Tamil Nadu · Act 43 of 1998

Tamil Nadu Transparency in Tenders Act, 1998 and Rules, 2000

An Act to provide for transparency in the public procurement and to regulate the procedure in inviting and accepting tenders and matters connected therewith or incidental thereto.

Read in your languageअपनी भाषा में पढ़ें · Official source versions
Tamil
Find in this text

Tamil — official source version

the_tamil_nadu_transparency_in_tenders_act,_1998.pdf.txt

1998 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள்‌ ஒளிவின்மைச்‌ சட்டம்‌. 

தமிழ்நாடு சட்ட எண்‌. 43/1998 

பொருளடக்கம்‌. 

1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 

2. பொருள்‌ வரையறைகள்‌. 

3. ஒப்பந்தபுள்ளிகள்‌ வரப்பெறுவதன்‌ மூலமாக அல்லாமல்‌ கொள்முதல்‌ 

செய்வதற்குத்‌ தடை. 

4. ஒப்பந்தப்புள்ளிகளை முறைப்படுத்துதல்‌. 

5. செய்தி வெளியீட்டு அலுவலரை நியமித்தல்‌. 

6. செய்தி வெளியீட்டு அலுவலர்களின்‌ செயற்பணிகள்‌. 

7. ஒப்பந்தப்புள்ளியை வரவேற்கும்‌ அதிகாரியை மற்றும்‌ ஒப்பந்தப்புள்ளியை 

ஏற்கும்‌ அதிகாரியை நியமித்தல்‌. 

8. ஒப்பந்தப்புள்ளியைத்‌ திறத்தல்‌. 

9. ஒப்பந்தப்புள்ளி வரவேற்கும்‌ அதிகாரியின்‌ செயற்பணிகள்‌. 

10. ஒப்பந்தப்புள்ளியை மதிப்பிட்டு ஏற்றல்‌. 

11. மேல்முறையீடு. 

12. ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்க மறுத்து தள்ளிவிடுவதற்கான உரிமை. 

13. தகவல்‌ பெறுவதற்கான அதிகாரம்‌. 

14. பதிவுருக்களைத்‌ தருவிப்பதற்கு அரசுக்குள்ள அதிகாரங்கள்‌. 

15. ஒருசில நேர்வுகளில்‌ பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை. 

16. ஒருசில நேர்வுகளில்‌ இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ பொருந்தா. 

17. அலுவலர்கள்‌ பொது ஊழியர்கள்‌ எனக்‌ கொள்ளப்படுதல்‌. 

18. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு. 

19. அதிகாரவரம்பிற்கான தடை 

20. இச்சட்டம்‌ பிற சட்டங்களுக்கு மேலோங்கி இருத்தல்‌. 

21. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு அதிகாரம்‌.



22. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 

23. காப்பு. 

இணைபப்புப்பட்டியல்‌.



1998 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள்‌ ஒளிவின்மைச்‌ சட்டம்‌. 

தமிழ்நாடு சட்ட எண்‌. 43/1998 

அரசு கொள்முதலில்‌ ஒளிவு மறைவின்றிச்‌ செயல்படுவதற்கும்‌ 

ஒப்பந்தப்புள்ளிகளை (Tender) வரவேற்று ஏற்றுக்கொள்வதை 

முறைப்படுத்துவதற்கும்‌ அப்பொருட்பாடுகளுடன்‌ தொடர்புடையவற்றிற்கு அல்லது 

அவற்றிற்கு இடைவிளைவானவற்றிற்கும்‌ வகைசெய்வதற்கானதொரு சட்டம்‌. 

அரசுக்கான கொள்முதலில்‌ முடிந்த அளவுக்கு சிக்கனப்படுத்த மற்றும்‌ 

திறம்படுத்த வேண்டியிருப்பதாலும்‌; 

ஒப்பந்தப்புள்ளிகளை பரிசீலனை செய்கின்ற முறையில்‌ 

ஒப்பந்தப்புள்ளியாளர்களை பயனுள்ள வகையில்‌ பங்கேற்கச்‌ செய்து ஊக்கப்படுத்த 

வேண்டியிருப்பதாலும்‌; 

ஒப்பந்தப்புள்ளியாளர்களுக்கிடையில்‌ நல்ல போட்டி மனப்பான்மையை 

வளர்க்க வேண்டியிருப்பதாலும்‌; 

ஒப்பந்தப்புள்ளியாளர்கள்‌ அனைவரையும்‌ நேர்மையாகவும்‌ நியாயமாகவும்‌ 

பாகுபாடின்றியும்‌ நடத்துவதற்கு வகைசெய்ய வேண்டியிருப்பதாலும்‌; 

ஒப்பந்தப்புள்ளிகளை பரிசீலனை செய்வதில்‌ ஒளிவுமறைவில்லாத 

தன்மைக்கு வகை செய்வதன்‌ மூலமாக அவை கதொடர்பானவற்றில்‌ 

ஒழுங்கின்மை, குறுக்கீடுகள்‌, ஊழல்செய்‌ நடவடிக்கைகள்‌ ஆகியவற்றை 

நீக்கிவிடுவது உகந்ததாயிருப்பதாலும்‌; 

ஒப்பந்தப்புள்ளிகளை பரிசீலனை செய்யும்‌ முறையில்‌ நாணயத்தை வளர்க்க 

வேண்டியிருப்பதாலும்‌ மற்றும்‌ கொள்முதல்‌ தொடர்பான நடைமுறையில்‌ 

ஒளிவுமறைவில்லாத தன்மையை உறுதி செய்வதன்‌ மூலமாக 

ஒப்பந்தப்புள்ளிகளை பரிசீலனை செய்வதில்‌ நியாயம்‌ கிடைக்கப்பெறுவதை மற்றும்‌. 

பொதுமக்களின்‌ நம்பிக்கையை வளர்க்க வேண்டியிருப்பதாலும்‌; 

இந்திய குடியரசின்‌ நாற்பத்து ஒன்பதாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ 

சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 

1. குறுந்தலைப்பு, அள௱வுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இச்சட்டம்‌, 1998 ஆம்‌ 

ஆண்டு தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள்‌ ஒளிவின்மைச்‌ சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. 

(2) இது தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. 

(3) இது அரசு அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ குறிக்கக்கூடிய தேதியன்று 

நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌.



2. பொருள்‌ வரையறைகள்‌.- இச்சட்டத்தில்‌, தறுவாய்‌ வேறுபொருள்‌ 

குறித்தாலன்றி,- 

(ஐ கட்டுமானம்‌! என்றால்‌, கட்டடத்தை, கட்டமைப்பினை கட்டுமானம்‌ 

செய்தல்‌, மறுகட்டுமானம்‌ செய்தல்‌, இடித்தல்‌, பழுதுபார்த்தல்‌ அல்லது புதுப்பித்தல்‌ 

ஆகிய அனைத்து கட்டுமான பணிகளோடு சம்பந்தப்பட்ட பிற பணிகள்‌ எவையும்‌ 

என்று பொருள்படும்‌; 

(aa) "சிறிய அளவிலான உள்நாட்டு சிறுதொழில்‌ நிறுவனம்‌! என்றால்‌, 

சொந்தமாக வைத்துவருவதாயினும்‌ சரி, குத்தகையின்‌ பேரிலாயினும்‌ சரி அல்லது 

தவணைமுறை மூலமாயினும்‌ சரி, இம்மாநிலத்திற்குள்‌ பொருள்களைத்‌ தயாரித்து 

வருவதோடு, தொழில்‌ மற்றும்‌ வணிக இயக்குநரிடம்‌ பதிவு செய்து 

கொண்டுள்ளதான எந்தத்‌ தொழில்‌ நிறுவனமொன்றி இயந்திர மற்றும்‌ இயந்திரத்‌ 

தொகுதிகளில்‌ நிலையான சொத்து உடமைகளில்‌ செய்யப்படும்‌ முதலீடானது நூறு 

லட்ச ரூபாய்க்கு மேற்படாமலிருக்கின்றதோ அந்தத்‌ தொழில்‌ நிறுவனம்‌ என்று 

பொருள்படும்‌; 

(௦) சரக்குகள்‌! என்றால்‌, கச்சா பொருட்கள்‌, தயாரிப்புகள்‌, சாதனம்‌ மற்றும்‌ 

வேறுவகை மற்றும்‌ விவரிப்பினையுடைய பொருள்‌ ஒவ்வொன்றும்‌ என்று 

பொருள்படும்‌ மற்றும்‌ மின்சாரத்தை உள்ளடக்கும்‌; 

(6) 'அரசு' என்றால்‌, மாநில அரசு என்று பொருள்படும்‌; 

(0) கொள்முதல்‌! என்றால்‌, சரக்குகளை விலைக்கு வாங்குவது அல்லது 

பணிச்‌ சேவைகளை பெறுவது உள்ளடங்கலாக கட்டுமானத்தின்‌ மூலமாக 

ஈட்டுவது என்று பொருள்படும்‌; 

(e) 'கொள்முதல்செய்‌ அமைப்பு! என்றால்‌, இச்சட்டத்தின்‌ 

இணைப்புப்பட்டியலில்‌ குறித்துரைக்கப்படும்‌ அமைப்பு என்று பொருள்படும்‌; 

(1) ஒப்பந்தப்புள்ளி! என்றால்‌, கொள்முதல்செய்‌ அமைப்பினால்‌ செய்யப்படும்‌ 

என்று வரவேற்பறிவிப்பினையொட்டி முறையாக கொடுத்துக்‌ கொண்ட ஒப்பந்த 

முன்மொழிதல்‌ என்று பொருள்படும்‌; 

(று "ஒப்பந்தப்புள்ளி செய்தி வெளியீடு! என்றால்‌, ஒப்பந்தப்புள்ளிகளுக்கான 

வரவேற்பு மற்றும்‌ ஏற்பு விவரங்களடங்கியதும்‌ ஒவ்வொரு மாவட்டத்திற்காகவும்‌ 

அல்லது மாநிலத்திற்காகவும்‌ வெளியிடப்படுவதுமான செய்தி வெளியீடு என்று 

பொருள்படும்‌;



(h) ஒப்பந்தப்புள்ளி செய்தி வெளியீட்டு அலுவலர்‌! என்றால்‌ மாவட்ட அல்லது 

மாநில ஒப்பந்தப்புள்ளி செய்தி வெளியீட்டை வெளியிடும்‌ பொருட்டு அரசினால்‌ 

நியமிக்கப்படும்‌ அலுவலர்‌ எவரும்‌ என்று பொருள்படும்‌; 

() ஒப்பந்தப்புள்ளி ஆவணம்‌! என்றால்‌, கட்டுமானப்‌ பணிகள்‌ பட்டியல்‌ 

விதங்கள்‌, சரக்குகளின்‌ அல்லது பணிச்‌ சேவைகளின்‌ தேவைப்பாடு, தொழில்‌ நுட்ப 

குறிப்பீடுகள்‌, ஒப்பந்தப்புள்ளிகளை மதிப்பீடு செய்வதற்காகவும்‌ ஒப்பிட்டு 

நோக்குவதற்காகவும்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய நடைமுறை மற்றும்‌ அடிப்படை 

கொள்கை ஆகியவையும்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விவரங்களும்‌ 

அடங்கியுள்ள தாள்களின்‌ தொகுப்பு என்று பொருள்படும்‌; 

வரம்புரை: ஒப்பந்தப்புள்ளிகளை மதிப்பீடு செய்வதற்கான மற்றும்‌ ஒப்பீடு 

செய்வதற்கான அத்தகைய அளவுகோலானது:- 

(ஐ சிறிய அளவிலான உள்நாட்டு சிறுதொழில்‌ நிறுவனங்களுக்காக 

நூற்றுக்கு பதினைந்து விழுக்காட்டிற்கு மேற்படாத, 

(b) அரசின்‌ பொதுத்துறை நிறுவனங்களால்‌ தயாரிக்கப்படும்‌ உற்பத்திப்‌ 

பொருள்கள்‌ மற்றும்‌ அளவுகளைப்‌ பொறுத்தமட்டில்‌, அந்நிறுவனங்களுக்காக 

நூற்றுக்கு பத்து விழுக்காட்டிற்கு மேற்படாத விலை முன்னுரிமைக்கு வகை 

செய்தலும்‌ வேண்டும்‌. 

3. ஒப்பந்தப்‌ புள்ளிகள்‌ வரப்பெறுவதன்‌ மூலமாக அல்லாமல்‌ கொள்முதல்‌ 

செய்வதற்குத்‌ தடை.- (1) ஒப்பந்தப்புள்ளி வரப்பெறுவதன்‌ மூலமாக அல்லாமல்‌ 

கொள்முதல்‌ செய்‌ அமைப்பினால்‌ கொள்முதல்‌ எதுவும்‌ செய்யப்படுதலாகாது; 

(2) கொள்முதல்‌ செய்‌ அமைப்பினால்‌ வழக்கமான நிலையில்‌ செய்யப்படும்‌ 

கொள்முதல்‌ எதுவும்‌, சரக்குகளை வாங்கவும்‌, விற்கவுமான வணிகத்தைச்‌ செய்து 

வருவதற்காக இருக்குமாயின்‌ 9 ஆம்‌ பிரிவின்‌ மற்றும்‌ 10 ஆம்‌ பிரிவின்‌. 

வகைமுறைகள்‌ அதற்குப்‌ பொருந்துதலாகா: 

வரம்புரை: அரசின்‌ செயற்திட்டம்‌ எதற்காகவும்‌, அரசின்‌ அல்லது அரசு 

நிறுவனங்களின்‌ சார்பாக, மற்றும்‌ அரசுக்கோ அரசு நிறுவனங்களுக்கோ 

செய்யப்படும்‌ விற்பனைக்காக கொள்முதல்செய்‌ அமைப்புகளினால்‌ செய்யப்படும்‌ 

கொள்முதலைப்‌ பொறுத்த நேர்வில்‌ அத்தகைய கொள்முதல்‌ ஒப்பந்தப்புள்ளி 

மூலமாகத்தான்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 

4. ஒப்பந்தப்புள்ளிகளை முறைப்படுத்துதல்‌.- இச்சட்டத்திலோ அல்லது 

அதன்படிச்‌ செய்யப்பட்டுள்ள விதிகளிலோ குறித்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு 

இணங்கியவாறு அல்லாமல்‌, அதிகாரி எவரும்‌, இச்சட்டத்தின்‌ தொடக்கத்திற்குப்‌ 

பின்னர்‌ ஒப்பந்தப்புள்ளி எதனையும்‌ வரவேற்கவோ அல்லது ஏற்கவோ கூடாது.



5. செய்தி வெளியீட்டு அலுவலரை நியமித்தல்‌.- அரசு, அறிவிக்கை 

வாயிலாக,- 

(ஐ) மாநில ஒப்பந்தப்புள்ளி செய்தி வெளியீட்டு அலுவலராக அரசுத்‌ துணைச்‌ 

செயலாளரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத அரசு அலுவலரொருவரை நியமிக்கலாம்‌. 

(b) மாவட்டம்‌ ஒவ்வொன்றிற்காகவும்‌, மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்தி 

வெளியீட்டு அலுவலராக துணை ஆட்சியரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத 

அலுவலரொருவரை நியமிக்கலாம்‌. 

6. செய்தி வெளியீட்டு அலுவலர்களின்‌ செயற்பணிகள்‌.- ஒப்பந்தப்புள்ளி 

வரவேற்பு அதிகாரியிடமிருந்து, ஒப்பந்தப்புள்ளி வரவேற்பிற்கான அறிவிப்பின்‌. 

விவரங்கள்‌ தொடர்பான தகவலையும்‌ ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரியிடமிருந்து 

ஒப்பந்தப்புள்ளியை ஏற்றுக்கொண்டது தொடர்பாக ஒப்பிட்டு நோக்கிய 

ஆய்வறிக்கைகளுடனும்‌ ஏற்றுக்‌ கொண்டதற்கான காரணங்களுடனும்‌ சேர்த்து 

அதற்கான தகவலையும்‌ பெற்றுக்‌ கொண்டதன்‌ பேரில்‌, மாநில அல்லது 

நேர்விற்கேற்ப மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்தி வெளியீட்டு அலுவலர்‌, 

வகுத்துரைக்கப்படக்கூடிய காலத்திற்குள்ளாக மாநில அல்லது, நேர்விற்கேற்ப, 

மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்தி வெளியீட்டில்‌ அதனை வெளியிடுதல்‌ வேண்டும்‌: 

வரம்புரை.- கொள்முதலானது, ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டத்தைத்‌ 

தழுவுவதாக இருக்குமாயின்‌, ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றதையும்‌, ஏற்றுக்‌ 

கொண்டதையும்‌ மாநில ஒப்பந்தப்புள்ளி செய்தி வெளியீட்டில்‌ அல்லது அத்தகைய 

மாவட்டங்களின்‌ மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்தி வெளியீட்டிலும்கூட, 

வெளியிடுதல்‌ வேண்டும்‌. 

7. ஒப்பந்தப்புள்ளியை வரவேற்கும்‌ அதிகாரியை மற்றும்‌ ஒப்பந்தப்புள்ளியை 

ஏற்கும்‌ அதிகாரியை நியமித்தல்‌-- (1) அரசு அல்லது, நேர்விற்கேற்ப, 

கொள்முதல்செய்‌ அமைப்பானது. ஆணை ஒன்றின்‌ மூலமாக, தனது 

கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள அலுவலரொருவரை ஒப்பந்தப்புள்ளியை வரவேற்கின்ற 

அதிகாரியாக இச்சட்டத்தின்படி அவருக்குக்‌ குறித்தளிக்கப்பட்ட செயற்பணிகளை 

நிறைவேற்றுவதற்காக நியமிக்கலாம்‌. 

(2) அரசு அல்லது, நேர்விற்கேற்ப கொள்முதல்‌செய்‌ அமைப்பானது ஆணை 

ஒன்றின்‌. மூலமாக, அலுவலரொருவரையோ வகுத்துரைக்கப்படக்கூடிய 

எண்ணிக்கையிலான அலுவலர்களைக்‌ கொண்ட குழுவொன்றையோ, 

இச்சட்டத்தின்படி அதற்குக்‌ குறித்தளிக்கப்பட்ட செயற்பணிகளை 

நிறைவேற்றுவதற்காக, ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்கின்ற அலுவலராக நியமிக்கலாம்‌.



(3) (1) ஆம்‌ மற்றும்‌ (2) ஆம்‌ உட்பிரிவுகளில்‌ என்ன 

அடங்கியிருந்தபோதிலும்‌,- 

(ஐ அரசு, ஒப்பந்தப்புள்ளி ஏற்றுக்கொள்ளும்‌ அலுவலராக 

இருக்கிறவிடத்து, ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்றுக்கொள்வதற்கு இச்சட்டத்தின்‌ பிற 

வகைமுறைகளைக்‌ கடைபிடிப்பதை உறுதி செய்து தமிழ்நாடு அரசு அலுவல்‌ 

விதிகள்‌ பின்பற்றப்படுதல்‌ வேண்டும்‌; 

(b) பல உறுப்பினர்‌ ஒப்பந்தப்புள்ளி ஏற்றுக்கொள்ளும்‌ 

அதிகாரஅமைப்பு ஒன்று மற்ற சட்டங்களின்படி தம்‌ செயற்பணிகளை 

ஆற்றுகிறவிடத்து அத்தகைய பல உறுப்பினர்‌ அதிகாரஅமைப்பானது, 

இச்சட்டத்தின்படியான ஒப்பந்தப்புள்ளி ஏற்றுக்கொள்ளும்‌ அதிகாரியாக 

கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 

8. ஒப்பந்தப்புள்ளியைத்‌ திறத்தல்‌.- ஒப்பந்தப்புள்ளியை ஏற்கின்ற 

அதிகாரியோ அவரால்‌ அதிகாரமளிக்கப்‌ பெற்றுள்ள பிற அலுவலர்‌ எவருமோ, 

ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய நேரத்திலும்‌, இடத்திலும்‌, 

அவ்வமயம்‌ வந்துள்ள ஒப்பந்தப்புள்ளிகளை அளித்துள்ள ஒப்பந்தப்புள்ளியாளர்கள்‌ 

முன்னிலையில்‌, அந்த ஒப்பந்தப்புள்ளிகளைத்‌ திறத்தல்‌ வேண்டும்‌. 

9. ஒப்பந்தப்புள்ளியை வரவேற்கும்‌ அதிகாரியின்‌ செயற்பணிகள்‌.- (1) 

ஒப்பந்தப்புள்ளியை வரவேற்கும்‌ அதிகாரியானவர்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய 

அத்தகு விவரங்களடங்கிய அறிவிப்பு வடிவத்தில்‌ ஒப்பந்தப்புள்ளிகளை 

வரவேற்பார்‌. 

(2) ஒப்பந்தப்புள்ளியை வரவேற்கும்‌ அதிகாரியானவர்‌, ஒப்பந்தப்புள்ளிகளை 

வரவேற்கும்‌ அறிவிப்பினை உரிய ஒப்பந்தப்புள்ளி செய்தி வெளியீடுகளில்‌ 

வெளியிடச்‌ செய்யும்‌ வகையில்‌, அதனை வகுத்துரைக்கப்படக்கூடிய 

கொள்முதலின்‌ மதிப்பிற்கேற்ப மற்றும்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய நேரத்திற்குள்‌ 

செய்தி வெளியீட்டு அலுவலர்களிடம்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌. 

(3) ஒப்பந்தப்புள்ளி வரவேற்பு அதிகாரி, ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்கும்‌ 

அறிவிப்பினை, வகுத்துரைக்கப்படக்கூடிய கொள்முதலின்‌ மதிப்பிற்கேற்ப, இந்திய 

வணிக இதழிலும்‌, அதிக அளவில்‌ விற்பனைத்‌ திறனையுடைய தினசரி 

செய்தித்தாள்களிலும்‌ வெளியிடுதல்‌ வேண்டும்‌. 

(4) ஒப்பந்தப்புள்ளியை வரவேற்கும்‌ அதிகாரி, வகுத்துரைக்கப்படலாகும்‌ 

அத்தகைய முறையிலும்‌ அத்தகைய இடங்களிலும்‌ பட்டியல்‌ விதங்களையும்‌ 

ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களையும்‌ அத்தகைய ஆவணத்திற்காக விண்ணப்பம்‌



செய்திருக்கிற எதிர்நோக்கு ஒப்பந்தப்புள்ளியாளர்‌ ஒவ்வொருவருக்கும்‌ வழங்குதல்‌ 

வேண்டும்‌. 

10. ஒப்பந்தப்புள்ளியை மதிப்பிட்டு ஏற்றல்‌.- (1) ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரி 

ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில்‌ சொல்லப்பட்டுள்ள பட்டியல்‌ வீதங்களையும்‌, 

கொள்முதல்‌ செய்வதற்காக நிலவி வருகின்ற சந்தை விதங்களையும்‌, கவனத்தில்‌ 

எடுத்துக்‌ கொண்டு, ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள 

நடைமுறைக்கும்‌ அடிப்படைக்‌ கொள்கைக்கும்‌ இணங்க அவ்வாறு ஒப்பீடு செய்து 

அந்த ஒப்பந்தப்புள்ளிகளை உள்ளபடியே மதிப்பீடு செய்வித்தல்‌ வேண்டும்‌. 

(2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு ஒப்பந்தப்புள்ளிகளை 

மதிப்பீடு செய்து ஒப்பு நோக்கிய பின்னர்‌, ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரி, 

ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள உள்ளபடியேயான மற்றும்‌. 

அளவுக்கானதான காரணக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ அவற்றிற்கிடையே 

ஒப்பீட்டு முறையில்‌ முக்கியத்துவம்‌ அளித்து கண்டறியப்பட்ட மிகக்‌ குறைந்த 

விலை குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியை ஏற்றுக்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌. 

(3) (2) ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, ஒப்பந்தப்புள்ளி 

ஏற்பு அதிகாரி, மிகக்‌ குறைவாகக்‌ குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி 

விலையானது நிலவி வருகின்ற சந்தை விதத்தைவிட அல்லது பட்டியல்‌ 

விதத்தைவிட அதிகமாக இருப்பதாக முடிவு செய்வாராயின்‌ அவர்‌, அத்தகைய 

ஒப்பந்தப்புள்ளியாளருடன்‌ விலை குறைப்பிற்காகப்‌ பேரம்‌ பேசலாம்‌. 

(4) ஒப்பந்தப்புள்ளியை ஏற்றுக்‌ கொள்வதற்கு முன்னர்‌, எந்தச்‌ சமயத்திலும்‌, 

ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரி ஒப்பந்தப்புள்ளியை அளித்துள்ள ஒப்பந்தப்புள்ளியாளர்‌ 

ஒருவர்‌, கொள்முதல்‌ செய்‌ அமைப்பு எதனாலும்‌ தடை செய்யப்பட்டிருக்கின்றார்‌ 

என்ற தகவலை பெறுவாராயின்‌ அவர்‌ அத்தகைய ஒப்பந்தப்புள்ளியாளரின்‌. 

ஒப்பந்தப்புள்ளியை, அது மிகக்‌ குறைவான விலை குறிப்பிட்டுள்ள 

ஒப்பந்தப்புள்ளியாக இருந்தபோதிலும்‌ ஏற்றுக்கொள்ளுதல்‌ ஆகாது. 

(5) கரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்தப்புள்ளியாளர்களின்‌ ஒரே 

விலையை குறிப்பிட்டுள்ள நேர்வில்‌, ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரி, அத்தகைய 

ஒப்பந்தப்புள்ளியாளர்களின்‌ அனுபவத்தையும்‌ தகுதிப்பாடுகளையும்‌ கவனத்தில்‌ 

எடுத்துக்கொண்டு கொள்முதல்‌ செய்வதை அத்தகைய 

ஒப்பந்தப்புள்ளியாளர்களுக்கிடையே பிரித்துக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. அவ்வாறு 

பிரித்துக்‌ கொடுப்பதற்கு இயலாதவிடத்தோ சமமாக பிரித்துச்‌ செய்ய 

முடியாதவிடத்தோ, அவர்‌ அதற்கான காரணங்களைப்‌ பதிவு செய்தல்‌ வேண்டும்‌. 

(6) ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரி, இந்தப்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்படி 

ஒப்பந்தப்புள்ளியை ஏற்றுக்‌ கொள்ளக்‌ கருதவாராயின்‌ அவர்‌ அவ்வாறு ஏற்றுக்‌



கொள்கிற காரணங்களுடன்‌ சேர்த்து அந்த ஒப்பந்தப்புள்ளியை ஏற்றுக்‌ 

கொள்கின்ற ஆணைகளைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌. 

(7) ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரி எந்த ஒப்பந்தப்புள்ளியாளரின்‌ ஒப்பந்தப்‌ 

புள்ளியானது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றதோ, அந்த ஒப்பந்தப்புள்ளியாளரின்‌ 

பெயர்‌ மற்றும்‌ முகவரி சம்மந்தமான தகவலை பிற ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்க 

மறுத்துவிட்டதற்கான காரணங்களுடன்‌ சேர்த்து உரிய ஒப்பந்தப்புள்ளி செய்தி 

வெளியீட்டு அலுவலர்களுக்குத்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌. 

11. மேல்முறையீடு.- (1) ஒப்பந்தப்புள்ளி ஏற்கும்‌ அதிகாரியால்‌ பிறப்பிக்கப்பட்ட 

10 ஆம்‌ பிரிவின்படியான ஆணையினால்‌ குறையுற்ற ஒப்பந்தப்புள்ளியாளர்‌ எவரும்‌, 

அந்த ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள்ளாக அரசுக்கு 

மேல்முறையீடு செய்து கொள்ளலாம்‌ மற்றும்‌, அரசானது மேல்முறையீட்டை 

ஏற்றுக்கொண்ட தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள்‌ அதனை முடிவு 

செய்தல்‌ வேண்டும்‌. 

(2) (1) ஆம்‌ உட்பிரிவின்படியான மேல்முறையிடொன்றை முடிவு 

செய்வதில்‌, அரசானது அத்தரப்பினருக்குத்‌ தமது தரப்பினை எடுத்துரைப்பதற்கு 

வாய்ப்பு ஒன்றினை நல்கியதற்குப்‌ பின்னர்‌ அதன்பேரில்‌, அது தக்கதெனக்‌ 

கருதுகிற ஆணையைப்‌ பிறப்பிக்கலாம்‌. 

(3) அத்தகைய மேல்முறையீட்டின்‌ மீதான அரசின்‌ ஆணையானது 

அறுதியானதாகும்‌. 

(4) அரசானது, இந்தப்‌ பிரிவின்படியான தன்‌ அதிகாரங்களைச்‌ 

செலுத்துவதற்கு இடையில்‌, தாம்‌ தக்கதெனக்‌ கருதக்கூடிய இடைக்கால 

ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌. 

12. ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்க மறுத்து தள்ளிவிடுவதற்கான உரிமை. (1) 

ஒப்பந்தப்புள்ளியாளருடன்‌ பேரம்‌ பேசியதற்குப்‌ பிண்னரும்‌, 10 ஆம்‌ பிரிவிற்கான (6) 

ஆம்‌ உட்பிரிவின்படி ஒப்பந்தப்புள்ளியொன்றை ஏற்றுக்‌ கொள்ளுகின்ற 

ஆணையைப்‌ பிறப்பிப்பதற்கு முண்ணரும்‌, ஒப்பந்தப்புள்ளியை ஏற்கின்ற 

அலுவலரானவர்‌, அத்தகைய ஒப்பந்தப்புள்ளியாளர்‌ குறிப்பிட்டுள்ள 

விலைப்பட்டியல்‌ விதங்களைவிடவோ அல்லது சந்தைகளில்‌ நிலவுகிற 

விலைகளை விடவோ வகுத்துரைக்கப்படக்கூடிய சதவீதத்திற்கு அதிகமாக 

இருக்கின்றது என முடிவு செய்வாராயின்‌, ஒப்பந்தப்புள்ளியை ஏற்க மறுத்துத்‌ 

தள்ளிவிடுதல்‌ வேண்டும்‌. 

(2) ஒப்பந்தப்புள்ளியை ஏற்கின்ற அலுவலர்‌, அந்த ஒப்பந்தப்புள்ளியை 

ஏற்கின்ற ஆணையைப்‌ பிறப்பிப்பதற்கு முன்னர்‌, ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்கத்‌



தொடங்கிய காலத்தில்‌ கொள்முதல்‌ செய்வதற்கான வாய்ப்பில்‌ ஏற்படுகின்ற 

மாற்றங்கள்‌, புதிய தொழில்‌ நுட்பங்கள்‌, வடிவமைப்பில்‌ கணிசமான மாற்றங்கள்‌, 

எதிர்பார்த்த நிதி வளங்கள்‌ கிடைக்காமற்போதல்‌, நீதிமன்ற ஆணைகள்‌, விபத்துகள்‌ 

அல்லது பேரிடர்கள்‌ போன்ற எதிர்பாராச்‌ சூழ்நிலைகளின்‌ காரணத்திற்காக 

ஒப்பந்தப்புள்ளிகள்‌ அனைத்தையும்‌ ஏற்க மறுத்துத்‌ தள்ளிவிடலாம்‌. 

13. தகவல்‌ பெறுவதற்கான அதிகாரம்‌.- இச்சட்டத்தில்‌ அல்லது 

அப்போதைக்கு நடைமுறையிலுள்ள வேறு ஏதேனும்‌ சட்டத்தில்‌ என்ன 

அடங்கியிருந்தபோதிலும்‌, அரசு எழுத்துருவிலான ஆணை வாயிலாக, 

ஒப்பந்தப்புள்ளியை வரவேற்கும்‌ அலுவலரிடமிருந்து அல்லது ஒப்பந்தப்புள்ளியை 

ஏற்கும்‌ அலுவலரிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில்‌ ஒளிவுமறைவில்லாத 

பொருட்பாடு தொடர்பாக தகவல்‌ எதனையும்‌ தருவிக்கலாம்‌. மேற்சொன்ன 

அலுவலரானவர்‌ அரசுக்குத்‌ தன்னிடமுள்ள அத்தகவலைக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. 

14. பதிவுருகளைத்‌ தருவிப்பதற்கு அரசுக்குள்ள அதிகாரங்கள்‌.-- அரசு, எந்த 

நேரத்திலும்‌ ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில்‌ ஒளிவுமறைவில்லாத நேர்மையான 

வழிமுறைகளைக்‌ கையாளும்‌ நோக்குடன்‌, கீழ்கண்டவற்றை தாக்கல்‌ செய்யுமாறு 

கோரலாம்‌:- 

(ஐ ஒப்பந்தப்புள்ளியை வரவேற்பதற்கும்‌, ஏற்பதற்கும்‌ தொடர்புடைய 

பதிவுருகளைத்‌ தாக்கல்‌ செய்யுமாறு; 

(௦) ஒப்பந்தப்புள்ளி ஆவணம்‌, மதிப்பீடு, விவரவுரைகள்‌, கணக்குள்‌ அல்லது 

அத்தகைய ஒப்பந்தப்புள்ளிகள்‌ தொடர்பான புள்ளி இயல்கள்‌ எதையும்‌ 

கொடுக்குமாறு; மற்றும்‌ 

(௦) அறிக்கை எதையும்‌ கொடுக்குமாறு. 

15. ஒரு சில நேர்வுகளில்‌ பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை. 

இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, சர்வதேச உடன்படிக்கை மூலமாகவோ அல்லது 

சர்வதேச நிதி முகவாண்மைகள்‌ மூலமாகவோ நிதியளிக்கப்படும்‌ திட்டங்களில்‌ 

வகுத்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு எந்த அளவுக்கு 

ஒவ்வாதனவாயிருக்கின்றனவோ அந்த அளவிற்குப்‌ பொருந்துதல்‌ கூடாது. 

16. ஒரு சில நேர்வுகளில்‌ இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ பொருந்தா.- 9 

ஆம்‌ மற்றும்‌ 10 ஆம்‌ பிரிவுகளுக்கான வகைமுறைகள்‌:- 

(ஐ) இயற்கையான பேரிடர்களின்போதும்‌ அரசினால்‌ விளம்பப்பட்டுள்ள 

நெருக்கடி காலங்களின்‌ போதும்‌ செய்யப்பட்ட கொள்முதல்களுக்கு 

பொருந்துதலாகா;



(b) தனியொரு வழிவகையிலிருந்து மட்டுமே கிடைக்கத்‌ 

தக்கதாயிருக்கின்ற அல்லது குறிப்பிட்ட வழங்கீட்டாளரோ ஒப்பந்தக்காரரோ 

சரக்குகள்‌ அல்லது பணிச்‌ சேவைகள்‌ அல்லது கட்டுமானத்தைப்‌ பொறுத்த 

அளவில்‌ நியாயமான மாற்று நபர்‌ அல்லது பதிலாள்‌ எவரும்‌ இல்லாதிருந்து 

தனிப்பட்ட உரிமைகளைப்‌ பெற்றிருக்கிறவராயிருக்கின்ற நேர்வுகளில்‌ அல்லது 

கொள்முதல்‌ செய்‌ அமைப்பு வழங்கீட்டாளர்‌ ஒருவரிடமிருந்தோ ஒப்பந்தக்காரர்‌ 

ஒருவரிடமிருந்தோ சரக்குகள்‌, சாதனம்‌, தொழில்நுட்பம்‌ ஆகியவற்றை 

கொள்முதல்‌ செய்திருந்து ஒரே தரத்தில்‌ இருக்கின்ற காரணங்களுக்காகவும்‌ 

தற்போதுள்ள சரக்குகள்‌, சாதனம்‌ அல்லது தொழில்நுட்பத்துடன்‌ இணைந்து 

இருக்கின்ற காரணங்களுக்காகவும்‌ கூடுதல்‌ வழங்கீட்டுப்‌ பொருள்களை அந்தக்‌ 

குறிப்பிடப்பட்ட வழங்கீட்டாளரிடமிருந்தோ, ஒப்பந்தக்காரரிடமிருந்தோ 

கொள்முதல்‌ செய்ய வேண்டும்‌ என்று தீர்மானிக்கின்ற நேர்வில்‌ செய்யப்பட்ட 

கொள்முதல்களுக்கு வரம்புரை ஆனால்‌ கொள்முதல்‌ செய்‌ அமைப்பின்‌. 

தொழில்நுட்பப்‌ பிரதிநிதியாகவுள்ள அதேபோன்ற கொள்முதலைச்‌ செய்து 

வருகின்ற மாநில அல்லது மைய அரசு நிறுவனமொன்றின்‌ தொழில்நுட்பப்‌ 

பிரதிநிதி ஒருவரும்‌ அத்தகைய வழியில்‌ சிறப்புத்‌ திறமை பெற்றிருக்கின்றவரும்‌ 

புகழ்வாய்ந்த கல்விசார்ந்த அல்லது ஆராய்ச்சி நிலையமொன்றிலிருந்தும்‌ அல்லது 

வணிகம்‌ சாரா நிலையமொன்றிலிருந்து பிரதிநிதி ஒருவரையும்‌ கொண்டிருக்கின்ற 

மூன்று வல்லுநர்கள்‌ குழு ஒன்று அதனை தனியொரு வழிவகை கொள்முதலாக 

விளம்புகை செய்தாலன்றி பொருந்துதலாகா. 

(6) இச்சட்டத்தின்‌ தொடக்கக்‌ தேதியிலிருந்து நான்கு ஆண்டிற்கு 

மேற்படாத ஒரு கால அளவிற்கு, அரசின்‌ ஒரு சில துறைகள்‌, பொதுத்துறை 

நிறுவனங்கள்‌, சட்டப்படியான வாரியங்கள்‌ மற்றும்‌ அத்தகைய பிற 

நிறுவனங்களால்‌ உற்பத்தி செய்யப்படும்‌ சரக்குகள்‌ அல்லது வழங்கப்பெறும்‌ 

பணிச்சேவைகளை பொறுத்தவரையில்‌ மட்டுமே பொருந்துதல்‌ ஆகா. 

(0) வகுத்துரைக்கப்படக்கூடியவாறு குறைந்த மதிப்பினையுடையதும்‌. 

உள்நாட்டில்‌ விலைக்கு வாங்கப்பட்டதுமான கொள்முதலுக்கு பொருந்துதல்‌ ஆகா. 

(00) சிறிய அளவிலான உள்நாட்டு சிறு தொழில்‌ நிறுவனத்திடமிருந்து 

பெறப்படுவதும்‌ மைய அரசால்‌ அடையாளம்‌ காட்டப்படுவதுமான ஒதுக்கீட்டு 

இனங்களுக்குப்‌ பொருந்துதலாகா: 

வரம்புரை: கொள்முதல்‌ செய்‌ அமைப்பொன்று, அத்தகைய ஒதுக்கீடு 

செய்யப்பட்ட இனங்களில்‌ ஏதொன்றையும்‌ கொள்முதல்‌ செய்யக்‌ கருதுமிடத்து, 

கொள்முதல்‌ செய்‌ அமைப்பானது, அத்தகைய இனத்தை சிறிய அளவிலான 

உள்நாட்டு சிறு தொழில்‌ நிறுவனத்திடமிருந்து கொள்முதல்‌ செய்தல்‌ வேண்டும்‌



என்பதோடு அத்தகைய கொள்முதலுக்கு 9 ஆம்‌ மற்றும்‌ 10 ஆம்‌ பிரிவுகளின்‌ 

வகைமுறைகள்‌ பொருந்துதலாகும்‌. 

(e) நூற்பாலைகளால்‌ பருத்தியும்‌, தமிழ்நாடு வேளாண்‌ தொழில்கழகத்தாலோ, 

தமிழ்நாடு கூட்டுறவு எண்ணெய்வித்துகள்‌ பயிரிடூபவர்கள்‌ இணையத்தாலோ 

(வரையறுக்கப்பட்டது) எண்ணெய்வித்துகளும்‌, எண்ணெய்களும்‌, 

சந்தைகளிலிருந்து விலங்குகளும்‌, சர்க்கரை ஆலைகளால்‌ கரும்பும்‌, தமிழ்நாடு 

உணவுப்பொருள்‌ வழங்கீட்டு கழகத்தினால்‌ நேரடி கொள்முதல்‌ மையங்கள்‌ மூலம்‌ 

நெல்லும்‌, பதிவு செய்யப்பட்ட பிரதம நெசவாளர்‌ கூட்டுறவு சங்கங்களிடமிருந்து 

(தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்‌ சங்கத்தினால்‌) துணிப்‌ பொருள்களும்‌, மாவட்ட 

மற்றும்‌ பிரதம பால்‌ கூட்டுறவு சங்கங்களிடமிருந்து தமிழ்நாடு கூட்டுறவு பால்‌ 

உற்பத்தியாளர்‌ இணையத்தினால்‌ பாலும்‌, மதிய உணவுத்‌ திட்டத்திற்காக தமிழ்நாடு 

கூட்டுறவு எண்ணெய்வித்துகள்‌ பயிரிடூபவர்கள்‌ இணையத்திடமிருந்து தமிழ்நாடு 

உணவுபொருள்‌ வழங்கீட்டு நிறுவனத்தால்‌ பனை எண்ணையும்‌, தமிழ்நாடு 

கைத்தறி நெசவாளர்‌ கூட்டுறவு நெசவாளர்‌ கூட்டுறவு சங்கங்களிடமிருந்து 

அரசுத்துறைகள்‌, பொதுத்துறை நிறுவனங்கள்‌ சட்டப்படி அமைக்கப்பட்ட 

வாரியங்கள்‌ ஆகியவற்றால்‌ துணிப்பொருள்களும்‌ (ஜவுளி) மற்றும்‌ அரசினால்‌ 

அறிவிக்கப்படக்கூடிய பிற பொருள்களும்‌ அந்தந்த அமைப்புகளிடமிருந்து 

வாங்குவதற்காக செய்யப்பட்ட கொள்முதலுக்கு பொருந்ததுதல்‌ ஆகா. 

(1) தமிழ்நாடு சிமெண்ட்‌ நிறுவனம்‌ நிறுவனத்திடமிருந்து 
(வரையறுக்கப்பட்டது) பெறப்படும்‌ சிமெண்டிற்கு அல்லது தமிழ்நாடு செய்தித்தாள்‌. 

மற்றும்‌ காகித நிறுவனத்திடமிருந்து (வரையறுக்கப்பட்டது) பெறப்படும்‌ 

காகிதத்திற்கு பொருந்துதலாகா; 

வரம்புரை: 

(ஐ தொழில்துறை அரசுச்‌ செயலாளர்‌, நிதித்துறை அரசுச்‌ செயலாளர்‌, 

தமிழ்நாடு சிமெண்ட்‌ நிறுவன (வரையறுக்கப்பட்டது) தலைவர்‌-மேலாண்மை 

இயக்குநர்‌ அல்லது மேலாண்மை இயக்குநர்‌ ஆகியோர்‌ அடங்கிய குழுவொன்று 

கொள்முதல்‌ செய்யப்பட வேண்டிய சிமெண்டின்‌ விலையை நிருணயித்தல்‌ 

வேண்டும்‌; 

(b) கொள்முதல்‌ செய்‌ அமைப்பு தமிழ்நாடு செய்தித்தாள்‌ மற்றும்‌ காகித 

நிறுவனத்துடன்‌ (வரையறுக்கப்பட்டது) ஒப்பந்தம்‌ பேசி காகிதத்தின்‌ விலையை 

நிருணயித்தல்‌ வேண்டும்‌. 

17. அலுவலர்கள்‌ பொது ஊழியர்கள்‌ எனக்‌ கொள்ளப்படுதல்‌.- 

இச்சட்டத்தின்‌ வகைமுறைகளின்படியோ, அவற்றின்படிச்‌ செய்யப்பட்டுள்ள விதி 

அல்லது ஆணை அல்லது அறிவிக்கையின்படியோ அல்லது அவற்றைத்‌



தொடர்ந்தோ செயற்படுகின்ற அலுவலர்‌ ஒவ்வொருவரும்‌, இந்திய தண்டனைத்‌ 

தொகுப்புச்‌ சட்டத்தின்‌ 21 ஆம்‌ பிரிவின்‌ பொருளின்படி பொது ஊழியராகக்‌ 

கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 

18. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு.- 

நல்லெண்ணத்தில்‌ செய்த அல்லது செய்யக்‌ கருதிய செயல்‌ ஏதொன்றையும்‌ 

பொறுத்த அளவில்‌ அரசு அல்லது அரசு அலுவலர்‌ அல்லது அதிகாரஅமைப்பு 

எவருக்குமோ எதிராக உரிமை வழக்கு எதுவும்‌ தொடுக்கவோ பிற சட்ட 

நடவடிக்கை எதுவும்‌ எடுக்கவோ முடியாது. 

149. அதிகார வரம்பிற்கான தடை.- இச்சட்டத்தில்‌ மற்றபடி வகை: 

செய்யப்பட்டுள்ளவாறு தவிர, இச்சட்டத்தின்படி அலுவலர்‌ அல்லது 

அதிகாரஅமைப்பு எவராலும்‌, பிறப்பிக்கப்பட்ட ஆணை எதுவும்‌ அல்லது 

எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்‌, நீதிமன்றம்‌ எதிலும்‌ எதிர்க்கப்படுதல்‌ கூடாது; 

மேலும்‌, இச்சட்டத்தின்படியாகவோ அதனடியாகவோ வழங்கப்பட்டுள்ள அதிகாரம்‌ 

எதனையுமொட்டி, அத்தகைய அலுவலராலோ, அதிகாரஅமைப்பாலோ 

எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை எதனையும்‌ பொறுத்த 

அளவில்‌, நீதிமன்றம்‌ எதனாலும்‌ தடையுறுத்துக்‌ கட்டளை எதுவும்‌ 

வழங்கப்படு தலாகாது. 

20. இச்சட்டம்‌ பிற சட்டங்களுக்கு மேலோங்கி இருத்தல்‌.- இச்சட்டத்தின்‌ 

வகைமுறைகள்‌, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதிலுமோ, 

வழக்கம்‌ அல்லது வழக்காறு அல்லது உடன்படிக்கை எதிலுமோ, நீதிமன்றம்‌ 

அல்லது தீர்ப்பாயமொன்றின்‌ அல்லது பிற அதிகார அமைப்பின்‌ தீர்ப்பாணை 

அல்லது ஆணை எதிலுமோ, அவற்றுக்கு முரணாக என்ன அடங்கியிருந்த 

போதிலும்‌, செயல்‌ விளைவு கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 

21. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு அதிகாரம்‌.- இச்சட்டத்தின்‌ 

வகைமுறைகளைச்‌ செயற்படுத்துவதில்‌ இடர்ப்பாடு ஏதேனும்‌ எழுமாயின்‌, அரசு, 

தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படும்‌ ஆணையின்‌ வாயிலாக அந்த 

இடர்ப்பாட்டை ந்க்குவதற்குத்‌ தேவையானதாகவோ உகந்ததாகவோ தமக்குத்‌ 

தோன்றுகிற இச்சட்டத்திற்கு முரணாக இல்லாத வகைமுறைகளைச்‌ செய்யலாம்‌: 

22. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) அரசானது, இச்சட்டத்தின்‌ 

நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளைச்‌ செய்யலாம்‌. 

(2) (a) அஇச்சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகளனைத்தும்‌ தமிழ்நாடு 

அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ 

நடைமுறைக்கு வேண்டுமென வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, 

அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌.



(b) இச்சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌, 

அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென 

வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு 

வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 

(3) இச்சட்டத்தின்படி, செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட 

அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும்‌, அது அவ்வாறு செய்யப்பட்ட 

அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌, கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ 

வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ 

அல்லது அதனையடுத்து வரும்‌ கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்னர்‌ 

அத்தகைய விதி, அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும்‌ மாற்றமைவு 

எதனையும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்யுமாயின்‌ அல்லது அத்தகைய விதி, 

அல்லது அறிவிக்கை எதுவும்‌ செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ 

கூடாது என சட்டமன்றப்‌ பேரவை முடிவு எடுக்குமாயின்‌, அந்த விதி, அல்லது 

அறிவிக்கையானது அல்லது ஆணையானது அதன்பின்னர்‌ அவ்வாறு மாற்றமைவு 

செய்யப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது, 

நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌, அவ்வாறு 

மாற்றமைவு செய்தது அல்லது அழித்தறவு எதுவும்‌, அந்த விதி அல்லது 

அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல்‌ 

ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 

23. காப்பு.- தற்போது இருந்து வருகின்ற விதிகள்‌, ஒழுங்குமுறை விதிகள்‌, 

துறை விதிகள்‌, துறைத்‌ தொகுப்பு விதிகள்‌, கையேடுகள்‌, ஆணைகள்‌ 

முதலானவையனைத்தும்‌ இச்சட்டத்தின்படி மற்றும்‌ அதன்‌ கீழ்‌ செய்யப்பட்ட 

விதிகளுக்கு, முரணாக அல்லது தொடர்ந்து நடைமுறையில்‌ இருந்து வருதல்‌ 

வேண்டும்‌.



இணைபப்புப்பட்டியல்‌ 

(2 (6) என்னும்‌ பிரிவைக்‌ காண்க) 

கொள்முதல்‌ செய்யும்‌ அமைப்புகள்‌. 

1. அரசுத்துறைகள்‌. 

2. அரசுப்‌ பொதுத்துறை நிறுவனங்கள்‌. 

3. அரசினால்‌ அமைக்கப்பட்ட சட்டப்படியான வாரியங்கள்‌. 

4. மாநிலத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகள்‌. 

5. மாநிலத்திலுள்ள கூட்டுறவு அமைப்புகள்‌. 

6. பல்கலைக்கழகங்கள்‌. 

7. அரசினால்‌ அமைக்கப்பட்ட சங்கங்கள்‌.


Open official source version ↗

About this act

Jurisdiction
Tamil Nadu
Enactment date
1998-12-11
Sections available
Document reader
Source and version

India Code, Government of India. Text fetched 15 Oct 2026. Source metadata reports last modification: 2025-12-23. Check the linked official text and subsequent notifications when applying a provision.

Share this act

Tamil Nadu Transparency in Tenders Act, 1998 and Rules, 2000 — Tamil | NYAYA SIGNAL

Share the card with this clickable reading link. पढ़ें और अगली धारा देखें।

NYAYA SIGNAL · Free access · Official source references

· Saves and reading positions stay on this device.