Tamil — official source version
the_tamil_nadu_christian_marriages_validation_act,_1934.pdf.txt
தமிழ்நாடு சட்டம் எண் 17 1935.
1934 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிறிஸ்தவ திருமணங்கள் செல்லுந்தண்மைச் சட்டம்.
(1935 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவும், 1935
ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 24 ஆம் நாளன்று தலைமை ஆளுநரின் ஏற்பிசைவும்
பெறப்பட்டது. தலைமை ஆளுநரின் ஏற்பிசைவானது முதன்முதலில் 1935 ஆம்
ஆண்டு ஏப்ரல் திங்கள் 16 ஆம் நாளன்று புனித ஜார்ஜ் கோட்டை அரசிதழில்
வெளியிடப்பட்டது.)
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ் நாட்டுப்புறத்திற்காண சுயசார்பு செவன்த்
டே அட்வென்டிஸ்ட் ஆலயத்தைச் சேர்ந்த திரு.&.ஆசீர்வாதம் அவர்களால் நடத்தி
வைக்கப்பட்ட சில திருமணங்களை செல்லுபடியாக்குவதற்கானதொரு சட்டம்.
முன்னுரை.- திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ் நாட்டுப்புறத்திற்கான
சுயசார்பு செவன்த் டே அட் வென்டிஸ்ட் ஆலயத்தைச் சேர்ந்த திரு.&.ஆசீர்வாதம்
என்பவருக்கு, 1872 ஆம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் (மைய
சட்டம் XV/1872) 6 மற்றும் 9 ஆம் பிரிவுகளின்கீழ் முறையே, திருமணங்களை நடத்தி
வைப்பதற்கும், திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்கும் 1928 ஆம் ஆண்டு
அக்டோபர் திங்கள் 26 ஆம் நாள் அரசால் உரிமம் வழங்கப்பட்டது என்பதாலும்;
1933 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7 ஆம் நாளன்று கூறப்பட்ட
உரிமங்களானது கூறப்பட்ட அரசால் இரத்து செய்யப்பட்டன என்பதாலும்;
கூறப்பட்ட திரு.ஆசீர்வாதம் அவர்கள், கூறப்பட்ட இரத்து செய்யப்பட்ட
தேதிக்குப் பின்பும், 1933 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15 ஆம் நாளன்றும்
அதுவரையிலும் கூறப்பட்ட உரிமங்கள் இரத்து செய்யப்படாதது போன்று, தொடர்ந்து
திருமணங்களை நடத்தி திருமணச் சான்றிதழ்களை வழங்கினார் என்பதாலும்;
1933 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7 ஆம் நாளன்றும் அதுமுதலும் மற்றும்
1933 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15 ஆம் நாள் நாளன்றும் அதுவரையிலும்,
கூறப்பட்ட திரு.ஆசீர்வாதம் அவர்கள் அவ்வாறு நடத்தி வைக்கப்பட்ட திருமணங்கள்
மற்றும் அவ்வாறு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் செய்த பிற செயல்களானது,
இரத்து செய்யப்பட்ட உரிமங்களின் அடிப்படையில் சட்டப்படி செல்லுந்தண்மை
உடையதா என்பது சந்தேகத்திற்குரியது என்பதாலும்;
கூறப்பட்ட தேதிகளுக்கு இடையில் ரத்து செய்யப்பட்ட உரிமங்களின்கீழ்
செயல்பட திரு.ஆசீர்வாதம் சட்டப்பூர்வமாக உரிமை பெற்றுள்ளார் என்று கூறப்பட்ட
திருமணங்களின் தரப்பினர், நண்ணம்பிக்கையுடன் நம்பினார்கள் என்பதில் சந்தேகிக்க
எந்த காரணமும் இல்லை என்பதாலும்;
கூறப்பட்ட திரு.ஆசிர்வாதம் அவர்களால் நடத்திவைக்கப்பட்ட அத்தகைய
திருமணங்கள் மற்றும் வழங்கப்பட்ட அனைத்து திருமணச் சான்றிதழ்கள் மற்றும்
அத்தகைய திருமணங்கள் தொடர்பான பிற செயல்கள் அல்லது சான்றிதழ்கள்
செல்லுபடியாக்குவது உகந்தது என்பதாலும்;
இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தலைமை ஆளுநரின் முன் அனுமதி
பெறப்பட்டிருக்கிறது என்பதாலும்; இது பின்வருமாறு இயற்றப்படுகிறது:-
1. குறுந்தலைப்பு.- இச்சட்டம், 1934 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிறிஸ்தவ
திருமணங்கள் செல்லுந்தன்மைச் சட்டம் என வழங்கப்பெறும்.
2. சில முறையற்ற திருமணங்கள், சான்றிதழ்கள் மற்றும் செயல்களின்
செல்லுந்தன்மை.- கூறப்பட்ட திரு. ஆசிர்வாதம் அவர்களுக்கு, 1928 ஆம் ஆண்டு
அக்டோபர் திங்கள் 26 ஆம் நாள் வழங்கப்பட்ட உரிமம் இரத்து செய்யப்படாதிருப்பின்,
செல்லுபடியாகூடிய 1933 ஆகஸ்டு 7 ஆம் நாளன்று மற்றும் 1933 நவம்பர் 15 ஆம்
நாள் உட்பட அவரால் நடத்தி வைக்கப்பட்ட அனைத்து திருமணங்களும்,
வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களும் மற்றும் அனைத்து செயல்களும், அவர்,
1933 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7 ஆம் நாளன்றும் அதுமுதலும் மற்றும் 1933
ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15 ஆம் நாள் நாளன்றும் அதுவரையிலும், 1872 ஆம்
ஆண்டு இந்திய கிறித்துவ திருமணச் சட்டத்தின் (மைய சட்டம் XV/1872) 6 மற்றும்
9 பிரிவுகளின்கீழ் உரிமங்களை வைத்திருந்ததைப் போலவே செல்லுபடியாகும் என்று
கருதப்படுதல் வேண்டும் மற்றும், அத்தகைய திருமணம், சான்றிதழ் அல்லது செயல்
எதுவும், கூறப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன என்ற காரணத்திற்காக மட்டுமே
செல்லுபடியாகாது என்று கருதப்படுதல் ஆகாது.
3. முறையற்ற திருமணங்களின் பதிவேடுகளின் செல்லுந்தன்மை.- 2 ஆம்
பிரிவு மற்றும் 1872 ஆம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் (மைய
சட்டம் XV/1872) வகைமுறைகளுக்கு இணங்க, வைக்கப்பட்ட உண்மையான
மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பதிவேடு புத்தகங்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட
நகல்களால் செல்லுபடியாக்கப்பட்ட திருமணச் சான்றிதழ்களானது., அத்தகைய
திருமணங்கள் தொடர்பான பதிவேடு புத்தகங்கள் மற்றும் குறிப்புகளும், அத்தகைய
திருமணங்களானது கூறப்பட்ட சட்டத்தின்கீழ் முறையாக நடத்தப்பட்டதென,
அத்தகைய திருமணங்களுக்கான சான்றாக பெறப்படும்.
Open official source version ↗About this act
- Jurisdiction
- Tamil Nadu
- Enactment date
- 1935-04-16
- Sections available
- Document reader
India Code, Government of India. Text fetched 19 Oct 2026. Source metadata reports last modification: 2025-07-17. Check the linked official text and subsequent notifications when applying a provision.