று அவர்‌ பெற்றிருக்கக்கூடிய அதே 

பதவிக்கால அளவு, அதே ஊதியம்‌ மற்றும்‌ அதே வரையறைகள்‌ மற்றும்‌ 

வரைகட்டுகளின்‌ பேரிலும்‌, ஓய்வூதியம்‌ அல்லது பணிக்கொடை என்று



ஏதேனுமிருப்பின்‌ அது மற்றும்‌ பிற பொருட்பாடுகள்‌ குறித்து அதே உரிமைகள்‌ 

மற்றும்‌ சிறப்புதிமைகளுடனும்‌ மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்தின்‌ 

கீழ்‌ பதவி வகித்து வருவார்‌. 

(4) (1) மற்றும்‌ (2)-ஆம்‌ உட்பிரிவுகளில்‌ குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு 

ஓய்வூதியம்‌ மற்றும்‌ பணிக்கொடை ஆகியவற்றை வழங்குவதற்கான கடப்பாடானது, 

மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்தின்‌ கடப்பாடாக இருத்தல்‌ 

வேண்டும்‌. 

58. வருங்கால வைப்பு நிதியம்‌ மற்றும்‌ அது போன்ற நிதியங்களில்‌ சேர்ந்துள்ள 

தொகைகளை மாற்றுதல்‌.- அறிவிக்கை செய்யப்பட்ட நாளன்று 57 ஆம்‌ பிரிவின்‌ 

(1)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின்‌ மற்றும்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்‌ 

(ஐ கூறின்படி ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட நாளன்று அந்தப்‌ பிரிவின்‌ (2) 

ஆம்‌ உட்பிரிவின்‌ குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின்‌ வருங்கால வைப்பு நிதியக்‌ 

கணக்குகளின்‌ வரவு இருப்பில்‌ உள்ள தொகைகள்‌ மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ 

பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மேற்சொன்ன வருங்கால 

வைப்பு நிதியக்‌ கணக்குகளைப்‌ பொறுத்த கடப்பாடானது, மனோன்மணியம்‌ 

சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்தின்‌ கடப்பாடாக இருக்கும்‌. 

(2) மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகத்தின்‌ வயது முதிர்வு ஓய்வு நிதியம்‌ 

மற்றும்‌ அதே போன்ற பிற நிதியங்கள்‌ எவையேனுமிருப்பின்‌ அவற்றில்‌ சேர்ந்துள்ள 

தொகைகளிலிருந்து, 57 ஆம்‌ பிரிவின்‌ (1) மற்றும்‌ (2)-ஆம்‌ உட்பிரிவுகளில்‌ 

குறிப்பிடப்பட்ட நபர்களின்‌ சார்பாக வயது முதிர்வு நிதியம்‌ அல்லது அதுபோன்ற பிற 

நிதியங்கள்‌ எவையேனுமிருப்பின்‌, அவற்றின்‌ வரவு வைக்கப்பட்டிருக்கின்ற 

தொகைகளை மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்திற்கு வழங்குதல்‌ 

வேண்டும்‌. அவ்வாறு வழங்கப்பட்ட தொகையானது மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ 

பல்கலைக்கழகத்தால்‌ அதன்‌ பணியாளர்களின்‌ நலனுக்காக நிருவப்படக்கூடிய 

வயது முதிர்வு, ஓய்வு நிதியம்‌ அல்லது அதுபோன்ற பிற நிதியங்கள்‌: 

எவையேனுமிருப்பின்‌ அவற்றின்‌ பகுதியாக அமைதல்‌ வேண்டும்‌. 

59. மதுரை-காமராசர்‌ பல்லைக்கழகத்தினால்‌ சில குறிப்பிட்ட தொகை 

வழங்கப்படுதல்‌.- (1) மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகத்துடன்‌ கலந்தறிந்து அரசு 

குறித்துரைக்கக்கூடிய தொகையினை மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகமானது, 

அறிவிக்கை செய்யப்பட்ட தேதியன்று உள்ள தனது நிதியங்களிலிருந்து, 

மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்திற்கு வழங்குதல்‌ வேண்டும்‌. 

(2) ௫-ஆம்‌ உட்பிரிவின்படி வழங்கப்பட வேண்டிய தொகையானது, 58— 

ஆம்‌ பிரிவின்படி மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகத்தால்‌ மனோன்மணியம்‌



சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தொகைகளுடன்‌ கூட 

அமைந்ததாக இருக்கும்‌. 

60. தமிழ்நாடு சட்டம்‌ 33/1965 எனும்‌ எண்‌ கொண்ட பொருந்தாது என்பது.- (1) (2) 

முதல்‌ (9) வரையிலான உட்பிரிவுகளில்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு 1965- 

ஆம்‌ ஆண்டு மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகச்‌ சட்டமானது (இதன்பின்பு, இந்தப்‌ 

பிரிவில்‌ 1965-ஆம்‌ ஆண்டுச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 331965) எனக்‌ 

குறிப்பிடப்படுவது) அறிவிக்கை செய்யப்பட்ட தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌ 

இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ பொருந்துகிற பரப்பிடங்களைப்‌ பொறுத்த 

அளவில்‌, பொருந்துவது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. 

(2) அவ்வாறு அற்றுப்‌ போவதானது,- 

(ஐ) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ பொருந்துகின்ற பரப்பிடங்களைப்‌ 

பொறுத்த அளவில்‌, 1965-ஆம்‌ ஆண்டுச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 331965), 

முன்னர்‌ செயற்பாட்டின்‌ இருந்ததையோ; அல்லது 

(b) 1965-ஆம்‌ ஆண்டுச்‌ சட்டத்திற்கெதிராகப்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 

33/1965) புரியப்பட்ட குற்றச்‌ செயல்‌ எதனையும்‌ பொறுத்த அளவில்‌ ஏற்க நேரிட்ட 

தண்டம்‌, தண்ட இழப்பு அல்லது தண்டனை எதனையுமோ; அல்லது 

(௦) அத்தகைய தண்டம்‌, தண்ட இழப்பு அல்லது தண்டனை தொடர்பான 

புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி (பரிகாரம்‌) எதையும்‌ பாதிக்கலாகாது; 

மற்றும்‌, இந்தச்‌ சட்டம்‌ நிறைவேற்றப்படாததுபோன் றே, அத்தகைய புலனாய்வு, சட்ட 

நடவடிக்கை அல்லது தீர்வழி (பரிகாரம்‌) எதுவும்‌ தொடுக்கப்படலாம்‌ தொடர்ந்து 

நடத்தப்படலாம்‌ அல்லது நிறைவேற்றப்படலாம்‌; மற்றும்‌ அத்தகைய தண்டம்‌, தண்ட 

இழப்பு அல்லது தண்டனை எதுவும்‌ விதிக்கப்படலாம்‌. 

(3) ௬-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, 1965 ஆம்‌ 

ஆண்டுச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்டவையும்‌ மற்றும்‌ அறிவிக்கை செய்யப்பட்ட 

தேதியில்‌ நடைமுறையில்‌ உள்ளவையுமான நிலைமுறை விதிகள்‌, துணைமுறை 

விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ அனைத்தும்‌, அவற்றிற்குப்‌ பதிலாக 

இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்படக்கூடிய நிலைமுறை விதிகள்‌, துணைமுறை 

விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ ஆகியவை அமைகின்ற வரையிலும்‌, 

அவை எந்த அளவிற்கு இந்தச்‌ சட்டத்துடன்‌ ஒவ்வாதனவாக 

இல்லாதிருக்கின்றனவோ அந்த அளவுக்குப்‌ இப்பல்கலைக்கழகப்‌ 

பரப்பிடத்திற்குள்‌ தொடர்ந்து நடைமுறையில்‌ இருந்து வரும்‌. 

(4) இந்தச்‌ சட்டத்தில்‌ அல்லது (3) ஆம்‌ உட்பிரிவின்படி தொடர்ந்து 

செல்லாற்றல்‌ பெறச்‌ செய்யப்பட்டுள்ள அல்லது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட



நிலைமுறை விதிகள்‌, துணைமுறை விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகளில்‌ 

என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து 

முன்னர்‌ மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்ட அல்லது 

அதன்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பெற்ற இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ 

இருக்கின்ற கல்லூரி ஒன்றின்‌ மற்றும்‌ அந்தப்‌ பல்கலைக்கழகத்‌ துறைகளின்‌ 

மாணவராய்‌ இருந்திருக்கின்ற அல்லது மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகத்‌ 

தேர்வுகளில்‌ எதையும்‌ எழுதுவதற்குத்‌ தகுதிவாய்ந்தவராக இருந்திருக்கிண்ற 
ஒவ்வொரு நபரும்‌, மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்தில்‌ தனது 

குறித்த காலப்‌ படிப்பினை முடிக்க அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ மதுரை 

- காமராசர்‌ பல்கலைக்கழகத்திலுள்ள குறித்த காலப்‌ படிப்பிற்கிணங்க 

மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்தால்‌ முடிவு செய்யப்படக்கூடிய 

மாணவர்கட்கு, முடிவு செய்யப்படக்கூடிய கால அளவுக்கு மற்றும்‌ முடிவு 

செய்யப்படக்கூடிய பயிற்றுவித்தலுக்கும்‌ கற்பித்தலுக்கும்‌ மற்றும்‌ பயிற்சிக்கும்‌, 

மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகம்‌ ஏற்பாடுகள்‌ செய்தல்‌ வேண்டும்‌; 

மேலும்‌ அத்தகைய மாணவர்கள்‌ அந்தக்‌ காலஅளவின்‌ போது மதுரை-காமராசர்‌ 

பல்கலைக்கழகத்தால்‌ வைக்கப்படும்‌ அல்லது நடத்தப்படும்‌ தேர்வுகளுக்கு 

ஏற்றுக்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய தேர்வுகளின்‌ முடிவின்‌ 

பேரில்‌, தகுதிபெற்ற மாணவர்கட்கு, மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகத்தின்‌ 

நேரிணையான பட்டம்‌, பட்டயம்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகள்‌ மதுரை-காமராசர்‌ 

பல்கலைக்கழகத்தால்‌ அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 

(5) பாளையங்கோட்டை, பல்கலைக்கழக மையத்தில்‌ உள்ள மதுரை- 

காமராசர்‌ பல்கலைக்கழகம்‌ அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌ 

சொந்தமாய்ப்‌ பெற்றிருந்த அல்லது அதனிடம்‌ ஒப்படைக்கப்பட்டு மேவியிருந்த 

அல்லது பொறுப்பாட்சி வகையில்‌ அது வைத்திருந்த நிலங்கள்‌, கட்டடங்கள்‌, 

தளவாடங்கள்‌, புத்தகங்கள்‌ மற்றும்‌ நூலகம்‌ உள்ளடங்கலாக அசையும்‌ அல்லது 

அசையாச்‌ சொத்து அனைத்தும்‌ மற்றும்‌ எந்த வகையையும்‌ சேர்ந்த உரிமைகள்‌ 

அனைத்தும்‌ மேலும்‌ அந்த மையத்தில்‌ அந்தப்‌ பல்கலைக்கழகத்திற்கு எதிராக 

சட்டப்படியாக நிகழ்நிலையிலுள்ள கடப்பாடுகள்‌ அனைத்தும்‌, மனோன்மணியம்‌ 

சுந்தரணார்‌ பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படுதலும்‌ மற்றும்‌ அதனிடம்‌ 

ஒப்படைக்கப்பட்டு மேவி நிற்றலும்‌ வேண்டும்‌. 

(6) அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முண்னர்‌,- 

(a) மதுரை-காமராசர்‌ பல்கலைக்‌ கழகத்துடன்‌ தொடர்ந்து 

இணைக்கப்பட்டவையாய்‌ இருக்கின்ற அல்லது. அதனால்‌ ஏற்பிசைவு 

அளிக்கப்பட்டவையாக இருக்கின்றவையும்‌, மற்றும்‌



(b) மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழகச்‌ சட்டத்‌ தேர்வுக்கு ஏற்றுக்‌ 

கொள்ளப்பவதடுற்கான குறித்தகாலப்‌ படிப்பிற்கு வகைசெய்கின்றவையுமான 

இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள கீழ்த்திசை மொழி கல்லூரிகள்‌: 

உள்ளடங்கலாக, அனைத்துக்‌ கல்லூரிகளும்‌. 

இச்சட்டத்தின்படி, மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்துடன்‌ 

இணைக்கப்பட்ட கல்லூரிகளாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ 

சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு 

அதன்படியே பொருந்துதல்‌ வேண்டும்‌. 

(7) அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌ மதுரை-காமராசர்‌ 

பல்கலைக்கழகத்தின்‌ விருதுகள்‌ மற்றும்‌ பட்டயங்களுக்கான தேர்வுகளுக்கு 

ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான குறித்தகாலப்‌ படிப்பிற்கு வகைசெய்கின்ற 

கீழ்த்திசை மொழிக்‌ கல்லூரிகளாக தொடர்ந்து மதுரை-காமராசர்‌ 

பல்கலைக்கழகத்தால்‌ ஏற்பிசைவளிக்கப்‌ பெறுகின்ற இப்பல்கலைக்கழகப்‌ 

பரப்பிடத்திற்குள்‌ உள்ள அனைத்துக்‌ கல்லூரிகளும்‌ இந்தச்‌ சட்டத்தின்படி 

மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்தால்‌ ஒப்புதலளிக்கபெற்ற 

கல்லூரிகளாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌: மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ 

வகைமுறைகள்‌ எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கும்‌ அதன்படியே 

பொருந்தும்‌. 

(8) அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌ மதுரை-காமராசர்‌ 

பல்கலைக்கழகத்தால்‌ தொடர்ந்து ஏற்பிசைவளிக்கப்பெற்று வருகின்ற 

இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள தங்கு விடுதிகள்‌ அனைத்தும்‌ இந்தச்‌ 

சட்டத்தின்படி மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகத்தால்‌ 

ஏற்பிசைவளிக்கப்பெற்ற தங்கு விடுதிகளாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌: மற்றும்‌ 

இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு, 

அதன்படியே பொருந்தும்‌. 

(9 (2-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, ஆனால்‌ (3) முதல்‌ 

(7) வரையிலான உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்கு ஊறில்லாமல்‌, இந்தச்‌ 

சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ பொருந்துகின்ற பரப்பிடம்‌ எதனையும்‌ பொறுத்து 1965 

ஆம்‌ ஆண்டுச்‌ சட்டத்தின்‌ வகைமுறை எதனின்படியும்‌ அறிவிக்கை செய்யப்பட்ட 

தேதிக்கு முன்னர்‌ செய்யப்பட்ட எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை 

எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ நேரிணையான வகைமுறையின்படி 

செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகவோ கருதப்படுதல்‌ 

வேண்டும்‌; மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நேரிணையான வகைமுறையின்படி 

செய்யப்பட்ட செயல்‌ எதனாலும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும்‌.



தள்ளிவைக்கப்பட்டாலன்றியும்‌ மற்றும்‌ தள்ளிவைக்கப்படுகின்ற வரையிலும்‌, 

அதன்படியே தொடர்ந்து நடைமுறையில்‌ இருந்து வருதலும்‌ வேண்டும்‌. 

61. நூலகர்‌.- (1) இந்நோக்கத்திற்காக அமைக்கப்படும்‌ நூலகம்‌ தெரிவுக்‌ குழுவின்‌ 

பரிந்துரையின்‌ பேரில்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய கால அளவுக்கும்‌ அத்தகைய 

வரையறைகள்‌ மற்றும்‌ வரைகட்டுகளின்‌ பேரிலும்‌ நூலகர்‌, ஆட்சிக்‌ குழுவால்‌ 

நியமிக்கப்பட்ட, இப்பல்கலைக்கழகத்தின்‌ ஒரு முழு நேர அலுவலராக இருந்து 

வருவார்‌. 

(2) நூலகர்‌ ஆட்சிக்‌ குழுவால்‌, அவருக்குக்‌ குறித்தளிக்கப்படக்கூடிய 

அதிகாரங்களைச்‌ செலுத்தியும்‌ கடமைகளைப்‌ புரிந்தும்‌ வருவார்‌. 

62. சிறப்பு நியமன முறை.- (1) ஆட்சிக்‌ குழு தான்‌ பொருத்தமெனக்‌ கருதுகிற 

அத்தகைய வரையறைகள்‌ மற்றும்‌ வரைகட்டுகளின்‌ பேரில்‌, 

இப்பல்கலைக்கழகத்தின்‌ பேராசிரியர்‌ பதவி ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு, 

உயர்கல்வி சிறப்பையும்‌ தொழில்முறைத்‌ தேர்ச்சிப்‌ பேறுகளையும்‌ (Professional 

attainments) பெற்றுள்ள ஒருவரை அழைக்கலாம்‌; மற்றும்‌ அவர்‌ ஏற்றுக்‌ 

கொண்டதன்‌ பேரில்‌, அவரை அப்பதவிக்கு நியமிக்கலாம்‌. 

(2) ஆட்சிக்குழு, அவசர விதிகளில்‌ விதிக்கப்பட்டுள்ள முறைக்கிணங்க 

கூட்டுச்‌ செயல்‌ திட்டமொன்றை மேற்கொள்வதற்காக, பிற பல்கலைக்கழகம்‌ 

அல்லது அமைப்பு எதிலேனும்‌ பணிபுரிகின்ற ஆசிரியர்‌ ஒருவரையோ கல்விப்‌ 

பணியாளர்‌ தொகுதியின்‌ பிற உறுப்பினர்‌ எவரையுமோ நியமிக்கலாம்‌. 

63. இணைக்கப்பட்ட கல்லூரி மீதான அறிக்கை.-- ஆட்சிக்‌ குழுவானது 

அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு மூன்றாண்டுகளின்‌ 

முடிவிலும்‌ இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்ள இணைக்கப்பட்ட மற்றும்‌ 

ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரிகளின்‌. நிலையைப்‌ பற்றி அரசிற்கு 

அறிக்கையொன்றைப்‌ பணிந்தனுப்புதல்‌ வேண்டும்‌. அரசு, அவ்வறிக்கையின்மீது 

தான்‌ பொருத்தமெனக்‌ கருதும்‌ நடவடிக்கையினை எடுத்தல்‌ வேண்டும்‌. 

64. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- (1) அறிவிக்கை செய்யப்பட்ட 

தேதிக்குப்‌ பின்பு இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதையேனும்‌ 

முதல்முதலில்‌ அமைத்துருவாக்குதல்‌ குறித்தோ அல்லது மாற்றி 

அமைத்துருவாக்குதல்‌ குறித்தோ அல்லது மற்றப்படி இந்தச்‌ சட்டத்தின்‌ 

வகைமுறைகளைச்‌ செயல்படுத்துதல்‌ குறித்தோ இடர்ப்பாடு ஏதேனும்‌ எழுமானால்‌, 

அரசு அறிவிக்கையின்‌ மூலமாக அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்காக 

தேவையானதென்று அல்லது உகந்ததென்று தனக்குத்‌ தோன்றக்கூடிய, இந்தச்‌



சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு ஒவ்வாதவையாயிராத வகைமுறைகளைச்‌ 

செய்யலாம்‌: 

வரம்புரையாக: அத்தகைய அறிவிக்கை எதுவும்‌ 3-ஆம்‌ பிரிவின்படி, 

இப்பல்கலைக்கழகம்‌ நிறுவி அமைக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுகள்‌ 

முடிவடைந்ததற்குப்‌ பின்பு, பிறப்பிக்கப்படுதலாகாது. 

(2) (1) ஆம்‌ உட்பிரிவின்படியோ, இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகள்‌ 

எவற்றின்படியுமோ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌, அது 

பிறப்பிக்கப்பட்ட பின்பு, நடைமுறைக்கு இயன்ற விரைவில்‌, சட்டமன்றப்‌ 

பேரவையின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது அவ்வாறு 

வைக்கப்படும்‌ கூட்டத்தொடர்‌ அல்லது அடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு 

முன்பு, அத்தகைய அறிவிக்கை எதிலும்‌ மாறுதல்‌ எதையேனும்‌ சட்டமன்றப்‌ 

பேரவையானது செய்யுமானால்‌, அல்லது அந்த அறிவிக்கை 

பிறப்பிக்கப்படுதலாகாது என்று சட்டமன்றப்‌ பேரவை முடிவு செய்யுமானால்‌, அந்த 

அறிவிக்கையானது அதன்‌ பின்பு அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ 

மட்டுமே நடைமுறைக்கு வரும்‌; அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வந்து 

போகும்‌: எனினும்‌, அவ்வாறு மாற்றியமைப்பது அல்லது நடைமுறைக்கே வராது 

போகச்‌ செய்வதெதுவும்‌ அந்த அறிவிக்கையின்படி முன்னதாகச்‌ செய்யப்பட்ட 

ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌.


Open official source version ↗

About this act

Jurisdiction
Tamil Nadu
Enactment date
1990-05-26
Sections available
Document reader
Source and version

India Code, Government of India. Text fetched 17 Oct 2026. Source metadata reports last modification: 2025-08-06. Check the linked official text and subsequent notifications when applying a provision.

Share this act

THE MANONMANIAM SUNDARANAR UNIVERSITY ACT, 1990 — Tamil script | NYAYA SIGNAL

Share the card with this clickable reading link. पढ़ें और अगली धारा देखें।

NYAYA SIGNAL · Free access · Official source references

· Saves and reading positions stay on this device.