Tamil Nadu · Act 30 of 1991

The Tamil Nadu Co-Operative Societies (Appointment of Special Officers) Act, 1991

An Act to provide for the appointment , in the public interest, of Special Officers for certain primary societies in the State of Tamil Nadu.

Read in your languageअपनी भाषा में पढ़ें · Official source versions
Tamil
Find in this text

Tamil — official source version

the_tamil_nadu_co-operative_societies_(appointment_of_special_officer)_act,_1991.pdf.txt

1991-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ (தணி அலுவலர்கள்‌ 

நியமனச்‌) சட்டம்‌ 

சட்ட எண்‌. 30/1991 

பொருளடக்கம்‌. 

1. குறுந்தலைப்பும்‌ தொடக்கமும்‌. 

2. 

3. 

8. 

9. 

பொருள்‌ வரையறைகள்‌. 

குறிப்பிட்ட சில தொடக்கநிலைச்‌ சங்கக்‌ குழுமங்களின்‌ உறுப்பினர்களின்‌ 

பதவிக்‌ காலம்‌ முடிவடைதல்‌. 

. தனி அலுவலர்கள்‌ நியமனம்‌. 

. அறிவுரைக்‌ குழுமத்தினை நியமித்தல்‌. 

. கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ பற்றிய சட்டம்‌ தனி அலுவலருக்குப்‌ பொருந்துதல்‌. 

. அரசின்‌ அதிகாரங்கள்‌ ஒப்படைப்பு. 

நல்லெண்ணத்துடன்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு. 

விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 

10. தனி வகைமுறைகள்‌. 

11. நீக்கமும்‌ காப்பும்‌.



1991-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ (தணி அலுவலர்கள்‌ 

நியமனச்‌) சட்டம்‌ 

சட்ட எண்‌. 30/1991 

பொது நலன்‌ கருதி, தமிழ்நாடு மாநிலத்திலுள்ள குறிப்பிட்ட சில 

தொடக்கநிலைச்‌ சங்கங்களுக்குத்‌ தனி அலுவலர்களை நியமிப்பதற்கு 

வகைசெய்வதற்கானதொரு சட்டம்‌. 

1990-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ (திருத்தச்‌) சட்டத்தால்‌ 

(தமிழ்நாடு சட்டம்‌ 261990), திருத்தப்பட்ட 1983-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு 

கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 30/1983), பதிவுபெற்ற கூட்டுறவுச்‌ 

சங்கங்களின்‌ (நிருவாகக்‌) குழுமங்களில்‌, பெண்களுக்கென்று நூற்றுக்கு முப்பது 

விழுக்காடு பிரதிநிதித்துவமும்‌ (சார்பாண்மையும்‌), பட்டியல்‌ சாதியினர்‌ மற்றும்‌ 

பட்டியல்‌ பழங்குடியினருக்கென்று நூற்றுக்குப்‌ பதினெட்டு விழுக்காடு 

பிரதிநிதித்துவமும்‌ அளிப்பதற்கும்‌, மற்றும்‌ அந்த எண்ணிக்கையளவிற்குப்‌ 

பெண்களும்‌ மற்றும்‌ பட்டியல்‌ சாதியினர்‌, பட்டியல்‌ பழங்குடியினரைச்‌ 

சார்ந்தவர்களும்‌ தேர்ந்தெடுக்கப்பவில்லையாயின்‌, பெண்களையும்‌ மற்றும்‌ 

பட்டியல்‌ சாதியினர்‌, பட்டியல்‌ பழங்குடியினரைச்‌ சார்ந்தவர்களையும்‌ 

பிரதிநிதிகளாகப்‌ பெயர்‌ குறித்து நியமிப்பதற்கும்‌ வகை செய்கின்றது என்பதாலும்‌; 

தொடக்கநிலை கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ நிருவாகக்‌ குழுமங்களுக்கு 

1990-ல்‌ நடத்தப்பட்ட தேர்தலில்‌, பெண்களையும்‌, பட்டியல்‌ சாதியினர்‌ மற்றும்‌ 

பட்டியல்‌ பழங்குடியினரையும்‌ சார்ந்த பிரதிநிதிகள்‌, முறையே நூற்றுக்கு முப்பது 

விழுக்காடு மற்றும்‌ நூற்றுக்குப்‌ பதினெட்டு விழுக்காடு என்ற 

எண்ணிக்கையளவிற்குத்‌ தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதாலும்‌; 

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின்‌ எண்ணிக்கைக்குப்‌ 

பொருத்தமில்லாத வகையில்‌ பெருமளவில்‌ பெண்களையும்‌ மற்றும்‌ பட்டியல்‌ 

சாதியினர்‌, பட்டியல்‌ பழங்குடியினரைச்‌ சார்ந்தவர்களையும்‌ பிரதிநிதிகளாகப்‌ பெயர்‌ 

குறித்து நியமிக்கப்பட்டுள்ளதன்‌ விளைவாகப்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட 

உறுப்பினர்களின்‌. எண்ணிக்கை இயல்புக்கு மாறான வகையில்‌ 

பெருகியுள்ளதாலும்‌; 

பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை இயல்புக்கு 

மாறான வகையில்‌ பெருகுவதானது கூட்டுறவு இயக்ககத்தின்‌: 

ஒழுங்குமுறைப்பட்ட வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது என்பதோடு கூட, 

கூட்டுறவு சங்கங்களை மக்களாட்சி முறை அடிப்படையில்‌ மேலாண்மை செய்யும்‌ 

கொள்கைகளுக்கு அது ஏற்றதாகவும்‌ இருக்காது என்பதாலும்‌;



தொடக்கநிலை கூட்டுறவுச்‌ சங்கங்களுக்கு தேர்தல்‌ நடத்தப்பட்டதிலும்‌, 

அச்சங்கங்களின்‌ அலுவல்களை மேலாண்மை செய்ததிலும்‌ நடந்துள்ள 

ஒழுங்கனச்‌ செயல்கள்‌ குறித்து எண்ணற்ற முறையீடுகள்‌ அரசுக்கு வந்துள்ளன 

என்பதாலும்‌; 

பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை இயல்புக்கு 

மாறான வகையில்‌ பெருகியுள்ளதைச்‌ சரி செய்வதற்காகவும்‌, மேற்சொன்ன 

கூட்டுறவுச்‌ சங்கங்களை முறையாக மேலாண்மை செய்வதனை உறுதி 

செய்வதற்காகவும்‌ வேண்டி, 1983-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ 

சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம்‌ 30/1983) தக்கவாறு திருத்துவதென்றும்‌, திருத்தக்‌ 

கருதப்பட்டுள்ள மேற்சொன்ன சட்டத்தின்படி கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ 

அனைத்திற்கும்‌ தேர்தலை நடத்துவதென்றும்கூட அரசு முடிவுசெய்துள்ளது 

என்பதாலும்‌; 

மற்றும்‌, சட்டத்திருத்தம்‌ செய்வதற்கிடையே, பொது நலன்‌ கருதி, 

தொடக்கநிலை கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ மேலாண்மைக்‌ குழுமங்களைக்‌ 

கலைத்துக்‌ கைக்கொள்வதென்றும்‌, வரையறுக்கப்பட்ட ஒரு கால அளவிற்குத்‌ 

தனி அலுவலர்களை நியமிப்பதென்றும்‌ முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதாலும்‌; 

இந்தியக்‌ குடியரசின்‌ நாற்பத்திரண்டாமாண்டில்‌ தமிழ்நாடு, மாநிலச்‌ 

சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 

1. குறுந்தலைப்பும்‌ தொடக்கமும்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1991-ஆம்‌ ஆண்டு 

தமிழ்நாடு கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ (தனி அலுவலர்கள்‌ நியமனச்‌) சட்டம்‌ என 

வழங்கப்பெறும்‌. 

(2) இது, 1991-ஆம்‌ ஆண்டு சூலை திங்கள்‌ 28-ஆம்‌ நாளன்றே 

நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 

2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாய்‌ வேறுபொருள்‌ 

குறித்தாலன்றி.- 

(ஐ "குறிக்கப்பட்ட நாள்‌" என்றால்‌, 1991-ஆம்‌ ஆண்டு சூலைத்‌ திங்கள்‌ 

28-ஆம்‌ நாள்‌ என்று பொருள்படும்‌; 

(b) "குழுமம்‌" என்றால்‌, ஒரு தொடக்கநிலைச்‌ சங்கம்‌ எந்தப்‌ பெயரால்‌ 

வழங்கப்பட்டாலும்‌ அதன்‌ அலுவல்களின்‌ மேலாண்மை ஒப்படைக்கப்பெற்றுள்ள 

அதன்‌ ஆட்சிக்‌ குழுமம்‌ (Governing Body) என்று பொருள்படும்‌;



(௦) 'கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டம்‌" என்றால்‌, 1983-ஆம்‌ ஆண்டு 

தமிழ்நாடு கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 3௦1983) எனப்‌ 

பொருள்படும்‌; 

(0) "அரசு" என்றால்‌, மாநில அரசு என்று பொருள்படும்‌; 

(e) "தொடக்கநிலைச்‌ சங்கம்‌" என்றால்‌, கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ 

சட்டத்தின்‌ 2-ஆம்‌ பிரிவின்‌: (21-ஆம்‌ கூறில்‌ பொருள்‌ 

வரையறுக்கப்பட்டவாறுள்ளதும்‌, அந்தச்‌ சட்டத்தின்படி அதற்கான 1990 ஆம்‌ 

ஆண்டு தேர்தல்‌ நடத்தப்பட்டுள்ளதுமான ஒரு தொடக்கநிலைச்‌ சங்கம்‌ என்று 

பொருள்படும்‌; 

) இந்தச்‌ சட்டத்தில்‌ பயன்படுத்தப்பட்டு ஆனால்‌ பொருள்‌ 

வரையறுக்கப்படாதவையும்‌ எனினும்‌ கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டத்தில்‌ பொருள்‌ 

வரையறுக்கப்பட்டவையுமான சொற்களும்‌ சொற்றொடர்களும்‌, அந்தச்‌ சட்டத்தில்‌ 

முறையே அவ்வவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள பொருள்களைப்‌ பெற்றிருக்கும்‌. 

3. குறிப்பிட்ட சில தொடக்கநிலைச்‌ சங்கக்‌ குழுமங்களின்‌. 

உறுப்பினர்களின்‌ பதவிக்‌ காலம்‌ முடிவடைதல்‌.- கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌: 

சட்டத்திலோ, அல்லது அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள வேறெந்த ஒரு 

சட்டத்திலோ, அல்லது யாதேனும்‌ ஒரு நீதிமன்றத்தின்‌, நடுவர்‌ தீர்ப்புமன்றத்தின்‌ 

அல்லது வேறெந்த ஓர்‌ அதிகார அமைப்பின்‌ தீர்ப்பாணை அல்லது ஆணை 

எதிலுமோ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து 

முன்னர்‌, தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவராகப்‌ பதவி வகிக்கின்றவர்‌ 

உள்ளடங்கலாக, ஒவ்வொரு தொடக்கநிலைச்‌ சங்கக்‌ குழுமத்தின்‌ உறுப்பினர்‌ 

ஒவ்வொருவரின்‌ (அவர்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவராயினும்‌ அல்லது பெயர்குறித்து 

நியமிக்கப்பட்டவராயினும்‌) பதவிக்‌ காலமும்‌, குறிக்கப்பட்ட நாளன்று முடிவடைதல்‌ 

வேண்டும்‌; மற்றும்‌ அந்த உறுப்பினர்கள்‌, குறிக்கப்பட்ட நாள்‌ உள்ளிட்ட அந்நாள்‌ 

முதற்கொண்டு பதவியினை விட்டு நீங்குதல்‌ வேண்டும்‌. 

4. தனி அலுவலர்கள்‌ நியமனம்‌.- (1) (௧) கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டத்திலோ, 

அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள வேறெந்த ஒரு சட்டத்திலோ 

அல்லது யாதேனும்‌ ஒரு நீதிமன்றத்தின்‌, நடுவர்‌ தீர்ப்புமன்றத்திண்‌ அல்லது 
வேறெந்த ஓர்‌ அதிகார அமைப்பின்‌ தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலுமோ 

என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, குறிக்கப்பட்ட நாளன்றும்‌ அது முதற்கொண்டும்‌ 

3-ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட தொடக்கநிலைச்‌ சங்கம்‌ எதனின்‌ 

அலுவல்களையும்‌ மேலாண்மை செய்வதற்குத்‌ தனி அலுவலராக ஒருவரை அரசு 

நியமித்தல்‌ வேண்டும்‌.



(௦) இந்த உட்பிரிவில்‌ உள்ள எதுவும்‌, ஒரே நபரை இரண்டு அல்லது 

அதற்கு மேற்பட்ட தொடக்கநிலைச்‌ சங்கங்களுக்குத்‌ தனி அலுவலராக 

நியமித்தலைத்‌ தடுத்தல்‌ ஆகாது. 

(2) ௫-ஆம்‌ உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட தனி அலுவலர்‌ 

ஒவ்வொருவரும்‌, குறிக்கப்பட்ட நாள்‌ உள்ளிட்ட அந்நாள்‌ முதற்கொண்டு ஓராண்டு 

கால அளவிற்கோ அல்லது அரசு இதன்பொருட்டு அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ 

குறித்துரைக்கும்‌ அதைவிட குறுகிய கால அளவிற்கோ பதவி வகிப்பர்‌; 

வரம்புரை: தனி அலுவலரின்‌ பதவியில்‌ காலியிடம்‌ எதுவும்‌ எழுமாயின்‌, 

அக்காலியிடமானது அரசால்‌ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அக்காலியிடத்தில்‌ 

அவ்வாறு நியமிக்கப்பட்ட நபரானவர்‌, மேற்சொல்லப்பட்ட கால அளவில்‌ எஞ்சிய 

பகுதிக்கு மட்டுமே பதவி வகிப்பார்‌. 

(3) (0-ஆம்‌ உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட தனி அலுவலர்‌, பதிவாளரின்‌ 

கட்டுப்பாட்டிற்கும்‌, அவ்வப்போது அவர்‌ பிறப்பிக்கும்‌ பணிப்புரைகளுக்கும்‌ 

உட்பட்டு, தொடக்கநிலைச்‌ சங்கம்‌ குழுமத்தின்‌ அல்லது அதன்‌ அலுவலர்‌ எவரின்‌ 

அலுவல்கள்‌ அனைத்தையுமோ அல்லது எதனையுமோ ஆற்றிவருவதுடன்‌, 

அத்தொடக்கநிலைச்‌ சங்கத்தின்‌ நலன்‌ கருதி தேவைப்படும்‌ நடவடிக்கையினை 

எடுத்து வருதலும்‌ வேண்டும்‌. 

(4) அரசு, (1)-ஆம்‌ உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட தணி அலுவலருக்கு 

வழங்கப்படத்தக்க ஊதியத்‌ தொகையினை நிர்ணயிக்கலாம்‌; மற்றும்‌ அவ்வாறு 

நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்‌ தொகையும்‌, தொடக்கநிலைச்‌ சங்க மேலாண்மையைச்‌ 

சார்ந்த பதிவாளரால்‌ ஏற்பளிக்கப்படும்‌ பிற செலவினங்களும்‌, இது குறித்து அரசு 

பிறப்பிக்கும்‌ பணிப்புரைகளுக்குட்பட்டு, அத்தகைய தொடக்க நிலைச்‌ சங்கத்தின்‌ 

நிதியங்களிலிருந்து வழங்கப்படத்தக்கனவாகும்‌. 

(5) ௫-ஆம்‌ உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட தனி அலுவலரானவர்‌, அத்தனி 

அலுவலரின்‌ நியமனக்‌ கால அளவு முடிவடையும்‌ போது புதியதாக 

அமைக்கப்படக்கூடிய குழுமமும்‌ அதன்‌ உறுப்பினர்களும்‌ பதவியேற்கும்‌ 

வகையில்‌, கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கும்‌ அதன்கீழ்ச்‌ 

செய்யப்பட்ட விதிகளுக்கும்‌ மற்றும்‌ அத்தகைய தொடக்கநிலைச்‌ சங்கத்தின்‌ 

துணை விதிகளுக்குமிணங்கிய வகையில்‌ புதியதொரு குழுமத்தினை 

அமைப்பதற்கு ஏற்பாடு செய்தல்‌ வேண்டும்‌. 

5. அறிவுரைக்‌ குழுமத்தினை நியமித்தல்‌.-- (1) கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ 

சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌ தனி அலுவலருக்கு அறிவுரை 

(ஆலோசனை) வழங்குவதற்காக ஐவருக்கு மேற்படாத பதவிவழி சாரா



உறுப்பினர்களைக்‌ கொண்டிருக்கின்ற, அறிவுரைக்‌ குழுமம்‌ ஒன்றினை அரசு 

நியமிக்கலாம்‌. 

(2) அறிவுரைக்‌ குழுமத்தின்‌ உறுப்பினர்கள்‌, வகுத்துரைக்கப்படும்‌ படிகள்‌: 

அல்லது கட்டணங்களையும்‌ பிற வசதிகளையும்‌ பெறுவதற்குத்‌ 

தகுதியுடையவர்களாவர்‌. 

(3) தொடக்கநிலைச்‌ சங்கத்தின்‌ அலுவல்கள்‌ தொடர்பான அனைத்துப்‌ 

பொருள்கள்‌ குறித்தும்‌, தனி அலுவலரானவர்‌, அறிவுரைக்‌ குழுமத்துடன்‌ 

கலந்தறிதல்‌ வேண்டும்‌. 

6. கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ பற்றிய சட்டம்‌ தனி அலுவலருக்குப்‌ 

பொருந்துதல்‌.- 4, 5 ஆகிய பிரிவுகளில்‌ வேறுவிதமாக வகை செய்யப்பட்டுள்ளது 

நீங்கலாக, கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளும்‌ 

அச்சட்டத்தின்கீழ்ச்‌ செய்யப்பட்ட விதிகளும்‌, கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டத்தின்‌. 

88-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட ஒரு தனி 

அலுவலரைப்‌ பொறுத்த அளவில்‌ அவை பொருந்துவன போன்றே, 4-ஆம்‌ 

பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட ஒரு தனி அலுவலரைப்‌ 

பொறுத்த அளவிலும்‌ பொருந்தும்‌. 

7. அரசின்‌ அதிகாரங்கள்‌ ஒப்படைப்பு. (1) அரசு, 4-ஆம்‌ பிரிவு அல்லது 5- 

ஆம்‌ பிரிவின்படி தம்மிடம்‌ மேவி நிற்கின்ற அதிகாரங்களில்‌ எதனையும்‌, 

தொடக்கநிலைச்‌ சங்கங்கள்‌ அனைத்தையும்‌ அல்லது அவற்றில்‌ ஏதொன்றையும்‌ 

பொறுத்தவரையில்‌ செலுத்தி வருவதற்கு, அறிவிக்கையின்‌ வாயிலாகப்‌ 

பதிவாளருக்கு அதிகாரமளிக்கலாம்‌. 

(2) (0-ஆம்‌ உட்பிரிவின்படி ஒப்படைக்கப்பட்ட எந்த அதிகாரத்தையும்‌ 

செலுத்துவதானது, அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படும்‌ வரையறைகளுக்கும்‌ 

நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டதாகும்‌; மற்றும்‌ அரசின்‌ கட்டுப்பாட்டிற்கும்‌, 

சீராய்விற்கும்கூட அது உட்பட்டதாகும்‌. 

8. நல்லெண்ணத்துடன்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு.-- (1) 

இந்தச்‌ சட்டத்தினையொட்டி நல்லெண்ணத்துடன்‌ செய்யப்படும்‌ அல்லது செய்யக்‌ 

கருதப்படும்‌ ஏதொன்றையும்‌ பொறுத்து, நபர்‌ எவருக்கும்‌ எதிராக உரிமையியல்‌ 

வழக்கோ குற்றவியல்‌ வழக்கோ பிற சட்ட நடவடிக்கை எதுவுமா தொடுப்பதற்கு 

இடமில்லை. 

(2) இந்தச்‌ சட்டத்தினையொட்டி, நல்லெண்ணத்துடன்‌ செய்யப்படும்‌ 

அல்லது செய்யக்‌ கருதப்படும்‌ எதனாலேனும்‌ விளைவிக்கப்பட்ட அல்லது 

பெரும்பாலும்‌ விளைவிக்கப்படக்கூடிய சேதத்திற்காக அரசுக்கு எதிராக



உரிமையியல்‌ வழக்கோ அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவுமோ தொடுப்பதற்கு 

இடமில்லை. 

9. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) அரசானது, இந்தச்‌ சட்டத்தின்‌ 

நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச்‌ செய்யலாம்‌. 

(2) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌ தமிழ்நாடு 

அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ குறிப்பிட்ட ஒரு நாளன்று அவை 

நடைமுறைக்கு வருவதாக வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டாலன்றி, அவை 

எந்த நாளன்று அவ்வாறு வெளியிடப்படுகின்றணவோ அந்த நாளன்று 

நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 

(3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும்‌ அது 

செய்யப்பட்ட பின்பு எவ்வளவு விரைவில்‌ இயலுமோ அவ்வளவு விரைவில்‌, 

சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவ்வாறு 

வைக்கப்பட்ட கூட்டத்தொடரோ அல்லது அடுத்த கூட்டத்தொடரோ 

முடிவடைவதற்கு முன்னர்‌, அத்தகைய விதி எதிலும்‌ மாற்றம்‌ எதனையேனும்‌ 

சட்டமன்றப்‌ பேரவை செய்யுமானால்‌ அல்லது சட்டமன்றப்‌ பேரவை 

அவ்விதியானது. செய்யப்படுதல்‌ கூடாது என முடிவு செய்யுமானால்‌, 

அவ்விதியானது அதற்குப்‌ பின்னர்‌ அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ 

மட்டுமே செயல்வடிவம்‌ பெறுதல்‌ வேண்டும்‌; அல்லது நேர்விற்கேற்ப, செயல்‌ 

வடிவம்‌ பெறாது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌, அத்தகைய மாற்றம்‌ அல்லது 

அழித்தறவு எதுவும்‌ அந்த விதியின்படி முன்னரே செய்யப்பட்ட எதனின்‌ 

செல்லுந்தன்மைக்கும்‌ ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 

10. தனி வகைமுறைகள்‌.- கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டத்திலோ, அல்லது 

அப்போதைக்கு நடைமுறையிலுள்ள வேறெந்த ஒரு சட்டத்திலோ அல்லது 

யாதேனும்‌ ஒரு நீதிமன்றத்தின்‌, நடுவர்‌ தீர்ப்புமன்றத்தின்‌ அல்லது வேறெந்த ஜர்‌ 
அதிகாரஅமைப்பின்‌ தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலுமோ என்ன 

அடங்கியிருந்தபோதிலும்‌,- 

@ ஒரு தொடக்கநிலைச்‌ சங்கத்தின்‌ குழுமத்திற்குத்‌ 
தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால்‌, குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முன்னர்‌ பதவியை 

மேற்கொள்ளாத உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய உறுப்பினராக 

ஒருபோதும்‌ தேர்ந்தெடுக்கப்படாதாகவே கருதப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, 

(b) ஒரு தொடக்கநிலைச்‌ சங்கத்திற்கான தேர்தல்‌ எதனையும்‌ பொறுத்த 

அளவில்‌ யாதேனுமொரு நீதிமன்றத்தின்‌ அல்லது பிற அதிகார அமைப்பின்‌ 

முன்னர்‌ குறிக்கப்பட்ட நாளன்று முடிவுறா நிலையிலிருக்கும்‌ பூசல்‌,



மேல்முறையீடு, சீராய்வு, மறுஆய்வு அல்லது பிற நடவடிக்கை எதுவும்‌ 

அற்றுப்போகும்‌. 

11. நீக்கமும்‌ காப்பும்‌.- (1) 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்‌ 

சங்கங்கள்‌ (தனி அலுவலர்கள்‌ நியமன) அவசரச்‌ சட்டமானது (தமிழ்நாடு அவசரச்‌ 

சட்டம்‌ 574991) இதன்‌ மூலம்‌ நீக்கப்படுகின்றது. 

(2) அவ்வாறு நீக்கப்படுகின்ற போதிலும்‌, மேற்சொன்ன அவசரச்‌ 

சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்‌, 

அதற்கு நேரிணையாக இந்தச்‌ சட்டத்திலுள்ள வகைமுறைகளின்படி 

செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகவோ கருதப்படுதல்‌ 

வேண்டும்‌.


Open official source version ↗

About this act

Jurisdiction
Tamil Nadu
Enactment date
1991-10-10
Sections available
Document reader
Source and version

India Code, Government of India. Text fetched 19 Oct 2026. Source metadata reports last modification: 2025-12-17. Check the linked official text and subsequent notifications when applying a provision.

Share this act

The Tamil Nadu Co-Operative Societies (Appointment of Special Officers) Act, 1991 — Tamil | NYAYA SIGNAL

Share the card with this clickable reading link. पढ़ें और अगली धारा देखें।

NYAYA SIGNAL · Free access · Official source references

· Saves and reading positions stay on this device.