Tamil script — official source version
tn_private_educational_institutions-reservation_act_2021.pdf.txt
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 26 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது. சட்ட எண் 8/2021. இம்மாநிலத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான. கல்வி நிலையங்களில் இடங்களையும், தமிழ்நாடு மாநிலத்திற்குள் அரசின்: கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்காக, இருபது விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குள்ளாக தனி ஒதுக்கீடு செய்வதற்கு வகை: செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு. குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக, இம்மாநிலத்திலுள்ள கல்வி நிலையங்களில்: மாணவர் சேர்க்கையிலும் அரசின்கீழ் வருகின்ற பணிகளுக்கான. நியமனங்களிலும் ஒதுக்கீடு செய்வதற்கான கொள்கையானது தமிழ்நாடு. மாநிலத்தில் நெடுங்காலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. என்பதாலும்; தமிழ்நாடு மாநிலமானது, பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கி வந்திருப்பதாலும், வகுப்புவாரியான இடஒதுக்கீடு அளிக்கின்றமுதலாவது அரசாணையானது 1921-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டு, இம்மாநிலத்தில், 1927-ஆம் ஆண்டில் சமூகங்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது என்பதாலும்; பல ஆண்டுகளாக சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்பட்ட நிலையில் உழன்று வந்துள்ள தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் பெருமளவு சதவீதத்தினர் இடஒதுக்கீடுக் கொள்கையின் பயன்களைத் துய்க்கத் தொடங்கியுள்ளதோடு அவர்கள் தங்கள் நிலையினை மேம்படுத்திக் கொள்ளவும், உயர்ந்த வாழ்க்கைத் தரங்களை எய்தவும் இயன்றுள்ளது என்பதாலும்; 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கும், பட்டியல் சாதிகளையும், பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்தவர்களுக்கும் (கல்வி நிலையங்களில் இடங்களையும் அரசின்கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 45/1994) தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது என்பதாலும்; 1994-ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து ஆறாம் திருத்தச்) சட்டத்தின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மேற்சொன்ன. தமிழ்நாடு சட்டம் 45/1994 என்பதான மாநிலச் சட்டத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அதனை அரசபைப்பின் 31-3-எனும் உறுப்பின் கீழ் 15-ஆம் பட்டியலில் சேர்த்திருப்பதாலும்; அரசமைப்பின் 14-ஆம் உறுப்பின்படி சமமானவர்கள். சமமற்றவர்களுடன் சமமாகக் கருதி நடத்தப்படுதல் இயலாது; மற்றும் வேறுபட்ட முறையில் நடத்துவதானது அது எய்த விழையும் நோக்கத்துடன் பகுத்தறிவுக்கு உகந்தமுறையிலான இணைப்பினைப்பெற்றிருக்குமானால் வேற்றுமைப்படுத்தி பாகுபாடு செய்வதாகக் கூற இயலாது என்பதாலும்; அரசமைப்பின் 30-ஆம் உறுப்பின் ()-ஆம் கூறில் சுட்டப்பட்ட சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அல்லாத அரசின் உதவி பெறுவதாயினும், பெறாதவையுமான தனியார் கல்வி நிலையங்கள். உள்ளடங்கலான கல்வி நிலையங்களுக்கு, குடிமக்களில் சமூக அல்லது கல்வி நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் அல்லது பட்டியல் சாதியினரின் அல்லது பட்டியல் பழங்குடிகளின் மாணவர் சேர்க்கை தொடர்பாக தனிவகைமுறைகள் தொடர்புடையதாக இருக்கிறவாறு அவர்தம் மேம்பாட்டுக்காகச் சட்டத்தின் வாயிலாக அத்தகைய தனி. வகைமுறைகள் எவற்றையும் செய்வதற்கு, அரசமைப்பின் 15-ஆம் உறுப்புக்கான 6-ஆம் கூறை அமைத்து, 2005-ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று மூன்றாம் திருத்தச் சட்டமானது இயல்விப்பதாலும்; அரசமைப்பின் 15-ஆம் உறுப்பின் (5-ஆம் கூறின் காரணமாகவும் தமிழ்நாடு மாநிலத்தில் பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காகவும் வேண்டி, குடிமக்களில் மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கும், பட்டியல் சாதிகளையும், பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்த நபர்களுக்கும், அரசமைப்பின் 30-ஆம் உறுப்பின், (] ஆம்கூறில் சுட்டப்பட்ட இம்மாநிலத்திலுள்ள, சிறுபான்மையின. கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் தற்போதுள்ள அறுபத்து ஒன்பது சதவீத இடஒதுக்கீட்டினைத் தொடர்தல் வேண்டுமெனக் கொள்கை முடிவொன்றை எடுத்ததற்குப் பின்னர், 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு (தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்தல்) சட்டமானது குமிழ்நாடு சட்டம் 12/2006) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாலும்; அரசமைப்பின் 16-ஆம் உறுப்பின் (4-ஆம் கூறானது, அரசின் கீழ்வரும் பணிகளில் போதுமான அளவிற்குச் சார்பாற்றம் செய்யப்படாத குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு செய்ய இயல்விக்கிறது என்பதாலும்; அரசமைப்பின் 38-ஆம் உறுப்பின்(௫-ஆம் கூறின்படி அரசானது, தேசிய வாழ்வின் நிறுவனங்கள் அனைத்திலும் சமுதாய, பொருளியியல், அரசியல், நீதி நிறைந்து நிலவுவதான ஒரு சமுதாய முறையமைவினைப் பயனுற எய்திப் பாதுகாத்து, மக்களின் நலப்பாட்டை வளர்த்திட அரிதின். முயலுதல் வேண்டும் என்பதாலும்; அரசமைப்பின் 38-ஆம் உறுப்பின்()-ஆம் கூறின்படி அரசானது தனிமனிதர்களுக்கு இடையே மட்டுமின்றி வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்ற அல்லது வெவ்வேறு வாழ்க்கைத் தொழில்களில் ஈடுபட்டிருக்கின்ற மக்கள் பிரிவினருக்கிடையே, குறிப்பாக வருமானத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை இயன்ற அளவு குறைப்பதற்கு அரிதின் முயல்வதோடு, அவர்களின் சமுதாயப்படிநிலை, வளவசதிகள், வாய்ப்பு நலன்கள் ஆகியவற்றிலுள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்கும் முனைந்து முயலுதல் வேண்டும் என்பதாலும்; அரசமைப்பின் 39-ஆம் உறுப்பின் (9) எனும் கூறின்படி அரசானது குறிப்பாக பொது நலன்களுக்கு நனி சிறக்க உதவும் வகையில் சமுதாயத்தின் பொருள் வளங்கள் மீதான உரிமையையும், கட்டுப்பாட்டினையும் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யும் வகையில் தன்: கொள்கையை நெறிப்படுத்துதல் வேண்டும் என்பதாலும்; அரசமைப்பின் 39-ஆம் உறுப்பின் (9) எனும் கூறின்படி அரசானது குறிப்பாக பொருளியியல் முறைமையின் செயல்பாட்டினால் செல்வவளமும், உற்பத்திச் சாதனங்களும் பொது நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஒரு சிலரிடம் குவிந்து விடாமல் இருப்பதனை உறுதி செய்வதற்காக அதன் கொள்கையை நெறிப்படுத்துதல் வேண்டும் என்பதாலும்; கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 45/1994-இன் கீழ் மற்ற வகுப்பினர்களுக்கிடையே, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கை செய்யப்பட்ட வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாச்சி, பள்ளி மற்றும் அக்னி குல ஷத்திரியா உள்ளடங்கலான வன்னியகுல ஷத்திரியா அவர்களின். அதிகப்படியான மக்கள் தொகையின் காரணத்தினால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்களின் பட்டியலில் பிற சமூகத்தினர்களிடம் போட்டியிட முடியாததாலும், கல்வி நிலையங்களில் சேர்க்கைகளிலும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளிலும் நியாயமான பங்கைப் பெறுவதற்காக அவர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டைக் கோரினர் என்பதாலும்; வன்னியகுல ஷத்திரியா சமூகத்தினருக்காக உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமானது, அது முன்னர் ஆலோசிக்கப்பட்டவாறு, தனியார் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்களிலும், அத்துடன் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்காக வழங்கப்பட்ட இருபது விழுக்காடு இட ஒதுக்கீட்டிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். என பட்டியலிடப்பட்ட வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாச்சி, பள்ளி மற்றும் அக்னி குல ஷத்திரியா. உள்ளடங்கலான வன்னியகுல ஷத்திரியா அவர்களுக்கு பத்தரை: விழுக்காடு அளவிற்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படலாம் என அரசிற்கு பரிந்துரை செய்ததாலும்; குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம். பொருள் வரையறைகள். மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் 45/1994-இன் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினராக பட்டியலிடப்பட்ட சமூகத்தினருக்கு உரியதான இருபது விழுக்காட்டிற்குள், அவர்களுக்கிடையே உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான இயலுமையை குறித்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின். தலைவருக்கு பார்வை குறிப்பு செய்யப்பட்டதன் பேரில், தலைவரானவர்' மேற்சொன்ன இருபது விழுக்காட்டிற்குள் வன்னிய குல வஷத்திரியா சமூகத்தினருக்கு பத்தரை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்காக மேற்சொன்ன ஆணையத்தின் அப்போதைய தலைவரின் பரிந்துரையை குறிப்பிட்டு, பகிர்ந்தளிக்கப்பட்ட சமூக நீதி எளிதில் கிடைக்க வசதி செய்வதற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினராக அறிவிக்கப்பட்ட பிற சமூகத்தினரை, அவர்களின் மக்கள் தொகை: வீதத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை. என கூறியுள்ளார் மற்றும் அதற்கிணங்கியபடி வன்னியகுல ஷத்திரியா. சமூகத்தினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பத்தரை விழுக்காடு நீங்கலாக மீதமுள்ளவை, சீர் மரபினர் மற்றும் சீர் மரபினருடன் ஒத்த தன்மையுடைய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் ஒன்றுமாக, மற்றும் மேற்சொன்ன வகையினுள் அடங்காத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள். மற்றொன்றுமாக இரண்டு வகைகளாக வகை செய்யப்படலாம் என அறிவுறுத்தியுள்ளார் மற்றும் மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் 45/1994-இன் கீழ் வழங்கப்பட்ட ஒட்டு மொத்த இருபது விழுக்காட்டிற்குள், அவர்களுக்கு முறையே, ஏழு விழுக்காடு மற்றும் இரண்டரை விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்காக வகை செய்துள்ளார் என்பதாலும்; மாநில அரசானது கவனமான பரிசீலனைக்குப் பின்னர், கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 45/1994-இன் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்ட இருபது விழுக்காடு இட ஒதுக்கீட்டின் நன்மைகளை அவர்கள் அனைவருக்குமிடையே சமமாக பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் தலைவரால் மேற்சொன்ன அறிவுறுத்தலின்படி அவர்களை வகைப்படுத்தவும், அத்தகைய ஒவ்வொரு வகையினருக்கும் இருபது விழுக்காட்டிற்குள்ளாக அத்தகைய விழுக்காட்டளவு இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் கொள்கையின் முடிவினை எடுத்துள்ளது என்பதாலும்; இந்திய குடியரசின் எழுபத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. () இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களையும் அரசின் கீழ்வரும் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கான. இடஒதுக்கீட்டிற்குள்ளக தனி ஒதுக்கீடு செய்தல் சட்டம் என: வழங்கப் பெறும். (2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும். (6) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும். 2. இந்தச் சட்டத்தில் தறுவாய் பிறவாறு வேறு பொருள் குறித்தாலன்றி:- (8) “தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு” என்பது, 6ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு எனப் பொருள்படும்; தமிழ்நாடு சட்டம் 451994 தமிழ்நாடு சட்டம் 12/2006 (b) “சீர்மரபினர்கள்” என்பது, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகத்தினர் அல்லது சமூகத்தினர்கள் மற்றும் (இதன்பின்பு 1994 ஆம் ஆண்டுச்சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கும், பட்டியல் சாதிகளையும் பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்தவர்களுக்கும் (கல்வி நிலையங்களில் இடங்களையும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில். நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தின் கீழ் அரசினால் சீர்மரபினர்களாக அறிவிக்கை செய்யப்பட்டவர்கள் எனப் பொருள்படும்; (6) “கல்வி நிலையங்கள்” என்பது, 1994-ஆம் ஆண்டுச் சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான அதே பொருளையே கொண்டிருத்தல் வேண்டும்; (0) “அரசு” என்பது, மாநில அரசு எனப் பொருள்படும்; (6) “மிகவும் பிற்படுத்தப்பட்ட குடிமகன்கள்” என்பது, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்களின் வகுப்பினர் அல்லது வகுப்பினர்கள் மற்றும் 1994ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் அரசினால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அறிவிக்கை செய்யப்பட்டவர்கள். எனப் பொருள்படும்; ) வகுதி-மி.பி.வ. (வ) சமூகத்தினர்கள்” என்பது, 1994-ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் அரசால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரன அறிவிக்கை செய்யப்பட்ட இணைப்புப் பட்டியலின் பகுதி-மி.பி.வ.(வ)-இல் குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்தினர் அல்லது சமூகத்தினர்கள் எனப் பொருள்படும்; ©@) “பகுதி-மி.பி.வ. மற்றும் சீம. சமூகத்தினர்க என்பது, 1994-ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் அரசால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்கள் என அறிவிக்கை: செய்யப்பட்ட இணைப்புப் பட்டியலின் பகுதி-மி.பி.வ. மற்றும் சீம.-இல் குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்தினர் அல்லது சமூகத்தினர்கள். எனப் பொருள்படும்; () “பகுதி-மி.பி.வ. சமூகத்தினர்கள்'” என்பது, 1994-ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் அரசால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரென அறிவிக்கை செய்யப்பட்ட, இணைப்புப் பட்டியலின் பகுதி-மி.பி.வ-இல் குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்தினர் அல்லது சமூகத்தினர்கள் எனப் பொருள்படும்; 0 “தனியார் கல்வி நிலையம்” என்பது, (இதன் பின்பு 2006-ஆம் ஆண்டு சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு (தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு. செய்தல்) சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான அதே பொருளையே கொண்டிருத்தல் வேண்டும்; டு “இணைப்புப் பட்டியல்” என்பது, இச்சட்டத்தில் இணைக்கப்பட்ட இணைப்புப் பட்டியல் எனப் பொருள்படும்; தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான. கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு. அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளில் இடஒதுக்கீடு. 3. 1994-ஆம் ஆண்டுச் சட்டத்தில் அல்லது 2006-ஆம் ஆண்டுச் சட்டத்தில் அல்லது தற்போது நடைமுறையிலுள்ள பிறசட்டம் எதிலும். அல்லது நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின் தீர்ப்பு, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும், என்ன அடங்கியிருந்த போதிலும், 1994-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்கள் என அறிவிக்கை செய்யப்பட்ட சமூகத்தினர்களின் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொண்டு, தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான. கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கான பாடப்பிரிவு அல்லது புலம் ஒவ்வொன்றிலும் ஆண்டொன்றுக்கு அனுமதிக்கப்படும் மொத்த எண்ணிக்கையைப் பொறுத்த இடஒதுக்கீடானது, பகுதி-மி.பி.வ.(வஷ சமூகத்தினர்கள், பகுதி-மி.பி.வ. மற்றும் சீம. சமூகத்தினர்கள் மற்றும் பகுதி-மி.பி.வ. சமூகத்தினர்களுக்கு, 1994-ஆம் ஆண்டுச் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டுச்சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளவாறு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கான இருபது விழுக்காடு என்ற அளவிற்குள்ளாக, முறையே பத்தரை விழுக்காடு, ஏழு விழுக்காடு மற்றும் இரண்டரை விழுக்காடு என இருத்தல் வேண்டும். 4. 1994-ஆம் ஆண்டுச் சட்டம் அல்லது 2006-ஆம் ஆண்டுச் சட்டம் அல்லது தற்போது நடைமுறையிலுள்ள பிற சட்டங்கள் எதிலும், அல்லது நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின் தீர்ப்பு, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும், என்ன அடங்கியிருந்தபோதிலும், அரசின் கீழ்வரும் பணிகளில் 1994-ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் என: அறிவிக்கை செய்யப்பட்ட சமூகத்தினர்களுக்கு, போதிய அளவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் உள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, பகுதி-மி.பி.வ.(வ) சமூகத்தினர்கள், பகுதி-மி.பி.வ. மற்றும் சீம. சமூகத்தினர்கள் மற்றும் பகுதி-மி.பி.வ. சமூகத்தினர்களுக்கு, அரசின். கீழ்வரும் நியமனங்கள் அல்லது பதவிகளுக்கான ஒதுக்கீடானது, 1994-ஆம் ஆண்டுச் சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளவாறு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கான இருபது விழுக்காடு என்ற அளவிற்குள்ளாக, முறையே பத்தரை விழுக்காடு, ஏழு விழுக்காடு மற்றும் இரண்டரை விழுக்காடு என இருத்தல் வேண்டும். ésif- இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக, “அரசின் கீழ் வருகின்ற பணிகள்” என்பது - 0 ௮௯ (i) மாநிலத்திலுள்ள சட்டமன்றம்; (0) ஏதேனும் உள்ளாட்சி அதிகார அமைப்பு; (1) அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள, ஏதேனும் கழகம் அல்லது நிறுமம்; அல்லது () மாநிலச் சட்டமன்றமானது, சட்டங்களை: இயற்றுவதற்கான அதிகாரத்தினைப் பெற்றிருக்கிற ஏதேனும் பிற அதிகார அமைப்பு ஆகியவற்றின் கீழ் வருகின்ற பணிகளை உள்ளடக்கும். மையச்சட்டம் XLV/1860 5. இச்சட்டத்தின் 3 மற்றும் 4-ஆம் பிரிவுகளில், என்ன அடங்கியிருந்த போதிலும், 1994ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் என அறிவிக்கை செய்யப்பட்ட சமூகத்தினர்களைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது உறுப்பினர்களின். கோரிக்கைகளானது, தகுதி அடிப்படையில் நிரப்பப்படவேண்டிய இடஒதுக்கீடற்ற இடங்கள், நியமனங்கள் அல்லது பதவிகளுக்காகவும் கூட பரிசீலிக்கப்படுதல் வேண்டும் மற்றும் இணைப்புப் பகுதி-மி.பி.வ.(ஷ சமூகத்தினர்கள், பகுதி-மி.பி.வ. மற்றும் சீம. சமூகத்தினர்கள் மற்றும் பகுதி-மி.பி.வ. சமூகத்தினர்களைச் சேர்ந்த மாணவர் அல்லது உறுப்பினர் ஒருவர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுமிடத்தில், நேர்விற்கேற்ப, பகுதி-மி.பி.வ.(வ) சமூகத்தினர்கள், பகுதி-மி.பி.வ. மற்றும் சீம. சமூகத்தினர்கள் மற்றும் பகுதி-மி.பி.வ. சமூகத்தினர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள், நியமனங்கள் அல்லது பதவிகளின். எண்ணிக்கையானது பாதிக்கப்படுதல் ஆகாது. 6. () அரசானது, அறிவிக்கையின் வாயிலாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் படிநிலைக்குக் குறையாத அலுவலர் எவரையும், இச்சட்டத்தின் வகைமுறைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக இதன்கீழ் செய்யப்பட்ட விதிகளைச் செயற்படுத்தும் நோக்கத்திற்காகத் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பாக நியமிக்கலாம். (2) தகுதிவாய்ந்த அதிகார அமைப்பானது, வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துதலும், அத்தகைய பணிகளை ஆற்றுதலும் வேண்டும். 7. () அரசானது, ஆணையின் வாயிலாக, பொது நலனை முன்னிட்டு, அந்த ஆணையில் குறிப்பிடப்பட்ட நேர்வு எதிலும், இந்தச் சட்டத்தின்படி விசாரணை ஒன்றைச் செய்வதற்கு அல்லது உரிய நடவடிக்கைகளை: மேற்கொள்வதற்கு, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பினைப் பணிக்கலாம்; மற்றும்தகுதிவாய்ந்த அதிகார அமைப்பானது அதனால்மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அல்லது அதனால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முடிவினை, வகுத்துரைக்கப்பபலாகிறவாறான அத்தகைய கால அளவிற்குள், அரசுக்கு அறிக்கை செய்தல் வேண்டும். @. (0-ஆம் உட்பிரிவின்படி தகுதிவாய்ந்த அதிகார அமைப்பிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டதன் பேரில், அரசானது, அது பொருத்தமெனக் கருதுகிற அத்தகைய பணிப்பாணைகளைப் பிறப்பித்தல் வேண்டும்; மற்றும் அத்தகைய பணிப்பாணையானது இறுதியானதாகவும், கட்டுப்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும். 8. 6-ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த அதிகார அமைப்பானது, இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 21-ஆம் பிரிவின் பொருளின்படி பொது ஊழியராகக் கொள்ளப்படுதல் வேண்டும். 9. இந்தச் சட்டத்தின் படியோ அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதன்படியோ, நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட செயல்: எதற்காகவும் தகுதிவாய்ந்த அதிகாரஅமைப்புக்கோ, அரசுக்கோ அல்லது அதன் அலுவலர்கள் எவருக்குமோ, எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எவையும் தொடுக்கப்படுதல் கூடாது. இடஒதுக்கீடு பாதிக்கப்படுதல். ஆகாது. தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு. பணிப்பாணை வழங்குவதற்கான. அரசின் அதிகாரம். தகுதி வாய்ந்த அதிகார அமைப்பானது பொது ஊழியராதல். நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு. விதிகளைச். செய்வதற்கான அதிகாரம். இடர்ப்பாடுகளை: நீக்குவதற்கான அதிகாரம். 10. () அரசானது இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம். @ (இ இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல் வேண்டும்; மற்றும் ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டால் அன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும். b இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும் என வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும். @) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அல்லது அதற்கு அடுத்துவரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்பு இப்பேரவை அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் செய்யுமாயின் அல்லது அப்பேரவை அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணை செய்யப்படுதல் கூடாது அல்லது பிறப்பிக்கப்படுதல் கூடாது என்று முடிவு செய்யுமாயின் அவ்விதி அல்லது அந்த அறிவிக்கை அல்லது அவ்வாணை அதற்கு பின்னர் அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும், அத்தகைய மாறுதலோ, நீக்கமோ அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னர் செய்யப்பட்ட எதனின் செல்லும் தன்மைக்கும் குந்தகம் இன்றி இருத்தல் வேண்டும். 11. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் அரசு, தமிழ்நாடு அரசிதழில் ஆணை: ஒன்றை வெளியிடுவதன் மூலம் அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்கு தேவையானதாகவோ அல்லது உகந்ததாகவோ தனக்குத் தோன்றுகிற இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்: வரம்புரை: ஆனால், அத்தகைய ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளைக் கொண்ட கால அளவு ஒன்று முடிவடைந்ததற்குப் பின்னர் செய்யப்படுதல் கூடாது. வண்: 1 24 25 இணைப்புப் பட்டியல் (பிரிவு 2(7),(9) மற்றும் (ஈ) ஐக் காண்க) பகுதி - மி.பி.வ (வ) சாதியின் பெயர் வன்னியகுல ஷத்திரியா (வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாச்சி, பள்ளி மற்றும் அக்னிகுல ஷத்திரியா உட்பட) பகுதி - மி.பி.வ மற்றும் சீம (ஹ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள். சாதியின் பெயர் அம்பலக்காரர் அரயர் (கன்னியாகுமரி மாவட்டம்) பெஸ்தா, சிவியர் பட்ராஜு (சத்திரிய ராஜுக்கள் நீங்கலாக) போயர், ஒட்டர் தாசரி டொம்மாரா: ஜாம்புவனோடை ஜோகி கொரச்சா இலத்தின் கத்தோலிக்க கிறித்தவ வண்ணார் (கன்னியாகுமரி மாவட்டம்) மோண்ட கொல்லா முட்லகம்பட்டி நோக்கர் பரவர் (இவ்வகுப்பு ஆதிதிராவிடர் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக) பரவர் வகுப்பில் இருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் - கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி. மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்தை சார்ந்த பரவர் வகுப்பில் இருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் உட்பட. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர்) (கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் உட்பட) முக்குவர் அல்லது முகையர் (கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் உட்பட) புண்ணான் வேட்டுவ கவுண்டர் தெலுகுபட்டி செட்டி தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லவார், சில்லவார், தொக்கலவார், தொழுவநாயக்கர் மற்றும் எர்ரகொல்லர் உட்பட) வலையர் (செட்டிநாடு வலையர்கள் உட்பட) வண்ணார் (சலவைத் தொழிலாளர்) (இகஸா, மடிவலா, ஏகாலி, ராஜகுலா, வெலுத்தாடர் மற்றும் ராஜாகா உட்பட) (இவ்வகுப்பு ஆதிதிராவிடர் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக) வேட்டைக்காரர் வேட்டுவகவுண்டர் வ.எண்: 24 25 (B) சீர்மரபினர்கள் சாதியின் பெயர் ஆத்தூர் கீழ்நாடு கொறவர் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்) ஆத்தூர் மேல்நாடு கொறவர் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்) ஆப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) அம்பலக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்). அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்) 'போயாஸ் நிருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்) பட்டு துர்கா சி.கே. கொறவர் (கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்) சக்காளர் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்) செங்கயம்புடி கொறவர் (திருப்பத்தூர், இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) செட்டிநாடு வலையர் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்) டோம்ஸ் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள்) தொப்ப கொறவர் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்) டொம்மார்ஸ் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், இராணிபேட்டை, வேலூர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) தொங்க போயா தொங்க ஊர் கொரச்சாஸ் தேவகுடி தலையாரி தொப்பை கொரச்சாஸ் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) தாபி கொறவர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருப்பத்தூ£ர், இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) தொங்க தாசரி (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சென்னை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்) 'கொரல்லா தொட்ட போயா குடு தாசரி கந்தர்வ கோட்டை கொறவர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாளர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்கள்) கந்தர்வ கோட்டை கள்ளர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்). இஞ்சி கொறவர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) வ.எண்: 26 27 28 29 30 31 சாதியின் பெயர் ஜோகி (டுசங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) ஜாம்பவனோடை காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள்). கல்ஒட்டர் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர். பெரம்பலூர், அரியலூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்) கொறவர் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாளர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சென்னை , மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்) களிஞ்சி தாபி கொறவர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) கூட்டப்பால் கள்ளர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) காலா கொறவர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாளர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) கலவதில போயாஸ்: கேப்மாறி (ுசங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள்), மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்) மொண்ட கொறவர் மொண்டகொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்) முட்லகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) நோக்கர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) நெல்லூர்பேட்டை ஒட்டர் (திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) ஒட்டர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) பொன்னை கொறவர் (திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) பிரமலைக்கள்ளர் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்) பெரியசூரியூர் கள்ளர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் ) படையாச்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்) புண்ணாண்வேட்டுவகவுண்டர் [திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்). சேர்வை இருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) வ.எண்: 50 51 52 53 54 55 56 57 58 59 60 ® N o s ௦ சாதியின் பெயர் சேலம் மேல்நாடுகொறவர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) சேலம் உப்பு கொறவர் ( சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்) சக்கரதாமடை கொறவர் (திருப்பத்து£ர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) சாரங்கபள்ளி கொறவர் சூரமாறி ஒட்டர் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்) செம்பநாடு மறவர் ( சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்) தள்ளிகொறவர் (சலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்) தெலுங்கப்பட்டி செட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) தொட்டியநாயக்கர் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், திருப்பத்துர், இராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்) தோகமலைகொறவர்கள் அல்லது கேப்மாறி நதிருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) உப்புகொறவர் அல்லது செட்டிபல்லிகொறவர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) ஊராளிகவுண்டர் (ிருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) வயல்பாடு அல்லது நாவல்பேட்டா கொரச்சாஸ் வடுவார்பட்டி கொறவர் (மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி, கூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள். வலையர் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, களூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள்) வேட்டைக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) 'வேட்டக்கொறவர் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்) வரகனேரி கொறவர் நதிருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) பகுதி - மி.பி.வ ஆண்டிப்பண்டாரம் எரவல்லர் (இவ்வகுப்பு பழங்குடியின வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக) இசை வெள்ளாளர் ஜங்கம் கொங்கு செட்டியார் (கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்) குலாலா (குயவர் மற்றும் கும்பரர் உட்பட) குன்னுவர் மண்ணாடி குரும்பா, குரும்பா கவுண்டர் சாதியின் பெயர் குருகினி செட்டி மருத்துவர், நாவிதர், மங்களா, வேலக்கட்டளவர், வேலக்கட்டள நாயர் மற்றும் பிரனோபகாரி மவுண்டாடன் செட்டி மகேந்திரா, மேதரா நரிக்குறவர் ( குருவிக்காரரி) பணிசெய்வான் / பணிசிவன்: பண்ணயார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கத்திகாரர் நீங்கலாக) சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவா (சாத்தானி, சட்டாடி மற்றும் சட்டாட ஸ்ரீ வைஷ்ணவா உட்பட) சோழிய செட்டி தொண்டமான். தொறையர் (நீலகிரி) தொறையர் (சமவெளி) திருநங்கைகள்/அரவாணி. யோகீஸ்வரர் (ஆளுநரின் ஆணைப்படி) ௪. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர், சட்டத் துறை. குமிழாக்கம்) ௧. நரசிம்மன், உதவி இயக்குநர் சட்ட குமிழ்ப்பிரிவுத் துறை.Open official source version ↗
About this act
- Jurisdiction
- Tamil Nadu
- Enactment date
- 2021-02-26
- Sections available
- 11
Read the sections
India Code, Government of India. Text fetched 26 Oct 2026. Source metadata reports last modification: 2025-05-28. Check the linked official text and subsequent notifications when applying a provision.