Tamil Nadu · Act 9 of 2014

Tamil Nadu Entry into Public Places (Removal of Restriction on Dress) Act, 2014

An Act to provide for removal of restriction imposed by recreation clubs, hotels, theatres, malls, halls, auditoriums and stadiums on persons wearing veshti (dhoti) reflecting Tamil culture or any Indian traditional dress, to enter into such places.

Read in your languageअपनी भाषा में पढ़ें · Official source versions
Tamil
Find in this text

Tamil — official source version

the_tamil_nadu_entry_to_public_places_(removal_of_restriction_on_dress)_act,_2014.pdf.txt

2014ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது இடங்களுக்குள்‌ 

நுழைவதற்கான (ஆடை மீதான தடையை நீக்குதல்‌) 

சட்டம்‌ 

(தமிழ்நாடு சட்ட எண்‌ 9/2014) 
(2023, அக்டோபர்‌ 31 அன்று இருந்தவாறு) 

1௩௦ Tamil Nadu Entry into Public Places (Removal of 

Restriction on Dress) Act, 2014 

(Tamil Nadu Act No. 9 of 2014) 

(as on 31 October, 2023) 

தமிழாக்கம்‌ : 

தமிழ்நாடு மாநிலச்‌ சட்ட ஆட்சிமொழி ஆணையம்‌ 

சென்னை 

தமிழ்நாடு அரசுக்காகத்‌ தமிழ்நாடு அரசு எழுதுபொருள்‌ 
அச்சுத்துறை ஆணையரால்‌ அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 

2023





2014ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது இடங்களுக்குள்‌: 

நுழைவதற்கான (ஆடை மீதான தடையை நீக்குதல்‌) 

சட்டம்‌ 

(தமிழ்நாடு சட்ட எண்‌ 9/2014) 

பொருளடக்கம்‌ 

குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌. 

பொருள்வரையறைகள்‌. 

நுழைவதற்கான தடையினை ந்க்குதல்‌. 

உரிமம்‌ / அனுமதி நீக்கம்‌ செய்யப்படுதல்‌. 

தண்டனை. 

நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌. 

விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 

இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.



1 

2014ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது இடங்களுக்குள்‌ 

நுழைவதற்கான (ஆடை மீதான தடையை நீக்குதல்‌) 

சட்டம்‌ 

தமிழ்நாடு சட்ட எண்‌ 9/2014 

[தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ பின்வரும்‌ சட்டமானது 2014ஆம்‌ 
ஆண்டு ஆகஸ்டு திங்கள்‌ 21ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌ 
ஏற்பிசைவைப்‌ பெற்று அது பொதுத்‌ தகவலுக்காக தமிழ்நாடு 
அரசிதழில்‌ வெளியிடப்பட்டது. 

தமிழர்‌ பண்பாட்டினைப்‌ பிரதிபலிக்கும்‌ உடையான வேட்டி 

அல்லது இந்தியப்‌ பாரம்பரிய உடை அணிந்து 

வருவோரை மனைகிழ்‌ மன்றங்கள்‌, உணவகங்கள்‌, 

திரையரங்குகள்‌, பெரும்‌ வணிக வளாகங்கள்‌, 

அரங்குகள்‌, அவைக்கூடங்கள்‌ மற்றும்‌ 

விளையாட்டுஅரங்குகளின்‌ உள்ளே நுழையத்‌ தடை 

விதிப்பதை நீக்குவதற்கு வகைசெய்வதற்கான ஒரு 

சட்டம்‌. 

சில மன்றங்கள்‌ தங்கள்‌ கட்டுப்பாட்டின்கீழ்‌ அல்லது 

மேலாண்மையின்கீழ்‌ உள்ள பொது இடங்களுக்கு வரும்‌ 

நபர்களை அவர்கள்‌ மேற்கத்திய பாணியில்‌ உடையை 

அல்லது ஆடையை அணிந்திருக்கவில்லை என்கின்ற 

காரணத்தின்‌ அடிப்படையில்‌ உள்ளே நுழைவதற்கு 

அனுமதி மறுக்கப்படுவதாக அரசின்‌ கவனத்திற்குக்‌ 

கொண்டுவரப்பட்டுள்ளது என்பதாலும்‌; 

ஆகையால்‌, நமது தொன்மையான சிறப்புமிக்க 

பன்முகக்‌ கூட்டுப்‌ பண்பாட்டின்‌ மதிப்பினை உணர்ந்து 

அதனைப்‌ பாதுகாப்பது ஒவ்வோர்‌ இந்தியக்‌ குடிமகனின்‌: 

அடிப்படை கடமையாகும்‌ என்பதாலும்‌; 

ஆகையால்‌, பொது இடங்களுக்கு வருகைதரும்‌ 

நபர்களை அவர்கள்‌ அணிந்திருக்கும்‌ உடை மேற்கத்திய 

பண்பாட்டின்‌ அடிப்படையில்‌ இல்லை என்கின்ற 

காரணத்திற்காக உள்ளே நுழைய அனுமதி மறுத்து



2 

விதிக்கப்பட்டிருக்கும்‌ தடையானது கடந்த கால ஆங்கிலப்‌ 

பேரரசின்‌ ஆதிக்கச்‌ செயல்‌ இன்னும்‌ தொடர்ந்து 

கொண்டிருப்பதையே குறிக்கிறது என்பதாலும்‌; 

கடந்த காலத்தில்‌ இவ்வாறான நிகழ்வுகள்‌ 

ஏற்பட்டுள்ளதன்‌ காரணத்தினால்‌ அத்தகைய தடைகள்‌ 

அகற்றப்பட வேண்டும்‌ என்பது மிகவும்‌ இன்றியமையாதது 

ஆகிறது என்பதாலும்‌; 

நமது பண்பாடு, பழக்க வழக்கங்கள்‌ மற்றும்‌ 

தொன்மையான பாரம்பரியம்‌ ஆகியவற்றைப்‌ பாதுகாக்கும்‌ 

நோக்கில்‌, பொது இடங்களுக்குள்‌ தமிழர்‌ பண்பாட்டினைப்‌ 

பிரதிபலிக்கும்‌ வேட்டி அல்லது வேறு எந்தவோர்‌ இந்தியப்‌ 

பாரம்பிய உடையை அணிந்து வருபவர்களை நுழைய 

அனுமதி மறுக்கும்‌ வகையில்‌ விதிக்கப்பட்டிருக்கும்‌ 

தடையினை நீக்குவது என அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தியக்‌ குடியரசின்‌ அறுபத்து ஐந்தாம்‌ ஆண்டில்‌ 

தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு 

சட்டமியற்றப்படுவதாகுக:- 

1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌.-- (1) இந்தச்‌ 

சட்டம்‌, 2014ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது 

இடங்களுக்குள்‌ நுழைவதற்கான (ஆடை மீதான தடையை 

நீக்குதல்‌) சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. 

(2) இந்தச்‌ சட்டம்‌ உடனடியாக நடைமுறைக்கு 

வருதல்‌ வேண்டும்‌. 

2. பொருள்வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌. 

தறுவாய்‌ வேறு பொருள்‌ குறித்தாலன்றி,- 

(a) "அரசு" என்பது, மாநில அரசு எனப்‌ 

பொருள்படும்‌ ; 

(b) "பொது இடங்கள்‌" என்பது, பொது மக்கள்‌: 

பரவலாகக்‌ கலந்துகொள்ளும்‌ விழாக்கள்‌, நிகழ்ச்சிகள்‌, 

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்‌, விளையாட்டுகள்‌ மற்றும்‌.



3 

இதர நிகழ்வுகள்‌ ஆகியன நடைபெறும்‌ இடங்களான 

மனைகிழ்‌ மன்றங்கள்‌, உணவகங்கள்‌, திரையரங்குகள்‌, 

பெரும்‌ வணிக வளாகங்கள்‌, அரங்குகள்‌, 

அவைக்கூடங்கள்‌, விளையாட்டுஅரங்குகள்‌ மற்றும்‌ 

அரசால்‌ அறிவிக்கப்படும்‌ இதர இடங்கள்‌ எனப்‌ 

பொருள்படும்‌. 

3. நுழைவதற்கான தடையினை நீக்குதல்‌.-- (1) 

மனைகிழ்‌ மன்றம்‌, கூட்டமைப்பு, அறக்கட்டளை, நிறுமம்‌ 

அல்லது சங்கம்‌ எதனாலும்‌ செய்யப்பட்ட விதி, 

ஒழுங்குவிதி அல்லது துணைவிதி அல்லது 
பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, அறிவுறுத்தல்‌, 

வழிகாட்டுநெறிமுறை எதிலும்‌ என்ன அடங்கியிருந்த 

போதிலும்‌, தமிழர்‌ பாரம்பரிய உடையான வேட்டி அல்லது 

பிற இந்தியப்‌ பாரம்பரிய உடை எதனையும்‌ அணிந்து வரும்‌ 

நபர்‌ எவருக்கும்‌ அவர்‌ அணிந்திருக்கும்‌ உடையைக்‌ 

காரணம்‌ காட்டி அனுமதியை மறுத்தல்‌ கூடாது: 

வரம்புரை: அணிந்துவரும்‌ உடையானது நற்பாங்கான 

முறையில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 

(2) பதிவு பெற்ற அல்லது பதிவு பெறாத 
எந்தவொரு மனமைகிழ்‌ மன்றமோ, கூட்டமைப்போ, 

அறக்கட்டளையோ, நிறுமமோ அல்லது சங்கமோ தங்கள்‌ 

கட்டுப்பாட்டின்‌ அல்லது மேலாண்மையின்கீழ்‌ இயங்கும்‌ 

பொது இடங்களில்‌ தமிழர்‌ பாரம்பரிய உடையான வேட்டி 

அல்லது இதர இந்தியப்‌ பாரம்பரிய உடையணிந்து வருபவர்‌ 

நுழைவதற்குத்‌ தடை விதிக்கும்‌ எந்தவொரு விதி, 
ஒழுங்குவிதி அல்லது துணைவிதி அல்லது சுற்றறிக்கை, 

அறிவுறுத்தல்‌ அல்லது வழிகாட்டுநெறிமுறையை 
இயற்றுதல்‌ கூடாது. 

(3) மனைகிழ்‌ மன்றம்‌, கூட்டமைப்பு, 

அறக்கட்டளை, நிறுமம்‌ அல்லது சங்கம்‌ எதனாலும்‌ 

செய்யப்பட்ட விதி, ஒழுங்குவிதி அல்லது துணைவிதி



4 

எதிலும்‌ அல்லது அவற்றால்‌ பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, 

அறிவுறுத்தல்‌, வழிகாட்டுநெறிமுறை எதிலும்‌ 
அடங்கியிருப்பது, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைக்கு 

முரணாக இருப்பின்‌ அது இல்லா நிலையது ஆகும்‌. 

4. உரிமம்‌ 7 அனுமதி நீக்கம்‌ செய்யப்படுதல்‌.- 

மனைகிழ்‌ மன்றம்‌, கூட்டமைப்பு, அறக்கட்டளை, நிறுமம்‌ 

அல்லது சங்கம்‌ எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ 

வகைமுறைகளை மீறினால்‌, அந்த மமைகிழ்‌ மன்றத்திற்கு, 

கூட்டமைப்புக்கு, அறக்கட்டளைக்கு, நிறுமத்திற்கு. 

அல்லது சங்கத்திற்கு அரசால்‌ வழங்கப்பட்ட உரிமம்‌ 

அல்லது அனுமதி, தொடர்புடைய உரிமதாரருக்கு 

அறிவிப்புக்‌ கொடுத்ததற்குப்‌ பின்பு நீக்கம்‌ செய்யப்படுதல்‌ 

வேண்டும்‌. 

5. தண்டனை.- இந்தச்‌ சட்டத்தின்‌ பிரிவு 3இல்‌ 

உள்ள வகைமுறைகளை மீறுவோர்‌ எவராகஇருப்பினும்‌, 

ஓராண்டு சிறைத்‌ தண்டனை மற்றும்‌ இருபத்தைந்தாயிரம்‌ 

ரூபாய்‌ வரை நீடிக்கப்படக்கூடிய அபராதத்துடன்‌ 

தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 

6. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌.- (1) 

இந்தச்‌ சட்டத்தின்படி குற்றம்‌ ஒன்று நிறுமம்‌ ஒன்றினால்‌ 
செய்யப்பட்டிருக்கின்ற நிலையில்‌, அந்தக்‌ குற்றம்‌ 

செய்யப்பட்டிருந்த நேரத்தில்‌, நிறுமத்தின்‌ 

அலுவற்பணிகளை நடத்துவதற்காக நிறுமத்திற்குப்‌ 
பொறுப்பாக இருந்த மற்றும்‌ பொறுப்புடையவராக இருந்த 

ஒவ்வொரு நபரும்‌, அதுபோல நிறுமமும்‌, அக்குற்றத்தைச்‌ 

செய்துள்ளதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதற்கு 

இணங்க அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு 

தண்டனை வழங்கப்படுதல்‌ வேண்டும்‌: 

வரம்புரை : ஆனால்‌, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்‌, 

அந்தக்‌ குற்றம்‌ தனது கவனத்திற்கு வரப்பெறாமல்‌ 
நிகழ்ந்தது அல்லது அத்தகைய குற்றம்‌ நடைபெறாமல்‌



இருப்பதற்குத்‌ தன்னால்‌ அனைத்து வகையான 

முயற்சிகளும்‌ மேற்கொள்ளப்பட்டது என நிரூபிக்கும்‌ 

பட்சத்தில்‌, அவரை இந்தச்‌ சட்டத்தின்‌ உட்பிரிவில்‌ உள்ள 

விதிமுறைகள்‌ தண்டனைக்குள்ளாக்காது. 

(2) உட்பிரிவு (1)இல்‌ என்ன அடங்கியிருந்த 

போதிலும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி குற்றம்‌ எதுவும்‌ 

நிறுமமொன்றினால்‌ செய்யப்பட்டிருக்கிற நிலையில்‌ 

மற்றும்‌ அது நிறுமத்தின்‌ இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ 

அல்லது பிற அலுவலர்‌ எவரின்‌ செயலின்பேரில்‌ 

அவருடைய இசைவுடன்‌ அல்லது மறைமுக ஆதரவுடன்‌ 

அல்லது கவனக்‌ குறைவு எதனாலும்‌ அக்குற்றம்‌ 

செய்யப்பட்டிருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டால்‌, 

அத்தகைய இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது பிற 

அலுவலர்‌ அந்தக்‌ குற்றத்தைச்‌ செய்துள்ளவராகக்‌ 

கருதப்படுதல்‌: வேண்டும்‌ மற்றும்‌ அதற்கிணங்க 

அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுத்‌ 

தண்டனை வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. 

விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக, 

(@) "நிறுமம்‌" என்பது, கூட்டுரும அமைப்பு 

எதுவும்‌ எனப்‌ பொருள்படும்‌ மற்றும்‌ ஒரு நிறுவகத்தை 

அல்லது பிற தனி நபர்களின்‌ பிற கழகத்தையும்‌ 

உள்ளடக்கும்‌; மற்றும்‌ 

(௦) "இயக்குநர்‌" என்பது, 

i) ஒரு நிறுவனம்‌ தொடர்பாக, 

நிறுவனத்திலுள்ள பங்குதாரர்‌ ஒருவர்‌ 
எனப்‌ பொருள்படும்‌; 

(1) ஒரு சங்கம்‌, அறக்கட்டளை அல்லது பிற 

தனி நபர்களின்‌ கழகம்‌ என்பது, 

நிகழ்வுக்கேற்ப, சங்கம்‌, அறக்கட்டளை 

அல்லது பிற கழகத்தின்‌ விதிகள்‌,



6 

சங்கம்‌, அறக்கட்டளை அல்லது பிற 

கழகத்தின்‌. அலுவற்பணிகளின்‌. 

மேலாண்மை ஒப்படைக்கப்பட்ட நபர்‌ 

எவரும்‌, எனப்‌ பொருள்படும்‌. 

7. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) அரசு, 

அறிவிக்கையின்‌. மூலமாக, இந்தச்‌ சட்டத்தின்‌. 

நோக்கங்கள்‌ அனைத்தையும்‌ அல்லது எதனையும்‌ 

நிறைவேற்றுவதற்காக விதிகளைச்‌ செய்யலாம்‌. 

(2) (ஐ இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட 

விதிகள்‌ அனைத்தும்‌, தமிழ்நாடு அரசிதழில்‌ 

வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை குறிப்பிட்ட 

தேதியில்‌ நடைமுறைக்கு வர வேண்டும்‌ என்று 

குறிப்பிட்டிருந்தாலன்றி, எந்தத்‌ தேதியில்‌ அவை 
வெளியிடப்பட்டதோ அந்தத்‌ தேதியில்‌ நடைமுறைக்கு 

வருதல்‌ வேண்டும்‌. 

0) இந்தச்‌ சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட 

அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌ குறிப்பிட்ட தேதியில்‌ 

நடைமுறைக்கு வரவேண்டும்‌. என்று 

குறிப்பிட்டிருந்தாலன்றி, எந்தத்‌ தேதியில்‌ அவை 
வெளியிடப்பட்டதோ அந்தத்‌ தேதியில்‌ நடைமுறைக்கு 

வருதல்‌ வேண்டும்‌. 

(3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி 

அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை 

ஒவ்வொன்றும்‌ அது அவ்வாறு செய்யப்பட்ட 

அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌, கூடியவிரைவில்‌, 

சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌, 

மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ 

அல்லது அதனையொட்டி வரக்கூடிய கூட்டத்தொடர்‌ 

முடிவடைவதற்கு முன்னர்‌, அத்தகைய விதி அல்லது 
அறிவிக்கை அல்லது ஆணை எதிலும்‌ மாறுதல்‌



7 

எதனையும்‌ சட்டமன்றப்‌ பரவையானது செய்யுமானால்‌, 

அல்லது அத்தகைய விதியோ அல்லது அறிவிக்கையோ 

அல்லது ஆணையோ செய்யப்படுதல்‌ அல்லது 

பிறப்பிக்கப்படுதல்‌ கூடாது எனச்‌ சட்டமன்றப்‌ பேரவை 

முடிவு செய்யுமாயின்‌, அதன்‌ பின்பு அந்த விதியானது, அந்த 

அறிவிக்கையானது. அல்லது ஆணையானது அதன்‌ 

பின்னர்‌ அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே 

செல்திறம்‌ பெறும்‌ அல்லது நிகழ்விற்கேற்ப, செல்திறம்‌ 
பெறாது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌ அவ்வாறான மாறுதல்‌ 

அல்லது அழித்தறவு எதுவும்‌ அந்த விதியின்படி அல்லது 
அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னரே 

செய்யப்பட்ட ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌. 

ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 
8. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- 

இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளைச்‌ 

செயல்படுத்துவதில்‌ இடர்ப்பாடு ஏதேனும்‌ எழுமானால்‌, 

அரசு, ஆணை மூலமாக, இந்தச்‌ சட்டத்தின்‌ 

வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில்‌ 

இடர்ப்பாட்டை நீக்குவதற்குத்‌ தேவையானவைடென்றோ 

அல்லது உகந்தவையென்றோ தனக்குத்‌ தோன்றுகிற 

அத்தகைய வகைமுறைகளைச்‌ செய்யலாம்‌: 

வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும்‌, இந்தச்‌ 

சட்டத்தின்‌. தொடக்கத்தேதியிலிருந்து கண்டு 

ஆண்டுகள்‌ காலஅளவு முடிவடைந்த பின்னர்‌ 

செய்யப்படுதல்‌ கூடாது.


Open official source version ↗

About this act

Jurisdiction
Tamil Nadu
Enactment date
2014-08-21
Sections available
8

Read the sections

Source and version

India Code, Government of India. Text fetched 12 Oct 2026. Source metadata reports last modification: 2025-05-22. Check the linked official text and subsequent notifications when applying a provision.

Share this act

Tamil Nadu Entry into Public Places (Removal of Restriction on Dress) Act, 2014 — Tamil | NYAYA SIGNAL

Share the card with this clickable reading link. पढ़ें और अगली धारा देखें।

NYAYA SIGNAL · Free access · Official source references

· Saves and reading positions stay on this device.