Tamil Nadu · Act 4 of 2011

Tamil Nadu Non-Resident Tamils' Welfare Act 2011

An Act to provide for the constitution of a Welfare Fund to grant relief, to ensure the welfare of and to pay pension and other benefits to the Non-Resident Tamils and to promote companies or co-operative societies or societies or other institutions of Non-Resident Tamils for their welfare.

Read in your languageअपनी भाषा में पढ़ें · Official source versions
Tamil
Find in this text

Tamil — official source version

the_tamil_nadu_non-resident_tamils_welfare_act,_2011.pdf.txt

2011ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே 

வாழும்‌ தமிழர்கள்‌ நலச்‌ சட்டம்‌ 

(தமிழ்நாடு சட்ட எண்‌ 4/2011) 

(2023, அக்டோபர்‌ 31 அன்று இருந்தவாறு) 

The Tamil Nadu Non-Resident Tamils’ Welfare 

Act, 2011 

(Tamil Nadu Act No. 4 of 2011) 

(as on 31 October, 2023) 

தமிழாக்கம்‌ : 

தமிழ்நாடு மாநிலச்‌ சட்ட ஆட்சிமொழி ஆணையம்‌ 

சென்னை 

தமிழ்நாடு அரசுக்காகத்‌ தமிழ்நாடு அரசு எழுதுபொருள்‌ 
அச்சுத்துறை ஆணையரால்‌ அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 

2023



i 

2011ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே 

பிரிவு 

ஓ
ல
 

௯
௮
 

10. 

11. 

12. 

13. 

14. 

15. 

16. 

17. 

வாழும்‌ தமிழர்கள்‌ நலச்‌ சட்டம்‌ 

(தமிழ்நாடு சட்ட எண்‌ 4/2011) 

பொருளடக்கம்‌ 

குறுந்தலைப்பும்‌ தொடக்கமும்‌. 

பொருள்வரையறைகள்‌. 

செயல்திட்டம்‌. 

செயல்திட்டம்‌ பொருந்துவது தொடர்பான 

பூசல்கள்‌. 

நிதிக்கான பங்களிப்பு. 

நிதியைப்‌ பயன்படுத்துதல்‌. 

உறுப்பினர்நிலை. 

உறுப்பினர்நிலை அற்றுப்போதல்‌. 

தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(வெளிநாட்டில்‌ வாழும்‌) தமிழர்களுக்கான சிறப்பு 

உதவி நிதி. 

வாரியத்தை நிறுவுதல்‌. 

வாரிய உறுப்பினர்களின்‌ பதவிக்காலம்‌. 

வாரியத்தின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌. 

தகுதிக்கேடுகளும்‌ நீக்கமும்‌. 

வாரியத்தின்‌ உறுப்பினர்களின்‌ பதவி விலகல்‌. 

காலிப்பணியிடங்களை நிரப்புதல்‌. 

அலுவலர்களையும்‌, பணியாளர்களையும்‌ 

நியமித்தல்‌. 

கடன்‌ வாங்குவதற்கான வாரியத்தின்‌ அதிகாரம்‌.



18. 

19. 

20. 

21. 

22. 

23. 

24. 

25. 

26. 

27. 

28. 

29. 

30. 

ii 

நிறுமங்கள்‌, கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌, சங்கங்கள்‌ 

மற்றும்‌ பிற நிறுவனங்கள்‌ வாரியத்தினால்‌ 

தொடங்கப்படுதல்‌. 

வாரியம்‌ பொறுப்புறுதி அளிப்பவராகச்‌ 

செயல்படுதல்‌. 

நிலுவைத்‌ தொகையைத்‌ தீர்மானிப்பதற்கும்‌ 

இழப்பீட்டை வசூலிப்பதற்குமான அதிகாரம்‌. 

வாரியத்தின்‌ உறுப்பினர்கள்‌ பொது ஊழியர்களாக 

இருப்பர்‌. 

தண்டனை. 

நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றச்செயல்கள்‌. 

நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட 

நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு. 

வாரியத்தின்‌ செயல்பாடு குறித்த விசாரணை. 

வாரியத்தைக்‌ கலைத்துக்‌ கைப்பற்றுதல்‌. 

கணக்குகள்‌ மற்றும்‌ தணிக்கை. 

உரிமையியல்‌ நீதிமண்ற அதிகார வரம்பிற்குத்‌ 

தடை. 

இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. 

விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 

இணைபப்புப்‌ பட்டியல்‌.



1 

2011ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே 

வாழும்‌ தமிழர்கள்‌ நலச்‌ சட்டம்‌ 

(தமிழ்நாடு சட்ட எண்‌ 4/2011) 

[தமிழ்நாடு சட்டப்‌ பேரவையின்‌ பின்வரும்‌ சட்டமானது, 2011ஆம்‌ 

ஆண்டு மார்ச்‌ திங்கள்‌ 1ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌ 
ஏற்பிசைவைப்‌ பெற்று, பொதுத்‌ தகவலுக்காகத்‌ தமிழ்நாடு 

அரசிதழில்‌ வெளியிடப்பட்டது] 

தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத தமிழர்களுக்கு 

உதவிகளை வழங்குவதற்கும்‌ அவர்‌ தம்‌ நலன்களை 

உறுதி செய்வதற்கும்‌ அவர்களுக்கு ஓய்வூதியம்‌ 
மற்றும்‌ பிற நலன்களை வழங்குவதற்கும்‌ மற்றும்‌ 
அவர்‌ நலனுக்காக தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ 

கொண்டிராத தமிழர்களின்‌ நிறுமங்களை அல்லது 

கூட்டுறவுச்‌ சங்கங்களை அல்லது சங்கங்களை 

அல்லது பிற நிறுவனங்களைத்‌ தொடங்குவதற்கும்‌ 

நல நிதி ஒன்றை அமைத்துருவாக்குவதற்குமான 
ஒரு சட்டம்‌. 

தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

தமிழர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கும்‌ அவர்‌ தம்‌ 

நலன்களை உறுதி செய்வதற்கும்‌ அவர்களுக்கு 

ஓய்வூதியம்‌ மற்றும்‌ பிற நலன்களை வழங்குவதற்கும்‌ 

மற்றும்‌ அவர்‌ நலனுக்காக தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ 

கொண்டிராத தமிழர்களின்‌ நிறுமங்களை அல்லது 

கூட்டுறவுச்‌ சங்கங்களை அல்லது சங்கங்களை அல்லது 

பிற நிறுவனங்களைத்‌ தொடங்குவதற்கும்‌ நல நிதி 
ஒன்றை அமைத்துருவாக்குவது உகந்ததாக இருப்பதால்‌;



2 

இந்தியக்‌ குடியரசின்‌ அறுபத்து இரண்டாம்‌ ஆண்டில்‌ 

தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ 

இயற்றப்பட்டச்‌ சட்டம்‌ பின்வருமாறு:- 

1. குறுந்தலைப்பும்‌ தொடக்கமும்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 

2011ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே 

வாழும்‌ தமிழர்கள்‌ நலச்‌ சட்டம்‌ என வழங்கப்படும்‌. 

(2) இது, மாநில அரசு அறிவிக்கையின்‌. 

மூலமாகக்‌ குறிப்பிடக்கூடிய தேதியன்று நடைமுறைக்கு 

வருதல்‌ வேண்டும்‌. 

2. பொருள்வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌, 

தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி,- 

(a) "வாரியம்‌" என்பது, பிரிவு 10இன்படி 

அமைக்கப்பட்ட வாரியம்‌ எனப்‌ பொருள்படும்‌; 

1 "தலைவர்‌" என்பது, வாரியத்தின்‌. 

தலைவர்‌ எனப்‌ பொருள்படும்‌; 

(b) "நிறுமம்‌" என்பது, 2013ஆம்‌ ஆண்டு 

நிறுமங்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 18/2013) பிரிவு 

2இன்‌ கூறு (20)இல்‌ வரையறுக்கப்பட்ட ஒரு நிறுமம்‌ 

எனப்‌ பொருள்படும்‌; 

(c) "பங்களிப்பு என்பது, பிரிவு 5இன்படி 

நிதிக்குச்‌ செலுத்தத்தக்க பணத்தொகை எனப்‌ 

பொருள்படும்‌; 

(0) "கூட்டுறவுச்‌ சங்கம்‌" என்பது, 1983ஆம்‌ 

ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டத்தின்படி 

(தமிழ்நாடு சட்டம்‌ 30/1983) பதிவு செய்யப்பட்ட ஒரு 

கூட்டுறவுச்‌ சங்கம்‌ எனப்‌ பொருள்படும்‌; 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) பிரிவு 
2 ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



3 

(6) "உறுப்பினராகக்‌ கருதப்பட்டவர்‌" என்பது, 

தமிழ்நாட்டிற்குத்‌ திரும்பி வந்ததன்‌ காரணமாக 
உறுப்பினராக இருப்பது அற்று போயிருக்கிற, ஆனால்‌ 

[பிரிவு 5இன்‌ உட்பிரிவு (6) இன்படி] நிதிக்குத்‌ தொடர்ந்து 
பங்களிப்பினைச்‌ செலுத்திக்‌ கொண்டிருக்கிற, 

தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத (வெளிநாட்டில்‌ 

வாழும்‌) தமிழர்‌ அல்லது தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ 

கொண்டிராத (இந்தியாவில்‌ வாழும்‌) தமிழர்‌ ஒருவர்‌ எனப்‌ 

பொருள்படும்‌; 

(9) "சார்ந்திருப்பவர்‌" என்பது, நிதி உறுப்பினர்‌ 

ஒருவரின்‌ குடும்ப உறுப்பினர்‌ எனவும்‌, குடும்பம்‌ ஒன்று 

இல்லாத நிலையில்‌, அந்த உறுப்பினரின்‌ திருமணமாகாத 

மற்றும்‌ வேலையில்‌ இல்லாத சகோதரர்‌ அல்லது சகோதரி 

அல்லது விதவைச்‌ சகோதரி எனப்‌ பொருள்படும்‌; 

@ I 

(h) "குடும்பம்‌" என்பது, 

() ஆண்‌ நபராக இருந்தால்‌ மனைவி 

அல்லது பெண்‌ நபராக இருந்தால்‌ 

கணவர்‌; 

(i) இருபத்தோரு வயது நிறைவடையாத 

மகன்‌ மற்றும்‌ சட்டப்படியாக 

தத்தெடுக்கப்பட்ட மகன்‌ அல்லது மகள்‌: 

உள்ளிட்ட திருமணமாகாத அல்லது 

விதவை மகள்‌; 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) பிரிவு 
2 ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது. 
2. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) பிரிவு 
2 ஆல்‌ விட்டுவிடப்பட்டது.



4 

(0) அந்த உறுப்பினரை முழுமையாகச்‌ 

சார்ந்து வாழும்‌ தந்தை, தாய்‌, 
திருமணமாகாத சகோதரி மற்றும்‌ 

இளவராக உள்ள சகோதரர்‌, யாரும்‌ 

இல்லாத நிலையில்‌ அவ்வாறு 

சார்ந்திருப்பவராக இல்லாத உரிமை 

வயதடைந்த மகன்‌ மற்றும்‌ திருமணமான 

மகள்‌ எனப்‌ பொருள்படும்‌. 

0) நிதி” என்பது, பிரிவு இன்படி 

உருவாக்கப்பட்ட தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல நிதி எனப்‌ பொருள்படும்‌; 

() "அரசு" என்பது, மாநில அரசு எனப்‌ 

பொருள்படும்‌; 

k) T 

0) "உறுப்பினர்‌" என்பது, நிதி ஒன்றின்‌ 
உறுப்பினர்‌ எனப்‌ பொருள்படும்‌; 

00) "வாரியத்தின்‌ உறுப்பினர்‌ என்பது 

வாரியத்தின்‌ தலைவரையும்‌ உள்ளடக்கும்‌; 

(Ib) "உறுப்பினர்‌ செயலாளர்‌" என்பது, 

வாரியத்தின்‌ உறுப்பினர்‌ செயலாளர்‌ எனப்‌ பொருள்படும்‌; 

(m) "தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(வெளிநாட்டில்‌ வாழும்‌), தமிழர்‌" என்பது, இந்தியக்‌ 

கடவுச்சீட்டு ஒன்றைக்‌ கொண்டிருக்கிற மற்றும்‌ 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 2 ஆல்‌ விட்டுவிடப்பட்டது. 

2. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 2 ஆல்‌ உட்புகுத்தப்பட்டது.



5 

அயல்நாட்டு நுழைவுச்‌ சான்று (visa) பெற்று வெளிநாட்டில்‌ 

வேலையில்‌ இருக்கிற அல்லது வாழ்க்கைத்‌ 

தொழிலுக்காக வெளிநாட்டில்‌ குடியிருக்கிற தமிழர்‌ 

எனப்‌ பொருள்படும்‌; 

(n) "தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(இந்தியாவில்‌ வாழும்‌) தமிழர்‌" என்பது, இம்மாநிலத்திற்கு 

வெளியே இந்தியாவில்‌ வேலை செய்கின்ற அல்லது 

குடியிருக்கிண்ற தமிழர்‌ ஒருவர்‌ எனப்‌ பொருள்படும்‌; 

ஆனால்‌, மத்திய அரசின்‌, மாநில அரசின்‌, உள்ளாட்சி 

அமைப்பின்‌ பணியாளர்கள்‌ அல்லது மத்திய மற்றும்‌ மாநில 

அரசுகளின்‌ பொதுத்துறை நிறுவனம்‌ அல்லது தன்னாட்சி 

நிறுவனங்களின்‌ பணியாளர்களை உள்ளடக்காது; 

(0) "வகுத்துரைக்கப்பட்ட என்பது, இந்தச்‌ 

சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகளால்‌ 

வகுத்துரைக்கப்பட்டது எனப்‌ பொருள்படும்‌; 

(ற "செயல்திட்டம்‌" என்பது, பிரிவு 3இன்படி 

அரசால்‌ செய்யப்பட்ட தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ 

கொண்டிராத தமிழர்களுக்கான நலத்திட்டம்‌ எனப்‌ 

பொருள்படும்‌; 

@ "சிறப்பு உதவி நிதி" என்பது, பிரிவு 
9இன்படி அமைத்து உருவாக்கப்பட்ட சிறப்பு உதவி நிதி 

எனப்‌ பொருள்படும்‌; 

(r) "மாநிலம்‌" என்பது, தமிழ்நாடு மாநிலம்‌ எனப்‌ 

பொருள்படும்‌; 

(5) "தமிழர்‌" என்பது, இம்மாநிலத்தில்‌ பிறந்த 

அல்லது இம்மாநிலத்தை வாழ்விடமாகக்‌ கொண்டு 

குடியேறிய ஒரு நபர்‌ எனப்‌ பொருள்படும்‌.



6 

விளக்கம்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, 

இம்மாநிலத்தை வாழ்விடமாகக்‌ கொண்டு குடியேறிய ஒரு 

நபர்‌ என்பது, இம்மாநிலத்திற்கு வெளியே பிறந்து ஆனால்‌ 

மூன்று ஆண்டுகளுக்குக்‌ குறையாத ஒரு காலஅளவிற்கு 
இம்மாநிலத்தில்‌ தொடர்ச்சியாகக்‌ குடியிருக்கும்‌ ஒரு நபர்‌ 

எனப்‌ பொருள்படும்‌. 

3. செயல்திட்டம்‌.- (1) அரசானது, அறிவிக்கையின்‌: 

மூலமாக, செயல்திட்டம்‌ ஒன்றின்‌ மூலம்‌ 

உறுப்பினர்களைப்‌ பதிவு செய்வதற்கு வகை செய்யலாம்‌ 

மற்றும்‌ தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(வெளிநாட்டில்‌ வாழும்‌) தமிழர்களின்‌ அல்லது 

தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத (இந்தியாவில்‌ 

வாழும்‌) தமிழர்களின்‌ சமூகப்‌ பாதுகாப்பு மற்றும்‌ நலனை 

உறுதிசெய்யும்‌ நோக்கத்திற்காக வகைமுறைகளைச்‌ 

செய்யலாம்‌. 

(2) உட்பிரிவு (1)இன்படிச்‌ செய்யப்பட்ட 

செயல்திட்டம்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ இணைப்புப்‌ பட்டியலில்‌ 

குறிப்பிடப்பட்ட விவரங்களுக்கு வகைசெய்யலாம்‌. 

(3) அரசானது, வாரியத்துடன்‌ கலந்தாய்வு செய்து, 

அறிவிக்கையின்‌. மூலமாக, மேற்சொல்லப்பட்ட 

செயல்திட்டத்தின்‌ கூடுதல்‌ வகைமுறைகளைச்‌ 

சேர்க்கலாம்‌ அல்லது அவற்றைத்‌ திருத்தலாம்‌; அல்லது 

அவை அனைத்தையுமோ அல்லது அவற்றுள்‌ 

ஏதொன்றையுமோ மாற்றியமைக்கலாம்‌ அல்லது அதனால்‌ 

செய்யப்பட்ட செயல்திட்டம்‌ எதற்கும்‌ பதிலாக மற்றொரு 

செயல்திட்டத்தை அமைக்கலாம்‌.



7 

4. செயல்திட்டம்‌ பொருந்துவது தொடர்பான 

பூசல்கள்‌.- தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(வெளிநாட்டில்‌ வாழும்‌) தமிழர்‌ அல்லது தமிழ்நாட்டை 

வாழ்விடமாகக்‌ கொண்டிராத (இந்தியாவில்‌ வாழும்‌) 

தமிழருக்குச்‌ செயல்திட்டம்‌ எதுவும்‌ பொருந்துமா என்பது 

குறித்து பிரச்சனை ஏற்பட்டால்‌, இந்த விவரமானது இதன்‌ 

பொருட்டு வகுத்துரைக்கப்படும்‌ அதிகாரஅமைப்பிற்குக்‌ 

குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; அந்த அதிகாரஅமைப்பின்‌: 

முடிவே இறுதியானதாகும்‌. 

5. நிதிக்கான பங்களிப்பு-- (1) இந்தச்‌ 

செயல்திட்டத்தின்படி, தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல நிதி என்ற பெயரிலும்‌, தன்மையிலும்‌ ஒரு 

நிதியானது அமைத்துருவாக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ 

உட்பிரிவு (3)இல்‌ குறிப்பிடப்பட்ட வருவாய்‌ ஆதாரங்கள்‌ 

மூலமாகப்‌ பெறப்பட்ட பணத்தொகைகள்‌ அனைத்தும்‌ 

அத்தகைய நிதியில்‌ வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. 

(2)வாரியமானது, நிதியை தேசிய வங்கிகள்‌. 

ஏதொன்றிலுமோ அல்லது தமிழ்நாடு மாநிலக்‌ கூட்டுறவு 

வங்கி அல்லது அரசு அனுமதியுடன்‌ வாரியத்தால்‌, முடிவு 

செய்யப்படும்‌ ஏதேனும்‌ பிற வங்கியின்‌ கட்டுப்பாட்டிலும்‌ 

மேற்பார்வையின்‌ கீழும்‌ உள்ள ஏதேனும்‌ ஒரு கூட்டுறவு 

வங்கியில்‌ வைத்திருத்தல்‌ வேண்டும்‌. அத்தகைய ஒரு 

கணக்கானது வாரியத்தின்‌ சார்பில்‌ கையொப்பமிடுவதற்கு 

அதிகாரம்‌ அளிக்கப்பட்டவர்களுள்‌ எவரேனும்‌ இருவரால்‌ 

கூட்டாக செயற்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌.



8 

அவர்களுள்‌ ஒருவர்‌ உறுப்பினர்‌ செயலாளராக] இருத்தல்‌ 

வேண்டும்‌. 
(3) நிதிக்கு அளிக்கப்பட்ட பங்களிப்புகள்‌, 

உட்பிரிவுகள்‌ (4), (5), (6) மற்றும்‌ (8) ஆகியவற்றில்‌ 

குறிப்பிடப்பட்ட ஆதாரங்களிலிருந்தும்‌ அந்தச்‌ 

செயல்திட்டத்தில்‌ குறிப்பிடப்படக்கூடிய அத்தகைய பிற 

வருவாய்‌ ஆதாரங்களிலிருந்தும்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 

(4) தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(வெளிநாட்டில்‌ வாழும்‌) தமிழராக உள்ள உறுப்பினர்‌ 

ஒவ்வொருவரும்‌, மாதம்‌ ஒன்றுக்கு முந்நூறு ரூபாய்‌ என்ற 

வீதத்தில்‌ தொகை ஒன்றைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. 

மற்றும்‌ தமிழ்நாட்டிற்குத்‌ திரும்பி வந்து நிலையாகக்‌ 

குடியேறிய அத்தகைய உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌, 

நிதிக்குப்‌ பங்களிப்பாக உட்பிரிவு (6)இல்‌ குறிப்பிடப்பட்ட 

வீதத்தில்‌ தொகை ஒன்றைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. 

(5 தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(இந்தியாவில்‌ வாழும்‌) தமிழராக உள்ள உறுப்பினர்‌ 

ஒவ்வொருவரும்‌, மாதம்‌ ஒன்றுக்கு நூறு ரூபாய்‌ என்ற 

வீதத்தில்‌ தொகை ஒன்றைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. 

மற்றும்‌ தமிழ்நாட்டிற்குத்‌ திரும்பி வந்து நிலையாகக்‌ 
குடியேறிய அத்தகைய உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌, 

நிதிக்குப்‌ பங்களிப்பாக உட்பிரிவு (6)இல்‌ 

குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில்‌ தொகை ஒன்றைச்‌ 

செலுத்துதல்‌ வேண்டும்‌. 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 

பிரிவு 3ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



9 

(6) உறுப்பினராகக்‌ கருதப்பட்ட ஒவ்வொருவரும்‌, 

நிதிக்குப்‌ பங்களிப்பாக மாதம்‌ ஒன்றுக்கு ஐம்பது ரூபாய்‌ 

என்ற விதத்தில்‌ தொகை ஒன்றைச்‌ செலுத்துதல்‌ 
வேண்டும்‌. 

(7) உட்பிரிவுகள்‌ (4), (5) மற்றும்‌ (6) 

ஆகியவற்றில்‌ குறிப்பிடப்பட்ட நிதிக்கான பங்களிப்புகள்‌, 

குறிப்பிடப்படும்‌. விதத்திலும்‌ அத்தகைய கால 

அளவிற்குள்ளாகவும்‌, அத்தகைய முறையிலும்‌ நிதியில்‌ 

செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 

(8) அரசானது, மானியத்தின்‌ மூலம்‌ உட்பிரிவுகள்‌: 

(4) மற்றும்‌ (5) ஆகியவற்றின்படி செலுத்தப்பட்ட 

பங்களிப்புகளின்‌ நூற்றுக்கு இரண்டு விழுக்காட்டிற்குச்‌ 

சமமான தொகை ஒன்றை நிதிக்கு ஒவ்வொரு நிதி 

ஆண்டிலும்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. 

(9) அரசானது, வாரியத்துடன்‌ கலந்தாய்வு செய்து, 

இந்தச்‌ செயல்திட்டத்தினைச்‌ செயற்படுத்துவதற்குத்‌ 

தேவையான தொகையைக்‌ கருத்திற்கொண்டு, மூன்று 

ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்கான பங்களிப்பு 

விதங்களை அறிவிக்கையின்‌ மூலமாகத்‌ திருத்தி 

அமைக்கலாம்‌. 

(10) நிதிக்குப்‌ பின்வரும்‌ தொகைகளும்‌ வரவு 

வைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அவையாவன:- 

(@) இந்திய அரசாலோ அல்லது மாநில 

அரசாலோ அல்லது பொதுத்துறை நிறுவனம்‌ அல்லது பிற 

நிறுவனம்‌ அல்லது அமைப்பு எதனாலும்‌ வழங்கப்படும்‌. 

கடன்கள்‌ அல்லது முன்பணங்கள்‌; 

(b) தனிநபர்‌ எவரும்‌ அல்லது இந்தியா அல்லது 

வெளிநாட்டில்‌ உள்ள அமைப்பு எதுவும்‌ அல்லது இந்தியா



10 

அல்லது வெளிநாட்டின்‌ அரசு முகமைகள்‌ அல்லது பிற 

ஆதாரங்கள்‌ எதிலிருந்தும்‌ பெறப்படும்‌ நன்கொடைகள்‌; 

) இந்தச்‌ சட்டத்தின்படி வசூலிக்கப்பட்ட 

விண்ணப்பக்கட்டணம்‌, பதிவுக்கட்டணம்‌, அல்லது பிற 

கட்டணம்‌ எதுவும்‌; 

(0) பிரிவு 17இன்படி, வாரியத்தால்‌ பெறப்பட்ட 

கடன்‌ தொகை எதுவும்‌; 

(6) வாரியத்தால்‌ செய்யப்பட்ட முதலீடு அல்லது 

பங்கின்‌ பேரிலான ஆதாயம்‌ அல்லது வட்டி அல்லது 

ஈவுத்தொகை அல்லது வரவான பிற தொகைகள்‌ எவையும்‌; 

() குறிப்பிடப்பட்ட விதத்தில்‌, இந்தச்‌ 

சட்டத்தின்‌ ஏதேனும்‌ வகைமுறைகளின்படி 

உறுப்பினர்களால்‌ கோரப்படாதத்‌ தொகை; மற்றும்‌ 

(ஓ) நிதியின்‌. வள ஆதாரங்களை 
மேம்படுத்துவதற்காக, பிற வருவாய்‌ ஆதாரங்களினால்‌ 

வாரியத்தால்‌ சேகரிக்கப்பட்ட தொகை எதுவும்‌. 

(11) செயல்திட்ட நிருவாகத்தின்‌ எதிர்பாராச்‌ 

செலவினம்‌ உள்ளிட்ட செயல்‌ திட்டத்தினைச்‌ 

செயற்படுத்துவது தொடர்பான செலவினங்கள்‌. 

அனைத்தும்‌ நிதியிலிருந்து எதிர்கொள்ளப்படுதல்‌ 

வேண்டும்‌. 
6. நிதியைப்‌ பயன்படுத்துதல்‌.- நிதியானது, பின்வரும்‌ 

அனைத்து நோக்கங்களுக்காகவோ அல்லது அவற்றுள்‌ 

ஏதேனும்‌ ஒன்றுக்காகவோ பயன்படுத்தப்படலாம்‌, 

அவையாவன; 

(ஐ) வெளிநாட்டில்‌ அல்லது இந்தியாவில்‌ உள்ள 

பிற மாநிலங்களில்‌ வசித்து வராத பிற உறுப்பினர்கள்‌: 

மற்றும்‌ அறுபது வயது நிறைவடைந்த உறுப்பினராகக்‌



11 

கருதப்பட்டவர்கள்‌ மற்றும்‌ ஐந்தாண்டுகளுக்குக்‌ குறையாத 

ஒரு காலஅளவிற்கான பங்களிப்பைச்‌ செலுத்தி 

இருந்தவர்களுக்கு ஓய்வூதியம்‌ வழங்குவதற்காக; 

(b) ஐந்தாண்டுகளுக்குக்‌ குறையாத ஒரு கால 
அளவிற்குப்‌ பங்களிப்பைச்‌ செய்த ஓர்‌ உறுப்பினரின்‌ 

அல்லது உறுப்பினராகக்‌ கருதப்பட்டவரின்‌ இறப்பின்‌: 

பேரில்‌ குடும்ப ஓய்வூதியம்‌ செலுத்துவதற்காக; 

விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்படி, ஐந்தாண்டுக்‌ கால 

அளவினைக்‌ கணக்கிடுவதற்காக ஓர்‌ உறுப்பினராக 

மற்றும்‌ ஓர்‌ உறுப்பினராகக்‌ கருதப்பட்டவரால்‌ 

கொடுக்கப்பட்ட பங்களிப்புகள்‌ கணக்கிடப்படுதல்‌ 

வேண்டும்‌. 

(௦) இறப்பின்‌ காரணமாக அல்லது நிரந்தர உடல்‌ 

ஊனமுற்றதன்‌ காரணமாக இரண்டாண்டுகளுக்கு 

மேற்பட்டு பணிசெய்ய இயலாமல்‌ இருக்கின்ற 

உறுப்பினரால்‌ செலுத்தப்பட்ட பங்களிப்பு தொகையைத்‌ 

திருப்பிச்‌ செலுத்துவதற்காக; 

(0) நோயின்‌ காரணமாக அல்லது விபத்தின்‌ 

காரணமாக ஓர்‌ உறுப்பினர்‌ இறந்ததன்‌ பேரில்‌ நிதி 

உதவியை வழங்குவதற்காக; 

(6) வகுத்துரைக்கப்படும்‌ பெரும்‌ நோயினால்‌ 

பாதிக்கப்பட்ட உறுப்பினர்களின்‌. மருத்துவச்‌ 

சிகிச்சைக்கான நிதி உதவியை வழங்குவதற்காக; 

(f) மகளிர்‌ உறுப்பினர்கள்‌ மற்றும்‌ 

உறுப்பினர்களின்‌ மகள்களுக்கான திருமணத்திற்கு நிதி 

உதவியையும்‌ மற்றும்‌ மகளிர்‌ உறுப்பினர்களுக்கான 

பேறுகாலச்‌ சலுகைகளையும்‌ வழங்குவதற்காக;



12 

(ற) உறுப்பினர்கள்‌: குடியிருப்பு வீட்டைக்‌ 

கட்டுவதற்காக அல்லது நிலத்தை வாங்குவதற்காக 

அல்லது நிலத்தை மற்றும்‌ கட்டடத்தை வாங்குவதற்காக 

அல்லது வீட்டைப்‌ பேணிவருவதற்காக அல்லது 

உறுப்பினர்களின்‌ குழந்தைகளுக்குக்‌ கல்வி 

வசதிகளுக்காக நிதி உதவி அல்லது கடன்கள்‌ அல்லது 

முன்பணங்கள்‌ வழங்குவதற்காக; 

(h) சுய வேலைவாய்ப்பு உதவித்தொகை 

வழங்குவதற்காக அல்லது உறுப்பினராகக்‌ 

கருதப்பட்டவருக்குச்‌ சுய வேலைவாய்ப்பைத்‌ தேடுவதற்கு 

உதவி அல்லது கடன்கள்‌ வழங்குவதற்காக; 

(i) வாழ்க்கைத்‌ தொழில்‌ எதனையும்‌ 

செய்வதற்குத்‌ தகுதியற்றவரான நிலையில்‌ நிரந்தர உடல்‌ 
ஊனத்தால்‌ பாதிக்கப்பட்டிருக்கிற உறுப்பினர்‌ ஒருவருக்கு 

நிதி உதவி வழங்குவதற்காக; 

() இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி 

அமைத்துருவாக்கப்பட்ட நிறுமம்‌ அல்லது நிறுவகம்‌ 

அல்லது கூட்டுறவுச்‌ சங்கம்‌ எதிலுமோ அல்லது பிற சங்கம்‌ 

அல்லது நிறுவனம்‌ எதிலுமோ முதலீடு செய்வதற்காக; 

மற்றும்‌ 

09 இந்தச்‌ செயல்‌ திட்டத்தில்‌ குறிப்பிடப்பட்ட 

பிற நோக்கங்களுக்காக. 

7. உறுப்பினர்‌ நிலை.-- (1) பதிணெட்டு வயது 

நிறைவடைந்த ஆனால்‌ ஐம்பத்தைந்து வயது 
நிறைவடையாத தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ 

கொண்டிராத (வெளிநாட்டில்‌ வாழும்‌) தமிழர்‌ 

ஒவ்வொருவரும்‌, பிற நாட்டிற்குச்‌ சென்று 

குடியேறுவதற்கான தடை நீக்கம்‌ (குடியேற்ற அனுமதி)



13 

பெறப்பட்ட பின்‌ மாநிலத்தை விட்டுச்‌ செல்வதற்கு உடன்‌ 

முன்னதாக செயல்‌ திட்டத்தில்‌ குறிப்பிடப்பட்ட முறையில்‌ 

நிதியில்‌ உறுப்பினர்‌ ஒருவராகத்‌ தண்னைப்‌ பதிவு செய்து 

கொள்வதற்குத்‌ தகுதியுடையவர்‌ ஆவார்‌. 
(2) பதிணெட்டு வயது நிறைவடைந்த, ஆனால்‌ 

ஐம்பத்தைந்து வயது நிறைவடையாத மற்றும்‌ 

மாநிலத்திற்கு வெளியே இந்தியாவில்‌ உள்ள இடம்‌ 

எதிலும்‌ ஆறு மாதங்களுக்கு மேலாகக்‌ குடியிருக்கிற 

தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத (இந்தியாவில்‌ 

வாழும்‌) தமிழர்‌ ஒவ்வொருவரும்‌, செயல்‌ திட்டத்தில்‌ 

குறிப்பிடப்பட்ட முறையில்‌ நிதியின்‌: உறுப்பினர்‌ 

ஒருவராகத்‌ தண்ணைப்‌ பதிவு செய்துகொள்வதற்குத்‌ 

தகுதியுடையவர்‌ ஆவார்‌. 
(3) உட்பிரிவு (1) அல்லது (2)இல்‌ என்ன 

அடங்கியிருந்தபோதிலும்‌, இந்தச்‌ செயல்திட்டத்தின்‌ 

தொடக்கத்திற்கு முன்பு, தமிழ்நாட்டைவிட்டு நீங்கிய, 

தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத (வெளிநாட்டில்‌ 

வாழும்‌) தமிழர்‌ அல்லது தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ 

கொண்டிராத (இந்தியாவில்‌ வாழும்‌) தமிழர்‌ 

ஒவ்வொருவரும்‌, அந்தச்‌ செயல்திட்டத்தில்‌ 

குறிப்பிடப்படக்கூடிய காலஅளவிற்குள்ளாகவும்‌, 

முறையிலும்‌, இந்த நிதியின்‌ ஓர்‌ உறுப்பினராகத்‌ தம்மைப்‌ 

பதிவு செய்து கொள்ளலாம்‌. 

(4) ஓர்‌ உறுப்பினரைப்‌ பொறுத்தவரையில்‌, பதிவுக்‌ 

கட்டணமானது, இருநூறு ரூபாயாக இருத்தல்‌ வேண்டும்‌: 

வரம்புரை: அரசானது, மூன்றாண்டுகளுக்கு ஒரு 

முறை அறிவிக்கையின்‌ மூலமாகப்‌ பதிவுக்‌ கட்டணத்தை 

மாற்றி அமைக்கலாம்‌.



14 

8. உறுப்பினர்நிலை அற்றுப்போதல்‌.- (1) உறுப்பினர்‌ 

எவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க 

குற்றச்செயல்‌ எதனையும்‌ செய்வாரானால்‌ அல்லது 

பங்களிப்பினைச்‌ செலுத்துவதற்கான செயல்திட்டத்தில்‌ 

குறிப்பிடப்பட்ட வகைமுறை எதனையும்‌ மீறுவாரானால்‌, 

அவரது உறுப்பினர்நிலை உடனே அற்றுப்போகும்‌; மேலும்‌ 

செயல்‌ திட்டத்தில்‌ குறிப்பிடப்படக்கூடிய வரையறைகளின்‌ 

பேரில்‌ அவர்‌ மீண்டும்‌ உறுப்பினராகச்‌ சேர்த்துக்‌ 

கொள்ளப்படலாம்‌. 

(2) தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(இந்தியாவில்‌ வாழும்‌) தமிழர்‌, மாநிலத்திற்கு 
வெளியேயுள்ள அவரது வேலையையோ அல்லது 

இருப்பிடத்தையோ விட்டு நீங்கி மாநிலத்திற்குத்‌ திரும்பி 

தமிழ்நாட்டிலேயே நிலையாகக்‌ குடியிருப்பாரானால்‌, 

அவரது உறுப்பினர்நிலை அற்றுப்‌ போதல்‌ வேண்டும்‌: 

வரம்புரை: அத்தகைய உறுப்பினர்‌ அறுபது வயது 

நிறைவடையும்‌ வரை, நிதிக்குத்‌ தொடர்ந்து 
பங்களிப்பினைச்‌ செலுத்துவதன்‌ பேரில்‌, அந்தச்‌ செயல்‌ 

திட்டத்தில்‌ குறிப்பிடப்படக்கூடிய வரையறைகளின்‌ பேரில்‌, 

அந்த நிதியின்‌. உறுப்பினராகத்‌ தொடர்வதற்கு 

தகுதியுடையவராகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 

(3) உறுப்பினர்‌ அல்லது உறுப்பினராகக்‌ கருதப்பட்டவர்‌ 

அரசுப்‌ பணி அல்லது அரசு சார்‌ பணி எதிலும்‌ அல்லது 

ஓய்வூதியம்‌ நல்கும்‌ பிற பணி எதிலும்‌ சேருவாரானால்‌, 

அவர்‌ அந்தப்‌ பணியில்‌ சேர்ந்த தேதியிலிருந்து, அவரது 

உறுப்பினர்நிலை அற்றுப்‌ போதல்‌ வேண்டும்‌; மேலும்‌, 

அவரால்‌ இதற்கெனச்‌ செலுத்தப்பட்ட பங்களிப்புத்‌



15 

தொகையைத்‌ திரும்பப்‌ பெறுவதற்கும்‌ அவர்‌ தகுதி 
உடையவர்‌ ஆவார்‌. 

9. தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(வெளிநாட்டில்‌ வாழும்‌) தமிழர்களுக்கான சிறப்பு உதவி 

நிதி- (1) ஐம்பத்தைந்து வயது நிறைவடைந்த, 
தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத (வெளிநாட்டில்‌ 

வாழும்‌) தமிழர்களுக்கான இந்தச்‌ செயல்திட்டத்தில்‌ 

குறிப்பிடப்படக்கூடிய மருத்துவ உதவி அல்லது 

இன்றியமையாத பிற உதவி எதனையும்‌ அளிப்பதற்கு, 

இந்தியாவிலுள்ள அல்லது வெளிநாட்டிலுள்ள தனிநபர்‌ 

எவரிடமிருந்தும்‌ அல்லது கழகம்‌ எதனிடமிருந்தும்‌ 

அல்லது அரசு முகமைகளிடமிருந்தும்‌ அல்லது மைய 

அரசிடமிருந்தும்‌ அல்லது மாநில அரசுகளிடமிருந்தும்‌ 

அல்லது மாநில அரசின்‌. பொதுத்துறை 

நிறுவனங்களிடமிருந்தும்‌ அல்லது பிற வருவாய்‌ ஆதாரம்‌ 

எதன்‌ மூலமாகவும்‌ பெறப்பட்ட நண்கொடைகளிலிருந்தும்‌ 

வாரியத்தால்‌ ஒரு சிறப்பு உதவி நிதி உருவாக்கப்படலாம்‌. 

(2) அந்தச்‌ சிறப்பு உதவி நிதியின்‌ உரிமை 

வாரியத்திடம்‌ இருக்கும்‌; மற்றும்‌ அது வாரியத்தால்‌ 

நிருவகிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 

10. வாரியத்தை. நிறுவுதல்‌.- (1) அரசானது, 

அறிவிக்கையின்‌. மூலமாக செயல்‌ திட்டத்தைச்‌ 

செயற்படுத்தி, நிருவகிப்பதற்காக, "தமிழகத்திற்கு வெளியே 

வாழும்‌ தமிழர்கள்‌ நல வாரியம்‌" என அழைக்கப்படும்‌. 

வாரியத்தை நிறுவுதல்‌ வேண்டும்‌. 

(2)வாரியமானது, நிலையான தொடர்‌ வழி 

உரிமையையும்‌ பொது இலச்சினையையும்‌ கொண்டு, 

மேற்சொன்ன பெயரால்‌ ஒரு கூட்டுருமமாக இருந்து



16 

வரும்‌; மேலும்‌ சொத்தினை ஈட்டுவதற்கும்‌, 

வைத்திருப்பதற்கும்‌, தீர்வு செய்வதற்கும்‌, ஒப்பந்தம்‌ செய்து 

கொள்வதற்கும்‌ அதிகாரம்‌ கொண்டிருக்கும்‌; மற்றும்‌ 

அதன்‌ பெயரில்‌ வழக்கிடலாம்‌ அல்லது வழக்கிடப்படலாம்‌. 

13) வாரியமானது, இதில்‌ வகை: 

செய்யப்பட்டவாறு, அரசால்‌ அவ்வப்போது பெயர்‌ குறித்து 

நியமிக்கப்படும்‌ பதினைந்து உறுப்பினர்களைக்‌ 

கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அவர்கள்‌ விவரம்‌ 

பின்வருமாறு:- 

(a) தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

தமிழர்களின்‌ நலனில்‌ ஈடுபாடுடைய சிறந்த நபர்‌ ஒருவர்‌, 

தலைவர்‌; 

(b) தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(வெளிநாட்டில்‌ வாழும்‌) தமிழர்களைப்‌ பிரதிநிதித்துவம்‌ 

செய்கிற ஐந்து உறுப்பினர்கள்‌; 

(9) தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

(இந்தியாவில்‌ வாழும்‌) தமிழர்களைப்‌ பிரதிநிதித்துவம்‌ 

செய்கிற இரண்டு உறுப்பினர்கள்‌; 

(0) அரசைப்‌ பிரதிநிதித்துவம்‌ செய்கிற ஐந்து 

உறுப்பினர்கள்‌; 

(6) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்‌ 

அல்லது 1983ஆம்‌ ஆண்டு குடியேற்றச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ 

(மையச்‌ சட்டம்‌ 314983) பதிவு செய்யப்பட்ட ஆட்‌ சேர்ப்பு 

முகமை எதையும்‌ பிரதிநிதித்துவம்‌ செய்கிற உறுப்பினர்‌ 

ஒருவர்‌; 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 
தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 4ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



17 

0) மறுவாழ்வு மற்றும்‌ தமிழகத்திற்கு வெளியே 

வாழும்‌ தமிழர்கள்‌ நல ஆணையத்தைப்‌ பிரதிநிதித்துவம்‌ 
செய்கிற உறுப்பினர்‌ ஒருவர்‌. 

(4) மறுவாழ்வு மற்றும்‌ தமிழகத்திற்கு வெளியே 
வாழும்‌ தமிழர்கள்‌ நல ஆணையர்‌, வாரியத்தின்‌ பதவி வழி 

உறுப்பினர்‌ செயலாளராக இருத்தல்‌ வேண்டும்‌. 

(5 வாரியத்தின்‌ அனைத்து உறுப்பினர்களையும்‌ 

நியமனம செய்த பின்பு, அரசானது, 

அவர்களது பெயர்களை அறிவிக்கையின்‌ மூலமாக 

வெளியிடுதல்‌ வேண்டும்‌.] 

(வாரியத்தின்‌ கூட்டங்கள்‌ மற்றும்‌ அதன்‌ 

நோக்கத்திற்காகப்‌ பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள்‌ 

மற்றும்‌ அதற்குத்‌ துணையான அல்லது சார்பான 

விவரங்கள்‌ அனைத்தும்‌, அரசின்‌ ஒப்புதலுக்கு உட்பட்டு, 

வாரியத்தாலேயே முறைப்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 

(7)வாரியமானது, அரசின்‌ முன்ஒப்புதலுடன்‌, தான்‌: 

பொருத்தம்‌ எனக்‌ கருதுகிற கட்டுப்பாடுகளுக்கும்‌ 

நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு, நிதியைத்‌ திறம்பட 

நிருவகித்து வருவதற்குத்‌ தேவையெனத்‌ தான்‌ கருதும்‌, 
இந்தச்‌ சட்டத்தின்படியான அதிகாரங்களையும்‌ 

அலுவற்பணிகளையும்‌ [வாரியத்தின்‌ தலைவர்‌ அல்லது 

உறுப்பினர்‌ செயலாளர்‌ அல்லது உறுப்பினர்‌ எவரிடமும்‌] 

அல்லது வாரியத்தின்‌ பிற அலுவலர்‌ எவரிடமும்‌ ஒப்படைவு 

செய்யலாம்‌. 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 4ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



18 

(8) அவ்வப்போது அரசினால்‌ நிர்ணயிக்கப்படும்‌. 

விதத்தில்‌ ஒவ்வொரு நிதியாண்டிலும்‌ நிதிக்குச்‌ 
செய்யப்பட்ட மொத்தப்‌ பங்களிப்பில்‌ நூற்றுக்கு ஐந்து 

விழுக்காட்டிற்கு மேற்படாத ஒரு தொகை வாரியத்தின்‌ 

அலுவலர்களுக்கும்‌ பிற பணியாளர்களுக்கும்‌ சம்பளம்‌ 

வழங்குவதற்காகவும்‌ பிற அலுவலகச்‌ 

செலவுகளுக்காகவும்‌ செலவு செய்யப்படலாம்‌; மற்றும்‌ 

(9) இந்தச்‌ சட்டத்தின்படி தன்‌ அதிகாரங்களைச்‌ 

செலுத்துகையில்‌ மற்றும்‌ அலுவற்பணிகளை 

ஆற்றுகையில்‌ வாரியமானது, எழுத்து வடிவில்‌ 

அளிக்கப்பட்ட காரணங்களுக்காக, அரசால்‌, அவ்வப்போது 

வழங்கக்கூடிய பணிப்புரைகளுக்கு கட்டுப்படுத்தப்படுதல்‌ 

வேண்டும்‌. 
M. வாரிய உறுப்பினர்களின்‌ பதவிக்காலம்‌].- (1) 

பிரிவு 1௦இனண்‌ உட்பிரிவு (3)இன்படி பெயர்‌ குறித்து 
நியமனம்‌ செய்யப்பட்ட வாரியத்தின்‌ உறுப்பினர்களின்‌] 

பதவிக்கால அளவானது, மூன்று ஆண்டுகளாக இருத்தல்‌ 

வேண்டும்‌. 
(2) உட்பிரிவு (1)இல்‌ எண்ன அடங்கியிருந்தபோதிலும்‌, 

அரசானது, எந்த நேரத்திலும்‌ எழுத்துவடிவில்‌ பதிவு 

செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக வாரியத்தின்‌ 

உறுப்பினர்‌ எவரையும்‌] அவரது பதவியிலிருந்து 

அகற்றலாம்‌. மேலும்‌, அகற்றப்படுவதற்கு எதிராகக்‌ காரணம்‌. 

காட்டுவதற்கு நியாயமான வாய்ப்பு ஒன்றை அவருக்குக்‌ 

கொடுத்த பின்பு அவ்வாறு அகற்றலாம்‌: 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 

பிரிவு 5ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



19 

வரம்புரை: காரணங்களை எழுத்துவடிவில்‌ பதிவு 

செய்வது அல்லது அத்தகைய வாய்ப்பை அளிப்பது பொது 

நலனுக்கு உகந்ததல்ல என அரசு கருதுமானால்‌, 

அகற்றியதற்கான காரணத்தை எழுத்துவடிவில்‌ பதிவு 

செய்வது அல்லது அகற்ற கருதப்பட்டதற்கு எதிராக 

காரணம்‌ காட்டுவதற்கான வாய்ப்பு கொடுப்பது தேவை 

அற்றது. 

12. வாரியத்தின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌.- 

(1) செயல்திட்டத்தை நிருவகிப்பதற்கு வாரியம்‌ 

பொறுப்புடையதாய்‌ இருக்கும்‌; மற்றும்‌ அது அந்தச்‌ செயல்‌ 

திட்டத்தால்‌ அதனிடம்‌ வழங்கப்படக்கூடிய அத்தகைய 

அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌, அத்தகைய 

அலுவற்பணிகளை ஆற்றுதலும்‌ வேண்டும்‌. 

(2) வாரியமானது, அந்தச்‌ செயல்திட்டத்தை 

நிருவகிப்பதற்குத்‌ தான்‌ பொருத்தம்‌ எனக்‌ கருதக்கூடிய 

நடவடிக்கைகளை எடுக்கலாம்‌. 

(3) வாரியம்‌, ஒவ்வொரு ஆண்டும்‌ ஏப்ரல்‌ முதல்‌ 

நாளுக்குப்‌ பின்பு, கூடியவிரைவில்‌, அந்த ஆண்டின்‌ மார்ச்‌ 

முப்பத்தொன்றாம்‌ நாளுடன்‌ முடிவடைகிற முந்தைய 

ஆண்டின்‌ போதான செயல்திட்டத்தின்‌ செயல்பாடு குறித்த 

ஆண்டறிக்கையை அரசுக்குப்‌ பணிந்தனுப்புதல்‌ வேண்டும்‌. 

அவ்வாறு பெறப்பட்ட அறிக்கை ஒவ்வொன்றும்‌, அது 

பெறப்பட்ட பின்பு, கூடிய விரைவில்‌, சட்டமன்றப்‌ 

பேரவையின்‌ கூட்டத்‌ தொடர்‌ நடைபெற்றுக்‌ 

கொண்டிருந்தால்‌, அந்தக்‌ கூட்டத்‌ தொடரிலேயோ 

அல்லது அறிக்கையைப்‌ பெற்ற தேதிக்கு அடுத்துப்‌ 

பின்வருகிற கூட்டத்‌ தொடரிலேயோ சட்டமன்றப்‌ 

பேரவையின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌.



20 

13. தகுதிக்கேடுகளும்‌ நீக்கமும்‌.- (1) (8) வாரியத்தில்‌ 
சம்பளம்‌ பெறும்‌ அலுவலராக இருக்கிற; அல்லது 

(b) நொடிப்பு நிலையர்‌ எனத்‌ தீர்ப்பளிக்கப்படுகிற 

அல்லது எந்த நேரத்திலும்‌ தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிற; 

அல்லது 

(௦ பித்தராகவோ அல்லது மனச்‌ 

சீர்கேடுற்றவராகவோ காணப்படுகிற; அல்லது 

(0) ஒழுக்கக்கேட்டினை உள்ளடக்கிய 

குற்றச்செயல்‌ எதற்காகவும்‌ குற்றவாளி எனத்‌ 

தீர்ப்பளிக்கப்படுகிற அல்லது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிற நபர்‌ 

எவரும்‌, வாரியத்தின்‌: ஓர்‌ உறுப்பினராகத்‌] 

தெரிந்தெடுக்கப்படுதலோ தொடர்ந்து இருத்தலோ கூடாது. 

(2) அரசு, 

@ உட்பிரிவு (1) இல்‌ குறிப்பிடப்பட்டுள்ள 

தகுதிக்கேடுகளில்‌ எதற்கும்‌ உள்ளாகிய அல்லது 

உள்ளாகியிருக்கிற; அல்லது 

(b) தொடர்ந்து வாரியத்தின்‌. மூன்றுக்கும்‌ 

மேற்பட்ட கூட்டங்களுக்கு வாரியத்தின்‌ அனுமதியின்றி 

வராதிருக்கிற, வாரியத்தின்‌ உறுப்பினர்‌] எவரையும்‌ 

பதவியிலிருந்து நீக்கலாம்‌. 

1[3) உட்பிரிவு (2)இன்‌ கூறு (இன்படி நீக்கப்பட்ட 

வாரியத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌, அரசால்‌ பிறவாறு 

ஆணையிடப்பட்டாலன்றி, அவ்வாறு அவர்‌ நீக்கப்பட்ட 

தேதியிலிருந்து மூன்று ஆண்டு காலஅளவுக்கு 
வாரியத்தின்‌ உறுப்பினராக மீண்டும்‌ பெயர்குறித்து 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 6ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



21 

நியமிக்கப்படுவதற்குத்‌ தகுதிக்கேடு உடையவராதல்‌ 

வேண்டும்‌. 

(4) உட்பிரிவு (2)இன்‌ கூறு (இன்படி 

நீக்கப்பட்ட வாரியத்தின்‌: உறுப்பினர்‌ ஒருவர்‌, அவர்‌ 

இனியும்‌ தகுதியற்றவர்‌ இல்லை என அரசின்‌ ஆணை 

ஒன்றின்‌ மூலமாக விளம்பப்படும்‌ வரையில்‌ மீண்டும்‌ பெயர்‌ 

குறித்து நியமிக்கப்படுவதற்குத்‌ தகுதி அற்றவர்‌ ஆவார்‌] 

14. வாரியத்தின்‌ உறுப்பினர்களின்‌ பதவி 

விலகல்‌].- வாரியத்தின்‌ உறுப்பினர்‌ எவரும்‌] எந்த 

நேரத்திலும்‌, அரசுக்கு முகவரியிட்டுத்‌ தண்‌ கைப்பட 

எழுதுவதன்‌ மூலமாக தனது பதவியிலிருந்து விலகலாம்‌. 

மற்றும்‌ அவரது பதவியானது, அவரது பதவி விலகல்‌ 

அரசினால்‌ ஏற்றுக்கொள்ளப்படுவதன்‌ பேரில்‌, 

காலியானதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 

15. காலிப்பணியிடங்களை நிரப்புதல்‌.- இறப்பு, பதவி 

விலகல்‌, தகுதிக்கேடு அல்லது பதவியிலிருந்து 

நீக்கப்படுதல்‌ காரணமாக அல்லது பிறவாறு 

காலிப்பணியிடம்‌ எதுவும்‌ ஏற்படும்போது, வாரியமானது, 

அந்த நிகழ்வினை உடனடியாக அரசுக்குத்‌ தெரிவித்தல்‌ 

வேண்டும்‌. மேலும்‌ அந்தக்‌ காலிப்பணியிடமானது, அந்தக்‌ 

காலிப்பணியிடம்‌ ஏற்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு 

நாட்களுக்குள்‌ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌. மேலும்‌ அந்தக்‌ 

காலிப்பணியிடத்தை நிரப்புவதற்குப்‌ பெயர்‌ குறித்து 

நியமிக்கப்பட்ட நபர்‌, அந்தக்‌ காலிப்பணியிடம்‌. 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 7ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



22 

ஏற்படாதிருந்தால்‌, '[வாரியத்தின்‌ எந்த உறுப்பினரின்‌] 

இடத்திற்கு அவர்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டாரோ 

" [வாரியத்தின்‌ அந்த உறுப்பினர்‌] வகித்து 
இருந்திருக்கக்கூடிய காலஅளவிற்கு மட்டுமே 
பதவி வகித்தல்‌ வேண்டும்‌: 

வரம்புரை: அத்தகைய காலிப்பணியிடம்‌ எதுவும்‌ 

ஏற்பட்ட போது, தொடர்கிற [வாரியத்தின்‌ உறுப்பினர்கள்‌] 

காலிப்பணியிடம்‌ எதுவும்‌ ஏற்பட்டிராதது போன்றே 

செயல்படலாம்‌. 

16. அலுவலர்களையும்‌, பணியாளர்களையும்‌ 

நியமித்தல்‌.-- (1) அரசு, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌, தனது 

அதிகாரங்களைச்‌ செலுத்துவதற்காகவும்‌, 

அலுவற்பணிகளை ஆற்றுவதற்காகவும்‌, வாரியத்திற்கு. 

உதவுவதற்குத்‌ தேவை எனத்‌ தான்‌ கருதும்‌ 
எண்ணிக்கையில்‌ அலுவலர்களையும்‌, பணியாளர்களையும்‌. 

வகுத்துரைக்கப்படும்‌ முறையில்‌ நியமிக்கலாம்‌. 

(2) உட்பிரிவு (1)இன்படி நியமிக்கப்பட்ட 

அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ நியமிக்கப்படும்‌ முறை, 

அவரது சம்பளம்‌ மற்றும்‌ படித்தொகைகள்‌, ஒழுங்கு 

கட்டுப்பாடு மற்றும்‌ பிற பணி நிபந்தனைகள்‌: 

வகுத்துரைக்கப்படும்‌ விதத்தில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 

17. கடன்‌ வாங்குவதற்கான வாரியத்தின்‌ அதிகாரம்‌.- 

வாரியம்‌, அவ்வப்போது அரசின்‌ முன்‌ ஒப்புதலுடனும்‌, 

அரசால்‌ குறிப்பிடப்படும்‌. வரையறைகளுக்கும்‌ 

நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டு, இந்தச்‌ செயல்திட்டத்தின்‌. 

நோக்கங்களுக்காகப்‌ பணத்தைக்‌ கடன்‌ வாங்கலாம்‌. 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



23 

18. நிறுமங்கள்‌, கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌, சங்கங்கள்‌ 

மற்றும்‌ பிற நிறுவனங்கள்‌ வாரியத்தால்‌ தொடங்கப்படுதல்‌.- 

வாரியம்‌, 2013 ஆம்‌ ஆண்டு நிறுமங்கள்‌ சட்டத்தின்படி 

(மையச்‌ சட்டம்‌ 1872013)] வரையறுக்கப்பட்ட பொது 

உடமை நிறுமங்களையோ அல்லது வரையறுக்கப்பட்ட 

தனியார்‌ நிறுமங்களையோ, 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு 

கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம்‌ 

30/1983) கூட்டுறவு சங்கங்களையோ அல்லது 1975 ஆம்‌ 

ஆண்டு தமிழ்நாடு சங்கங்களைப்‌ பதிவு செய்தல்‌ 

சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம்‌ 27/1975) 

சங்கங்களையோ அல்லது பிற நிறுவனம்‌ எதனையுமோ 

வாரிய உறுப்பினர்களின்‌ அல்லது அரசின்‌ முதலீடு 

அல்லது பங்கினைக்‌ கொண்டு அரசின்‌ முன்‌ ஒப்புதலுடன்‌, 

வாரியம்‌ அவ்வப்போது முடிவு செய்யக்கூடிய 

நோக்கங்களுக்காக அல்லது செயற்பாடு களுக்காக 

அல்லது வணிகத்திற்காக மற்றும்‌ வரையறைகள்‌ மற்றும்‌ 

நிபந்தனைகளின்‌ பேரில்‌ தொடங்கலாம்‌. 

49. வாரியம்‌ பொறுப்புறுதி அளிப்பவராகச்‌ 

செயற்படுதல்‌.- வாரியமானது, இந்திய அரசின்‌ அல்லது 

மாநில அரசின்‌ ஒப்புதலுடன்‌, வேலைக்காகச்‌ செல்கிற, 

தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத (வெளிநாட்டில்‌ 

வாழும்‌) தமிழர்களுக்காக அவ்வாறு தமிழ்நாட்டை 

வாழ்விடமாகக்‌ கொண்டிராத தமிழர்களிடமிருந்து, 

வகுத்துரைக்கப்படும்‌ வரையறைகள்‌ மற்றும்‌ 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



24 

நிபந்தனைகளின்‌ பேரிலும்‌, பிணைய வைப்பிட்டுத்‌ 

தொகையைப்‌ பெற்றுக்‌ கொண்டதன்‌. பேரிலும்‌, 

பொறுப்புறுதி அளிப்பவராகச்‌ செயற்படலாம்‌. 

20. நிலுவைத்‌ தொகையைத்‌ தீர்மானிப்பதற்கும்‌ 

இழப்பிட்டை வசூலிப்பதற்குமான அதிகாரம்‌.- (1) 

உறுப்பினர்‌ எவரும்‌, ஆறு மாதங்களுக்குக்‌ குறையாத ஒரு 

காலஅளவிற்குத்‌ தொடர்ந்து பங்களிப்பைச்‌ செலுத்தத்‌ 

தவறுவார்‌ என்றால்‌, உறுப்பினர்‌ செயலாளர்‌] அல்லது 

இதன்‌ பொருட்டு வாரியத்தால்‌ அதிகாரமளிக்கப்பட்ட பிற 

அலுவலர்‌ எவரும்‌, அவர்தம்‌ தரப்பிணை விசாரிப்பதற்கு 

வாய்ப்பு ஒன்றினைக்‌ கொடுத்த பின்பு ஆணை மூலமாக, 

இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி 

கொடுக்கப்படவேண்டிய பங்களிப்புது்‌ தொகையினைத்‌ 

தீர்மானித்து, அந்தத்‌ தொகை எந்தக்‌ காலஅளவிற்குள்‌ 

செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌ என்பதையும்‌ குறித்துரைத்தல்‌ 
வேண்டும்‌. 

(2) அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட தொகையானது, 

வாரியத்தால்‌ குறிப்பிடப்பட்ட காலஅளவிற்குள்‌: 

உறுப்பினரால்‌ செலுத்தப்படவில்லை என்றால்‌, வாரியம்‌ 

தான்‌: பொருத்தம்‌ என நினைக்கக்கூடிய 

நிலுவைத்தொகையில்‌ நூற்றுக்கு இருபத்தைந்து 
விழுக்காட்டிற்கு மேற்படாத தொகையினைக்‌ கூடுதல்‌, 

இழப்பீடாக அவரிடமிருந்து வசூலிக்கலாம்‌. 

(3) அரசு, அறிவிக்கையின்‌ மூலமாக இந்தச்‌ 

சட்டத்தின்‌ நோக்கத்திற்காக, மேல்முறையீட்டு 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 102460 மாற்றாக அமைக்கப்பட்டது.



25 

அலுவலராக, அரசு துணைச்‌ செயலாளர்‌ பதவி நிலைக்குக்‌ 

குறையாத அலுவலர்‌ ஒருவரை நியமிக்கலாம்‌. 

(4) உட்பிரிவு (1)இன்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை: 

ஒன்றினால்‌ பாதிக்கப்பட்ட நபர்‌ எவரும்‌, அந்த 

ஆணையைப்‌ பெற்ற தேதியிலிருந்து, அறுபது 

நாட்களுக்குள்‌ உட்பிரிவு (3)இன்படி மேல்முறையீட்டு 

அலுவலரின்‌ முன்பு மேல்முறையீடு ஒன்றைத்‌ தாக்கல்‌ 

செய்யலாம்‌. மேலும்‌ அந்த அலுவலர்‌, தான்‌ பொருத்தம்‌ 

எனக்‌ கருதுகிற விதத்தில்‌ விசாரணையைச்‌ செய்த பின்பு, 

அதன்‌ பேரில்‌ ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌. 

(5) அரசு, தானே முற்பட்டோ அல்லது 

விண்ணப்பத்தின்‌ பேறிலோ, மேல்முறையீட்டு அலுவலரின்‌: 

பதிவுருக்களைக்‌ கோரிப்‌ பெறலாம்‌. மேலும்‌ தேவை எனக்‌ 

கண்டறியப்பட்டால்‌, தான்‌ பொருத்தம்‌ எனக்‌ கருதுகிற 

விதத்தில்‌ விசாரணையைச்‌ செய்து, மேல்முறையீட்டு 

அதிகாரியின்‌ ஆணையை மாற்றியமைக்கிற, சீராய்வு 

செய்கிற அல்லது இரத்து செய்கிற ஆணைகளைப்‌ 

பிறப்பிக்கலாம்‌ அல்லது அதனைப்‌ புதிய முடிவிற்காகத்‌ 

திருப்பி அனுப்பலாம்‌: 

வரம்புரை: இந்த உட்பிரிவின்படி சீராய்வுக்கான ஒரு 

விண்ணப்பமானது, மேல்முறையீட்டு அலுவலரின்‌ 

ஆணையைப்‌ பெற்ற தேதியிலிருந்து முப்பது 
நாட்களுக்குள்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌: 

மேலும்‌ வரம்புரை: அந்த ஆணையினால்‌ 

பாதிக்கப்படக்கூடிய நபர்‌ எவருக்கும்‌, அவர்தம்‌ தரப்பினை 

விசாரிப்பதற்கு வாய்ப்பு ஒன்றினை வழங்காமல்‌ இந்த 

உட்பிரிவின்படி ஆணை எதுவும்‌ பிறப்பிக்கப்படுதல்‌ 

கூடாது.



26 

21. "வாரியத்தின்‌ உறுப்பினர்கள்‌] பொது 

ஊழியர்களாக இருப்பர்‌.- உறுப்பினர்‌ செயலாளர்‌ 

உள்ளிட்ட வாரிய உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌], மற்றும்‌ 

பிரிவு 16இன்படி நியமிக்கப்பட்ட வாரியத்தின்‌ பிற 

அலுவலர்‌ மற்றும்‌ பணியாளர்‌ ஒவ்வொருவரும்‌, இந்தச்‌ 

சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதி அல்லது 

செயல்திட்டம்‌ எதனின்‌ வகைமுறைகளில்‌ எதன்படியும்‌ 

ஒட்டி செயற்படும்போது அல்லது செயற்படுவதாகப்‌ 

புலப்படும்போது, இந்தியத்‌ தண்டனைத்‌ தொகுப்புச்‌ 

சட்டத்தின்‌ (மைய சட்டம்‌ XLV/1860) 

பிரிவு 21இன்‌ பொருளின்படி பொது ஊழியர்‌ ஒருவராகக்‌ 

கருதப்படுதல்‌ வேண்டும்‌. 

22. தண்டனை.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது 

அதன்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அல்லது 

அறிவிக்கைகள்‌: அல்லது செயல்திட்டத்தின்‌. 

வகைமுறைகளை மீறுகிற அல்லது பொய்யான விவரவுரை 

அல்லது தவறான முறையீடு எதனையும்‌ தெரிந்தே 

செய்கிற அல்லது செய்ய ஆவன செய்கிற எவர்‌ ஒருவரும்‌, 

மூன்று மாதங்கள்‌ வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு 

காலஅளவிற்குச்‌ சிறைத்‌ தண்டனையோ அல்லது 

ஐந்தாயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கப்படக்கூடிய 

பணத்தண்டமோ அல்லது இரண்டுமோ விதித்துத்‌ 

தண்டிக்கப்படத்தக்கவராவார்‌. 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 

பிரிவு 11ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



27 

(2) இந்தச்‌ சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க 

குற்றச்‌ செயல்‌ ஒவ்வொன்றும்‌, '[குற்றவியல்‌ நீதித்துறை 

நடுவர்‌ நீதிமன்றத்தில்‌] விசாரணை செய்யப்படுதல்‌ 

வேண்டும்‌. 
(3) இந்தச்‌ சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க 

குற்றச்செயல்‌ எதனையும்‌, அந்தக்‌ குற்றச்செயலாக 

அமைகிற பொருண்மைகள்‌ குறித்து 1[ வாரியத்‌ 

தலைவரின்‌] முன்‌ ஒப்புதலுடன்‌ செய்யப்பட்ட எழுத்து 

வடிவிலான அறிக்கை இன்றி, நீதிமன்றம்‌ எதுவும்‌ 

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌ கூடாது. 

23. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றச்செயல்கள்‌.- 

(1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ ஏதொன்றுக்கும்‌ 

எதிரான குற்றச்செயல்‌ ஒன்று ஒரு நிறுமத்தால்‌ 
செய்யப்பட்டிருக்கும்போது, அந்தக்‌ குற்றச்செயல்‌ 

செய்யப்பட்ட காலத்தில்‌, அந்த நிறுமத்தின்‌ அலுவலை 

நடத்தி வருவதற்கு பொறுப்பைக்‌ கொண்டிருந்தவரும்‌, 

அதற்குப்‌ பொறுப்பாயிருந்தவருமான நபர்‌ 

ஒவ்வொருவரும்‌, அதோடு அந்த நிறுமமும்‌, அந்தக்‌ 

குற்றச்செயலைச்‌ செய்ததாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌; 

மற்றும்‌ அதன்படியே எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுத்‌ 

தண்டிக்கப்படுவதற்கு உள்ளதாலும்‌ வேண்டும்‌: 

வரம்புரை: அந்தக்‌ குற்றச்செயலானது, தமக்குத்‌ 

தெரியாமல்‌ செய்யப்பட்டதாக அல்லது அத்தகைய 

குற்றச்செயல்‌ செய்வதைத்‌ தடுப்பதற்கு, தாம்‌ உரிய முயற்சி 

அனைத்தையும்‌ மேற்கொண்டதாக அத்தகைய நபர்‌ 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) பிரிவு 
12ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது. 



28 

நிரூப்பிப்பார்‌ என்றால்‌, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள 

எதுவும்‌ அவரைத்‌ தண்டனை எதற்கும்‌ உள்ளாக்காது. 

(2) உட்பிரிவு (1)இல்‌ என்ன அடங்கியிருந்த 

போதிலும்‌, அத்தகைய குற்றச்செயல்‌ எதுவும்‌ ஒரு 

நிறுமத்தால்‌ செய்யப்பட்டிருக்கும்‌ போது மற்றும்‌ அந்த 

நிறுமத்தின்‌ இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது பிற 

அலுவலர்‌ எவரொருவரின்‌ இசைவுடனோ மறைமுக 

ஆதரவுடனோ அந்தக்‌ குற்றச்செயல்‌ 
செய்யப்பட்டிருக்கிறதறு அல்லது அவரது கவனக்குறைவு 

எதற்கும்‌ சாட்டத்தக்கதாக இருக்கிறது என்று 

நிரூபிக்கப்படுகிறபோது, அத்தகைய இயக்குநர்‌, செயலாளர்‌ 

அல்லது பிற அலுவலர்‌ அந்தக்‌ குற்றச்செயலைச்‌ 

செய்திருப்பதாகக்‌ கருதப்படுதலும்‌, அதன்படியே எதிராக 

நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு 

உள்ளாதலும்‌ வேண்டும்‌. 

விளக்கம்‌: இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக,- 

(8) "நிறுமம்‌" என்பது, கூட்டுருமம்‌ எதுவும்‌ எனப்‌ 

பொருள்படும்‌; மற்றும்‌ ஒரு பொறுப்புக்கட்டளையை, 

நிறுவகத்தை, ஒரு சங்கத்தை அல்லது தனிநபர்களின்‌ பிற 

கழகத்தை உள்ளடக்கும்‌; மற்றும்‌ 

(௦) "இயக்குநர்‌" என்பது,- 

0) ஒரு நிறுவகம்‌ தொடர்பாக, அந்த 

நிறுவகத்தின்‌ ஒரு கூட்டாளி எனப்‌ 

பொருள்படும்‌; 

0) ஒரு சங்கம்‌, ஒரு பொறுப்புக்கட்டளை 

அல்லது தனிநபர்களின்‌ பிற கழகம்‌ 

தொடர்பாக, சங்கத்தின்‌, பொறுப்புக்‌ 

கட்டளையின்‌ அல்லது பிற கழகத்தின்‌



29 

விதிகளின்படி நிகழ்விற்கேற்ப, 

சங்கத்தின்‌, பொறுப்புக்கட்டளையின்‌. 

அல்லது பிற கழகத்தின்‌ 

விவகாரங்களை மேலாண்மை செய்யும்‌ 

பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிக்கிற நபர்‌ 

எனப்‌ பொருள்படும்‌. 

24. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட 

நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு.- இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது 

அதன்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட 

அறிவிக்கை அல்லது ஆணை அல்லது செயல்திட்டம்‌ 

எதன்படியும்‌ நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட அல்லது 

எடுக்கக்‌ கருதப்பட்ட எதற்காகவும்‌, அரசுக்கு அல்லது 

வாரியத்திற்கு அல்லது வாரியத்தின்‌ தலைவர்‌ அல்லது 

உறுப்பினர்‌ செயலாளர்‌] அல்லது பிற அலுவலர்‌ எவருக்கும்‌ 

எதிராக, உரிமைவழக்கு, குற்றவழக்கு எதுவும்‌ அல்லது பிற 

சட்ட நடவடிக்கை எதுவும்‌ தொடரப்படுதல்‌ கூடாது; 

25. வாரியத்தின்‌ செயற்பாடு குறித்த விசாரணை.- 

(1) அரசு, எந்த நேரத்திலும்‌, வாரியத்தின்‌ அல்லது செயல்‌ 

திட்டத்தின்‌ செயற்பாடு குறித்து ஆய்வு செய்து அல்லது 
விசாரணை செய்து, அதன்‌ பொருட்டு அறிக்கை ஒன்றை 

அரசுக்குப்‌ பணிந்து அனுப்புவதற்காக நபர்‌ எவரையும்‌ 

நியமிக்கலாம்‌. 

(2) வாரியமானது. அவ்வாறு நியமிக்கப்பட்ட 

நபருக்கு, ஆய்வு அல்லது விசாரணையை முறைப்படி 

நடத்துவதற்கான அனைத்து வசதிகளையும்‌ அளித்தல்‌ 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 13ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது. 



30 

வேண்டும்‌. மேலும்‌ அவர்‌ கோரக்கூடிய வாரியத்தின்‌. 

உடைமையிலுள்ள ஆவணங்கள்‌, கணக்குகள்‌ அல்லது 

தகவலை அவருக்கு அளித்தல்‌ வேண்டும்‌. 

26. வாரியத்தைக்‌ கலைத்துக்‌ கைப்பற்றுதல்‌.- (1) 

அரசு, பிரிவு 25இன்‌] உட்பிரிவு (1) இல்‌ குறிப்பிடப்பட்ட 

அறிக்கையைப்‌ பரிசீலனை செய்ததன்‌ பேரில்‌ அல்லது 

பிறவாறு,- 

(8) வாரியம்‌, தனது அலுவற்பணிகளை ஆற்ற 

இயலாதிருக்கிறது; அல்லது 

(b) வாரியம்‌ தனது அலுவற்பணிகளை 

ஆற்றுவதில்‌ தொடர்ந்து தவறு செய்திருக்கிறது அல்லது 
தனது அதிகாரங்களை வரம்பு மீறி பயன்படுத்தியிருக்கிறது 

அல்லது தவறாகப்‌ பயன்படுத்தியிருக்கிறதறு என அரசு 

கருதுமானால்‌, அது அறிவிக்கை மூலமாக, 

வாரியத்தைக்‌ கலைத்துக்‌ கைப்பற்றலாம்‌. மேலும்‌ அவ்வாறு 

கலைத்த தேதியிலிருந்து பன்னிரெண்டு மாத 

காலஅளவிற்குள்‌, வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌, 

அதனை மீண்டும்‌ அமைத்துருவாக்கலாம்‌. கலைத்து 

கைப்பற்றப்படும்‌. காலஅளவானது, போதிய 

காரணங்களுக்காக அதே போன்ற அறிவிக்கையின்‌ 

மூலமாக, ஆறு மாதங்களுக்கு மேற்படாத காலஅளவிற்கு 

நீட்டிக்கப்படலாம்‌: 

வரம்புரை: கூறு (b)) இல்‌ குறிப்பிட்ட காரணங்கள்‌ 

எவற்றின்‌ பேரிலும்‌, இந்த உட்பிரிவின்படி வாரியத்தைக்‌ 

கலைத்து கைப்பற்றும்‌ அறிவிக்கையைப்‌ பிறப்பிப்பதற்கு 

முன்பு, அரசு, அது ஏன்‌ கலைத்து கைப்பற்றப்படுதல்‌ 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 

பிரிவு 14ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



31 

கூடாது என்பதற்குக்‌ காரணம்‌ காட்டுவதற்கு, வாரியத்திற்கு 

நியாயமான வாய்ப்பு ஒன்றை வழங்குதல்‌ வேண்டும்‌; 

மேலும்‌, வாரியத்தின்‌ விளக்கங்கள்‌ மற்றும்‌ மறுப்புரைகள்‌ 

எவையேனும்‌ இருப்பின்‌, அவற்றையும்‌ பரிசீலனை 

செய்தல்‌ வேண்டும்‌. 

(2) வாரியம்‌ கலைத்துக்‌ கைப்பற்றப்பட்ட பின்பும்‌, 

மீண்டும்‌ அமைத்துருவாக்கப்படும்‌ வரையிலும்‌, இந்த 

சட்டத்தின்படியான வாரியத்தின்‌ அதிகாரங்கள்‌, கடமைகள்‌: 

மற்றும்‌ அலுவற்பணிகள்‌, அரசால்‌ அல்லது இந்த 

நோக்கத்திற்காக அரசு நியமிக்கக்கூடிய அலுவலர்‌ 

அல்லது அலுவலர்களால்‌ செலுத்தப்படு தலும்‌, 

ஆற்றப்படுதலும்‌ வேண்டும்‌. 

(3) வாரியம்‌, கலைத்துக்‌ கைப்பற்றப்படும்போது, 

பின்வரும்‌ விளைவுகள்‌ ஏற்படும்‌ அவையாவன:- 

(@) வாரியத்தின்‌ உறுப்பினர்கள்‌ அனைவரும்‌] 

உட்பிரிவு (1)இன்படி அறிவிக்கை வெளியிடப்பட்ட 

தேதியிலிருந்து தமது பதவியைக்‌ காலி செய்தல்‌ 

வேண்டும்‌; 

(b) வாரியத்தால்‌ செலுத்தப்படக்கூடிய அல்லது 

ஆற்றப்படக்கூடிய, அதிகாரங்கள்‌ மற்றும்‌ அலுவற்பணிகள்‌ 

அனைத்தும்‌, கலைத்து கைப்பற்றப்படும்‌. 

காலஅளவின்போது, அறிவிக்கையில்‌ 

குறிப்பிடப்படக்கூடிய நபர்களால்‌ செலுத்தப்படுதல்‌ அல்லது 

ஆற்றப்படுதல்‌ வேண்டும்‌; 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 14ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



32 

(9) வாரியத்திற்கு உரித்தான நிதிகள்‌ மற்றும்‌ பிற 
சொத்துக்கள்‌ அனைத்தும்‌, கலைத்து கைப்பற்றப்படும்‌ 

காலஅளவின்போது, அரசிற்கு உரித்தானதாக இருக்கும்‌; 

மற்றும்‌ வாரியம்‌ மீண்டும்‌ அமைக்கப்படுவதன்‌ பேரில்‌ அந்த 

நிதிகளும்‌, சொத்துக்களும்‌ வாரியத்திற்கு மீண்டும்‌. 

உரிமையாகுதல்‌ வேண்டும்‌. 

27. கணக்குகள்‌ மற்றும்‌ தணிக்கை. (1) வாரியம்‌, 

சரியான கணக்குகளையும்‌, தொடர்புடைய பிற 

பதிவுருக்களையும்‌ பேணி வருதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ 

வகுத்துரைக்கப்படும்‌ படிவத்தில்‌ ஐந்தொகைக்‌ குறிப்பு 

உள்ளிட்ட, கணக்குகளின்‌ ஆண்டு விவர உரை ஒன்றைத்‌ 

தயாரித்தல்‌ வேண்டும்‌. 

(2) வாரியக்‌ கணக்குகள்‌, இதன்பொருட்டு அரசு 

நியமிக்கும்‌ தகுதிவாய்ந்த நபர்களால்‌ ஆண்டுதோறும்‌ 

தணிக்கை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 

(3) தணிக்கையாளர்‌, நியாயமான எல்லா 

நேரங்களிலும்‌ வாரியத்தின்‌ கணக்குப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌. 

பிற ஆவணங்களை அணுகும்‌ வாய்ப்பைப்‌ பெற்றிருத்தல்‌ 

வேண்டும்‌. மேலும்‌, தணிக்கை நோக்கங்களுக்காக, 

தனக்குத்‌ தேவைப்படக்கூடிய விளக்கம்‌ மற்றும்‌ 

தகவலைக்‌ கோரிப்‌ பெறலாம்‌ அல்லது வாரியத்தின்‌. 

உறுப்பினர்‌ அல்லது அலுவலர்‌ எவரையும்‌ விசாரணை 

செய்யலாம்‌. 

(4) தணிக்கையாளரால்‌ உறுதிச்‌ சான்றிடப்பட்ட 

வாரியத்தின்‌ கணக்குகள்‌, அதன்‌ பேரிலான தணிக்கை 

அறிக்கையுடன்‌ சேர்த்து, இதன்பொருட்டு அரசு 

குறிப்பிடக்கூடிய தேதிக்கு முன்பு, அரசுக்கு 

ஆண்டுதோறும்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌.



33 

(வாரியம்‌, தணிக்கையாளரின்‌ அறிக்கையைப்‌ 

பார்வையிட்ட பின்பு, அரசு பொருத்தம்‌ எனக்‌ கருதுகிற 

பணிப்புரைகளுக்கு இணங்கி நடத்தல்‌ வேண்டும்‌. 

(தெணிக்கைச்‌ செலவுகள்‌, வாரியத்தின்‌ 

நிதிகளிலிருந்து செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 

28. உரிமையியல்‌ நீதிமன்ற அதிகார வரம்பிற்குத்‌ 

தடை.- இந்தச்‌ சட்டம்‌ அல்லது செயல்திட்டம்‌ அல்லது 

அதன்படி அரசால்‌ அல்லது வாரியத்தால்‌ அல்லது அரசால்‌ 

அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர்‌ எவராலும்‌ அல்லது 

வாரியத்தால்‌ அதிகாரமளிக்கப்பட்ட தலைவர்‌ அல்லது 

உறுப்பினர்‌ செயலாளர்‌] அல்லது அலுவலர்‌ எவராலும்‌ 

தீர்வு செய்யப்பட, தீர்மானிக்கப்பட அல்லது கையாளப்பட 

வேண்டும்‌ என்று அல்லது தீர்மானிக்கப்பட வேண்டும்‌. 

என்று கோரப்பட்ட பிரச்சினை எதனையும்‌ தீர்வு 

செய்வதற்கு, தீர்மானிப்பதற்கு அல்லது கையாளுவதற்கு 

உரிமையியல்‌ நீதிமன்றம்‌ எதுவும்‌ அதிகார வரம்பு 

கொண்டிருத்தல்‌ கூடாது. 

29. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- 

இந்தச்‌ சட்டத்தின்‌, வகைமுறைகளுக்குச்‌ செயல்வடிவம்‌ 

கொடுப்பதில்‌ இடர்ப்பாடு எதுவும்‌ எழுமானால்‌, அரசு, 

தேவைக்கேற்ப ஆணையின்‌ மூலமாக இந்தச்‌ சட்டத்தின்‌ 

வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத, இடர்ப்பாடுகளை 

நீக்கும்‌ நோக்கத்திற்குத்‌ தேவையானது என அல்லது 

உகந்தது எனத்‌ தோன்றுகிற எதனையும்‌ செய்யலாம்‌: 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 15ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



34 

வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும்‌, இந்தச்‌ 

சட்டத்தின்‌. தொடக்கத்‌ தேதியிலிருந்து இரண்டு 

ஆண்டுகள்‌ முடிவடைந்ததற்குப்‌ பின்பு, பிறப்பிக்கப்படுதல்‌ 

கூடாது. 

3௦. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) 

அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்கள்‌ அனைத்தையும்‌ 

அல்லது அவற்றுள்‌ ஏதொன்றையும்‌ 

நிறைவேற்றுவதற்காக விதிகளைச்‌ செய்யலாம்‌. 

(2) (ஐ) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட 

விதிகள்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ 

வேண்டும்‌ மற்றும்‌ அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ 

நடைமுறைக்கு வரும்‌ என வெளிப்படையாகத்‌ 

தெரிவிக்கப்பட்டாலன்றி, அவை அவ்வாறு 

வெளியிடப்பட்ட நாளன்று நடைமுறைக்கு வருதல்‌ 

வேண்டும்‌. 
()கந்தச்‌ சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட 

அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌, அவை குறிப்பிட்டதொரு 

நாளில்‌ நடைமுறைக்கு வரும்‌ என வெளிப்படையாகத்‌ 

தெரிவிக்கப்பட்டாலன்றி, அவை அவ்வாறு 

வெளியிடப்பட்ட நாளன்று நடைமுறைக்கு வருதல்‌ 

வேண்டும்‌. 
(3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்படும்‌ விதி 

அல்லது பிறப்பிக்கப்படும்‌ அறிக்கை அல்லது ஆணை 

ஒவ்வொன்றும்‌, அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது 

பிறப்பிக்கப்பட்ட பின்பு கூடியவிரைவில்‌, சட்டப்‌ 

பேரவையின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ 

அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது 

அடுத்தக்‌ கூட்டத்தொடர்‌ முடிவுறுவதற்கு முன்பு, அந்த



35 

விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும்‌ 

மாறுதல்‌ எதனையும்‌ பேரவை செய்யுமானால்‌ அல்லது 

அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை 

செய்யப்படுதல்‌ அல்லது பிறப்பிக்கப்படுதல்‌ கூடாது எனப்‌ 

பேரவை முடிவு செய்யுமானால்‌, அந்த விதி அல்லது 

அறிவிக்கை அல்லது ஆணை அதன்பின்பு அவ்வாறு 

மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே செயல்வடிவம்‌ 

பெறுதல்‌ வேண்டும்‌ அல்லது செயல்வடிவம்‌ பெறாது 

போதல்‌ வேண்டும்‌. எனினும்‌ அத்தகைய மாற்றம்‌ அல்லது 

நீக்கம்‌ எதுவும்‌, அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது 

ஆணையின்படி முண்ணதாகச்‌ செய்யப்பட்ட எதனின்‌. 

செல்லுந்தன்மைக்கும்‌ ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌.



36 

இணைபப்புப்பட்டியல்‌: 

(பிரிவு 3இன்‌ உட்பிரிவு (2)ஐக்‌ காண்க) 

செயல்திட்டத்தில்‌ வகைசெய்யப்படக்கூடிய விவரங்கள்‌. 

(1) தமிழ்நாட்டை வாழ்விடமாகக்‌ கொண்டிராத 

தமிழர்களை நிதியின்‌ உறுப்பினர்களாகப்‌ பதிவு செய்தல்‌. 

(2) நிதிக்குப்‌ பங்களிப்பு செய்யப்படவேண்டிய நேரமும்‌, 

முறையும்‌ மற்றும்‌ பங்களிப்பானது வசூலிக்கப்படக்கூடிய 

மற்றும்‌ நிதியில்‌ வைப்பீடு செய்யப்படக்கூடிய முறை. 

(3) வாரியத்தின்‌ தலைமையகம்‌ மற்றும்‌ வாரியத்திற்கு 

உதவுவதற்காக, குழுவினை அமைத்தல்‌. 

@) 1 வாரியத்தின்‌ தலைவர்‌, உறுப்பினர்‌ செயலாளர்‌ 

மற்றும்‌ உறுப்பினர்களுக்கான] பயணப்‌ படித்தொகை, 

தினப்‌ படித்தொகை மற்றும்‌ அமர்வுக்‌ கட்டணம்‌. 

(5) கணக்குகள்‌ வைத்து வரப்பட வேண்டிய முறை, 

அரசால்‌ பிறப்பிக்கப்படும்‌ பணிப்புரை எதற்கும்‌ அல்லது 

குறிப்பிடப்படும்‌. நிபந்தனைகளுக்கும்‌. இணங்கிய 

வகையில்‌ நிதிக்குச்‌ சொந்தமான பணத்தை முதலீடு 

செய்தல்‌, வரவு செலவுத்‌ திட்டத்தைத்‌ தயாரித்தல்‌, 

கணக்குகளைத்‌ தணிக்கை செய்தல்‌: மற்றும்‌ 

அறிக்கைகளை அரசுக்குப்‌ பணிந்தனுப்புதல்‌. 

(6) நிதிகளிலிருந்து பணம்‌ எடுப்பது எந்த வகை: 

நிபந்தனைகளின்படி அனுமதிக்கப்படலாம்‌, தொகைக்‌ 

குறைப்பு அல்லது தண்ட இழப்பு எதுவும்‌ எந்த 
நிபந்தனைகளின்படி செய்யப்படலாம்‌, அந்த தொகைக்‌ 

1. 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ 

தமிழர்கள்‌ நல (திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/2022) 
பிரிவு 16ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது.



37 

குறைப்பு அல்லது தண்ட இழப்புத்‌ தொகையின்‌ 

அதிகபட்சஅளவு. 

(7) பிரிவு 6இல்‌ குறிப்பிடப்பட்டவை அல்லாத பிற எந்த 

நோக்கங்களுக்காக, நிதி பயன்படுத்தப்படக்கூடுமோ அந்த 

நோக்கங்கள்‌. 

(8) @i உறுப்பினர்‌ தண்னைப்‌ பற்றியும்‌ தன்‌: 

குடும்பத்தைப்‌ பற்றியும்‌ விவரங்கள்‌ அளிக்க வேண்டிய 

படிவம்‌. 

(9) @i உறுப்பினரின்‌ இறப்பின்பேரில்‌, குடும்ப 

ஓய்வூதியம்‌ எதனையும்‌ அல்லது பிற நலன்‌ எதனையும்‌ 

பெறுவதற்கு நபர்‌ ஒருவரை பெயர்‌ குறித்து நியமித்தல்‌ 

மற்றும்‌ அவ்வாறு பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டதை 

இரத்து செய்வதற்கான அல்லது மாற்றுவதற்கான 

நடைமுறை. 

(10) உறுப்பினர்கள்‌ குறித்த பதிவேடுகளையும்‌ 

பதிவுருக்களையும்‌ பேணி வருதல்‌. 

A1) உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையின்‌ 

படிவம்‌ அல்லது வடிவம்‌ மற்றும்‌ அதனை வழங்குதல்‌, 

அதன்‌ பாதுகாப்பு மற்றும்‌ அதனை மாற்றிக்‌ கொடுத்தல்‌. 

(12) இந்தச்‌ சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட 

அலுவலர்களால்‌ செலுத்தப்படக்கூடிய அதிகாரங்கள்‌: 

மற்றும்‌ ஆற்றப்படக்கூடிய பொறுப்புகள்‌. 

(3) நிதியை நிருவகித்து வருவதில்‌ செய்ய நேர்ந்த 
செலவுத்‌ தொகையைக்‌ கொடுத்துத்‌ தீர்ப்பதற்கான 

நடைமுறை. 

04) நிதியிலிருந்து ஓய்வூதியம்‌, குடும்ப ஓய்வூதியம்‌, 
மானியங்கள்‌, பிற நலன்கள்‌ அல்லது கடன்கள்‌ மற்றும்‌ 

முன்பணங்களை வழங்குவதற்கான நடைமுறை.



38 

(15) பிரிவு 18இன்படி உறுப்பினர்களின்‌ நலனுக்காக 

வாரியத்தால்‌ நிறுமங்கள்‌, சங்கங்கள்‌, கூட்டுறவுச்‌ 

சங்கங்கள்‌, பிற நிறுவனங்கள்‌. ஆகியவை 

அமைக்கப்படுவதற்கான முறை மற்றும்‌ நடைமுறை. 

046) சிறப்பு உதவி நிதியிலிருந்து 
கொடுக்கப்படக்கூடிய இன்றியமையாத பிற உதவிகள்‌. 

(17) சிறப்பு உதவி நிதியின்‌ கணக்குகளைப்‌ பேணி 

வருதல்‌, அதன்‌ நிருவாகம்‌ மற்றும்‌ அதிலிருந்து உதவி 

வழங்குவதற்கான நடைமுறைகள்‌.


Open official source version ↗

About this act

Jurisdiction
Tamil Nadu
Enactment date
2011-03-01
Sections available
30

Read the sections

Source and version

India Code, Government of India. Text fetched 14 Oct 2026. Source metadata reports last modification: 2025-05-22. Check the linked official text and subsequent notifications when applying a provision.

Share this act

Tamil Nadu Non-Resident Tamils' Welfare Act 2011 — Tamil | NYAYA SIGNAL

Share the card with this clickable reading link. पढ़ें और अगली धारा देखें।

NYAYA SIGNAL · Free access · Official source references

· Saves and reading positions stay on this device.